உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, September 29, 2011

அதிரை பேருராட்சி மன்ற தலைவருக்கான பதவிக்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்: மேலதெருவில் நேரடி போட்டி நிலவுகிறது:

 அதிரை பேருராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 29/09/2011 இன்றுடன் முடிவடைந்தது. களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்:மேலதெருவில்  17  வார்டில் கவுன்சிலருக்காக போட்டியிடும் வேட்பாளர்கள்:
நேரடி போட்டி நிலவுகிறது:
1.     சுயேச்சை: ரபீகா க/பெ சலீம்
2.     அதிமுக: உம்மல் பௌசி க/பெ புஹாரி
மேலதெருவில்  16 வார்டில் கவுன்சிலருக்காக போட்டியிடும் வேட்பாளர்கள்:  
நேரடி போட்டி நிலவுகிறது:
1.     சுயேச்சை நிலோபர் க/பெ. முஹம்மது யூசுப்
2.     அதிமுக: ஹைருனிஷா க/பெ அப்துல் ரஜாக்

வேட்புமனு வாபஸ்பெற கடைசி நாள்: 03/10/2011-
16  மற்றும் 17  வார்டில் நேரடி போட்டி நிலவுவதால் வாபஸ் பெற பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. போட்டியின்றி தேர்ந்துதெடுக்க வாய்ப்புள்ளது.

கீழத்தெருவில் 15 வார்டில் கவுன்சிலருக்காக போட்டியிடும் வேட்பாளர்கள்:  நான்குமுனை போட்டி நிலவுகிறது.
1.     அதிமுக: ஷாஜகான் க/பெ. சாகுல்ஹமீது ( நடப்பு கவுன்சிலர்)
2.      திமுக: நூர் பரிதா க/ பெ. நைனா முஹம்மது
3.     மனித நேய மக்கள் கட்சி: அஜ்ருன் அலிமா க/ பெ சாகுல்ஹமீது
4.     காங்கிரஸ்: ஜரினா க/ பெ MMS நிஜார் அஹ்மத்.


அதிரை பேருராட்சி மன்ற தலைவருக்கான பதவிக்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:  

1.     காங்கிரஸ்:  MMS பசீர் அகமது
2.     அதிமுக: அஜிஸ் (கொய்யப்பா)
3.     திமுக: அஸ்லம்
4.     சுயேச்சை:   அப்துல் முனாப்
5.     தேமுதிக: பூக்கடை செல்வம்
6.     இடதுசாரி கம்முனிஸ்ட்: கிராணி ரபீக்
7.     வலதுசாரி கம்முனிஸ்ட்: அப்துல் ஹலீம்
8.     BJP. ரமேஷ்
உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அனுப்பி தந்தாள் வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.

அபு அப்துல் ரஹ்மான்


தகவல்

ஒன்று படுவோம்!


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
ஒன்று படுவோம்!

இஸ்லாம் என்பது கப்ரு வலிபாடு, மௌலிது, ஞானப்புகழ்ச்சி, குதிரை மற்றும் யானை ஊர்வலங்கள், அவ்லியாக்கள் பெயரால் நேர்ச்சை, கந்தூரி விழாக்கள், இன்னிசைக் கச்சேரிகள் நடத்துதல், தாயத்து, தகடு, குத்பியத்து, ராத்திபு ஆகியவை தான் சமுதாயத்திலுள்ள பெரியவர்களாலும், முல்லாக்களாலும் காலங்காலமாக தவறாக போதிக்கப்பட்டு கண்மூடித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த நாம் இவையெல்லாம் நரகப்படுகுழிக்கு அழைத்துச் செல்கின்ற மாபெரும் பாவச்செயல்கள் என்பதை விளங்கி அவற்றிலிருந்து மீண்டு நேர்வழியை அறிந்து கொண்டு அதன்படி செயல்படும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கினான். அவனுக்கே அனைத்துப் புகழும்!

'நீங்கள் நரக படுகுழியின் விளிம்பில் இருந்தீர்கள் அதிலிருந்து அவன் உங்களை காப்பாற்றினான்.' (அல்குர்ஆன் 3:103)

எனினும் இந்த பாக்கியத்தை நாம் சாதாரணமாகப் பெற்று விடவில்லை. அதற்காக நாம் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது ஊரையும், உற்றார் உறவினர்களையும் பகைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஊரில் நமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளையும், உரிமைகளையும், மரியாதையையும் இழக்க வேண்டி வந்தது. திருமணப் பதிவுப் புத்தகத்தை தர மறுத்ததுடன் மையவாடியில் அடக்கம் செய்ய தடை போட்டனர். பின்னர் பல வழக்குகள் காரணமாக நீதிமன்றம். காவல் நிலையம் என அலைக்கழிக்கப்பட்டோம். மிகப் பெரிய மன வேதனைக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்பட்டோம். கொள்கை எதிரிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானோம். நாகூசும் அளவுக்கு இழிசொற்களால் வசை பாடினர். நமது பெண்களைக் கூட விட்டு வைக்காமல் இஸ்லாமிய ஹிஜாப் (பர்தா) அணிந்த பெண்களைப் பார்த்து 'பேய் போகிறது'  என்று எள்ளி நகைத்தனர். இந்த தவ்ஹீத் கொள்கைக்காக நம்மில் அடி உதைகள் வாங்கியவர்கள் ஏராளம் உண்டு.

Tuesday, September 27, 2011

இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நம்மில் பெரும்பாலான மனிதர்களுக்கு செல்வம் சேர்த்தல், அழகான மனைவி-மக்கள், பொறுப்புக்களை கவனிப்பது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் இன்ன பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக பற்று வைப்பதே முக்கிய நோக்கமாக இருக்கும். இவைகளை வெறுத்து ஒதுக்குவதை இஸ்லாம் கூறவில்லை. ஆனால் இவைகளை அடைவதே தனது வாழ்வின் இலட்சியம் என பலர் தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியை செலவழித்து இளமையையும் இழந்து விடுகின்றனர். ஒரு மனித படைப்பின் நோக்கம் இது மட்டுமா?

நம்மைப் படைத்த இறைவனுக்கு பயந்து, அவனையே வணங்கி, அவனுடைய திருப்தியை பெற வேண்டி நல்லமல்கள் புரிவதுதான் மனித வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதை அடைவதற்காக அவர் கடுமையாக முயற்சிகளை தனது ஆத்மாவிற்கு கொடுக்க வேண்டும். அதுதான் நம்மை படைத்த அகில உலக இரட்சகனாகிய அல்லாஹ் இந்த மனித சமுதாயத்தின் மீது ஏற்படுத்தியிருக்கின்ற தேர்வு (பரிட்சை) ஆகும். இந்த தேர்வில் நாம் அனைவரும் வெற்றி பெற வேண்டியது மறுமை வாழ்விற்கு மிக மிக அவசியமாகிறது.

'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி        நான் படைக்கவில்லை' (அல்குர்ஆன் 51:56)
ஒவ்வொருவரும் தவிர்க்க இயலாமல் மறுமையின் ஒரே நீதிபதியாகிய, ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ் ஸுபஹானத்தஆலாவின் முன்னிலையில் நிற்பதை அஞ்சக் கூடியவர்களாக இருப்பதையே 'இறையச்சம்' அல்லது 'பயபக்தி' என அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட)முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்' (அல்குர்ஆன் 3:102)

 இந்த இறையச்சமே, நம்முடைய வாழ்நாளில் நற்கருமங்கள் செய்வதற்குத் தூண்டி, அதிக நம்மைகளைக் கிடைக்கச் செய்து, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தந்து, மறுமையில் நமக்கு இறைவன் வாக்களித்த சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும். இன்ஷh அல்லாஹ்.
 இந்த இறையச்சமே, நம்மை அல்லாஹ்வுக்கு கோபத்தை உருவாக்குகிற செயல்களைச் செய்வதை விட்டும் தடுத்துவிடும். இன்ஷh அல்லாஹ்.

தக்வா (இறையச்சம்) என்பது:-
• அல்லாஹ்வுக்கு விருப்பமில்லாத, அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு செயலைச் செய்வதில் இருந்தும் தவிர்ந்து இருப்பதும்,

Monday, September 26, 2011

தமிழ்மாமணி புலவர் பஷீர் வஃபாத்தானார்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


அதிரையின் கல்விச்செம்மல்களில் ஒருவரும், நடமாடும் தகவல் களஞ்சியமுமாக திகழ்ந்த 'தமிழ் மாமணி' புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று 26.09.2011 திங்கட்கிழமை மாலை சுமார் 3.45 மணியளவில் சென்னையில் வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா 27.09.2011 செவ்வாய் அன்று காலை சென்னை ஆழ்வார்திருநகர் சாதிக் பாட்சா நகர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் ஏகனை இறைஞ்சுவோமாக!

புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் இம்மையிலிருந்து விடை பெற்றிருந்தாலும் அவர்களின் கணீர் குரலும், கல்விச் சேவைகளும் தலைமுறைகளை கடந்தும் என்றும் நினைவில் நிற்கும்.

அதிரை அமீன்

புகைப்படம் : அதிரை நிருபர் 

Sunday, September 25, 2011

விஷத்திற்கு எதிராய்...

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

மனிதர்கள் தனக்குத் தானே தேடிக்கொள்ளும் தீமைகளில் புகை மற்றும் புகையிலை பழக்கத்திற்கு பிரதான இடமுண்டு ஆனாலும் சக மனிதர்கள் மீதும், இந்த பிரபஞ்சத்தின் மீதும் அக்கறை கொள்ளும் மனிதர்களும், இறையச்சமுடைய நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புகைக்கு எதிரான இந்த நன்மக்களின் உணர்வுகளை மதித்தும் விஷத்திற்கு (புகை) எதிராய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் நன்றியுடன் பதிகிறோம். 

(பெரிதாக பார்க்க புகைப்படத்தின் கிளிக்குங்கள்)

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் பிறவியிலேயே பார்வையற்ற சகோதரர் ஆனாலும் அவருக்கு மனதில் ஊனமில்லை அதனால் தான் இறையச்சமுடைய அந்த சகோதரர் தான் நடத்தும் இந்த சிறிய கடையில் லாபங்களை அள்ளித்தரும் சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை, வெற்றிலை என எந்த லாகிரி வஸ்துக்களுக்கு இடம் தருவதுமில்லை, விற்பதுமில்லை.
அல்லாஹ் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து தன் கடையை நடத்தி வருகிறார், அல்லாஹ்வும் அருள் செய்கிறான். இவருக்குள்ள இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை பார்வையுள்ள நமக்கில்லையே ஏன்?

வேண்டாம் புகை என இந்த நிமிடத்திலிருந்து நமக்கு நாமே சபதமேற்போம். புகைப் பழக்கமில்லாத சக மனிதர்களையும் பாதிக்கும் விஷத்தை விட்டொழிப்போம். அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அருள் செய்வானாக!

வியந்தேன் : சகோதரர் ஒலி முஹம்மது குறித்து சிறப்பு குறிப்பு ஒன்று, வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை தடவிப் பார்த்தே மதிப்பை உணரும் சகோதரர் யாருடைய உதவியுமின்றி சரியான சில்லரையையும் மீதம் தருகின்றார். அல்லாஹ் அவருக்கு இன்னும் பேரருள் புரியட்டும்.
 

புகையின் பகையாளி
அதிரை அமீன்

புகைப்படங்கள்
ஜமால் (அதிரை)
நூருல் அமீன் (நாச்சியார்கோயில்)

பேரூராட்சித் தலைவர் யார்? இன்று அனைத்து முஹல்லா கூட்டம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிரை பேரூராட்சி மன்றத் தலைவராக அனைத்து சங்கங்களின் ஆதரவு பெற்ற வேட்பாளராக யார் என்பதை அறிவிப்பதற்கான கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் மதிப்பிற்குரிய அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்களது தலைமையில் நமதூரின் அனைத்து முஹல்லாக்களையும் சேர்ந்த 7 சங்க நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம், கடற்கரைத் தெரு ஜமாஅத், தரகர் தெரு ஜமாஅத், புதுத் தெரு ஜமாஅத், கீழத் தெரு ஜமாஅத், நெசவு தெரு ஜமாஅத் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு சங்கம் / ஜமாஅத்திலிருந்தும் தலா 5 நபர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

ஆலிம்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும் இந்த முயற்சிக்கு அனைத்து அதிரைவாசிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
 நன்றி
 அதிரை எக்ஸ்பிரஸ்

Saturday, September 24, 2011

எழுச்சியுடன் நடைபெற்ற INTJ பொதுக்கூட்டம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த 23.09.2011 வெள்ளிக்கிழமை தக்வா பள்ளி அருகே, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை ஏற்பாட்டில் சமுதாய விழிப்புணர்வை முன்னிருத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.


சரியாக மஃரிப் தொழுகை முடிந்தவுடன் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் சாஜித் பாஷா அவர்கள் தலைமையில் துவங்கிய இப்பொதுக்கூட்டத்தின் முதலாய் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ஜாபர் அலி அவர்கள் INTJ ஆற்றிவரும் பணிகள் குறித்து உரை நிகழ்த்தினார். அவரை தொடர்ந்து பேசிய INTJ தலைமை கழக பேச்சாளர் மவ்லவி. யூசுப் மிஸ்பாஹி அவர்கள் தஃவா பணியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.


இஷா தொழுகையின் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் துவங்கிய அமர்வில் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 'இந்திய தண்டனை சட்டங்களும் இஸ்லாமிய தண்டனை சட்டங்களும்' என்ற தலைப்பில், இன்று ராஜிவ் காந்தி படுகொலையில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூவர் குறித்தும், இன உணர்வின் அடிப்படையில் ஆதரிப்பதாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் நிஜ முகங்கள்குறித்தும் மனிதநேய இஸ்லாமிய சட்டங்களுடன் ஒர் ஒப்பீட்டாய்வுரை நிகழ்த்தினார்.


இறுதியாக சிறப்புச் சொற்பொழிவாற்றிய சகோதரர் பாக்கர் அவர்கள் தனதுரையில், உண்ணாவிரத நாடக ராஜபாட்டுகள், காவிகளின் கைப்பாவை அண்ணா ஹசாரே, நர மோடி, நர மோடியின் கூட நட்பான ஜெயலலிதா ஆகியோரின் வேஷங்களை தோலுரித்தார். 

கூடங்குளம் அணு உலை பிரச்சனை, பரமக்குடி துப்பாக்கி சூடு என இன்றைய பிரச்சனைகளை,பாதிக்கப்பட்டுள்ள சமுதாயங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என அலசியவர் நமது சமுதாயப் பிரச்சனைகளில் சமுதாய கட்சிகளும் கட்சிகளும் அமைப்புகளும் தூங்கி வழிவதை சுட்டி அவர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய, கை கோர்க்க வேண்டிய, களம் காண வேண்டிய அவசியங்களை எடுத்துரைத்தார்.

இறுதியாக, புதுப்பட்டிணம் பிரச்சனையின் காரண காரியங்கள் குறித்துப் பேசிய பாக்கர் அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு உரிய நீதியும் நிவாரணமும் கிடைக்காவிட்டால் தமிழக அளவில் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் என எச்சரித்து முடித்தார்.

சகோதரர் ஜாபர் அலி தீர்மானங்களை வாசிக்க, கிளைச்செயலாளர் பஷீர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். மிகப் பெருவாரியாக கலந்து கொண்டு உரைகளை செவிமடுத்த மக்களுக்கு இது ஓர் எழுச்சிமிகு பொதுக்கூட்டமென்றால் அது மிகையில்லை. தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால் கூட்டம் சரியாக இரவு 10 மணிக்கு நிறைவுற்றது. 

நிகழ்ச்சி முழுமையாக வலைதளங்கள் மூலம் நேரலை செய்யப்பட்டது.

ஜூம்ஆ உரை

23.09.2011 அன்று ALM பள்ளிக்கூடத்தில் நடந்த ஜூம்ஆவில் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் கலந்து கொண்டு அழைப்புப் பணியின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார். 

ஜீம்ஆ உரை ஆடியோ வடிவில் www.adiraibbc.blogspot.com என்ற வலைதளத்தில் பதியப்பட்டுள்ளது.

தொகுப்பு
இப்னு ஜலால்

புகைப்படங்கள்
ஜமால் முஹம்மது

Friday, September 23, 2011

புதுப்பட்டிணத்தில் நடந்தது என்ன?

நேற்றைய தினம் காவிக் காடயர்கள் புதுப்பட்டிணத்தில் நிகழ்த்திய வெறியாட்டம் குறித்து முதலில் கிடைத்த செய்தியினை பதிந்திருந்தோம். இன்று நேரடி களத்தொகுப்பு சுருக்கமாக...

நேற்று (22.09.2011) மாலை முஸ்லீம் சிறுவர்கள் சிலர் அபு மெட்ரிக் பள்ளி அருகே சிரித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர், அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த 3 வாலிப ரவுடிகள் அந்த சிறுவர்களிடம் வலிய வந்து வீண் வம்பு செய்துள்ளனர் பின்பு அவர்களிடம் இருங்கட உங்களை வந்து ஒரு கை பார்க்கின்றோம் என மிரட்டி விட்டு முன்பே தயாராக கடல் வழியாக வரவழைக்கப்பட்டிருந்த வெளியூர் காவி பயங்கரவாதிகளை ஊருக்குள் அழைத்து வந்து டிரான்ஸ்பார்மர் லைன் மீது சைக்கிள் செயினை வீசியெறிந்து மின்சாரத்தை துண்டித்து விட்டு பள்ளிவாசலையும் அருகிலிருந்த 3 வீடுகளையும் கற்களை கொண்டும் அரிவாளை கொண்டும் தாக்கியுள்ளனர், இதில் பொதுமக்கள் பலரும் கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். (நாம் முன்பு பதிந்திருந்தபடி தீவைப்பு சம்பவங்கள் ஏதுமில்லை). 

மனித மிருகங்கள் வெறியாட்டம் நடத்தி முடித்தபின் கடல் வழியாகவே தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடந்தபோது முஸ்லீம்கள் யாரும் எதிர்தாக்குதலில் ஈடுபடவில்லை மேலும் அதற்கான அவகாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழமைபோல் எல்லாம் முடிந்தபின் பட்டுக்கோட்டை DSP. அசோக்குமார் மற்றும் தஞ்சை டவுன் DSP. சிவநவநீதக்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டு காவிகள் தரப்பில் இதுவரை 7 மீனவர்களை கைது செய்துள்ளனர். முஸ்லீம்கள் தரப்பில் 10 பேரை கேட்டு போலீஸார் ஜமாஅத்தினர்களை தொந்தரவு செய்து கொண்டுள்ளனர், அதாவது தாக்குதலில் முஸ்லீம்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தும் இதை கலவரமாக கணக்குக் காட்டத் துடிக்கிறது காவல்துறை.

அதிரையில் ஆர்ப்பாட்டம்
புதுப்பட்டிணத்தில் இறையில்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவி பயங்கரவாதிகளை கைது செய்யக் கோரியும், பாதுகாப்பில் கோட்டை விட்ட காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும் இன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சுமார் 2.30 மணியளவில் அதிரை முஸ்லீம்களின் திடீர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தக்வா பள்ளி முனையிலிருந்து துவங்கிய பேரணி பேரூந்து நிலையத்தின் அருகே பெருந்திரளாக ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சகோதரர் அப்துல்லா மற்றும் சகோதரர் சாகுல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இயக்க வேறுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேரில் எஸ்.எம்.பாக்கர்
இன்று அதிரையில் நடைபெற்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டதிற்காக வருகை தந்திருந்த INTJ மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறச்சென்றார். ஊர் எல்லையில் எஸ்.எம்.பாக்கர், செங்கிஸ்கான், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்த ஊர் ஜமாஅத் மற்றும் பல்வேறு இயக்க சகோதரர்களும் நடந்தவற்றை விவரித்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள், தேவையேற்பட்டால் புதுப்பட்டிணம் மக்களுக்காக தமிழகம் தழுவிய போரட்டமாக முன்னெடுத்துச் செல்லப்படும் என உறுதியளித்தனர். இறுதியாக போலீஸூடன் போராடி ஊருக்குள் சென்று பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வீடுகளை பார்வையிட்டதுடன் அவற்றை வீடியோ ஆவணமாக்கித் திரும்பியது INTJ மீடியா பரிவு.
கடைசிச் செய்தி
இன்று இரவு சுமார் 9 மணியளவில் கிடைத்த ஊர்ஜிமற்ற தகவலின் படி 2 முஸ்லீம்கள் கைது செய்யப்பாட்டுள்ளதாக தெரிகிறது.

களத்தொகுப்பு
அதிரைஅமீன்

Thursday, September 22, 2011

புதுப்பட்டிணத்தில் காவி பொறுக்கிகள் வெறியாட்டம்

நமதூரை அடுத்த புதுப்பட்டிணத்தில் காவி ரவுடிக் கும்பல் தங்கள் குலப்புத்தியை காட்டி வெறியாட்டம் ஆடியது. இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் வெளியூர்களிலிருந்து இறக்கப்பட்ட காவி ஓநாய்கள் டிரான்ஸ்பர்மரை ஆஃப் செய்து விட்டு முஸ்லீம்களின் மீது திட்டமிடப்பட்ட பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் பள்ளிவாயில் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன் 2 முஸ்லீம்களின் குடிசை வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

முத்துப்பேட்டைக்கு அடுத்து மதுக்கூர், புதுப்பட்டிணம் என முஸ்லீம்கள் செரிந்தும், பிற மத மக்களுடன் நல்லுறவுடன் வாழும் ஊர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. மிக சமீபத்தில், புதுப்பட்டிணத்தின் மீது நடத்தப்பட்ட 3 வது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. 


புதுப்பட்டிணத்தில் முந்தய கலவரங்களை தூண்டியவன் முத்துப்பேட்டை கலவரகர்த்த கருப்பு என்பவன் என்பதும் கவனிக்கத்தக்கது.

வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும் காவிக்கயவர்கள் வெறியாட்டம் முடிந்தவுடன் கடற்கரை வழியாக தப்பிச்செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். தற்போது போலீஸ் குவிக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் இருந்தாலும் முஸ்லீம்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 


நர மாமிசபட்சிணி மோடியின் தோழியின் ஆட்சியில் காவிக்கும்பல் மீண்டும் ஆட்டம் போடத்துவங்கியுள்ளது. யானை தான் தன் தலையில் தானே மண்ணை வாரி தூற்றிக் கொள்ளும் என்ற பழமொழியை நினைவுபடுத்துகின்றது.


குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவர்களின் கொட்டம் அடக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என ஆட்சியாளர்களை எச்சரிக்கின்றோம்.

விரிவான தகவல்கள் விரைவில்... இன்ஷா அல்லாஹ் 

23.09.2011 வெள்ளியன்று அதிரை ALM ஸ்கூலில் ஜூம்ஆ உரை


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
 
23.09.2011 வெள்ளியன்று அதிரை CMP LANE ல் அமைந்துள்ள ALM ஸ்கூலில் 

ஜூம்ஆ உரையாற்றுபவர் 
 
சகோதரர் TMH. செங்கிஸ்கான்
 
மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள  அனைவரும் வாரீர்.

Wednesday, September 21, 2011

மார்க்க விளக்க, சமூக நல பொதுக்கூட்டம்


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.09.2011 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில்

அதிராம்பட்டிணம் தக்வா பள்ளி அருகில் மார்க்க விளக்க, சமூக நல பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது

சிறப்புரை

S.M. பாக்கர் அவர்கள்
(மாநிலத் தலைவர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)

தலைப்பு : உண்ணாவிரத நாடகங்களும் ஊடக பயங்கரவாதங்களும்

சகோதரர் TMH. செங்கிஸ்கான் அவர்கள்
(மாநிலச் செயலாளர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)

தலைப்பு : இந்திய தண்டனை சட்டங்களும் இஸ்லாமிய தண்டனை சட்டங்களும்

மவ்லவி. யூசுப் மிஸ்பாகி அவர்கள்
(ஏகத்துவ அழைப்பாளர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)

தலைப்பு : அழைப்பு பணி என்றால் என்ன? ஏன்?

குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


 
ஈருலக பயன்பெற அனைவரும் வாரீர் என அன்போடு அழைப்பது

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை நகரக்கிளை
தஞ்சை மாவட்டம்


காணத்தவறாதீர்கள் :
 நிகழ்ச்சிகள் அனைத்தும் கீழ்க்காணும் தளங்களில் நேரலை செய்யப்படுகின்றது.
www.intjonline.in
www.adiraibbc.blogspot.com

 

=========================================================================

இனி துபை வாழ்வு கடினம்தான் - 6 காரணங்கள்

துபைதான் நாம் வாழ்வதற்கான சிறந்த இடம் என்று இது நாள் வரை நினைக்கத் தோன்றியது. ஊருக்குப் போனால் கூட வீட்டுக்கு வெளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் துபை மாதிரி வருமா என்று மனது நினைக்கும். ஆனால் துபையில் முளைக்கும் புதிய புதிய சட்டங்கள் இனி இங்கு வாழ்வது கடினமே என்ற மனநிலையையே பலருக்கும் தந்திருக்கிறது என்பது மிகையில்லை.

இங்கு வாழ்வது ஏன் சிரமமாகி விட்டது என்பதற்கு குறிப்பான ஆறு காரணங்கள்.

1. சாலிக் (SALIK)
துபையின் மின்னனு சுங்க வரி வசூலிப்புத் திட்டம். 'திறந்து விடப்பட்ட' அல்லது 'இடைஞ்சலற்ற' என்ற பொருள் தரக்கூடிய 'சாலிக்' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்முறை 2007ம் ஆண்டு நகரில் உள்ள சாலைப் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அறிமுகமானது. ஆனால் மனித, வாகன விகிதத்தில் உலகத்திலேயே அதிக வாகனங்களைக் கொண்ட இந்நாட்டில் இது பெயருக்குரிய பயனைத் தரவே இல்லை.

Tuesday, September 20, 2011

அதிரை மேலத்தெரு முஹல்லாவில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பூங்கா.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்கினிய அதிரை வாசிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. அதிரை மேலத்தெரு வடபுறம் - மரைக்காயர் குளம் மேடு அருகில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பூங்கா சில நாட்களாக செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல்கள், ஏறி இறங்கும் சறுக்கை மற்றும் சில பொழுதுபோக்கு விளையாட்டுக்களுக்கான சாதனங்கள் பொருத்தப்பட்டு, சுற்றிலும் முள்கம்பிகளால் பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டு, மரைக்காயர் குளத்தருகில் குளுகுளு இயற்கைச் சூழலை ரசிக்கும்படியாக சிமென்ட் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.                                                 4                                                               3
எப்படி இருந்த இடம் இப்படி ஆயிருச்சி !
21

 

Saturday, September 17, 2011

தான தர்மங்கள் செய்வோர் சிந்திப்போம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
பூமியில் நடமாடித் (தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அல்குர்ஆன் (2:273)


சமீபத்தில் சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் அதிரையில் பற்றிய ஒரு கட்டுரையை அதிரைநிருபரிலும் மற்ற அதிரை வலைப்பூக்களிலும் பதிந்திருந்தார்கள். அவர்களின் கட்டுரை உள்ளபடியே ஆழமாக சிந்திக்க வேண்டியது.

Thursday, September 15, 2011

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக் குழு அழைப்பிதழ்‏ஆதாரமற்ற பேச்சுக்கள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மணிக்கணக்கில் பேசும் பேச்சுக்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆதாரமற்ற பேச்சுக்களாகவே இருக்கின்றன. சம்பவத்தை நேரடியாகக் கண்டிருக்க மாட்டார். ஆனால் கண்ணால் கண்டதைப் போல் மற்றவரிடம் விவரித்துக் கொண்டிருப்பார்.'நீ கண்ணால் பார்த்தாயா?' என்று கேட்கும் போது சற்றுத் தடுமாறி, 'இல்லை! இன்னார்தான் இப்படிச் சொன்னார்' என்று கூறுகிறார். சொல்லப்பட்ட செய்தி சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல், தனக்கு நெருடலை ஏற்படுத்தாமல் இருந்தால் உடனே அதை பரப்பி விடுகிறார். இதைக் கேட்பவர்களும் இதுபோன்றே நடந்து கொள்கிறார்கள்.
இதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் தீர விசாரிக்காமல் கேட்டவுடன் நம்பி விடுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் நரகப் படுகுழியே பரிசாகக் கிடைக்கும் என்று அல்லாஹ் தன் திருமறையில் எச்சரிக்கை செய்கின்றான்.
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்;. இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய (பாவமான)தாக இருக்கும். (அல்குர்ஆன் 24:15)
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும். அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம்(ரலி) (நூல்: முஸ்லிம் 6)


Monday, September 12, 2011

தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

திட்டமிட்டபடி (11.09.2011) நேற்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பின், அதிரை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அதிரையின் கல்வித்தந்தை MKN காதிர் முகைதீன் அப்பா அவர்களின் கொடையை போற்றும் அரங்கில் தமுமுக அதிரை கிளையின் அனைத்து சமய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டமும் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
மாநாட்டைப்போல் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் முன்னிருந்த விழா மேடையிலே ஆன்றோரும், சான்றோரும், மருத்துவர்களும், முஹல்லா ஜமாஅத் தலைவர்களும், கிராம பஞ்சாயத்து தலைவர்களும், மமகவின் கூட்டணி கட்சி பிரதிநிதிகளும், வர்த்தக சங்க தலைவர்கள், சங்கங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமுமுக மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளுடன் சரிநிகராய் அமரவைக்கப்பட்டும் நினைவு பரிசுகள் வழங்கியும் கண்ணியப்படுத்தப்பட்டனர். 
இச்சீரிய சமூக நல்லிணக்கப் பெருவிழாவில், தமுமுக, மமகவின் மாநில நிர்வாகிகளான பேராசிரியர் ஹாஜா கனி, தமீமுன் அன்சாரி மற்றும் மாநிலப்பொதுசெயலாளர் S. ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தவிர்க்க இயலா காரணங்களால் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமுமுகவின் மாநிலத் தலைவருமான பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. 

அதிரை இஸ்லாமிக் மிஷனுக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசு

இந்த மாபெரும் மக்கள் சங்கமம் துவங்குமுன் ஜில்லென்று ஓர் மழை தூவி அதிரையையும் அவையையும் குளிரூட்டி சென்றது. தேனீக்களுக்கு ஈடான தொண்டர் அணியினர் சுற்றி வந்து உதவ, அதிரை கிளை சகோதரர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தின் சிகரமாய் தீர்மானங்கள் அமைந்திருந்தன.

நிகழ்ச்சி முழுமையாக இணையதளம் மூலம் நேரலை செய்யப்பட்டது.

களத்திலிருந்து
அபுஹாரித்
படங்கள்
ஜமால்

Sunday, September 11, 2011

இழப்புக்குள்ளான இலங்கை முஸ்லீம்கள் - உருக்கம்! (காணொளி)

இனத்தாலோ மொழியாலோ பிரித்தாய்பவன் என்னைச் சார்ந்தவனல்ல - இது நபிமொழி !

முஸ்லீம்கள் இன்றோ நேற்றோ பாதிப்புக்குள்ளாக வில்லை, ஓரிறைக் கொள்கையை எடுத்து வைத்த அன்றைய காலத்திலிருந்தே அநியாயக் காரர்களால் பாதிப்புக்குள்ளானார்கள். அப்படியிருக்க நம் அருகில் இருக்கும் குட்டி நாடான இலங்கையில் மொழியையும் இனத்தையும் முன்னிருத்தி ஒரு இயக்கம் 25 வருடகாலமாக போராடியது ! முடிவில் அந்த இயக்கம் அழித்தொழிக்கப்பட்டு இன்று அவர்களுக்காக ஈனக் குரல் எழுப்பும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களின் போராட்டம் என்னவென்றோ, அதன் நியாய அநியாயங்கள் எவ்வகை என்றோ நாம் விவாதிக்கவில்லை, அவர்களின் போராட்டம் இலங்கை அரசாங்கத்திற்கு அவர்களுக்கும் நடந்தது. இது இப்படியிருக்க தமிழ் மொழி மட்டுமே பேசும் சகோதரர்களை அதே மொழியின் பெயரால் இயக்கமும் வைத்துக் கொண்டு காட்டுமிராண்டித் தனமாக அந்த பகுதியில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்தவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழித்தெடுக்கவும் அடித்து விரட்டவும் ஆயுதம் ஏந்தியவர்களைப் பற்றியும், இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லீம்களின் நிலைமபற்றியும் தகுந்த ஆதாரங்களுடன் சகோதரர் மவ்லவி முஹம்மது நாசர் அவர்கள் உருக்கமாக எடுத்து வைக்கும் வாதங்களையும் ஆதாராங்களையும் காணொளியாக உங்களின் பார்வைக்கும் தமிழ்கூறும் நல்லுலக நியாயவான்களின் கவனத்திற்கும் இதோ:-


- அதிரைநிருபர் குழு