உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, September 11, 2011

நம்ம ஊரு பீச்சாங் கரை

கிழக்கு கடற்கரை சாலையில், புதுப்பட்டிணத்திற்கு சற்றே முன்பாக, அதிரையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வெளிவயல் கடற்கரை நமதூர் மக்களின் கோடைகேற்ற குளு குளு (Budget Beach) பீச்சாக உருவெடுத்துள்ளது.

ஒரு காலத்தில் என நினைவுகூறத்தக்க வகையில் அதிரை (செம்படவர் தெரு)கடற்கரை, மனோரா, ராஜாமடம் பாலம், மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம், (ஒரு பக்கம் அழிவு, ஒரு பக்கம் அழகு என சுனாமியால் அழகான) கீழத்தோட்டம் கடற்கரை மணல் என இளைப்பாரி வந்த நமதூர் மக்கள் தற்போது மாலைவேளைகளில், குறிப்பாக பெருநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவயல் கடற்கரையில் வண்டி வண்டியாய் வாகனங்களில் வந்து பொழுதுபோக்கி மகிழ்கின்றனர்.
பாசி படர்ந்த, ஓரளவு கழிமண் கலந்த அழுக்கு கடல் தான் என்றாலும் ஆர்ப்பரிக்கும் அலைகளும், சில்லென்ற காற்றும், பரந்த மணற்பரப்பும், கடற்கரையினுள் நுழையுமுன் வரவேற்கும் சவுக்கு மர தோப்பு வழிகளும், பசுமையான அலையாத்தி காடுகளும் கண்களின் உற்சாக டானிக், மனங்களின் மருந்து, குழந்தைகளின் குதூகலம் என்றால் மிகையில்லை. 
செம்மண் சாலை, வாகனங்களை நிறுத்த இயற்கையான பார்க்கிங் என ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைந்திருந்தாலும், கருவாடு நாற்றமில்லாத இந்த கடற்கரையை குடும்பத்துடன், மார்க்கம் அனுமதிக்கும் ஆண் துணையுடன் வருபவர்கள் மட்டுமே பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
அழகிருந்தல் ஆபாத்தும் சேர்ந்திருக்கத்தானே செய்யும் எனவே, கீழ்க்காணும் விஷயங்களை கவனத்திற் கொள்ளுதல் நலம்.

1. ஐஸ்கிரீமுடன் மதுபானங்களையும் விற்கும் உ.பி.காரன்.
2. பார்க்கிங் பகுதியில் மரத்தடிகளில் குவிந்துள்ள ரொம்ப பிஸியான சூதாடிகள்.
3. வாப்பாக்கள் வாங்கித்தந்த பைக்கில் பவனி வரும் நமதூர் இளைஞர்கள்.
4. வயதுப்பிள்ளைகளை அந்நியரின் கண்களில் இருந்தும் பாதுகாத்து கொள்க, குறிப்பாக கடலில் இறங்கி குளிக்க அனுமதித்தல் கூடாது.
5. கடலில் குளிப்பவர்களுக்கு இலவச இணைப்பாய் கிடைக்கும் பாசியின் அரிப்பு.
6. வெளிவயல் கிராமத்தின் நடுவில், சாலையில் அமைந்துள்ள, தமிழக அரசின் பார் வசதியுடன் கூடிய சாராயக்கடையை ஈக்களாய் மொய்த்திருக்கும் குடிகார ஜென்மங்கள்.

என கண்ணில்படும் தீமைகளை இன்னும் பட்டியலிட முடியும் என்றாலும் பார்த்து, பதனமா, உங்க குடும்பத்தோட மட்டும் போயிட்டு வாங்க! 

பார்க்க: வட்டமிடப்பட்ட பகுதியில் குடும்பத்தையே அடகு வைக்கத்துணியும் சூதாடிகள்

பார்த்ததை பதிந்தவர்
அபு சுமையா

விஷூவல் சூட்ஸ்
ஆஷிக் அஹமது

No comments:

Post a Comment