ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்
ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்
ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்
SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?
Monday, October 23, 2017
Monday, October 16, 2017
அன்புச் சகோதரர் மவ்லவி. பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புச் சகோதரர் மவ்லவி. பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சமீபத்தில் தாங்கள் ததஜ தலைவர் பதவியிலிருந்து 2வது முறையாக விலகிய சூழலைத் தொடர்ந்து முகநூல் வாயிலாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன், படித்திருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். தற்போதும் தங்களுடைய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவரும் பதிவை தொடர்ந்தே என்னுடைய இக்கடிதத்தை எழுதுகிறேன்.
முதலில் பிரச்சனையை வெளியில் போட்டுடைத்து தொடரவிருந்த மிரட்டல்களை (Blackmail) தவிடிபொடியாக்கி வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள்.
அடுத்து, உள்ளிருந்தே போராடப்போவதாக எழுதியிருந்தீர்கள், 'இது போகாத ஊருக்கு வழிதேடும் முயற்சி' உங்களுக்கு முன் பலரைப் போல் உள்ளிருந்தே போராடி வெறுத்து சுயமாக வெளியேறியவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிந்திருப்பீர்கள், எங்களை கண்ணியத்துடன் வெளியேறச் செய்த அல்லாஹ்வே புகழுக்கு உரியவன்.
ஒருவேளை உங்களுக்கு நீதி வழங்குவது போல் பாசாங்கு செய்தாலும் உங்களின் தேவை ஏதும் மிச்சம் மீதம் இருப்பது முடிந்ததும் விரைவிலேயே மீண்டும் கட்டம்கட்டப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் சகோதரர் பாக்கருக்கு நிகழ்ந்ததைப் போல. (அவர்கள் பாவமன்னிப்பு வழங்கிய அதே குற்றச்சாட்டின் மீதே மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்னும் உங்களுக்கும் நினைவிருக்கும்)
ததஜவின் டி.ராஜேந்தர் என அறியப்படுபவரை இன்னும் அப்பாவி என நம்புவதைப் போல் உங்கள் கடிதம் அமைந்துள்ளது, 'ஒரு முஃமீன் ஒரே பொந்தில் 2 முறை கொட்டுப்பட மாட்டான்' என்பதையும் மீறி 2 முறை வலிய கொட்டுப்பட்டவர் நீங்கள், எய்தவன் இருக்க அம்புகளை நொந்து கொண்டுள்ளது அறிவார்ந்த செயலாக தெரியவில்லை.
உங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி போலவே உங்களுடைய நிர்வாக காலத்திலும் ததஜவினால் கூட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளதற்காக நீங்கள் செய்யும் தவ்பா மனஅமைதியை தரும் இன்ஷா அல்லாஹ். அதேபோல் 'தந்தை ஸ்தானத்தில்' கருதப்படுபவர்கள் வில்லனாக இருக்கக்கூடாது எனும் விதி இல்லையே.
சரி விஷயத்திற்கு வருவோம், பீஜே என்பவரை நம்பி அவரது வஹீ மறுப்பு கொள்கைகளை கடுமையாக பிரச்சாரம் செய்துள்ளீர்கள் இதனால் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை நரகின் அருகில் நிறுத்தி வைத்துள்ளீர்கள் இவர்களை மீட்பதும் உங்கள் கடமை. எனவே, பீஜே என்பவரிடமிருந்து பெற்ற ஹதீஸ் மறுப்புக் கொள்கைகளை அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும், மறுமை வெற்றியையும் முன்னிறுத்தி சமரசங்கள் ஏதுமின்றி மீண்டும் மீளாய்வு செய்திடவும், தாவாக்களத்தில் மீண்டும் உறுதியாய் செயலாற்றிடவும் அன்புடன் அழைக்கின்றேன்.
கடைசியாக ஒன்று, அபுதாபி கைத்தடி இன்னும் தனது விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்ளவேயில்லையா? இதையே ஒரு பிழைப்பாக தொடர்வது அருவருப்பாகத் தெரியவில்லையா?
இவண்
என்றென்றும் அன்புடன்
அதிரை அமீன்
வேண்டுகோள்: சகோதரர் அல்தாபி அவர்களுடன் சமூக வலைதள தொடர்பில் உள்ளோர் இப்பதிவை அவரது பார்வைக்கு கொண்டு சேர்க்கவும்.
Tuesday, October 10, 2017
துபையில் இறுதி தீர்ப்பு நாள் மாநாடு -2017 மற்றும் இஸ்லாமிய போட்டிகள்
அல்மனார் இஸ்லாமிக் சென்டர்-துபை சார்பாக இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகிற நவம்பர் 30 & டிசம்பர் 1, 2017 அன்று நடைபெற இருக்கின்றது.
அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் / பெரியவர்களுக்கான இஸ்லாமிய போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகள் மற்றும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த செய்திகளை தெரியப்படுத்தி கலந்துக்கொள்ள ஆர்வப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
REGISTRATION CLOSES ON 12-10-2017.
Subscribe to:
Posts (Atom)