உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, November 11, 2015

துபை - அல் பரஹாவில் 13.11.2015 வெள்ளியன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ், நாளை மாலை (13.11.2015 - வெள்ளிக்கிழமை 6.15 மணிமுதல்) மஃரிப் தொழுகையை தொடர்ந்து துபை, தெய்ரா, அல் பரஹா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள 'அல் ஒவைஸ் அரங்கத்தில்' "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் "மவ்லவி. அப்துல் பாசித் புஹாரி" அவர்கள் மார்க்க விளக்கவுரை நிகழ்த்தவுள்ளார்கள்.

பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.

அனைவரும் தவறாமல் வருகை தர அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு: 056-7371442 & 056-7371449


Tuesday, November 10, 2015

கந்தூரி எனும் சவ ஊர்வலங்களும்! தாருத் தவ்ஹீத் முன்னுள்ள கடமைகளும்!!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்ஹம்துலில்லாஹ், அதிரை தாருத் தவ்ஹீதின் தொடர் முயற்சியால் கந்தூரி ஊர்வலத்திற்கு அரசினர் (வட்டாட்சியர்) தடை எனும் முதல் அடி விழுந்துள்ளது என்றாலும் நாம் மகிழ இதில் ஏதுமில்லை. கந்தூரி ஆதரவாளர்களுக்கு இணைவைப்பின் தண்டனைகளை எடுத்துக்கூறி அவர்களாகவே தாமே முன்வந்து இதுபோன்ற பாவ நிகழ்வுகளிலிருந்து விலகச் செய்வதே இருதரப்புக்கும் மறுமையில் பயன்தரும் நற்செயலாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

கடந்த 07.11.2015 அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், கந்தூரி ஊர்வலமே கூடாது என்ற உறுதியான நிலையில் அதிரை தாருத் தவ்ஹீதும், ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளும் செல்வோம் என வீம்படித்த கந்தூரி கோஷ்டியினரின் அடாவடியால் கலெக்டரிடம் சென்று அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என வட்டாட்சியர் தடை விதித்துள்ளார் என்ற செய்திகள் இணைய தளங்களில் பரவியதை தொடர்ந்து பின்னூட்டம் என்ற பெயரில் சில அப்பாவிகள் எழுதியுள்ளதையும், கந்தூரி ஊர்வலத்தை அவர்கள் 'ஷிர்க் எனும் கொடிய இணைவைத்தல்' பற்றி ஏதுமறியாது சாதாரண 'பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள்' என்ற அளவிலேயே பார்த்துள்ள பார்வையும் அவர்கள் மீது இரக்கம் கொள்ளவே செய்கின்றன. கண்டிப்பாக இத்தகைய மனப்பான்மையுள்ள சகோதரர்களிடம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துக்கூறினால் ஏற்றுக் கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ். 

இன்னும் ஒரு சிலர், அதை ஏன் தடுக்கவில்லை இதை ஏன் தடுக்கவில்லை என பட்டியலிட்டுள்ளனர். 'தவறுகள்' என விளங்கியுள்ள சகோதரர்கள் அந்தத் தவறுகளை தடுக்கும் பணியை தங்களிடமிருந்தே துவங்கட்டும், எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட அமைப்புத் தான் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்? குறைந்தபட்சம் ஒருசில விஷயங்களை தவறு என்று ஒப்புக் கொண்டுள்ள தங்களைப் போன்றோர் கந்தூரி போன்ற பாவங்களை செய்வதிலிருந்தும் விடுபட அல்லாஹ் அருள் செய்வானாக!

இந்து மத சகோதரர்கள் அவர்கள் வழக்கப்படி ஆட்டம் பாட்டத்துடன் சவ ஊர்வலம் செல்வதை பார்த்திருப்போம், நமது பார்வையில் அவர்களின் அறியாமையை எண்ணி முகம் சுழித்திருப்போம் ஆனால் தர்கா எனும் கல்லறையில் அடக்கப்பட்டுள்ள என்றோ இறந்த ஒரு மனிதருக்காக வருடாவருடம் கந்தூரி எனும் பெயரில் மட்டும் சவ ஊர்வலம் நடத்துவது மட்டும் சரியா? என சம்பந்தப்பட்ட சகோதரர்கள் சிந்திக்கட்டும்.

அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்களிடம் நாம் கேட்டுக் கொள்வதாவது, உங்களுடைய பணிகளை, பிரச்சாரங்களை 1980களில் துவங்கிய இடத்திலிருந்தே மீண்டும் ஆரம்பியுங்கள். இன்று அறியாமையினாலும், நமக்கு இளம்வயதில் மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு இன்றைய இளந்தலைமுறைக்கு குறைந்துவிட்டதாலும், தடமாறியுள்ள இளைய சமுதாயத்திற்கு இஸ்லாத்தை குர்அனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக்கூறி நேர்வழிபடுத்த வேண்டும்.

நாம் யார்? நாம் சொல்வது என்ன? என்பதை விளங்கப்படுத்த வேண்டும். இன்று கந்தூரிக்காக கவலைப்படும் சகோதரர்கள் விரும்புவார்களாயின் அவர்களுக்கு தேவையான தனி அமர்வுகள் மூலம் விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

அதுபோல் குர்ஆன் ஹதீஸ் பேசக்கூடிய தனிநபர்களும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்புடன் கரம் கோர்த்து 'நல்லவற்றை ஏவவும், தீயவற்றை தடுக்கவும்' முன்வர வேண்டும். 

அதிரை தாருத் தவ்ஹீத் கந்தூரி, ஜாவியா, ஹத்தம், பாத்திஹா, மவ்லீது, தரீக்கா, விதவிதமான டான்ஸ் திக்ருகள் போன்ற அடிப்படை இணைவைப்பு எதிர்ப்பு எனும் வெற்றிடத்தையும் இன்னொரு முறை தீவிர விளக்கங்கள் மூலம் நிரப்ப முன்வர வேண்டும் என வேண்டி நிறைவு செய்கின்றோம். 

Wednesday, November 4, 2015

நாளை (06.11.2015) துபையில் மவ்லவி. அப்துல் பாஸித் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்மானர் சென்டர் - அல்கூஸ்-துபை
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்...


அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931 / 055-1658284