அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் நமது மக்களை காண முடிந்தது.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் சென்னை மெரினா கடற்கரையில் சிற்றுந்தில் இஸ்லாமிய நூலகம் அமைத்து விற்பனையும் அழைப்புப் பணியும் மேற்கொண்டார்கள்.
அவர்களிடையே சுமார் அரை மணி நேரம் இருந்தபோது சுமார் 10 புத்தகங்கள் விற்பனையானது. இதில் 1 தமிழ் தர்ஜமாவும் 1 ஆங்கில தர்ஜமாவும் அடக்கம். இவர்கள் அனைவருமே இஸ்லாத்தை அந்த நிமிடம் வரை ஏற்காதவர்கள்.
அதுபோல், சென்னை சிட்டி சென்டர் உள்முகவாயிலில் சிறு டேபிள் அமைத்து அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எந்த இயக்கமும் சார்ந்தவர்கள் அல்ல. நிதியும் அவர்களுடையதே! அவர்களுக்கிடையில் நேரம் ஒதுக்கி இந்த அழைப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதில் முக்கியமாக அவர்கள் சிறு சிறு கையேடுகள், தமிழ், ஆங்கில தர்ஜமா குர்ஆனை இலவசமாக,அன்பளிப்பாக கொடுக்கிறார்கள் இவர்களிடையும் அரைமணி நேரம் இருந்தபோது, மக்களாகவே முன்வந்து இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை சொல்லி உண்மையான பதிலை பெற்றுச் சென்றார்கள். இந்த அழைப்பு பணியின் போது பலர் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
நாம் நசுக்கப்படுகிறோமே...அல்லாஹ் என்று சொன்னால் ஆயிரம் கஷ்டங்கள் வருகிறதே... என்றெல்லாம் தாழ்வு மனப்பான்மை ஆட்கொள்ளும் இன்றைய காலகட்டத்தில்,
இந்த சகோதர்கள் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் பணியும் அதற்கு மக்கள் தரும் மரியாதையும் பார்க்கின்றபோது...
நாம் தோற்கமாட்டோம்...அல்லாஹ் நம்மை மேன்மைப்படுத்துவான் சங்கைப்படுத்துவான் என்ற நம்பிக்கையும் நெஞ்சுறுதியும் ஏற்படுகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
Narration & Photos by Brother Hidayathullah - Adirai
Thanks to: ADT
இந்த இரு நிகழ்வுகளின் படங்கள்