உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, September 24, 2011

எழுச்சியுடன் நடைபெற்ற INTJ பொதுக்கூட்டம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த 23.09.2011 வெள்ளிக்கிழமை தக்வா பள்ளி அருகே, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை ஏற்பாட்டில் சமுதாய விழிப்புணர்வை முன்னிருத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.


சரியாக மஃரிப் தொழுகை முடிந்தவுடன் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் சாஜித் பாஷா அவர்கள் தலைமையில் துவங்கிய இப்பொதுக்கூட்டத்தின் முதலாய் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ஜாபர் அலி அவர்கள் INTJ ஆற்றிவரும் பணிகள் குறித்து உரை நிகழ்த்தினார். அவரை தொடர்ந்து பேசிய INTJ தலைமை கழக பேச்சாளர் மவ்லவி. யூசுப் மிஸ்பாஹி அவர்கள் தஃவா பணியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.


இஷா தொழுகையின் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் துவங்கிய அமர்வில் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 'இந்திய தண்டனை சட்டங்களும் இஸ்லாமிய தண்டனை சட்டங்களும்' என்ற தலைப்பில், இன்று ராஜிவ் காந்தி படுகொலையில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூவர் குறித்தும், இன உணர்வின் அடிப்படையில் ஆதரிப்பதாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் நிஜ முகங்கள்குறித்தும் மனிதநேய இஸ்லாமிய சட்டங்களுடன் ஒர் ஒப்பீட்டாய்வுரை நிகழ்த்தினார்.


இறுதியாக சிறப்புச் சொற்பொழிவாற்றிய சகோதரர் பாக்கர் அவர்கள் தனதுரையில், உண்ணாவிரத நாடக ராஜபாட்டுகள், காவிகளின் கைப்பாவை அண்ணா ஹசாரே, நர மோடி, நர மோடியின் கூட நட்பான ஜெயலலிதா ஆகியோரின் வேஷங்களை தோலுரித்தார். 

கூடங்குளம் அணு உலை பிரச்சனை, பரமக்குடி துப்பாக்கி சூடு என இன்றைய பிரச்சனைகளை,பாதிக்கப்பட்டுள்ள சமுதாயங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என அலசியவர் நமது சமுதாயப் பிரச்சனைகளில் சமுதாய கட்சிகளும் கட்சிகளும் அமைப்புகளும் தூங்கி வழிவதை சுட்டி அவர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய, கை கோர்க்க வேண்டிய, களம் காண வேண்டிய அவசியங்களை எடுத்துரைத்தார்.

இறுதியாக, புதுப்பட்டிணம் பிரச்சனையின் காரண காரியங்கள் குறித்துப் பேசிய பாக்கர் அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு உரிய நீதியும் நிவாரணமும் கிடைக்காவிட்டால் தமிழக அளவில் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் என எச்சரித்து முடித்தார்.

சகோதரர் ஜாபர் அலி தீர்மானங்களை வாசிக்க, கிளைச்செயலாளர் பஷீர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். மிகப் பெருவாரியாக கலந்து கொண்டு உரைகளை செவிமடுத்த மக்களுக்கு இது ஓர் எழுச்சிமிகு பொதுக்கூட்டமென்றால் அது மிகையில்லை. தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால் கூட்டம் சரியாக இரவு 10 மணிக்கு நிறைவுற்றது. 

நிகழ்ச்சி முழுமையாக வலைதளங்கள் மூலம் நேரலை செய்யப்பட்டது.

ஜூம்ஆ உரை

23.09.2011 அன்று ALM பள்ளிக்கூடத்தில் நடந்த ஜூம்ஆவில் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் கலந்து கொண்டு அழைப்புப் பணியின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார். 

ஜீம்ஆ உரை ஆடியோ வடிவில் www.adiraibbc.blogspot.com என்ற வலைதளத்தில் பதியப்பட்டுள்ளது.

தொகுப்பு
இப்னு ஜலால்

புகைப்படங்கள்
ஜமால் முஹம்மது

No comments:

Post a Comment