உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 27, 2014

அப்பாஸ் அலி Vs ததஜ விவாத வரைவு ஒப்பந்தம்


இ.முஹம்மது, மாநில செயலாளர், டி.என்.டி.ஜே அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சென்னை, தம்புச் செட்டித் தெரு, மெட்ரோ பேலஸ் 502ம் அறையில் கடந்த 19-11-2014 புதன்கிழமை அன்று காலை 10 மணியிலிருந்து தரப்புக்கு மூவர் வீதம் அமர்ந்து விவாத ஒப்பந்தம் குறித்து விவாதித்தோம். மாலை சுமார் 7.30 மணியளவில் அவ்விவாதம் முடிவுற்றது. சபையை முடித்து விட்டு எழுந்து செல்கிற நேரத்தில்; டி.என்.டி.ஜே தரப்பினர் விவாத ஒப்பந்த விபரங்களை எழுத்தில் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைப்பதாக குறிப்பிட்டனர். இது குறித்து 22.11.14 தேதியில் மின்னஞ்கல் மூலம் நான் நினைவூட்டிய பின்னர்தான் விவாத ஒப்பந்தம் குறித்த விபரங்களை எழுத்து மூலம் 25-11-2014 செவ்வாய்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பியுள்ளீர்கள்.

விவாத ஒப்பந்தம்

முதல் தலைப்பு

டி.என்.டி.ஜே நிலைப்பாடு :
சூனியத்திற்கு எந்த ஆற்றலும் இல்லை என்று திருக்குர்ஆனும், நபிமொழியும் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் மூலம் பாதிப்பு ஏற்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை. மறுக்கப்பட வேண்டியவை. அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் போல் சூனியக்காரர்களுக்கு ஆற்றல் இருப்பதாக நம்புவது இணைவைப்பாகும். அப்படி நம்பக்கூடியவர்கள் முஷ்ரிக்கள் ஆவர் என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அப்பாஸ் அலி நிலைப்பாடு :
சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படலாம் என திருக்குர்ஆனும் நபிமொழிகளும் கூறுகின்றன. சூனியத்தின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். எனவே இவ்வாறு நம்பக்கூடியவர்கள் முஷ்ரிக்குகள் இல்லை என்பது அப்பாஸ் அலியின் நிலைப்பாடாகும்.

இரண்டாவது தலைப்பு
 
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படுமா?

டி.என்.டி.ஜேயின் நிலைப்பாடு :
நபி (ஸல்)அவர்களோடு தொடர்புபடுத்தி சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள சில செய்திகள் குர்ஆனோடு முரண்படுகின்றன. அத்தகைய செய்திகள் மறுக்கப்பட வேண்டியவை.

நபி(ஸல்)அவர்களுக்கும் அந்த செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அப்பாஸ் அலி நிலைப்பாடு :
குர்ஆனுடன் மோதுகிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறிய சில ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரணில்லாமல் விளங்க முடியும். அவற்றுக்கும் குர்ஆனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. எனவே அவை ஆதாரப்பூர்வமானவை.

அவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படுமா? என்று அப்பாஸ் அலி எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்கள் ஆகும்.

குஸைமா தொடர்பான ஹதீஸ்

பிலால் தொடர்பான ஹதீஸ்

மாடு தொடர்பான ஹதீஸ்

2. விவாத இடம் : சுசிஹால், 24, கரூர் பைபாஸ் ரோடு,
சிந்தாமணி, திருச்சி-2

3. விவாத நாட்கள் : முதல் தலைப்பு : டிசம்பர் 21,2014
இரண்டாம் தலைப்பு : டிசம்பர் 27 & 28,2014

4. விவாத அமர்வின் முதல் நாள் கால அளவு :
முதல் அமர்வு : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை விவாதம்
இரண்டாம் அமர்வு : பகல் 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விவாதம்
மூன்றாம் அமர்வு : மாலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விவாதம்

5. விவாத செலவு :
அரங்கம், ஒலி, ஒளி அமைப்பு, தண்ணீர், ஜெனரேட்டர் மற்றும் இரண்டு தரப்பும் சமமாக பயன்படுத்துபவைகளின் செலவுகளை இரு தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வது

6. அரங்க ஏற்பாடு :
1.இரு தரப்பிலும் பரஸ்பரம் எழுத்தில் ஒப்புக் கொண்ட செலவுகள் மாத்திரமே சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்.

2.அரங்கம் குறித்த மற்ற ஏற்பாடுகளை செய்திட தரப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படுவர்.

7. பார்வையாளர்கள் :
1.ஒவ்வொரு தரப்பிலும் தலா இருபது நபர்கள் வீதம் இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் நாற்பது நபர்கள் மட்டுமே பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.

2.ஒவ்வொரு அமர்வும் தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் இருக்கையில் அமர்ந்து விட வேண்டும்.

3.விவாதத்தின் ஒவ்வொரு அமர்வும் முடிந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் அரங்கை விட்டு வெளியில் செல்ல வேண்டும்.

4.ஒவ்வொரு அமர்வின் போதும் இடையில் வெளியே எழுந்து செல்பவர் அந்த அமர்வு முடியும் வரை எக்காரணத்தை முன்னிட்டும் அரங்கினுள் அனுமதிக்கப்படமாட்டார்.

5.அரங்கினுள் செல்போன், வாக்மேன், ஒலி,ஒளிப்பதிவு கருவிகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது.

6.விவாதம் தொடங்கிய பின் இருக்கையை விட்டு எழுவதோ, பிறரிடம் பேசுவதோ, விவாதத்தில் குறுக்கிடுவதோ, கருத்துச் சொல்வதோ, துண்டுச் சீட்டுக் கொடுப்பதோ, கேலி கிண்டல் செய்வதோ, முகம் காட்டுவதோ, சைகை செய்வதோ, பேனர்கள் வைப்பதோ, பிரசுரங்கள் வினியோகிப்பதோ (அரங்கின் உள்ளும் வெளியும்) கூடாது. மீறுபவர்கள் அரங்கிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் எக்காரணம் கொண்டும் மீண்டும் அரங்கினுள் அனுமதிக்கப்படமாட்டார்.

7.ஒவ்வொரு தரப்பினரின் பார்வையாளர்களும் அமர்வதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்படும்.

8.ஒவ்வொரு தரப்பின் பார்வையாளர்களும் அவரவர்களுக்குரிய அடையாள அட்டையுடன் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப்படுவர்.

9.அவரவர் பார்வையாளர்களால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அவரவர் அணியை சார்ந்தவர்களே பொறுப்பாவார்கள்.

8. தொண்டர்கள் :
1.அரங்கின் உள்ளே தரப்பிற்கு ஐந்தும்; வெளியே தரப்பிற்கு ஐந்தும் ஆக மொத்தம் உள்ளும் வெளியும் தரப்பிற்கு பத்து நபர்கள் நியமிக்கப்படுவார்கள்.

2.அவரவர் அணியின் பார்வையாளர்களை கண்காணிப்பதும், பாதுகாப்பதும் மற்றும் அவர்களின் உணவு, தண்ணீர் போன்ற இதர தேவைகளை நிறைவேற்றுவதும் அவரவர்களின் பொறுப்பாகும்.

3.இரு அணியினரின் தொண்டர்களும் தனித்தனியாக செயல்படுவார்கள்.

9. தனித்தனிப் பொறுப்புகள் :
அவரவர் அணியை சார்ந்த அறிஞர், உதவியாளர்கள், பார்வையாளர்கள், தொண்டர்கள், கண்காணிப்பாளர் போன்றோரின் உணவு மற்றும் இதர தேவைகளுக்கு அவரவர் அணியினரே பொறுப்பாவார்கள்.

10. வீடியோ :
வீடியோ பதிவின் போது தேதி நேரம் அதில் இடம் பெற வேண்டும். அவரவர் தனித்தனியாக வீடியோ பதிவு செய்து கொள்ள வேண்டியது.

11. நேரக் கண்காணிப்பாளர் :
1.விவாத நேரத்தை கண்காணிப்பதற்கு அணிக்கு ஒருவர் நியமிக்கப்படுவார்.

2.விவாதத்தின் போது விவாதிப்பவரின் துவக்க நேரத்தையும் முடிவு நேரத்தையும் கண்காணித்து சுட்டிக்காட்டுவது மட்டுமே இவரின் பொறுப்பாகும்.

3.விவாதத்தின் துவக்கத்தில் எழுத்து வடிவில் உள்ள விவாத ஒப்பந்தத்தை வாசித்துக் காட்டுவார்.

12. விவாதிப்போர் :
1. டிஎன்டிஜே சார்பில் ,,,,, (பெயர் குறிப்பிடப்பட வேண்டும்) மட்டும்.

2. அப்பாஸ் அலி தரப்பில் அப்பாஸ் அலி மட்டும்.

3. விவாதிக்கின்ற டிஎன்டிஜே சார்பில் ,,,,, (பெயர் குறிப்பிடப்பட வேண்டும்) அவர்களுக்கு இரு உதவியாளரும் அப்பாஸ் அலிக்கு இரு உதவியாளரும் மேடையில் உடனிருப்பர்.

4. நேரக் கண்காணிப்பாளர்கள், மின்சார, ஒலி, ஒளி அமைப்பாளர்களைத் தவிர வேறு எவரும் மேடையில் ஏற அனுமதி இல்லை.

5. டிஎன்டிஜே சார்பில் ,,,,, (பெயர் குறிப்பிடப்பட வேண்டும்), அப்பாஸ் அலி தவிர வேறு எவருக்கும் ஒலிபெருக்கியை உபயோகிக்க அனுமதி இல்லை.

13. விவாத ஒழுங்குகள் :
1. முதல் நாள் முதல் அமர்வில் வுழளள (பூவா, தலையா) போடப்பட்டு அதில் வெல்பவரே விவாதத்தைத் துவங்கவேண்டும்.

2. விவாதத்தின் போது இரு தரப்பினரும் 12 + 3 நிமிடங்கள் என்ற அடிப்படையில் சமமாக விவாதிக்கவேண்டும். முதல் 12 நிமிடங்கள் மட்டுமே விவாதம் நடைபெறும். எஞ்சிய 3 நிமிடங்கள் அமைதி காக்கவேண்டும்.

3. விவாதத்தின் போது இரு அணியினரும் பார்வையாளர்களை நோக்கியே பேசவேண்டும்.

14. பொதுவானவை :
1. விவாதிக்கும் இரு தரப்பும் ஒத்துக் கொண்டாலொழிய ஒப்பந்த விதிகளை ஒரு தலைப்பட்சமாக மாற்ற, திருத்த, சேர்க்க, நீக்க இரு அணியினரில் எவருக்கும் அதிகாரமில்லை.

2. விவாதம் நடைபெறும் மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் எந்த விளம்பரமும் வியாபாரமும் செய்யக் கூடாது.

கையெழுத்து
1. டிஎன்டிஜே சார்பில் (பெயர் குறிப்பிடப்படவேண்டும்)
2.அப்பாஸ் அலி

குறிப்பு : என்னோடு பிஜேதான் விவாதிக்கவேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். அவர் என் போன்றவர்களிடம் விவாதிக்கும் அளவிற்கு தரம் குறைந்தவர் அல்ல என்று உங்கள் தரப்பு மறுத்தது. முடிவில் அவருக்கு இயலாது என்றும் உங்கள் தரப்பு கூறியது. ஆதலால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஒருவர் மட்டுமே என்னுடன் விவாதிக்க வரவேண்டும் என்று கூறினேன். நீண்ட விவாதத்திற்குப் பிறகு உங்கள் தரப்பு அதை ஒத்துக் கொண்டது. விவாதிக்கின்ற நான் விவாத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போல என்னுடன் டிஎன்டிஜே சார்பாக விவாதிப்பவர்தானே கையெழுத்திடுவது முறை. எனவே, உங்கள் சார்பாக என்னுடன் விவாதிக்க வரும் அந்த ஒருவரே இந்த விவாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

இப்படிக்கு,
அப்பாஸ் அலி

No comments:

Post a Comment