உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, May 31, 2015

கண்காட்சியில் கவர்ந்திழுக்கும் அதிரை வரலாறு !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் நடைபெறும் வரலாற்று கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிரை குறித்த அபூர்வ வரலாற்று தகவல்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக பார்த்து வியந்து வருகின்றனர்.

இதோ வாசகர்களுக்காக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிரை குறித்த அறிய தகவல்கள்:

Wednesday, May 27, 2015

ADT சார்பாக 29.05.2015 வெள்ளியன்று அதிரையில் தாவா பயிற்சி! இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு அழைப்பு!!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


சென்னை மாநகரில் மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவின் சார்பாக எண்ணற்ற தாவா அழைப்புகள், திருக்குர்ஆனை பரப்புதல், காது மற்றும் வாய் பேச இயலாதோருக்கு சிறப்பு தாவா நிகழ்ச்சிகள் என்றெல்லாம் நடத்தி மாற்றுமத சகோதரர்கள் மத்தியில் இஸ்லாம் குறித்த நல்லெண்ண வெளிச்சத்தை ஏற்றி வருவதை அறிந்திருப்பீர்கள்.அதனடிப்படையில் கடந்த (22.05.2015) வெள்ளியன்று சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் கலந்து கொண்டு அதிரை தாருத் தவ்ஹீதின் பிலால் நகர் மர்கஸில் சிறப்பு தாவா வகுப்பை நடத்தினார்கள். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கருத்து மேலோங்கியதன் தொடர்ச்சியாக இந்த வாரம் 29.05.2015 வெள்ளியன்று மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவின் முக்கிய அழைப்பாளர்களில் ஒருவரான சகோதரர் அப்துல் ஹமீது அவர்களை கொண்டு கீழ்க்காணும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன இன்ஷா அல்லாஹ்.

அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் 29.05.2015 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நிரல்

1. ALM பள்ளிகூட பள்ளிவாசலில் ஜூம்ஆ உரை

2. அஸருக்குப்பின் பிலால் நகர் தர்பியா சென்டரில் பெண்களுக்காக வாராந்திர பயான்

3. மஃரிப் தொழுகையை தொடர்ந்து, தாவா என்றால் என்ன? ஏன் தாவா செய்ய வேண்டும்? எப்படி தாவா செய்ய வேண்டும்? என்ற பொருளின் அடிப்படையில் தாவா பயிற்சி ADTயின் பிலால் நகர் தர்பியா சென்டரில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

தாவா ஆர்வலர்கள், இளைஞர்கள், நண்பர்கள் குழு என அனைவரும் இந்நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து பயனடைய வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத்

Tuesday, May 26, 2015

அதிரையில் ADT நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி !

 
அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம் இந்த வருடமும் மாணவிகளின் பங்களிப்புடன், அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூடத்தில் கடந்த 10.05.2015 முதல் 25.05.2015 வரை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சி முகாமின் இறுதியில், முகாமில் பயின்ற மாணவிகள் மத்தியில் சிறப்புத் தேர்வுகள் மற்றும் மார்க்க அறிவு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி அதிரை ஏ.எல் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை தாருத் தவ்ஹீத் தலைவர் அதிரை அஹ்மத் தலைமை வகித்தார். இதில் அதிரை தாருத் தவ்ஹீத் செயலர் ஜமீல் எம் ஸாலிஹ் நிகழ்ச்சி குறித்து அறிமுக உரையாற்றி, நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழிநடத்தி சென்றார்.

நிகழ்ச்சியில் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி ஆசிரியையின் இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதன் பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தேர்வு எழுதி வெற்றி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் - பெற்றோர்கள் என் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 
  

Monday, May 25, 2015

அதிரையில் இன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி மற்றும் கோடைகால பயிற்சி நிறைவு, பரிசளிப்பு விழா

அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம் இந்த வருடமும் மாணவிகளின் பேராதரவுடன், அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூடத்தில் கடந்த 10.05.2015 முதல் 25.05.2015 வரை நடைபெற்று நிறைவுற்றது.


இக்கோடைகால பயிற்சி முகாமின் இறுதியில், முகாமில் பயின்ற மாணவிகள் மத்தியில் சிறப்புத் தேர்வுகள் மற்றும் மார்க்க அறிவு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்திடவும், முகாம் நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் (26.05.2015) இன்று மாலை சுமார் 3 மணியளவில் ALM பள்ளிக்கூட வளாகத்தில் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆலிமா சுமைய்யா சித்தீக்கியா (முத்துப்பேட்டை) அவர்கள் கலந்து கொண்டு மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்கள்.


பெண்கள் அனைவரும் பெருமளவில் கலந்து பயனடைய வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.


குறிப்பு: ஆண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அழைப்பின் மகிழ்வில்

அதிரை தாருத் தவ்ஹீத்

Thursday, May 21, 2015

முஸ்லீம்களுக்கு வேலை இல்லை: எம்.பி.ஏ. பட்டதாரிக்கு இமெயில் அனுப்பிய மும்பை கம்பெனி

மும்பை: மும்பையைச் சேர்ந்த நகை ஏற்றுமதி நிறுவனம் தாங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்போம் என்று கூறி வேலை கேட்டு விண்ணப்பித்த இஸ்லாமியருக்கு இமெயில் அனுப்பியுள்ளது.
 
மும்பையில் உள்ள ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நகை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்காக எம்.பி.ஏ. பட்டதாரியான ஜெஷான் அலி கான், அவரது நண்பர்கள் முகுந்த் மணி மற்றும் ஓம்கர் பான்சோடே ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் அனுப்பிய 15 நிமிடங்கள் கழித்து அந்நிறுவனம் ஜெஷானுக்கு இமெயில் அனுப்பியுள்ளது. அந்த இமெயிலில், நாங்கள் முஸ்லீம் அல்லாதவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஜெஷானின் நண்பர்களை நேர்காணலுக்கு வருமாறு அந்நிறுவனம் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இது குறித்து ஜெஷான் கூறுகையில், 
 
இமெயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் போஸ்ட் செய்தேன். இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். என்னுடன் விண்ணப்பித்த என் நண்பர்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. என் பெயரில் கான் இருப்பதால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. என்னை முஸ்லீம் என்பதால் நிராகரித்த நிறுவனத்தில் சேரப் போவது இல்லை என எனது நண்பர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார். 
 
ஜெஷானுக்கு இமெயில் அனுப்பிய ஹெச்ஆர் ட்ரெய்னீயை சஸ்பெண்ட் செய்துள்ள நிறுவனம் இது தவறுதலாக நடந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/we-hire-only-non-muslims-mumbai-company-told-job-applicant-227221.html

Tuesday, May 19, 2015

"ரமளான் ஓர் முன்னோட்டம்" 21.05.2015 வியாழன் அன்று துபை MTCT மர்கஸில் சிறப்புரை

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
 
அதே போல் இன்ஷாஅல்லாஹ் இந்த மாதத்தில் வரும் வியாழன் 21st May 2015 அன்று  மெளலவி T.முஹம்மது நாசர்   அவர்கள் "ரமாளான் ஓர் முன்னோட்டம்" ( Fiqh Al-Siyaam فقه الصيام ) என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.

குறிப்பு: அன்பார்ந்த சகோதரர்களே ரமளான் மாதம் நம்மை நெருங்கிகொண்டிருக்கின்றது. அல்லாஹ்வுடனான உங்களின் தனிப்பட்ட தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

For Madukkur Thowheed Charitable Trust

Monday, May 18, 2015

அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா அழைப்பு !‏


அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா எதிர்வரும் [ 25-05-2015 ] அன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனைபடைத்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

மேலும் அதிரையை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் நமதூர் பகுதியின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், நமதூர் ஒவ்வொரு பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் தனிப் பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் முன்வந்துள்ளனர்.

இந்த விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
--
அதிரை நியூஸ் 
உள்ளூர் நிகழ்வுகள் உடனுக்குடன்... 

Friday, May 15, 2015

16.05.2015 மதுக்கூர் இஸ்லாமிய மாநாடு - நேரடி ஒளிபரப்பு விபரங்கள்


நாளை சனிக்கிழமை 16.05.2015 அன்று மதுக்கூரில் நடைபெறவுள்ள ஒருநாள் இஸ்லாமிய மார்க்க விளக்க மாநாடு கீழ்க்காணும் தளங்களில் நேரலை செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

www.tmclivetelecast.com
www.qurankalvi.com
www.suvanacholai.com

www.jubaildawahtamil.blogspot.com 

Thursday, May 14, 2015

துபையில் 15.05.2015 வெள்ளியன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி - உரை: அப்துல் பாசித் புகாரி

துபையில், மர்கஸ் அல் ஹுதா வழங்கும் மவ்லவி.அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சொர்க்கத்திற்கு நற்செய்தி பெற்ற பத்து நபித்தோழர்கள் என்ற தலைப்பின் கீழ் மாதந்தோறும் ஒவ்வொரு நபித்தோழரை குறித்து சொற்பொழிவு நடைபெறும். 
 
அந்த வரிசையில் இன்ஷா அல்லாஹ் இந்த மாதம்  வெள்ளிக்கிழமை 15/5/2015  அன்று மாலை 7:30 மணி அளவில்  சிறப்பு மிக்க நபித்தோழர் உமர் பின் அல் ஹத்தாப் (ரழி) அவர்களை குறித்து அறிய உள்ளோம் . 
 
மேலதிக விபரங்களை  அறிய கீழ இணைக்கப்பட்ட போஸ்டரை பார்க்கவும் பகிரவும்.
 

Sunday, May 10, 2015

அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது அறிவிப்பு !‏

 
அதிரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நமதூர் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் 1 ம் ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

கல்வியில் பின்தங்கிய நமது பகுதியை மேம்படுத்தும் நோக்கில் நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மற்றும் பெற இருக்கும் மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோருக்கு 'அதிரை நியூஸ் கல்வி விருதுகள்-2015' என்ற பெயரில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெறும் மாபெரும் விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

அதிரை நியூஸ் கல்வி விருது கமிட்டியினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட பரிசுத்தொகையோடு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட இருக்கின்றனர்.

பன்னிரெண்டாம் வகுப்பு:
முதல் பரிசு ₹ 10,000/-
இரண்டாம் பரிசு ₹ 7,000/-
மூன்றாம் பரிசு ₹ 5,000/-
நான்காம் பரிசு ₹ 3,000/-

பத்தாம் வகுப்பு:
முதல் பரிசு ₹ 7,000/-
இரண்டாம் பரிசு ₹ 5,000/-
மூன்றாம் பரிசு ₹ 3,000/-
நான்காம் பரிசு  ₹ 2,000/-

மேலும் நமது பகுதியில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த சிறந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் சிறந்த சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கின்றோம்.

சிறப்பு விருதுகள்:
நல்லாசிரியர்
கல்விச்சேவை
சிறந்த கல்வி நிறுவனம்
சிறந்த பேச்சாளர்
சிறந்த எழுத்தாளர்
சிறந்த கவிஞர்
சிறந்த விளையாட்டு வீரர்
சுகாதார சேவை
மருத்துவ சேவை
அவசரகால மருத்துவ சேவை
இரத்ததான சேவை
சிறந்த சமூக சேவை [ நிறுவனம் ]
சிறந்த சமூக சேவை [ தனிநபர் ]
சிறந்த பத்திரிகையாளர்
சிறந்த காவலர்

தகுதியான சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அதிரை நியூஸ் சார்பில் கல்வியாளர்கள் - சமூக ஆர்வலர்கள் ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள 'விருது கமிட்டியினர்' வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் இவர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இறுதி வடிவம் பெற்றவுடன் இதுகுறித்த தகவல் முறையாக அறிவிப்பு செய்யப்படும்.

விருது பெற இருக்கும் சாதனையாளர்கள், விருது நடைபெறும் நாள் - இடம், விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்கள் - ஸ்பான்சர்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் விரைவில் அறிவிப்பு செய்யப்படும்.

மேலும் இது தொடர்பாக வாசகர்களிடமிருந்து சிறந்த ஆலோசனைகள் - கருத்துகள் வரவேற்கப்படுகிறது. மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு கீழ்க்கண்ட அலைப்பேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் அதிரை நியூஸ் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.

0091 9442038961 / 0091 9043140142
editoradirainews@gmail.com

அதிரை நியூஸ் குழு
 
அதிரை நியூஸ் உள்ளூர் நிகழ்வுகள் உடனுக்குடன்... 
http://www.adirainews.net/

Saturday, May 9, 2015

ADT வழங்கும் கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும்


கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான்> பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும்> பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 16:70.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எவன் மறுமையை பயந்து> தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து> இரவு காலங்களில் நின்றவனாகவும்> சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ> (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும்> கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம். அல்குர்ஆன் 39:9.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவைகளாகி விடுகின்றன.

மரணத்த பின்பு மனிதன் கூடவே செல்லும் அம்மூன்று செயல்கள்-
 1.சதக்கத்துல் ஜாரியா (எனும் நிலையான தான தர்மங்கள்)
2.பலன் தரும் கல்வி (இம்மை மறுமை இரண்டிற்க்கும் நன்மை பயக்கும் கல்வி).
3.பெற்றோருக்காக துஆ செய்யும் (பிரார்த்திக்கும்) நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்ஷா அல்லாஹ்> இவ்வருட கோடைக்கால பயிற்சி முகாம் வழமைபோல்>

எதிர்வரும் 10.05.2015 முதல் 25.05.2015 வரை தினமும் காலை 9 மணிமுதல்

அதிரை> CMP லேன் பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தகுதிவாய்ந்த ஆலிமாக்களை கொண்டு நடைபெறவுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் இன்று பிலால் நகர் தர்பியா சென்டரிலும்> நாளை காலையில் முகாம் நடைபெறும் AL மெட்ரிக் பள்ளி வளாகத்திலும் கிடைக்கும்.

மாணவிகள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றது.

அதிரை தாருத் தவ்ஹீத்
அதிராம்பட்டிணம்.