உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, August 31, 2015

25 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்த பள்ளிவாசல் படுகொலைகள்


கபனிடப்பட்டு அடக்கம் செய்யப்படுவதற்காக உள்ள ஷூஹதாக்களின் ஜனாஸாக்கள் (காணொளி)

'கருணா அம்மான்' போன்ற சந்தர்ப்பவாத பயங்கரவாதிகளும் அவனுடைய எதிர்அணியினரும் இந்திய ஊடகங்களால் மீண்டும் தூக்கிப்பிடிக்கப்படுகின்ற இந்த வேளையில், இந்த கோழைகள் ஒன்றாக இருந்தபோது முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய மிகச்சில வன்முறைகளையாவது நினைவுகூர்வது காலத்தின் கட்டாயமாகும். பிராபகரன் என்ற மனித உயிர்களின் மதிப்புத்தெரியாதவனுக்காக இந்த படுகொலைகளை அரங்கேற்றியவன் தான் அன்றைய கிழக்கு மாகாண பயங்கரவாதிகளின் பொறுப்பாளன் 'கருணா' என்கிற இந்த கருணா அம்மான்.

நம் இந்தியாவில் இந்துக்கள் வேறு, இந்துக்களின் பெயரைச் சொல்லி ஆட்டம்போடும் இந்துத்துவ பயங்கரவாதிகள் வேறு என்று புரிந்து வைத்துள்ளதை போன்றே விடுதலைப்புலிகள் வேறு, ஈழத்தமிழர்கள் வேறு என்ற அடிப்படை வித்தியாசத்தை புரிந்து கொண்டவர்களாக தொடர்க,

அப்படியானால், விடுதலைப்புலிகளை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கவே இல்லையா? என்ற கேள்வி வருகிறது இல்லையா! ஆம், நமது இந்திய மக்களில் சுமார் 31 சதவிகிதத்தினர் 'அச்சே தீன்' வரும், 15 லட்சம் வரும் என ஏமாறவில்லையா? அதைப்போன்றே மிகச்சிலர் கோழைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று புரிந்து கொள்க. மிகப்பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் வேறு வழியின்றி அவர்களின் சர்வாதிகாரத்தை விழுங்கிக் கொண்டு நித்தமும் செத்துப்பிழைத்து 'மத்தளத்திற்கு இருபுறமும் இடி' என வாழ்ந்தவர்கள்.

மிகச்சரியாக 25 ஆண்டுகளுக்கு முன், 1990 ஆம் வருடம், ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதியன்று இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள காத்தான்குடி என்ற முஸ்லீம்கள் செறிந்துவாழும் ஊரில், பள்ளிவாசல்களில் இஷா தொழுது கொண்டிருந்த அப்பாவி, நிராயுதபாணி முஸ்லீம்கள் சுமார் 147 பேர்கள் விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் 7,8 வயது பாலகர்களும் அடக்கம். யாழ்ப்பாணத்தில், மன்னாரில் விரட்டியடித்ததைப் போல் காத்தான்குடி முஸ்லீம்களையும் அச்சுறுத்தி மொத்தமாக ஊரைவிட்டு விரட்டுவதற்காக தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனம் அது.

(இதேபோன்றதொரு அவலம் இந்திய வரலாற்றிலும் மறைந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், தேவ்பந்த் நகரில் உள்ள ஒரு பள்ளியின் பெயர் "ஹூனி மஸ்ஜித்" அதாவது இரத்தப்பள்ளி. இந்தியாவில் சுதந்திர முழக்கங்கள் சுடர்விடத் துவங்கிய நேரத்தில் பள்ளிவாயில்களே அதன் பிரச்சாரக் களங்களாக திகழ்ந்தன. இதனால் ஆத்திரமுற்ற ஆங்கிலேயர்கள் அங்கே தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களை சுட்டுக்கொல்ல, அந்தப்பள்ளியும் இன்றளவும் முஸ்லீம்களின் இரத்தக்கறையுடன் சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட சின்னமாக நின்று கொண்டுள்ளது)

இலங்கை அரசாங்கம் சேதமடைந்த பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்திட முன்வந்தும் முஸ்லீம்களால் மறுக்கப்பட்டு, விடுதலைப்புலிகள் எனும் கோழைகள் நடத்திய படுகொலைகளின் சுவடுகள் இன்னும் நமது பள்ளிவாசல்களில் வருங்கால தலைமுறைக்கு வன்முறை கும்பலின் வரலாறு சொல்லும் சாட்சிகளாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் ஒரே நீண்ட கபுரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை முஸ்லீம்களால் ஒவ்வொரு வருடமும் படுகொலை நடந்த தினம் 'ஷூஹதாக்கள் தினமாக' (உயிர் தியாகிகள் தினமாக) நினைவுகூறப்பட்டும் வருகின்றன.

மிக அதிகமானோர் படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் எடுக்கப்பட்ட படங்கள்
ஷூஹதாக்கள் அனைவரும் ஒரே கபுரில் சுவற்றோரம் வரிசையாக  அடக்கம் செய்யப்பட்ட மீரா ஜூம்ஆ பள்ளி மையவாடிமஸ்ஜிதுல் ஹூசைனியா தைக்காலின் சுவர்கள் கூறும் இனப்படுகொலை வரலாற்றின் வலி நிறைந்த படங்கள்
இது மட்டுமல்ல, ஹஜ் புனித யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய காத்தான்குடி முஸ்லீம்களையும், அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர 2 பஸ்களில் சென்ற குடும்பத்தினர்களையும் கடத்திக் கொண்டு போய் 'காண பிணமாக்கினர்'. இறுதிப்போரில் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தான் குழந்தைகள் உட்பட சுமார் 60 பேர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டு ஒரு முந்திரிக்காட்டில் புதைக்கப்பட்டுள்ள கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

(இதேபோல் இந்தியாவிற்குள் காலணி ஆதிக்க ஆசையோடு முதன்முதலில் வந்திறங்கிய கொடூரன் 'வாஸ்கோட கமா' என்ற சண்டாளன், ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய முஸ்லீம்களை கடலில் வைத்தே கொன்றொழித்து விட்டு அவர்களின் கப்பல்களையும் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றான்)

ஏனிந்த கொலைவெறி?
கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கிணங்க, தமிழர்கள் பெரும்பானமையினராக வாழும் பிரதேசங்களில் ஈழத்தமிழர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற மோசமான சிந்தனையின் வெளிப்பாடாக பல முஸ்லீம் கிராமங்களை இரவோடு இரவாக மக்களை கொன்று, கொள்ளையடித்து, தீயிலிட்டு அங்கே மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் இன்றி இன சுத்திகரிப்பு செய்தனர், மேலும் யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களை துப்பாக்கிமுனையில், சில மணிநேர அவகாசத்தில் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு அகதிகளாக விரட்டியடித்தனர்.

ஆகக்கடைசியாக, திரிகோணமலை மாவட்டம் 'மூதூர்' என்ற கடற்கரை பிரதேச முஸ்லீம்களை துப்பாக்கி முனையில் அனைத்தையும் பறித்துக் கொண்டு அகதிகளாக வெளியேற்றிய நிகழ்வுடன், கோழைப்புலிகளின் இறுதி அழிவுக்கான சமர்களம் ஆரம்பமாயிற்று. விளைவு முஸ்லீம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஈழத்தமிழர்கள் மட்டுமே இருந்த பிரதேசங்கள் இலங்கை ராணுவத்தின் மிக எளிய வேட்டைகாடுகள் ஆயின என்பதை காலம் கண்கூடாக கண்டது.

ஈழத்தமிழரின் எதிரிகள் இந்த கோழைப்புலிகள்:
சுருக்கமாக, ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய அனைத்து இயக்கங்களையும் அதன் தலைவர்களை கொன்றொழித்தவர்கள். அரசியல்ரீதியாக, ஜனநாயகரீதியாக செயல்பட்ட அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் கொன்றொழித்தவர்கள், வீட்டுக்கு ஒருவர் என ஈழத்தமிழ் சிறுவர்களையும், சிறுமிகளை கடத்திச் சென்று கட்டாய பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தியவர்கள், கருவுற்ற ஈழத்தமிழ் இளம்பெண்களை மரத்திலிருந்த குதிக்கச் செய்து கருவை கலைத்து இயக்கத்தில் வலுக்கட்டாயமாக இணைத்தவர்கள், தன்னுடைய நிழலாக இருந்த மாத்தையா போன்ற பலரை அதிகார போட்டிக்கு பயந்து துரோக குற்றம் சுமத்தி கொன்றொழித்தவர்கள், திலீபன் போன்ற அவர்களின் அரசியல் பிரிவு தலைவர்களை உண்ணாவிரதத்தின் மூலம் மடியவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள், வணிகர்கள், செல்வந்தர்களை கடத்தி இயக்கத்திற்காக தொடர்ந்து பணம் பறித்தவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈழத்தமிழ் மக்கள் சம்பாதிப்பதில் சரிபாதி சம்பளத்தை கட்டாயப்படுத்தி பிடிங்கிக் கொண்ட அராஜகவாதிகள்..

கடல்தாண்டி நம் இந்திய மண்ணிற்குள் பல பயங்கரவாத செயல்களை புரிந்தவர்கள், நமது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் சிதறடித்தவர்கள் என இவர்களின் அட்டூழியங்களை இன்னும் பட்டியலிட்டுக் கொண்டு போகலாம்.

முத்தாய்ப்பாக, எந்த ஈழ மக்களுக்காக போராடுவதாக சொன்னார்களோ அதே ஈழமக்களை இறுதிப்போரின் போது மனித கேடயமாக பயன்படுத்தி தங்களை காப்பாற்றிக் கொள்ள முனைந்த மகா தைரியசாலிகள், இவர்களுடைய இந்த இழிசெயலால் தான் பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழர் மாண்டனர்.

ஈழமக்களின் துயருக்கு காரணமான இந்த வில்லன்கள் மட்டுமே 'கதாநாயகர்களாக' தமிழக ஊடகங்களாலும், அவர்களின் தமிழக ஆதரவாளர்களாலும் நம் தமிழகத்தில் பிம்பம் ஏற்படுத்தப்பட்டு நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவு தான் இன்றைக்கும் பல தமிழார்வலர்கள் இவர்களை ஆதரிக்க காரணமாயின.

விடுதலைப்புலிகளும் தமிழர்களே என்பதற்காக அவர்களை இனவுணர்வின் அடிப்படையில் நேசிக்கும் எம்முடைய தொப்புள்கொடி உறவுகளான தமிழ் சகோதரர்களை வேண்டிக் கொள்கின்றோம், ஒருமுறையாவது ஈழ மண்ணுக்கு நேரடியாக சென்று விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையில் சுமார் 30 வருடங்களாக மாட்டிக் கொண்டு ஈழத்தமிழர்கள் பட்ட கஷ்டங்களை தெரிந்து கொண்டு வாருங்கள், அதில் இலவச இணைப்பாய், காரணமேயின்றி விடுதலைப்புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகளின் பட்டியலும் சேர்ந்தே வரும்.

குறிப்பு:
1. ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு ஆயுதக்குழு இன்னொரு சிறுபான்மை இனம் மீது நடத்திய தொடர் இன சுத்திகரிப்பு தாக்குதல்களை தமிழகத்தில் அவர்களை ஆதரித்த / எதிர்த்த எவருமே இன்று வரை கண்டிக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

2. காத்தான்குடி படுகொலைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் கூகுளில் kattankudy massacre என தேடினால் இன்னும் பல விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

களத்திலிருந்து
மவ்லவி அப்துல் ஹமீது, சலாவுதீன் காக்கா உதவியுடன்
அதிரை அமீன்

படங்கள்
J. ஜமால் முஹமது

இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை தொடர்புடைய படங்கள் சில:Sunday, August 30, 2015

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்!!! பாஸ்ட் புட் கடைகள்!!!‏

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்!!!
********************************🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓Ok hand signOk hand signWhite down pointing backhand index
படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்

1)Thumbs down signவைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை …

2) சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6) இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசkபோய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7) அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8) வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9) தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10) சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது ..Fisted hand sign🏾Fisted hand sign🏾Fisted hand sign🏾Warning signWarning signWarning sign மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .kஅதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …

- – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் ).

read this
Very imptPublic address loudspeakerPublic address loudspeakerPublic address loudspeakerPublic address loudspeakerOk hand signWhite up pointing backhand indexExtraterrestrial alienFace screaming in fearLoudly crying face🐓🐓🐓

ALAVUDEEN

* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach Islamic messages to everyone,it's our duty.
 
Thanks to: K-Tic மின்னஞ்சல் குழுமம்

Wednesday, August 26, 2015

கண்கள் சுவைக்க! இயற்கையும் செயற்கையும்!!

இன்றைய மொபைல் போன் யுகத்தில், இளையவர்களின் உள்ளங்களும், கை விரல்களும் ஒன்று சேர, அவர்கள் சுட்ட இயற்கையும் கற்பனையும் கலந்த படங்கள் சிலவற்றை நம் கண்களும் சுவைக்கட்டுமே!


அவர்கள் புகைப்பட கலைஞர்களும் அல்ல, அவர்கள் வைத்திருப்பது புகைப்பட கருவியும் அல்ல ஆனாலும் மொபைல் போனையும் வல்லவனின் புல்லாக மாற்றக்கூடியவர்கள்!!
 போத்திக்கிட்டு தூங்குறாங்கோ!


 மனிதர்களின் சேட்டையில் இதுவும் ஒன்று

 
பலருக்கு அரபுநாட்டு பணம் இப்படித்தான் வருது


குற்றாலம் நகரத்து சாய்ந்த டேங்க் (பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் மாதிரி)
 
மொபைல் கோணங்கள்:
வாப்பாவும் மகள்களும்