உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, April 30, 2011

Dr. KVS ஹபீப் முஹமது கருத்தரங்கம் - நேரடி ஒளிபரப்பு

அன்பார்ந்த அதிரை சொந்தங்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ், நாளை (01.05.2011) அஸர் [4 PM] முதல் ALM பள்ளியிலிருந்து டாக்டர் KVS ஹபீப் முஹம்மது அவர்கள் வழங்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நமது வலைதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது, இவ்வரிய நிகழ்வை காணத்தவறாதீர்கள்.

Friday, April 29, 2011

இன்றும் இனியும்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்று

இன்றைய (29.04.2011) அதிரை ஜூம்ஆவில் கீழக்கரையிலிருந்து வருகை தந்திருந்த சகோதரர் ஜமீல் முஹமது அவர்கள் கலந்து கொண்டு ஜூம்ஆ உரை நிகழ்த்தினார்கள்.

மறுமைச் சிந்தனை என்ற தலைப்பின் கீழ் இன்று முஸ்லீம்களால் மிகச்சாதாரண பாவங்களாக கருதப்படும் வட்டி, வரதட்சணை, விபச்சாராம் போன்ற பல்வேறு பாவங்களை பட்டியலிட்டு மறுமை தன்டனைகளுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் குறித்தும் குர்ஆன் ஹதீஸ் வழி நின்று எச்சரித்தார்கள்.

இரண்டாம் அமர்வில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற பொருளின் கீழ் உரையாற்றினார்கள். குறைந்த நேரத்தில் அரிய பல செய்திகளை சுவராசியமாக சொன்னவிதம் சிந்திக்கும் மக்களுக்கு பயனுள்ளதாய் அமைந்தது.

இனி

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01.05.2011 ஞாயிறு முதல் ALM பள்ளியில் ஒருமாத கால கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் துவங்கவுள்ளதை மீண்டும் நினைவுறுத்துகிறோம், 7 வயதுக்கு மேற்பட்ட உங்களின் குழந்தைகள் கலந்து கொள்வதை உறுதி செய்வீர்.

அன்றைய (01.05.2011 ஞாயிறு) மாலைவேளையில், இன்ஷா அல்லாஹ் அஸர் முதல் மஃரிப் வரை, ALM பள்ளி வளாகத்தில் டாக்டர் KVS ஹபீப் முஹமது அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் 'இஸ்லாமிய விழிப்புணர்வு கருத்தரங்கம்' நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் அறிவமுதம் பருக அலைகடலென திரண்டு வாரீர் என அன்புடன் அழைக்கிறோம்.

கருத்தரங்க ஏற்பாடு
ALM பள்ளி மற்றும் குழுவினர்

Thursday, April 28, 2011

கற்றவர்களும் பெற்றவர்களும் சொன்னது

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த வருடம் அதிரை இஸ்லாமிக் மிஷன் ஏற்பாட்டில் AL மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோர்களின் கருத்துக்கோர்வையின் மிகச்சில பக்கங்கள் உங்கள் பார்வைக்காக...

மறக்காமல் உங்கள் குழந்தைகளை 01.05.2011 அன்று AL மெட்ரிக் பள்ளியில் துவங்க இருக்கின்ற இந்த வருட கோடைகாலப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

Tuesday, April 26, 2011

விடுமுறை காலப் பயிற்சி முகாம்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த ஆண்டுகளைப் போன்று, இவ்வாண்டும் மாணவ மாணவியர்க்கான பயனுள்ள கல்விப் பயிற்சிகளை வழங்கும் ஒரு மாத காலப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01 – 05 – 2011 முதல் 31 – 05 - 2011 வரை துபை 'அதிரை இஸ்லாமிக் மிஷன்' மற்றும் . எல். எம். பள்ளி நிர்வாகம் சார்பில் மேற்படிப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது. ஆர்வமுள்ள பெற்றோர்கள் தம் ஏழு வயதுக்கு மேற்பட்ட மக்களைப் பயிற்சிகளில் பங்குபெற வைப்பது கொண்டும், மாணவ-மாணவியர் தாமே வந்து இணைந்து பயன்பெறுவது கொண்டும் இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ள வழியில் கழித்து இம்மை-மறுமை வெற்றிக்கான முயற்சியில் ஒத்துழைப்புத் தருமாறு கோருகின்றோம்.


வகுப்புகளின் நேரம்: காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணிவரை.

தூரப் பகுதிகளிலிருந்து மாணவ-மாணவியரை அழைத்து வருவதற்கும், வகுப்புகள் முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டுவந்து விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாகப் பங்கு பெற்று முடிக்கும் மாணவ-மாணவியர்க்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்படும்.

தொடர்புக்கு: 9566716216 / 9750969302 / 9894989230

அன்புடன் அழைக்கும்,

AIM & ALM
அதிராம்பட்டினம்

Friday, April 1, 2011

இந்த வார (01.04.2011) ஜூம்ஆ நிகழ்வுகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இந்த மார்க்கத்தில் அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களை தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஇனபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னுமாஜா பக்கம் – 1, பக்கம் – 1 (ஹதீஸ் எண் 8, அத்தியாயம்: முகத்திமா (குறிப்பு: அஹ்மத் 17817, இப்னு ஹிப்பான் 326 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

இந்த வார (01.04.2011) ஜூம்ஆவில், சகோதரர் (குடந்தை) சுல்தான் அவர்கள் கலந்து கொண்டு பேரழிவுகள் தரும் படிப்பினைகள் என்ற கருத்தின் கீழ் அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்துக்கூறி பாரமுகமாயிருக்கும் நம்முடைய நிலைகளையும் சுட்டி, இன்னும் நாம் படிப்பினை பெறவிட்டால் நாம் ஏற்றிருக்கும் இஸ்லாத்திற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை ஏற்படக்கூடும் என எச்சரித்து உரை நிகழ்த்தினார்கள்.

இரண்டாவது அமர்வில், ரஸூல் (ஸல்) அவர்கள் 'நான் அவரைச் சேர்ந்தவன்' என சிலாகித்து நேசித்த ஜூலைம் (ரலி) அவர்களின் சோக வாழ்வு மற்றும் தியாக வரலாற்றை நினைவுபடுத்தி, ஸஹாபாக்களை பன்படுத்திய குர்ஆனுடைய வாழ்விற்கு அழைத்தார்கள்.

அதிரையிலிருந்து
அப்துல் ரஹ்மான்