செல்போன் டவர்களில் இருந்து பரவும் மின்காந்த அலைகளால், சிட்டுக் குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் பதறுகிறார்கள். சிட்டு குருவிகளுக்கு மட்டுமல்ல... இதனால் பொதுமக்களுக்கும் அபாயகரமன நோய்கள் உண்டாகலாம்! என்ற இன்னோர் அணுகுண்டை வீசுகிறார்கள், உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானிகள்!
ஐ.நா. உலக சுகாதார அமைப்பின் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மே 26 தொடங்கி ஜுன் 2ம் தேதி வரை எட்டு நாள் மாநாடு ஒன்றை பிரான்ஸில் நடத்தியது. 14 நாடுகளை சேர்ந்த 31 விஞ்ஞானிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் புற்று நோய் தடுப்பு குறித்து அதற்கான நவீன சிகிச்சைகள் குறித்து விவாதங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எடுத்து வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில்தான், செல்போன் பயன்படுத்துவதால் மூளைப் புற்று நோய் வரலாம்' என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டு அதிரவைத்து இருக்கிறார்கள்...