உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, February 5, 2014

அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் பயிற்சியாளர் ஆவது எப்படி?

அஸ்ஸலாமு அலைக்கும், 
 
இன்ஷா அல்லாஹ் வரும் ஃபிப்ரவரி 9 அன்று சென்னையில் அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் பயிற்சியாளர் ஆவது எப்படி என்று ஒருநாள் பயிற்சி நடக்க உள்ளது.  (How to become a Trainer in Understand Quran Academy)
  
பயிற்சியாளர்:    
ஹைதராபாத் அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் அகாடமியின் மூத்த நிர்வாகி சகோ.அப்துல் ரஹீம். 
                            
வகுப்பு ஆங்கிலத்தில் நடைபெறும். 
 
நேரம்
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை. 
 
இடம்
ஆள்வார்பேட்டை ப்ரெஸ்டன் கல்லூரி ம்ஸ்ஜித்.  
               
மதிய உணவு இலவசம். 
 
நிகழ்ச்சி கோ-ஸ்பான்ஸர்:    
ஐ.எஸ்.அல்.சி, திருவல்லிக்கேணி.  (iSmart Learning Center.com)
சென்னையில் உள்ள நம் சமுதாய சொந்தங்களுக்கு தெரியப் படுத்தவும். கலந்து கொள்ள ஊக்கப் படுத்தவும்.  இதைப் பற்றி மேலும் அறிய  என்ற 
இணைய தளத்தை பார்க்கவும்.

Every Saturday we conduct Career Guidance and Communication Development Program in iSmart Learning Center, Triplicane.  This can be viewed online in our website also.  Pls visit www.islc1.com  for registration.

SHA NAWAS,
94421 71431

Tuesday, February 4, 2014

ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் உத்தரவில் குண்டுவெடிப்புகள் நடத்தினோம்: சுவாமி அசீமானந்த் தகவல்

அம்பாலா: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தற்போதைய தலைவரான மோகன் பகவத் உத்தரவைத் தொடர்ந்தே நாட்டில் பல குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தினோம் என்று சிறையில் இருக்கும் ஹிந்து தீவிரவாதி சுவாமி அசீமானந்த் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல், மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் முதன்மை குற்றவாளியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதிவாசிகள் அமைப்பின் தலைவர் சுவாமி அசீமானந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தேசிய செயற்குழு உறுப்பினரான பிரக்யா சிங் தாகுர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி உளிட்ட 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் சுவாமி அசீமானந்தை caravanmagazine.in என்ற இணைய தள ஊடக நிர்வாகத்தினர் 20011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பல்வேறு சூழல்களில் அம்பாலா சிறையில் சந்தித்து பேசினர்.
அப்போது அசீமானந்தா தெரிவித்த தகவல்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. 
அதில் அசீமானந்த் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் சுருக்கம்: மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாதுராம் கேட்சோ, நாராயண் அப்தே ஆகியோர் 1949ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்ட சிறைதான் இந்த அம்பாலா சிறை. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டு 18 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே. அவர் அடைக்கப்பட்டிருந்த அதே செல்லில்தான் இப்போது நான் இருக்கிறேன். அது எனக்கு பெருமையாக இருக்கிறது.
ஹிந்துக்களின் நன்மை கருதியே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை.. அனைத்து விசாரணை அதிகாரிகளிடமும் நான் ஒப்புதல் வாக்குமூலம்தான் கொடுத்திருக்கிறேன்.
2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதாவது குஜராத்தின் சூரத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு முடிவடைந்த பின்னர் அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலராக இருந்த தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் இந்தரேஷ் குமார் ஆகியோர் குஜராத்தின் டாங்க்ஸ் பகுதியில் என்னை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது சுனில் ஜோஷியும் உடனிருந்தார். இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது மோகன் பகவத் என்னிடம், நீங்கள் சுனில் ஜோஷியுடன் இணைந்து இதை செய்யுங்கள்.. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது.. இப்படி குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது ஒன்றும் குற்றமும் அல்ல.. இது நமது தத்துவ சிந்தனையுடன் தொடர்புடையது.
ஹிந்துக்களுக்கு முகவும் முக்கியமானது. தயவு செய்து இதை நீங்கள் செய்யுங்கள்.. உங்களுக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார். இவ்வாறு சுவாமி அசீமானந்த் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தே குண்டுவெடிப்புகளுக்கு உத்தரவிட்டார் என சுவாமி அசீமானந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Source: http://tamil.oneindia.in/news/india/saffron-terror-attacks-swami-aseemanand-implicates-rss-chief-mohan-192804.html

Sunday, February 2, 2014

கையினால் எழுதப்பட்ட பாஸ்‌போர்ட் 2015 நவம்பரிலிருந்து செல்லாது

2002ஆம் ஆண்டுக்கு முன் பாஸ்போர்ட் பெற்றவரா நீங்கள்?? முக்கிய அறிவிப்பு.

பெங்களுரூ: 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கையினால் எழுதப்பெற்ற பாஸ்போர்ட் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்ல இந்திய அரசுஅனுமதிக்காது. சிறிய நீல புத்தகமான நமது பாஸ்போர்ட் இப்போது உயர் தர அச்சுபடிவங்களால் அச்சடிக்கப்பட்டு வருகிறது, ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பாஸ்போர்ட் கையினால் எழுதப்பட்டவையாகும். இயந்திரத்தால் வாசிக்க இயலாத (கையினால் எழுதப்பட்ட) பாஸ்‌போர்ட்களை நடைமுறையிலிருந்து அகற்ற சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) ஒரு புதிய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது. ICAOவில் இந்திய நாடும் ஒரு உறுப்பினர்.

கையினால் எழுத பெற்ற அல்லது 20 வருடம் செல்லுபடியாகும் தன்மை கொண்ட பாஸ்போர்ட் கொண்டுள்ள மக்களுக்கு ICAOவின் கீழ் செயல்படும் எந்த நாடும் விசா வழங்காது. நவம்பர் 24 2015 அன்று முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக 2001 ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட இந்த பாஸ்‌போர்ட்கள் அவை புதுப்பிக்கப்படும் வரை பயனற்றதாகவே இருக்கும்.
கர்நாடகா மண்டல பாஸ்‌போர்ட் அதிகாரி பி.எஸ்.கார்த்திகேயன் இது பற்றி கூறுகையில், இந்த வகையான பாஸ்போர்ட்களை கொண்டிருக்கும் மக்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், இது குறித்து ஏற்கனவே விசாரிக்க துவங்கியதாகவும், மேலும் சிலர் தங்கள் பழைய பாஸ்போர்ட்களை புதுப்பிக்க தொடங்கிவிட்டதாகவும் கூறினார். 2002ஆம் ஆண்டுக்கு முன் பாஸ்போர்ட் பெற்றவரா நீங்கள்?? முக்கிய அறிவிப்பு.

2001 -ஆம் ஆண்டுக்கு முன் கையினால் எழுத பெற்ற பாஸ்போர்ட்களே விநியோகிக்கப்பட்டது. பின்பு இச்செயல்முறையை நிறுத்தப்பட்டது. மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கையினால் எழுத பெற்ற பாஸ்போர்ட்களைக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், கணினி சேவைகள் தொடங்கப்பட்ட போது ,2002 -ஆம் ஆண்டுக்கு முந்தைய தகவல்களும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் 20 வருட செல்லுபடியாகும் தன்மை கொண்ட பாஸ்போர்ட்களை நவம்பர் 25, 2015 தேதிக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
புதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
 *பாஸ்போர்ட் ஆணையத்தின் இணையதளத்தில் புதிய விண்ணப்பத்தாரராக பதிவு செய்ய வேண்டும்.
* மின்னணு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
* பதிவு செய்த பின் ஒரு உள்நுழைவு ஐடி மற்றும் கடவு சொல் வழங்கப்படும்
*இரண்டாவது திரையின் பாஸ்போர்ட் வகையில் "பாஸ்‌போர்ட் மறுபதிவு" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 *தங்கள் தேவையை பொறுத்து, சாதாரண சேவை அல்லது தட்கள் சேவை முறையைதேர்வு செய்யலாம். இணைய தளத்தின் இயக்கங்களை பொறுத்து, அடுத்த சில விபரங்களை நிரப்ப வேண்டும்.
 * முந்தைய பாஸ்போர்ட் குறித்த விபரங்களை சேர்க்க வேண்டும்.
*விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
* பாஸ் போர்ட் சேவா கேந்திரா விற்கான சந்திப்பு முன்பதிவினை ஆன்லைன் -ல் விண்ணப்பத்தை அச்சிட்டு நேர்காணலின் போது எடுத்து செல்ல வேண்டும்.
* வயது முகவரி ஆகியவற்றிற்கான அசல் மற்றும் நகல் அடையாள சான்றுகளை எடுத்து செல்ல வேண்டும்.


பாஸ்போர்ட் அப்ளை செய்யப்போறிங்களா ?‏


நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள்... பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க...! முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்.
 https://passport.gov.in/pms/Information.jspContinue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும். அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்


பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள் [] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும் அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும்,
போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு) · ரேசன் கார்டு · குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · வாக்காளர் அடையாள அட்டை · வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்) ·
துணைவின் பாஸ்போர்ட் பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_ · 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ் · பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் · கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள் · 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டு போகவும் ·
உங்களது பெயரை (மதம் மாறும் போது/ எண் கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ். ·
பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
 அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.
நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… 

Thanks:- World Wide Tamil People