உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, July 29, 2017

பா.ஜ.க சாதனை மலர்.. பாஜக செய்து கிழித்த சாதனைகள்!

பா.ஜ.க சாதனை மலர்.. பாஜக செய்து கிழித்த சாதனைகள்!


தமிழக சாதனைகள்:
1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது!
2. காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது!
3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்துது!
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது!
5. ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது!
6. மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது!
7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது!
8. கீழாடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழாடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது!
9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது!
10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது!
11. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது!
12. நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது!
13. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது!
14. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது!
15. கட்டாய ஹிந்தி சமஸ்கிருத திணிப்பு!
16. நீட் தேர்வை மாணவர்களுக்கு கட்டாயமாக்கி தமிழக மணவர்களின் மருத்துவ படிப்பு கனவில் மண் அள்ளி போட்டது.
17. OPSயும் EPSயும் பாஜகவின் அடிமையாக ஆக்கியது!
18. தமிழக மீனவர் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க செய்யாமல் இருப்பது!
அகில இந்திய சாதனைகள்:
1. உலக மாஹா வியாபம் ஊழல் அது சம்பத்தப்பட்ட கொலைகள்!
2. மாட்டுகாக தலித்துகள் முஸ்லிம்களை வேட்டையாடுவது!
3. மோடி ஓராண்டு ஆட்சியில் மட்டும் 600 மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்தியது!
4. ஆதார் அட்டையை கட்டாயமாக்கி ஆதார் ரகசியங்களை கசியவிட்டது!
5. உண்ண உணவில்லாத ஏழைகள் வாழும் நாட்டில் செத்தவனுக்கு(சிவாஜி) சிலை என்ற பெயரில் 2000 கோடி மக்கள் வரிப்பணத்தை நாசமாக்குவது!
6. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்திய மக்களை திண்டாடவிட்டு 100 க்கும் மேற்பட்ட மக்களை வங்கி வாசலில் கொன்றது!
7. கேஸ் சிலிண்டர் விலையை 3 மடங்காக உயர்த்தி நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கியது!
8. இந்தியா காணாத பொருளாதர வீழ்ச்சி!
9. EVM மெஷினில் பித்தலாட்டம் செய்து உபியில் வெற்றி பெற்றது!
10. மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றி உருப்படியான எந்த திட்டமும் கொண்டுவராமல் போனது!
11. விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வருண்காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து கொண்டது!
12. கங்கையை சுத்தபடுத்துகிறேன் என 3000 கோடியை ஸ்வாகா செய்தது!
13. மாட்டு தீவிரவாதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அப்பாவி மக்களை வேட்டையாடுவது!
14. மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது மிரட்டுவது!
15. ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கி, பண முடைப்பை உருவாக்கி தொழில்களை நாசமாக்கி, மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது.
16. GST என்ற பெயரில் உலகிலேயே அதிகபட்ச வரிகளை விதித்து மக்களை கசக்கி பிழிவது.
17. உலகமெல்லாம் சுற்றியும் இந்தியாவின் அண்டைநாடுகளுடன் பகையை உருவாக்கியது.
18. முன்னெப்போதும் இல்லாதவாறு காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு.
19. பலகீனமாக பிரதமரால் சீனாவின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருப்பது.
20. அதானி & அம்பானி கார்பரேட் கும்பலின் அரசாக செயல்படுவது.
Thanks to: பா.ஜ.க புரட்சி படை
https://www.facebook.com/RSSPIGS/?hc_ref=ARShuM7tWGfwVAwpFW5sgefT4BdgF7GNZfFVKtY7Ufg5a8UF-tkgZiRCbCkeX9mcg8E&fref=nf

Sunday, July 16, 2017

அபுதாபி அவ்காப் சார்பாக கோடைகால இலவச குர்ஆன் மற்றும் மனன வகுப்புக்கள்


அபுதாபி இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான பொதுச்சபை (AWQAF) கோடைக்கால விடுமுறை நாட்களை பயனள்ள வகையில் மாணவர்கள் கழிக்கும் நோக்குடன் 6 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கும், 18 வயதுக்கு மேலுள்ள பெரியவர்களுக்கும் தனித்தனியே குர்ஆன் கற்பித்தல் மற்றும் குர்ஆன் மனன வகுப்புக்களை அபுதாபியிலுள்ள சுமார் 198 மஸ்ஜிதுகள் மற்றும் குர்ஆன் மனன மையங்களில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.

மாணவர்கள் குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களுக்கு வந்து போக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூலை 27 வரை நடைபெறவுள்ள இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் தற்போதும் இணைந்து கொள்ளலாம். இந்த வகுப்புக்கள் தினமும் மாலை 4 மணிக்கு துவங்கி மாலை 7 மணிவரை நடைபெற்று வருகிறது.

அபுதாபி அவ்காப் சார்பாகவும் அதன் மேற்பார்வையிலும் நடத்தப்படும் இக்குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களுடன் இஸ்லாமிய அடிப்படைகளை போதிக்கும் தீனியாத் பாடங்களும், தப்ஸீர் வகுப்புக்களும் இடம் பெறும்.

இந்த கோடைக்கால குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களில் இணைய விரும்புவோர் நேரடியாகவே அந்தந்த மஸ்ஜிதுகள் மற்றும் குர்ஆன் மனன மையங்களில் சென்று இணைந்து கொள்ளலாம். 

In response to the great interest by parents in benefiting from their children's summer school holidays by increasing their skills in reciting, memorising and Tafseer (interpreting) of the holy Quran, Awqaf continues to accept registration in the summer memorisation sessions. New students can directly join the sessions in more than 198 mosques (354 sessions) and a number of Quran memorisation centres. The sessions will be conducted from 4pm to 7pm starting from Sunday, July through Thursday, July 27, 2017.
To help learners to get to the sessions, Awqaf provides transportation to and from their locations.
Target audience of the initiative:
  • Male and female school students aged between 6 to 18 years
  • Male and female adults above 18 years of age

குர்ஆனிய வகுப்புக்கள் நடைபெறும் மஸ்ஜிதுகள் குறித்து அறிய இந்த சுட்டிக்குள் சென்று பார்க்கவும்.

For more information about the locations of mosques, centres and sessions, please visit Awqaf's website www.awqaf.gov.ae or any of the Quranic centres.
தகவல்: அதிரை அமீன்

Tuesday, July 4, 2017

மவ்லவி பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அன்பான அழைப்பு

மவ்லவி பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அன்பான அழைப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

மிக அண்மையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் ஃபர்ஸான் மவ்லவி அவர்கள் SLTJ அமைப்பு மற்றும் தலைமை பொறுப்பிலிருந்தும் அதன் கொள்கைகளிலிருந்தும் முற்றிலும் விலகிவிட்ட நிலையில் அதன் தாய் அமைப்பான ததஜவின் தலைமை பொறுப்பிலிருந்து தாங்கள் விலகியிருக்கின்ற செய்திகள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளன. அதன் காரணம் என்னவாக இருந்தாலும் உங்களை அந்த பொறுப்பிலிருந்தும் விலகச் செய்த அல்லாஹ்வே மிகவும் புகழுக்குரியவன், அல்ஹம்துலில்லாஹ்.

மவ்லவி பக்கீர் முஹமது அல்தாபி அவர்களே! உங்களை பொருத்தவரை சத்தியம் இதுதான் என்று தெரிந்தால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளக்கூடியவர் என்பதை அமைப்பிற்குள் ஒன்றாகயிருந்த காலங்களில் பழகி உங்களது பண்பை அறிந்திருந்த நாங்கள் அறிவோம். சுன்னத் ஜமாஅத் மதரஸா என்று அறியப்படக்கூடிய ஒரு மதரஸாவில் பயின்று பட்டம் பெற்றும் அதன் வழியிலேயே அறியாமையினால் வருமானத்திற்கான வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான வாழ்வே சரி என உணர்ந்தவுடன் வந்து கொண்டிருந்த வருமானங்களை எல்லாம் துச்சமென உதறிவிட்டு ஏகத்துவக் கொள்கைளை ஏற்றுப் பின்பற்றியவர் நீங்கள்.

எங்களைப் போல் நீங்கள் ததஜ என்ற அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் அல்ல, அதேபோல் ததஜவின் ஆரம்பகட்ட மவ்லவிமார்களில் ஒருவருமல்ல மேலும் ததஜ தொடர்புடைய அல்லது அதன் ஆதரவு பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவரும் அல்ல என்றாலும் ததஜ என்ற அமைப்பில் இணைந்த குறுகிய காலத்திலேயே அல்லாஹ் உங்களுக்கு ததஜ உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவையும் கண்ணியத்தையும் பெருகச் செய்தான். அதன் விளைவாக அந்த சர்ச்சைக்குரிய நிழல் தலைவரின் கடும் லாபியையும் மீறி தாங்கள் முதன்முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்த லாபி தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர் தங்களுக்கு பல்வேறு மனஉளச்சல்களை ஏற்படுத்தி மாநிலத் தலைவர் பதவியை தூக்கியெறிந்து விட்டு கண்ணீர் மல்க ஓடச்செய்தார் என்பதும் இன்னும் தங்களுக்கு பசுமையாக நினைவிலிருக்கலாம்

(இந்த தலைமை நிர்வாக தேர்தல் நடைபெறும் போது நாங்களும் அந்த அமைப்பில் துபை மண்டல நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்ததையும், அதன் தேர்தல் அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றி அதன் கசப்பான அனுபவங்களை சுமந்து வந்து அன்றைய துபை நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்ட சகோதரர் இன்னும் அதன் சாட்சியாக வாழ்ந்து கொண்டுள்ளார் என்பதையும் இங்கு கூடுதலாக பதிவு செய்ய விரும்புகின்றேன்.)

தற்போதும் இரண்டாவது முறையாக ததஜ உறுப்பினர்களால் மனமுவந்து மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளுமே எப்போதும் டம்மி பொறுப்புக்கள் தான் என்பதும் அதன் உண்மையான அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருப்பதும் ஊரறிந்த ரகசியம் என்பதை நேரடி அனுபவமுள்ள தாங்கள் அறிவீர்கள். அந்த ஜனாதிபதி பொறுப்பையும் தற்போது இரண்டாவது முறையாக துறந்துள்ளீர்கள், நாளை மறுமையில்ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே அவரவர் பொறுப்புக்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்ற ஹதீஸை உள்வாங்கிய அச்சத்தின் காரணமாகவும் தாங்கள் இம்முடிவை எடுத்திருப்பீர்கள் என தங்கள் மீது இன்னும் நன்நம்பிக்கை கொள்கின்றோம். (ஆதாரம்: ஸஹீஹ் அல் புஹாரி எண்கள்: 2558, 2751, 5188, 5200, 7138)

இன்றைய நிலையில், நீங்களாகவே தான் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளீர்கள் என்று ததஜ தலைமை நிர்வாகத்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கள் மீது இதுவரை எத்தகைய பொருளாதார, பெண் குற்றங்களோ இதுவரை சுமத்தப்படவில்லை என்பதும் ததஜவின் உறுப்பினர்களும் இதுவரை உங்கள் மீது நல்லெண்ணமே கொண்டுள்ளார்கள் என்பதற்கும் அல்லாஹ்விற்கு முதலில் நன்றி செலுத்தி விடுங்கள்

அடுத்து இதுவரை நீங்கள் இயல்பாக நம்பியோ அல்லது ஏதொவொரு நிர்பந்தத்திற்கு உட்பட்டோ பின்பற்றிய, பிரச்சாரம் செய்த தனிமனித வஹி மறுப்புக் கொள்கையை குர்ஆன் ஹதீஸின் துணை கொண்டு உரசிப் பாருங்கள். குர்ஆன் ஹதீஸே சரியன்று உங்கள் மனது ஏற்றுக்கொண்டால் இதுநாள் வரை நிலைத்திருந்த ஸஹீஹான ஹதீஸ்கள் நிராகரிப்பு எனும் வஹி மறுப்புக் கொள்கையை காலில் தூக்கிப்போட்டு மிதியுங்கள். அல்லாஹ்விற்காகவும், உங்களின் மறுமை வெற்றிக்காகவும் மீண்டும் தூய குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரத்தை வீரியமாக மேற்கொள்ள வாருங்கள். இதற்காக புதிய அமைப்பை எல்லாம் நீங்கள் கட்டியெழுப்ப வேண்டியதில்லை.

தங்களின் மீது வெளியே தெரியாத களங்கம் ஏதும் சுமத்தப்பட்டிருந்தால் அல்லது தெரிந்தோ தெரியாமலோ மனிதர் என்ற அடிப்படையில் நிஜமாகவே தவறியிருந்தால் அல்லது சதிகளில் சிக்க வைக்கப்பட்டு தாங்கள் மிரட்டப்பட்டிருந்தால் என  இவை எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் பக்கம் ஏதும் குறையிருப்பீன் அவற்றை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்து விட்டும், உங்களால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் யாருமிருந்தால் அவர்களிடம் மனம் வருந்தி மன்னிப்பு கோரிவிட்டு மீண்டும் தஃவா களத்தில் பங்காற்ற அன்புடன் அழைக்கின்றேன், இதற்கான முன்னுதாரணமாக திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளால் மீண்ட அந்த இலங்கை மல்லவி மற்றும் சில தமிழக மவ்லவிகளின் துணிவான, மஃஷரை மட்டுமே கருத்திற்கொண்டு ஈமானுடனும், இறையச்சத்துடனும் எடுத்த முடிவுகள் உங்களுக்கும் உத்வேகமாக  அமையும் எனவும் நம்புகிறேன்.

மறுமை வெற்றிக்குத் தேவை அல்லாஹ்வும் அவனது ரசூலுமா? அல்லது ஒரு தனிமனிதர் உருவாக்கியுள்ள வழிகேடா என்பதை தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த அன்பான அழைப்பிற்கு பதிலாக எதிர்பார்ப்பது அல்லாஹ்விற்காக தாங்கள் எடுக்கப்போகும் அழகிய முடிவையே தவிர மறுப்புரையை அல்ல. உங்கள் மீது கொண்டுள்ள நல்லெண்ணத்தால், வழிகேட்டை கைவிட்டு மறுமைக்குத் தேவையான நேர்வழியை பின்பற்றி பிறருக்கும் போதிக்க வருமாறு அழைப்பது எங்கள் கடமை. அதை ஏற்பதும் நிராகரிப்பது உங்கள் உரிமை. உங்களுடைய முடிவு எத்தகையதாகயிருப்பினும் அவற்றால் எங்களுக்கு எத்தகைய லாபமோ, நஷ்டமோ ஏற்படப்போவதில்லை.

குறிப்பு
மவ்லவி பக்கீர் முஹமது அல்தாபி அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள எனக்கு எத்தகைய வாய்ப்புகளும் இல்லாதநிலையில் இந்த பதிவை பொதுவில் பதிவிடுகின்றேன். அவரை தொடர்பு கொள்ள இயன்றோர் தயவுசெய்து எத்திவைத்துவிடவும். இப்பதிவு தொடர்பாக அல்தாபி அவர்கள் தவிர்த்து மற்றவர்களுடைய பதிலுக்கோ, கமெண்ட்டுகளுக்கோ, ஆதரவிற்கோ, எதிர்ப்பிற்கோ என்னிடமிருந்து பதில் தரப்படாது என்பதை அறிந்து கொள்ளவும்.

என்றென்றும் அன்புடன்

அதிரை அமீன்