உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 30, 2012

துபாயில் வெளுத்து வாங்கிய கன மழை: மக்கள் பெரும் மகிழ்ச்சி

 Heavy Rain Lashes Dubai

துபாய்: துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது.

துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே வெளுத்து வாங்கும் மழையை மக்கள் ரசித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.

thanks to thatstamil

Wednesday, November 28, 2012

அதிரை பிலால் நகரில் தாருத் தவ்ஹீத் நடத்தும் பெண்கள் பயான்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
 
அல்லாஹ்வின் பேரருளால் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினால் பிலால் நகரில் புத்தம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாருத் தர்பிய்யா மையத்தில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (30-11-2012) அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு : "இளைய தலைமுறையினரின் எதிர்காலம்"

சிறப்புரை : அஃப்ழலுல் உலமா ஷஃபான், ஆலிமா ஸித்தீக்கியா (முதல்வர், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, அதிரை)

பிலால் நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.

அதிமுக்கியமாக, ஆண்களுக்கு தனியிட வசதியுண்டு.

புதிய தர்பியா மையம் சிறப்புடனும் வலிமையுடனும் செயல்பட வாழ்த்துகிறோம் அதற்காக பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
 

அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)

Saturday, November 24, 2012

அதிரை தாருத் தவ்ஹித் தர்பியா சென்டர் நாளை திறப்பு!


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அன்புச் சகோதரர்களுக்கு,
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
அதிரை தாருத் தவ்ஹித்தின் தர்பியா சென்டர் நமதூர் பிலால் நகரில் நாளை 25/11/12 ஞாயிறு மகரிப் தொழுக்குபின் திறக்கபட உள்ளது.அத்துடன் மார்க்க சிறப்புரையும் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்!

அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ADT.

Sunday, November 18, 2012

ஆபத்தான மாட்டுச் சாலை

நமது பக்கத்து கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி R. வெங்கட்ராமனின் தடங்களையும் மீறி சேது ரோடாக இருந்து இன்றைக்கு கிழக்கு கடற்கரைச் சாலையாக பரிணமித்துள்ள ECR ரோடு, வாகன ஓட்டிகளுக்கு பயன்படுகின்றதோ இல்லையோ நமதூர் மாடுகளுக்கு நன்கு பயன்படுகின்றது.

காலையிலிருந்து மாலை வரை கடைத்தெரு, பஸ் ஸ்டாண்ட் மற்றும் சாலை ஓரங்களிலிலேயே கண்டதையும் மேயும் மாடுகள் இரவில் அசைபோட வசதியாக ECR ரோட்டையே தேர்ந்தெடுக்கின்றன (ஒருவேளை ஒனர் வீடுகள் மறந்துவிட்டனவோ), அதனால் உனக்கு என்ன என்ற உங்கள் கேள்வியும் காதில் விழுகிறது! சொல்கிறேன், கேளுங்கள்...

சுமார் 20 தினங்களுக்கு முன் அதிரை காவல்துறை சார்பாக நகர் முழுவதும் ஓர் அறிவிப்பு, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக திரியும் மாடுகளை ஒழுங்காக வீடுகளில் கட்டும்படி வேண்டுகோள் விடுத்தார்கள், இந்த அறிவிப்பு மாடுகள் காதில் வேண்டுமானால் விழுந்திருக்கலாம் ஆனால் மாட்டு ஓனர்கள் காதில் விழவே இல்லை என்பதை நிரூபிக்கும் புகைப்படங்களே இவை.

ECR என வெட்டி பெருமைக்கு மாவு இடிக்கின்ற பெயர் ஆனால் தெரு விளக்குகள் என்ன இராத்திரி நேர தட்டு வண்டி கடலை வியாபாரியின் காண்டா விளக்கு கூட சாலை ஓரங்களில் தெரியாத இருட்டு, இந்த நெடுஞ்சாலைக்குத் தான் கிழக்கு கடற்கரைச் சாலை என பெயர் சூட்டியுள்ளனர்,  இந்த மாடுகளை கூட டார்ச் லைட் வெளிச்சத்தில் தான் படமெடுக்க முடிந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த கும்மிருட்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஓடும் வாகனங்களை விட பறக்கும் வாகனங்களே அதிகம், இன்னும் இராத்திரிகளில் வரும் வாகனங்களின் வேகத்தை அளவிட ஸ்பீடாமீட்டர்கள் இல்லை என்ற நிலையில் கடந்த வருடம் காலேஜ் அருகே இரவில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான லாரி மோதியதால் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான ஆடுகளும் அதன் மேய்ப்பாளரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் ஹவாண் ஹோட்டல் அருகே கேரள பேருந்தால் ஒரு பைக் விபத்து. மேலும் 4 தினங்களுக்கு முன் இரயில்வே கேட் அருகே இரவில் பைக் விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் என அசம்பாவிதங்கள் தொடர்கின்றன.

அடுத்தவர் உயிர்கள் என்ன உங்கள் மாடுகளை விட அற்பமானதா? இப்படி விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள சாலையில் தெரிந்தும் பொறுப்பின்றி மாடுகளை விட்டு வைத்திருப்பது நியாயமா? மாட்டு சொந்தங்களே!
நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்வுநிலை (!?) பேரூராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் என்ன செய்து கொண்டுள்ளன? காவல்துறை அறிவிப்போடு தன் கடமையை முடித்துக் கொண்டதா?

யாராவது ஒரு கிராமராசன் வந்து வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும், காதிர் முகைதீன் பள்ளி, கல்லூரி மாணவர்களையும் காப்பாற்றுங்கள் என கத்தணும் போல் இருக்கு. வருவீர்களா, மாட்டு ஓனர்கள் படிப்பினை பெறும் அளவில் மாடுகளை வாரிக்கொண்டு போவீர்களா?

எதிர்பார்ப்புடன்
அதிரைஅமீன்


புகைப்படங்கள்
ஆஷிக் அகமது

Friday, November 16, 2012

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 2

சென்ற தொடரில் தண்ணீருக்காக நாம் கண்ணீர் வடிக்க வேண்டிய சூழலின் நமதூர் குளங்களின் இன்றைய நிலைகளை கண்டோம்.
 
இத்தொடரில் ராஜாமடம் காட்டாறு மற்றும் நமதூரை சுற்றியுள்ள ஏரி மற்றும் வாய்க்கால்களின் நிலைகளை சற்று அலசலாம்.
 
ராஜாமடம் காட்டாறு


 
நிலத்தடி நீருக்கு அடுத்து, பட்டுக்கோட்டை ஓடை என்றழைக்கப்பட்டு, கிராமங்கள் ஊடாக தொக்காலிகாடு கிராமத்திற்குள் ராஜாமடம் காட்டாறு என்ற பெயரில் நுழையும் மஹாராஜா சமுத்திரம் ஆறு தான் அதிரையின் பிரதான நீர் ஆதாரம்.
 
மஹாராஜா சமுத்திரம் அணைதொக்காலிக்காடு மஹாராஜாசமுத்திரம் அணைக்கட்டில் நீர் தடுக்கப்பட்டு ஒர் கிளை வாய்க்கால் மூலம் விவசாயம் மற்றும் வழியில் உள்ள குளங்களை நிரப்ப காலங்காலமாக திருப்பப்பட்டு வந்தது. (பாகம் 1ல் இதற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
 
 
கிளை வாய்க்கால்

ராஜாமடம் பாலம்
 
சறுக்கை

கர்நாடகத்தின் தமிழகத்திற்கான காவிரி நீர் கைவிரிப்பில் துவங்கிய CMP வாய்க்கால் பயன்பாட்டை நமதூர் புண்ணியவான்கள் சிலர் சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்தி குளத்திற்கு நீர் செல்லும் சிறு, குறு கிளை வாய்க்கால்களை பொறுப்பாக மூடி விட்டனர்.
 
இச்செயலால் செடியன், மரைக்கா, செக்கடி, ஆலடி, மண்ணப்பன் என மக்கள் பயன்பாட்டில் இருந்தவை இன்று காட்சிப் பொருளாகும் நிலைக்கு சென்றுவிட்டது. ஆதாங்க நம்ம விரலை எடுத்தே நம்ம கண்ண குத்திக்கிட்டோம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.
 
சின்ன ஏரி

பெரிய ஏரி

ராஜாமடம் காட்டாறாக மாறி மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டை நிறைத்து விட்டு வழிந்தோடி வரும் வழியில் இன்னொரு கிளை வாய்க்கால் மூலம் ராஜாமடம் ஏரியையும் நிறைக்குதுங்க. இந்த தண்ணீர் தான் விவசாயம் போக, நம்மூர் காலேஜ் வடிகால் வாய்க்கால் வழியா அப்பப்ப பிலால் நகரை ஒரு கை பார்த்துட்டு கடல்ல போய் வீணா சங்கமம் ஆகுதுங்க.
 
இந்த வாய்க்காலை ஒரு பொறுப்பான திட்டமிடல்களுடன் ஊருக்குள் மீண்டும் கொண்டு செல்லலாம், அதாவது ரயில்வே லைன் வழியாக அந்த தண்ணீரை மகிழங்கோட்டையில் அதே பழைய CMP வாய்க்காலில் இணைக்க முடியும்.
 
ராஜாமடம் ஏரி காலேஜ் வடிகால் வாய்க்கால் 
இந்த மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டு, ராஜாமடம் காட்டாறு, ஆடதொட செடிகளால் சூழப்பட்டும், தோப்புக்காரர்களால் ஓரங்களில் அரிக்கப்பட்டும் வரும் ராஜாமடம் பெரிய ஏரி, சின்ன ஏரி, வழிமறைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள சறுக்கை, வடிகால் வாய்க்கால் என சீசன் குளியலுக்கு இன்னும் பயன்படுவது ஆறுதலான செய்திங்க.
 
செல்லிக்குறிச்சி ஏரி


இதுல தண்ணி வழிந்தால் நேரா கரிச்சமணிக்கு வரும்

அடுத்து, சுமார் 5, 6 கிலோ மீட்டர் பரப்பளவில் பள்ளிகொண்டான் முதல் மாளியக்காடு வரை விரிந்துள்ள செல்லிக்குறிச்சி ஏரி நீர் அதிரையின் கரிச்சமணி குளம் வரைக்கும் வருதுங்க.

கரிச்சமணியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கினா, 100 மீட்டர் தூரத்துல ஆலடி குளத்தையும் நிரப்பலாம். உபரி நீரை 50 மீட்டர் தூரத்துல உள்ள CMP வாய்க்காலிலும் விடலாம். செல்லிக்குறிச்சி ஏரியும் பிளாட் ஆகுமுன்பாக ஆழப்படுத்தப்பட வேண்டும் இதனால் வருட முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதுடன் விவசாயமும் நிலத்தடி நீரும் கணிசமா உயருமுங்க.


மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி


செல்லிக்குறிச்சி ஏரி நீர் மூலமும் மழைநீர் மூலமும் நிரப்பப்படும் மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரியும் நம்ம ஊரு ஏரி தாங்க, பேருதாங்க மழவேனிற்காடு ஆனா இருப்பது வண்டிப்பேட்டை பக்கத்துலங்க.

ஒரு காலத்தில் கடல் ஜாவியா வரை இருந்தது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை, இக்கூற்று உண்மை என்றால் அதிரையில் மறைந்து வரும் (மறைந்து விட்ட) நீர் ஆதாரங்களில் சேர்க்கத் தகுதியானதே என்றாலும் ஜாவியா வரை கடலுக்கு படகுகளை கொண்டு செல்லும் கழிமுகம் (வாய்க்கால்) முன்பு இருந்திருக்கக்கூடும் இதையே கடல் ஜாவியா வரை இருந்ததாக சிலர் நம்ப காரணமாக இருக்கலாம்.


செம்படவர் தெரு கழிமுக வாய்க்கால்
(இந்த வாய்க்காலின் தொடர் தான் அந்த காலத்துல ஜாவியா வரை நீண்டும், சற்று அகலமாகவும், ஆழமாகவும் இருந்திருக்கக்கூடும்)

 
குறிப்பு :

ஜாவியாவிற்கு பின்புறம் செய்னாங்குளம் செல்லும் இறக்கத்தில் (தோணி) வத்தை கட்டும் தொழில் பல்லாண்டுகள் இயங்கி வந்தது என் கருத்திற்கு வலு சேர்க்கும் என நம்புகிறேன், கடலுக்குச் செல்லும் கழிமுக வாய்க்கால் அருகே இருந்ததனால் தான் இத்தொழிற்கூடம் இங்கே இயங்கி இருக்கலாம்.

இப்பவும் இருக்கிற காலேஜ் வாய்க்காலுக்கும் ஜாவியாவுக்கு எவ்வளவு தூரம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். காலப்போக்கில் வாய்க்காலும் போச்சு! வத்தை கட்டும் தொழிலும் போச்சு!!

நீர்நிலை குறித்த ஆக்கம் என்பதால் நமதூர் கடல் காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

நமதூரை சுற்றியுள்ள ஏரிகளால் பயன்கள் ஏராளம் ஆனா பயன்படுத்தத் தெரியாத ஏமாளிங்க நாமங்கிறது தான் ஒட்டு மொத்த உண்மைங்க என ஈனஸ்வரத்தில் முனகி என் ஆதங்கத்தை முடிக்கிறேங்க.

தொகுப்பு : அதிரைஅமீன்
படங்கள் : ஆசிக் அகமது
இவர்களுடன் நாளைய செய்தியாளர் அஸ்அத்

Wednesday, November 14, 2012

15.11.2012 துபையில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம்

 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை 15.12.2012 இஷா தொழுகைக்குப்பின் 8.30 P.M. துபை, தேரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம் நடைபெறவுள்ளது.

அனைத்து அதிரை தவ்ஹீத் சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
 
தவ்ஹீத் இல்லம்

டேரா, நைஃப் ரோடு,

அல் புத்தைம் பள்ளி (AL FUTTAIM MASJID) எதிர்புறம் அமைந்துள்ள  டல்ஃப் (DULF) ஹோட்டல் பின்புறமுள்ள அல் ஜர்வானி பில்டிங்,

அறை எண்:109,

இடைத்தளம். (MEZZANINE FLOOR)

Contact:
Mr. Abdul Khader 055 2829759   
Mr. Jamaludeen 055 2177618

Thursday, November 8, 2012

இஸ்லாத்தையும், நபிகளையும் இழிவுபடுத்தி படம் எடுத்தவருக்கு ஓராண்டு சிறை

லாஸ் ஏஞ்சல்ஸ்:

இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி படம் எடுத்த மார்க் பஸ்ஸலி யூசெபுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி 'தி இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படத்தை எடுத்தவர் அமெரிக்கரான நகோலா பஸ்ஸலி நகோலா(எ) மார்க் பஸ்ஸலி யூசெப்
.
இந்த படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்தை கண்டித்து லிபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர்.

இந்த சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்த யூசெப் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது யூசெப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் வரை முறையான அனுமதியின்றி கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

யூசெப் ஏற்கனவே கடந்த 5 வாரமாக அமெரிக்க மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

thanks to thatstamil.com

Wednesday, November 7, 2012

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 1

கடந்த வருட விடுமுறையில் யோசித்து, இந்த வருட விடுமுறையில் மூன்று நாட்களை செலவழித்து, அலைந்து, திரிந்து, சேற்றில் வழுக்கி விழுந்து, சில இடங்களில் ஆனந்தக் குளியலிட்டும் உங்களுக்காகவே சுட்ட நம்ம ஊரு ஏரி, குளங்களை புகைப்பட ஆவணமாக தருவதில் மெய்யாலுமே சந்தோஷங்க.

சினிமா நகைச்சுவை காட்சியொன்றில் 'கிணத்த காணல' என்று காவல்துறையில் புகார் அளிப்பார் ஒருவர், அது கற்பனை
ஆனால்
அதிரையில் 'ஏகப்பட்ட குளங்களை காணல' என்பது உண்மையிலும் உண்மைங்க ஆனா புகார் தான் யாரும் பண்ணலீங்க.

நானறிந்து காணாமல் போன குளங்களும் அதன் இன்றைய நிலையும்

பங்களா குளம்    -     மேலத்தெரு (புகாரி கடை அருகில்)
 இத்தி குளம்        -    மேலத்தெரு (rh;r;irf;Fhpa KdpNfhapy; gpd;Gwk;)
நாரக்குளம்        -    மேலத்தெரு (வாவாங்கனி லைன்)
 பள்ளிவாசல் குளம்    -    நெசவுத்தெரு
பள்ளக்குளம்        -    எம்.எஸ்.எம் நகர் பின்புறம்
(Gy; cau kio jz;zPUq;f)
  பறையங்குண்டு    -    மேலத்தெரு (அப்டுடேட் பாதி குளம் சுவாகா)
 எம்.எச்.குட்டை    -    மேலத்தெரு 
(தனியாருக்கு சொந்தமானது – எம்.எச் கொல்லை)

கர்நாடக அரசியலுக்கும், காவிரி தண்ணீருக்கும், காவிரியின் கடைமடையான அதிரையின் ஏரி, குளங்களுக்கும் நேரடி தொடர்பிருக்குங்க. அந்தக்கால அரசியல்வாதி காமராஜ் அவர்களுக்கு 1955 ஆம் ஆண்டு இருந்த நீர்வள அக்கரையில் 1 சதவீதம் கூட இந்தக்கால (மறைந்த)குல்லா, தாத்தா, ஐயா, அம்மாக்களுக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பதை கீழே வரும் படத்தை பார்த்தாலே தெரிஞ்சுக்குவீங்க.

 நம்ம ஊரு CMP வாய்க்காலுக்கு தண்ணிர் திறந்து விட பயன்பட்ட ஷட்டர்

நமதூரை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி நீர்வளத்தை சேமிப்பதன் மூலம் விவசாயமும் தழைத்தோங்கும், நிலத்தடி நீரும் பெருகும், முக்கியமா 'நிலத் திருடர்களின்' ஆக்கிரமிப்பிலிருந்தும் ஏரி, குளங்கள் கொஞ்ச காலமாவது தப்பிக்குமுங்க.

முடிந்தவரை ஏரி குளங்களை அதன் ஒரிஜினல் பெயரிலேயே குறிப்பிட்டுள்ளேன், சிலவற்றை அதன் தெரு மற்றும் இடங்களின் பெயரால் அடையாளப்படுத்தியுள்ளேன். விபரம் அறிந்தவர்கள் எடுத்துச் சொன்னால் திருத்திக்குவேனுங்க.

அதிரையின் குளியல் குளங்கள் எல்லாம் காலவதியாகி கீழே வரும் வெறும் 3 குளங்கள் மட்டுமே குளியலுக்காக பயன்பாட்டில் இருப்பது அதிர்ச்சிகரமான செய்திங்க.

 செடியன்குளம்

வெட்டிகுளம் - கடற்கரை தெரு

புள்ள குளம் (ரெட்டகுளம்) – சுரைக்கா கொல்லை

CMP வாய்க்கால்ல தண்ணீர் வரலைன்னு குளியல் போட்ட குளங்களை காயப்போட்ட நாம மாற்று ஏற்பாடுகளாய் நமதூரை சுற்றியுள்ள ராஜாமடம் காட்டாறு, ராஜாமடம் ஏரி, மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி, மாளியக்காடு செல்லிக்குறிச்சி ஏரி போன்ற ஏரிகளிலிருந்து மாற்றுவழிகள் எளிதாக இருந்தும் தண்ணீர் நிரப்ப முயற்சிக்காமல் அலட்சியம் செய்துள்ளோமுங்க. 

 எல்லா பாதைகளும் ரோமாபுரியை நோக்கி என்ற அடைமொழிக்கேற்ப நம்ம ஊரு ஏரி தண்ணிகள் எல்லாம் கடலை நோக்கி வீணாய் சென்று கலப்பதை குறித்து கவலைப்பட ஆளில்லைங்க.


ஆட்டை போடப்பட்ட குளங்கள் போக மீதமுள்ள அதிரை நீர்நிலைகளின் காட்சியும் சாட்சியும்

செடியன்குளம் - இது அதிரையின் அடையாளங்களில் ஒன்று

காட்டுக்குளம் - சி.எம்.பி லைன் பின்புறம் மிலாரிகாடு போகும் வழி, இதன் மரத்தடியில் சுண்ணாம்பு கலவாய் ஒன்றும் இயங்கி வந்தது.


கரிச்சமணி குளம் - ஏரியாக இருந்து குளமாக சுருங்கி இன்று சாக்கடை குட்டையாக ஷிஃபா மருத்துவமனை முன் தேங்கி நிற்கிறது.


வெள்ளக்குளம் - பட்டுக்கோட்டை ரோட்டில், இமாம் ஷாஃபி பள்ளி அருகில் உள்ளது.ஆலடிக்குளம் - வண்டிப்பேட்டை முக்கம், பெண்களுக்கென சிறப்பான, மறைவான படித்துறையை கொண்டிருந்த சரித்திர மிச்சம்.

மண்ணப்பங்குளம் - அதிரையின் ஒரே (முன்னாள்) குடிநீர் குளம், பெட்ரோல் பங்க் பின்புறம், வண்டிப்பேட்டை.புள்ளகுளம் - இது இரண்டு குளங்களின் இணைப்பு, ரெட்டை குளம் எனவும் அழைக்கப்படுகிறது, ஒரு குளத்தில் ஆண்களும் மற்றொரு குளத்தில் பெண்களும் குளித்து வருகின்றனர், சுரைக்கா கொல்லை.


ஆணைவிழுந்தான் குளம் - சேர்மன்வாடி அருகில், அரசு மருத்துவமனை முன்புறம், மூச்சுப்பயிற்சி எடுக்க சிறந்த இடம் (தாங்கமுடியாத நாத்தம்).


ஆஸ்பத்திரிதெரு குளம் - புதுப்பள்ளி பின்புறமுள்ளது, ஒரு காலத்துல இங்கயும் தான் குளிச்சாங்க.

பஸ் ஸ்டாண்ட் குளம் - போலீஸ் ஸ்டேசன் எதிரில், பேரூராட்சி அலுவலகம் அருகில், தலைவர், துணை தலைவர், அனைத்து கவுன்சிலர்களும் தினமும் போற பாதையில ஊர் மாணத்த ஏலம் போடுற இடம்.


மாரியம்மன் கோயில் குளம் - கரையூர் தெரு கோயில் அருகில்.

கினியாங்குளம் - தரகர் தெரு, முறையான கரையோ, துறையோ, வழியோ இல்லாத வித்தியாசமான, சுத்தமான குளம், குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் கொல்லைபுறங்களே இக்குளத்துக்கு செல்லும் வழி என்பதால் வீடுகள் நடுவே அமைந்துள்ள ஓர் தண்ணீர் தீவு எனவும் சொல்லலாம்.சேனாங்குளம் - கினியாங்குளத்தோடு ஒட்டி உறவாடும் அசுத்தநீர் தேக்கம், கடற்கரை தெரு தர்கா பின்புறமுள்ளது.வெட்டிக்குளம் - இன்னும் பயன்பாட்டில் உள்ள கடற்கரை தெரு குளம்.


சமரங்குளம் - புதுத்தெரு, மிஸ்கீன் பள்ளி முன்புறமுள்ளது, கொஞ்சம் கொஞ்சமா மூடிக்கிட்டே வர்றாங்க (வலிக்காம அடிக்கிறாங்களாம்).

செய்னாங்குளம் - கீழத்தெரு, காலேஜ் பின்புறமுள்ளது, செடியனின் வடிகால் குளம்.

புதுக்குளம் - மேலத்தெரு, பேர்ல மட்டும் தாங்க புதுசு, மாடு கழுவ கூட லாயக்கில்லீங்க.

சங்கத்து குளம் - நெசவு தெரு, இதுவும் ஒர் (முன்னாள்) ரெட்டை குளங்க, பள்ளியாகுளம் என்ற பேரும் உள்ளது. இதில் இன்னொரு பகுதி குளத்தில ஆளுக்கு கொஞ்சமா வீடு கட்டிக்கிட்டாங்க. இது குளமாயிருந்த காலத்துல கரையோர பூவரச மரத்துல ஒரு வேடந்தாங்களே வந்து குடியிருக்குமுங்க, மாலை நேரத்துல அடையும் பறவைகளின் ரீங்காரம் இன்னும் காதுலயும், மனசுலயும் அப்படியே நிக்குதுங்க.

செக்கடிகுளம் - நடுத்தெரு, ஊர் மத்தியின் கம்பீரம்.


மரைக்காகுளம் - பெண்களுக்கு மட்டுமே இருந்த பிரத்தியேக குளம். மேலத்தெருவுக்கு இது மொடக்குண்டு, புதுமனைதெருவுக்கு இது மரைக்காகுளம், வருங்காலத்துல எல்லோருக்கும் இது வீட்டுமனை.


பெத்தாங்குளம் - மேலத்தெருவிலிருந்து மகிழங்கோட்டை செல்லும் வழியில், ஆளில்லா ரயில்வே கிராஸிங் கீழே.


அதிரையை பற்றி யாராவது ஆன்லைன் மியூசியம் திறப்பதாக இருந்ததால் தாராளமாக இந்த புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ளலாமுங்க.
 

தொகுப்பு    :     அதிரைஅமீன்
படங்கள்    :    ஆசிக் அகமது
இவர்களுடன் நாளைய செய்தியாளர் அஸ்அத்

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 1
  தொடர்ச்சி பாகம் - 2ல்