உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 30, 2015

யார் அங்கே? பார்த்துப் போங்க பள்ளத்தில் விழப்போகிறீர்!!

இது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையோ, கடலூர் மாவட்டமோ அல்ல. 

மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் அகழ்வராய்ச்சிக்காக தோண்டப்பட்ட இடங்களின் மிச்சமும் அல்ல. 

சாட்சாத் இது நம்ம ஊரு அதிரையின் அவலம் மிகுந்த சாலைகளே, நம்புங்கள்!

வாகனங்கள், விபத்துக்கள் பெருக்கம் ஒரு பக்கம், வாழ்க்கை தர உயர்வு ஒரு பக்கம் என பகட்டுகள் வளர்ச்சி கண்டாலும் இன்னும் சாலைகள் மட்டும் சோழர் காலத்தை நினைவூட்டுகின்றன.

இதில் பல சாலைகள் தண்ணீர் குழாய் பதிப்பிற்காக சமீபத்தில், மழைக்கு முன்பே தோண்டப்பட்டு அலங்கோலத்தில் விடப்பட்டவை. மற்றவை மழையில் காணாமல் போயிருக்கலாம்?

காவி நிறத்தில் தெரியும் பல சாலைகள் தார் சாலைகளாக இருந்தவை என்ற வரலாற்றை வேறு நினைவுபடுத்த வேண்டியுள்ளது!

இதில் சிஎம்பி லைனிலிருந்து மரைக்காகுளம் வழியாக மேலத்தெரு செல்லும் பாதை இது வரை சாலையாக உருமாற யாருமே முயற்சிக்கவில்லை.

சாலைகளை செப்பனிட இன்னும் எத்தனை வீட்டைத் தான் இடிப்பது என அலுத்துக் கொள்கின்றனர் முறையாக வரி செலுத்தும் பொதுமக்கள்.

அதிரையின் சாலைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படவிட்டால், அதிரை முழுமையையும் சமமாக நேசிக்கும் சரியான ஒருவரை குறித்து மக்கள் சிந்திக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாது.
Monday, December 28, 2015

மரைக்காகுளம் செய்த பாவமென்ன?

புல் மட்டம் கூட நிரம்பாத மரைக்கா குளம் படங்கள்சமீபத்தில் அடித்துப் பெய்த மழையில் அதிரையிலுள்ள குளங்கள் அனைத்தும் கிட்டதட்ட நிறைந்து வழிந்தன. 

ஒரு சில குளங்களுக்கு மட்டும் பம்பிங் முறையில் அதிரை பேருராட்சி தலைவரின் முயற்சியால் நீர் நிரப்பப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. 

ஆனால், அதிரையில் பெண்களுக்கென்று மட்டும் பிரத்தியேகமாக உள்ள மரைக்காகுளம் மட்டும் மழையாலும் நிறையவில்லை, பம்பிங் முயற்சியும் செய்யப்படவில்லை. சமூக ஆர்வலர்களும் களமிறங்கவில்லை. எந்தக் கட்சிக்காரர்களும் கண்டுகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட ஜமாத்தும் புறக்கணித்துவிட்டது. 

சிஎம்பி லைனிலிருந்து தண்ணீர் வரும் அதன் வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மேல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருடங்கள் ஆகிவிட்டன. 

இந்நிலையில் மழையால் நிறைந்த குளத்திற்கு எல்லாம் ஆற்றுத்தண்ணீர் கொண்டுவருவதாக படங்காட்டும் 'அந்த பிரிவின் தொண்டர்களையும்' இந்த வருடம் காணவில்லை. 

இப்படி அனைவரும் கண்டுகொள்ளாதிருக்கும் மரைக்காகுளத்தை நிறைக்க வரும் நாட்களிலாவது தெருசார் அமைப்புக்களாவது முன்வர வேண்டும்.

Updated: முஸ்லீம்களை முஷ்ரீக்காக்க, ஹதீஸ்களை மறுக்க கூட்டம் போடும் முஃதஸ்ஸிலா பிரிவினருக்கான கேள்விகள்


மிக முக்கியமான கேள்வி என்பதால் சகோதரர் Abu Haajar Ahamed Firdhous Ahamed Ashraf அவர்களின் கருத்து இங்கு பதிவேற்றப்படுகின்றது.

நல்ல கேள்விகள். முக்கியமான கேள்வி ஒன்று விடுபட்டுள்ளது

‘முரண்பாடு என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்னென்ன அம்சங்கள் இருந்தால் முரண்பாடு என்று சொல்லப்படும்? பட்டியல் தரவும்’

இந்த இந்த அம்சங்கள் இருந்தால் முரண்பாடு என்று ததஜவினரால் ஒரு பட்டியலை தர இயலாது. அவ்வாறு அவர்கள் ஒரு பட்டியலை தந்துவிட்டால் 

1) எந்த ஹதீஸ் முரண்பாடு என அனைவரும் ஆய்வு செய்து கொள்வர். இந்த ஏகபோக உரிமை ததஜவினருக்கு மட்டும் இப்போது உள்ளது போல் இருக்காது. இன்னும் சொல்வதானால், இது தான் நிபந்தனை என ஒரு சாஃப்ட்வேரிடம் பட்டியலை கொடுத்துவிட்டால், அது முரண்படும் ஹதீஸ் பட்டியலை நொடிப்பொழுதில் கொடுத்துவிடும்; ஆயுசு பூரா மன்னடியில் உட்கார்ந்து மண்டையை பிச்சிக்க தேவையில்லை.

2) முரண்பாட்டின் வரைவிலக்கணம் இது தான் என ஒரு பட்டியல் இவர்கள் தந்தால், இவர்கள் இது நாள் வரை காப்பாற்றி வரும் பல ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டி வரும். அல்லது நிராகரித்து வரும் பல ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.

Thursday, December 24, 2015

அதிரையில் 'ஒரு நாள் தஃவா பயிற்சி முகாம்' 26.12.2015 – சனிக்கிழமை

இன்சா அல்லாஹ் நாளை 26.12.2015 சனிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த 'ஒரு நாள் தஃவா பயிற்சி முகாம்' 'ரிச்வே கார்ன்' வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரபல தஃவா அழைப்பாளர்கள் சகோதரர் உமர் பாருக் மற்றும் மவ்லவி. அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி ஆகியோர் கலந்து கொண்டு ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பயிற்சியளிப்பதுன் தஃவா களத்தில் அழைப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளனர்.

தஃவா பணியில் ஆர்வமுடைய அனைத்து சகோதர சகோதரிகளும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடைய அன்புன் அழைக்கப்படுகிறார்கள்.

குறிப்பு: 
1. ரிச்வே கார்ன் அதிரை TO பட்டுக்கோட்டை சாலையில் மின்சார வாரிய {EB} அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
2. தஃவா முகாம் 26.12.2015 சனியன்று காலை சுமார் 9.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5 மணியளவில் நிறைவுறும்.
3. முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4. முகாமில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி இவசதிகள் செய்யப்பட்டுள்ளன.
5. அதிரையில் வாரந்தோறும் நடைபெறும் தெருமுனை தஃவாவிலும் ஆர்வமுள்ள சகோதர, சகோதரிகள் கலந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை இஸ்லாமிய வழிகாட்டி மையம்
ADIRAI ISLAMIC GUIDANCE CENTRE - AIGC

மேலும் விபரங்களுக்கு: நிஜாம் 9597841980 கமால் 9543577794 ஹாஜா 9003127748

Wednesday, December 23, 2015

அதிரையில் நாளை [25.12.2015 - வெள்ளி அன்று] மவ்லவி அப்பாஸ் அலி MISc. நிகழ்ச்சிகள்


இன்சா அல்லாஹ் நாளை 25.12.2015 வெள்ளிக்கிழமை அதிரை ALM பள்ளியில் நடைபெறவுள்ள ஜூம்ஆவில் குத்பா பேருரை நிகழ்த்தவுள்ளார்கள்.

மேலும், வாரந்தோறும் வழமையாக பிலால் நகர் தர்பியா மையத்தில் அஸர் தொழகைக்குப்பின் சுமார் 5 மணியளவில்) நடைபெறும் பெண்களுக்கான பயானில் கலந்து கொண்டு உரையாற்றுவதுன் நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்கள்.

குறிப்பு: ஆண்களுக்கு தனியி வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் வருக என அன்புன் அழைப்பது
அதிரை தாருத் தவ்ஹீத்

அதிரையில் ஓர் 'நீயா? நானா?' - சாலையில் பெருகி ஓடும் சாக்கடை


அல் அமீன் பள்ளியின் முன்புற [பழைய போஸ்ட் ஆபிஸ்] ரோடு - அதிரையின் மிக முக்கிய வீதியாகவும், பொதுமக்கள் நடமாட்டம் கூடிய சாலையாகவும், வாகனங்கள், வணிக நிறுவனங்கள், பேருந்து நிலையம், அல் அமீன் மஸ்ஜித் என நிறைந்த பகுதியாகவும், மிக முக்கியமாக நகரின் சுத்தம் சுகாதாரத்திற்கு பொறுப்பான அதிரை பேரூராட்சி அலுவலகமும் இதன் அருகே தான் அமைந்துள்ளதென்றால் நகரின் ஏனைய தெருக்களின் நிலையை எடை போட்டுக் கொள்ள 'இந்த ஒரு சோறு பதம்' போதும்.

இந்த சாலையின் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைக்கு பொதுமக்களின் அலட்சியம் ஒரு காரணமென்றால் பேரூராட்சியின் பொறுப்பற்றத்தனமும் கண்டிக்கத்தக்கது மேலும் அல் அமீன் பள்ளியின் நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்தும் இந்த சாக்கடை வெள்ளம் நித்தமும் திறந்துவிடப்படுவதாக பொறுமுகின்றனர் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி வணிகர்கள்.

சுத்தம் சுகாதாரத்திற்கு பொறுப்பான பேரூராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுப்பதுடன், சாக்கடை நீரை தெருவில் விடும் பொதுமக்களை எச்சரித்து கட்டுப்படுத்த வேண்டும். சாக்கடைகள் முறையாக ஓடுவதற்கான வழிவகைகளை செய்து தர வேண்டும். இனியும் அலட்சியம் தொடர்வது யாருக்கும் நல்லதல்ல என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உணர்வது நல்லது.

பல்லிளிக்கும் பட்டுக்கோட்டை ரோடு

தினமும் பல்லாயிரக்கணக்காண பயணிகளும் பல நூற்றுக்கணக்காண பள்ளிக்குழந்தைகளும் பயணிக்கும் அதிரை to பட்டுக்கோட்டை ரோடு குண்டும் குழியுமாக... கிட்டத்தட்ட காணாமல் போயே பல நாட்களாகியும் மீட்டுத்தருவார் யாருமின்றி பரிதவித்துக் கொண்டுள்ளது.

சமீபத்திய மழையால் ரோடு சேதமாகிவிட்டதாக சொல்லப்பட்டாலும் மழைக்கு முன்பிருந்தே ரோடு மிக மோசமான நிலையில் தான் இருந்தது என்றும் இப்போது அது படுமோசமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் நித்தமும் இந்த ரோட்டில் குட்டிக்கரணமடித்து சென்று வரும் ஓட்டுனர்கள் புலம்புகிறார்கள்.

ஒருவேளை சென்னை அல்லது கடலூரில் பெய்தது போல் மழை பெய்திருந்தால் சாலை பள்ளங்களில் படகு சர்வீஸ் நடத்த மட்டுமே இந்த சாலை லாயக்காகியிருக்கும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. NR. ரெங்கராஜன் அவர்கள் சாலையை செப்பனிட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ள செய்தி இன்றைய [23.12.2015] தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது.

SH 29 தஞ்சை சாலையை கிழக்கு கடற்கரை சாலை[ECR]யுடன் இணைக்கும் இந்த பிரதான சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செப்பனிட்டுத் தருவதுடன் விரைவில் முற்றிலும் தரமான முறையில் புதிப்பித்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.

சாம்பிளுக்கு சில படங்கள்..
 ஆரம்பம் ஜோரு! அப்புறம் பாரு!!

கடந்த மாதம் மிகப்பெரும் ஆராவாரத்துடன் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் புதுத்தெரு மற்றும் கடைத்தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

பொதுவாக ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் அனைத்தும் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விசயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இதற்கிடையில் குப்பைக்கழிவுகளை ஒரு கடையின் முன்பு கொட்டி தேவையற்ற ஒரு களேபரமும் ஏற்படுத்தப்பட்டது என்பது தனி விசயம்.

இத்தனை அமர்க்களத்துடன் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்??? வெறும் இடிப்புடன் நின்றுபோனதேன்? 

இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு இடிபாடுகள் எப்போது முற்றாக அப்புறப்படுத்தப்படும் என்பதே அதிரை மக்களின் இன்றைய கேள்வி. அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?துபாய் சபுராளி