உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, November 30, 2011

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

- K.L.M. இப்ராஹீம் மதனீ

ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிளந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும்.
அதற்கு நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்றார்கள். தன் தோழர்களையும் நோற்கும்படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

யூதர்களுக்கு மாறுசெய்வதற்காக ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.

ஆஷுரா நோன்பின் சிறப்புகள்:
1. ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமளான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: ஆஷுரா நாள் நோன்பின் சிறப்பை தேடியது போன்று வேறு எந்த நாட்களின் நோன்பின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் தேடியதை நான் பார்க்கவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் நான் கருதுகிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
3. ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

Tuesday, November 29, 2011

கேலி, கிண்டலால் உருவாகும் கலாட்டாக்கள்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

أَن تَعْتَدُواْ وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ {2}

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறரிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 5:02  கேலி, கிண்டலால் உருவாகும் கலாட்டாக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரையில் சகோதரத்துவம் என்றால் அது எப்படிப்பட்டது என்பதை நடைமுறையில் செய்துகாட்டி உலகுக்கு உணர்த்தியவர்கள் அன்சாரிகள் என்பதையும் அப்படிப்பட்ட அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மத்தியில் சகோதரத்துவத்தை சீர்குலைப்பதற்காக எந்த அதிகாரத்திலும் தங்களுடைய உறவினர்களை முன்னிலைப்படுத்தாமல் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய மாமி மகனை இதில் புகுத்தி இருவருக்கும் மத்தியில் ஷைத்தான் கோபத்தை மூட்டி விட்டதையும் அதை அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிதானமாக கையாண்டு முறியடித்த விதத்தையும் இதற்காகவே அல்லாஹ்விடமிருந்து திருவசனம் இறங்கியதையும் பார்த்தோம்.

இதேப்போன்று அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மத்தியில் இன்னுமொரு தடவை கோபத்தின் மூலமாக கலகத்தை வெடிக்கச்செய்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளிய சம்பவமும் உண்டு.

கேலி, கிண்டல்.
கோபம் பல வழிகளில் மனிதனை ஆக்ரமிக்கும் அதில் மிகவும் இலகுவான ஒரு வழி கேலி, கிண்டல், கிச்சு கிச்சு மூட்டுகின்ற வழியாகும்.

எல்லோரும் எப்பொழுதும் ஒரே மாதிரியான மூடில் இருக்க மாட்டார்கள் சில நேரத்தில் மூட்அவுட்டில் இருப்பார்கள் மூட்அவுட்டில் இருப்பவர்கள் அவ்வளவாக முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் காரணம் மூட்அவுட்டுக்கான சம்பவங்களில் சிலவற்றை வெளியில் சொல்ல முடியாததாக இருக்கும் அதனால் முகத்தில் பாவனை செய்து கொண்டிருப்பார்கள் உள்ளத்தில் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இது ஷைத்தானுக்குத் தெரிவதால் இந்த நேரத்தில் கலகத்தை உண்டுப் பண்ணி விடுவதற்கு ஆர்வம் கொள்வான்.  

எப்பொழுதும் விலாப்பகுதியில் ஒரு கிள்ளு கிள்ளுபவர் அன்றும் எதார்த்தமாக கிள்ளி விடுவார் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு நெளிபவர் அன்று ஓங்கி ஒரு அறை விட்டு விடுவார். இது அவர்கள் இருவருக்கு மத்தியில் கை கலப்பில் தொடங்கி அவர்கள் இருவருடன் இது நின்று விடாமல் குடும்ப சண்டை, கோஷ்டி சண்டையாக மாறி விடுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது.

Sunday, November 27, 2011

எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்


இந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவிரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன.

பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் 'அதிபயங்கரமான ஐம்பது முஸ்லிம் தீவிரவாதிகள்' பட்டியல் ஒன்றை அண்மையில் நமது உள்துறை அமைச்சகம் தயாரித்தது. அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து, "இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது.

நமது ஊடகங்களுக்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா? பேனைப் பெருச்சாளியாக்கி, நம் நாட்டின் எல்லா மொழி ஊடகங்களும் அதை எழுதித் தள்ளின

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த வாஜுல் கமர் கான் என்பவர், இந்தியாவின் மும்பையை அடுத்துள்ள தானேவில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை சில நடுநிலை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "... சிறிய தவறு நடந்துவிட்டது. இத்தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.

அடுத்த சில நாட்களில் இரண்டாவது 'சிறிய தவறு' வெளிவந்தது. அதே 'அதிபயங்கரமானவர்களின் பட்டியலில்' 24ஆவது ஆளாக இருக்கும் இன்னொரு தீவிரவாதியான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமானது. முதல் தீவிரவாதியான வாஜுல் கமர் கான் என்பவராவது தானேவில் வசிக்கும் சாதாரண இந்திய முஸ்லிம். இரண்டாமவரான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் என்பவர் ஏற்கனவே 1993இல் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் 'சேர்க்கப்பட்டு'க் கடந்த 2010 பிப்ரவரி மாதம் கைதாகிச் சிறையில் இருப்பவர். http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563936_1_arthur-road-jail-mumbai-jail-special-tada-court

மும்பை (ஆர்தர் சாலை) சிறையில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கு எதிராக இண்டர்போலில் புகார் செய்து "தேடப்படும் குற்றவாளி" ஃபெரோஸ் கானுக்கு எதிராக ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்கும் மேலாக உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது நமது புலனாய்வுத்துறை. அது மட்டுமின்றி, மும்பைச் சிறையிலிருக்கும் ஃபெரோஸைப் பாகிஸ்தானில் 'பதுங்கி'க் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீவிரவாதியைப் பிடிப்பதற்குப் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியும் வந்தது.

நமது நடு(!)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் முஸ்லிம் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது சேவையைச் செவ்வனே செய்தன.


ஏறத்தாழ இதேபோன்று ஒரு செய்தியை, சன் குழுமத்தின் நம்பர் ஒன்(?) மாலை இதழான 'தமிழ் முரசு' கடந்த 23.11.2011இல் தலைப்பாக்கி வெளியிட்டது.

தலைப்பு: "8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கத் தலைவர் கைது!" http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943

அதிரையைச் சேர்ந்த, தவ்ஃபீக்கைக் காவல்துறை 8 ஆண்டுகளாகத் தேடி வந்ததாகத் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும் அழுத்தம் திருத்தமாக தமிழ் முரசு நாளிதழ் கூறியுள்ளது. காணொளியாக சன் தொலைக்காட்சியில் செய்தியும் சொல்லப்பட்டது.

தமிழ் முரசு நாளிதழின் இதே செய்தியை அதே "8 ஆண்டுகள் ..." தலைப்பிட்டு நெல்லை ஆன்லைன், தன் செய்தியைப் போன்று அப்படியே வாந்தி எடுத்துப் பதித்துள்ளது. http://nellaionline.net/view/32_24021/20111123164224.html

இதே செய்தியை தி ஹிண்டுவும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டது. http://www.thehindu.com/news/states/other-states/article2651009.ece?homepage=true பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் இந்து நாளிதழ் மற்றொரு இடத்தில் 2008ஆம் ஆண்டு தவ்ஃபீக் பிணையில் வெளிவந்ததாகவும் கூறுகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பிணையில் வெளிவருவது சுலபம் அல்ல என்பது இந்து நாளிதழுக்குத் தெரியாததன்று. பின் எந்த வழக்கில் அவர் பிணையில் வந்தார் என்பதையும், அவர்மீது போடப்பட்ட பொடா சட்டத்தின் நிலை என்னவாயிற்று என்பதையும் இந்து நாளிதழ் அறிந்து கொள்ள விரும்பவில்லை.

8 ஆண்டுகள் தவ்ஃபீக்கைத் தேடியதில் என்னதான் சிக்கல்?

கடந்த 2.12.2002இல் மும்பையின் அம்ருத் நகரிலிருந்து காட்கோபர் இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து இருவர் பலியாயினர்; 49 பேர் காயமடைந்தனர். சுறுசுறு(!)ப்புக்குப் பேர்போன மும்பைக் காவல்துறை உடனடியாக, மும்பை ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் முஹம்மது அப்துல் மத்தீன், ஷேக் முஹம்மது முஸம்மில், ஸாஹிர் அஹ்மது, இம்ரான் அஹ்மது கான், முஹம்மது அல்தாஃப் இஸ்மாயீல் ஆகிய ஐவரை மேற்காணும் வெடிகுண்டு வழக்கில் 'சேர்த்து' வழக்குப் பதிந்தது. ஆறாவது விசாரணைக் கைதியான ஸையித் காஜா யூனுஸ், காவல்துறை கஸ்ட்-அடியில் மரணமடைந்தார். பதறிப்போன மும்பைக் காவல்துறை, ஹைதராபாத் என்கவுண்ட்டரில் நவம்பர் 2002இல் போட்டுத் தள்ளப்பட்ட ஸையித் அஸீஸ் (எ) இம்ரானையும் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்ஃபீக்கையும் இந்த வழக்கில் 'சேர்த்து' அடுத்த வாரம் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. மேலும், இவர்கள் அனைவரும் ஜெய்ஷே முஹம்மது, அல் காயிதா, லஷ்கரே தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என்பதாக வழக்கை ஜோடித்தது மும்பை காவல்துறை. http://articles.timesofindia.indiatimes.com/2003-04-10/mumbai/27270630_1_imran-rehman-khan-supplementary-chargesheet-mohammed-abdul-mateen

பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.

குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும், 11.6.2005இல் 'அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அஷோக் பங்காலே, "இந்த வழக்கு அரசுத் தரப்பால் கட்டியெழுப்பப்பட்டது" என்று குட்டும் வைத்தார். http://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200529.htm

இந்த வழக்கில் தவ்ஃபீக்கின் தொடர்பு என்ன?

கடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாள்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. இச்செய்தியும் வழக்கம்போல் எல்லா ஊடகங்களிலும் வெளியானது.

நவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிஸம்பர் 2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது.

2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவ்ஃபீக், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/AC179CANDIDATE.htm

பின்னர், கொடுங்கையூர் வழக்கு பிசுபிசுத்துப்போய் பிணையில் வெளிவந்தார் தவ்ஃபீக். என்றாலும் அவ்வப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வரும்போது தவ்ஃபீக்கைக் காவல்துறையினர் அழைத்துப் போய் சிறையில் வைத்திருந்து வெளியே விடுவது 2008வரை வழக்கமாகவே இருந்து வந்தது.

அவ்வப்போது நமது புலனாய்வு(!) எழுத்தாளர்கள் சிலர், தவ்ஃபீக்கை சர்வதேச பயங்கரவாதி என்பதுபோல் சித்தரிப்பது தொடர்ந்தது.

இரா. சரவணன் என்பவர் ஜூவியின் 25.5.2008 பதிப்பில் "டென்ஷனில் தமிழகம்! டேஞ்சரஸ் தவ்பீக்..." என்று தலைப்பிட்டு நல்ல கற்பனை வளத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.

அவருடைய கற்பனை வளத்துக்குச் சான்றான பகுதி:

"ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. (ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து).

இந்தப் பதிவுக்குப் பின்னர் ஜூவியைத் தொடர்பு கொண்டு தவ்ஃபீக்கைப் பற்றி உண்மைக்கு மாற்றமாக எழுதியதை அவருடைய குடும்பத்தார் விசாரித்தபோது, தவ்ஃபீக்கின் குடும்பத்தினரின் கருத்துகளையும் உண்மை அறியும் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரனின் கருத்துகளைப் பெற்று, மூன்று மாதத்துக்குப் பின்னர் ஜூவி வெளியிட்டது. அதில், சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகிறார்:

'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள். http://adiraixpress.blogspot.com/2008/08/blog-post_4794.html

கடந்த 2008 மே மாதம் 17இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 13.5.2008இல் ஜெய்ப்பூரின் 9 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பத்தாவது குண்டைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவிகள் 63 பலியாயினர்; 216 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக மும்பையைச் சேர்ந்த விஜய் என்பவனை முதன்முதலாகக் காவல் துறை கைது செய்தது. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1618&Itemid=54

வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி மீனா எனும் பெயருடைய பெண் கூறியதாகக் காவல்துறையினர் விஜயிடமிருந்து வாக்குமூலம் 'வாங்கினர்'. தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். http://tamil.oneindia.in/news/2008/05/14/india-60-killed-150-injured-as-terror-strikes-raja.html

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு ஆர் டி எக்ஸ் எனும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர் டி எக்ஸ் என்பது இராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. நமது இராணுவத்துக்குச் சொந்தமான ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளில் பெரும்பகுதி, முன்னாள் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மூலம் கடத்தப்பட்டு சங் பரிவாருக்கு சப்ளை செய்யப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். http://www.satyamargam.com/1096

மும்பை மாலேகான் ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் சாமியாரிணி சாத்வீ ப்ரக்யா சிங் தாகூரோடு முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டனர். http://www.satyamargam.com/1078

இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை! காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை.

சென்னையில் தங்கியிருந்து கொண்டு 2008 மே மாத இறுதியில் குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பேட்டி கொடுத்த தவ்ஃபீக், ஜெய்ப்பூருக்குப் போய் குண்டு வைத்ததாகத் தமிழகக் காவல்துறை கதை புனைந்தது. பின்னர், அவரைத் தங்களுக்கு உளவு சொல்பவராக மாற்ற முயற்சி செய்தது. அவர் மறுக்கவே, என்கவுண்டரில் போட்டுத் தள்ள அப்போதைய காவல்துறை முயன்றது. இதை தவ்ஃபீக் கூறுகிறார்:

எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர். http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html / http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php

"எங்களுக்கு உளவு சொல்; இல்லையென்றால் நீ காலி" என மிரட்டிய காவல்துறையிடமிருந்து தப்பி, கடந்த மூன்றாண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தவ்ஃபீக் பட்ட துன்பங்கள் போதும்.

தவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முறையான நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். அதுவும் விரைந்து நடைபெறவேண்டும். அப்போது நீதி நிலைபெறும். அதுவரை, "8 ஆண்டுகள் தேடப்பட்ட..." கதை சொல்லும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கட்டும்.

2003ஆம் ஆண்டு காட்கோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை 1999ஆம் ஆண்டு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

ஊடகங்களில் செயல்பாடுகளை அண்மையில்தான் பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கண்டித்திருந்தார். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பையே மதிக்காத ஊடகங்கள் வழக்கம் போலவே கட்ஜுவின் கண்டிப்பை பெரிதுபடுத்தவில்லை.

குடிமக்களே செய்தியாளர்களாக மாறியுள்ள சூழலில் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மக்களின் நம்பிக்கையை இவை இழக்க நேரிடும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.


முன்பு தௌபீக் மீது புனையப்பட்ட பல கேஸ்களில் மும்பை காட்கோபர்-ல் பஸ்ஸில் குண்டு வைத்ததாக புனையப்பட்ட கேசும் ஓன்று. அதில் முக்கிய சாட்சி அந்த பஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் குறுக்கு விசாரணை செய்த டிபென்ஸ் லாயர் திரு மஜீத் மேமன் : "நீங்கள் தௌபீக் -ஐ எங்கு கண்டீர்கள்?


கண்டக்டர் : "ஒரு பையை வைத்துவிட்டு அவசரமாக வெளியே இறங்கினார்"


திரு மஜீத் மேமன் "எப்பொழுது வெடித்தது"


கண்டக்டர் : "ஒரு சில நொடிகளில்"


இப்பொழுது ஜட்ஜின் பக்கம் திரும்பிய திரு மஜீத் மேமன் : "யூஆர் ஆனர், இங்கு கண்டக்டர் குறிப்பிட்ட நாள், நேரம் மாதத்திற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே வேறொரு கேசில் குற்றம் சாட்டப்பட்ட தௌபீக் சென்னை ஜுடிசியல் கஸ்டடி-ல் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளே இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு சான்றுக்கான டாகுமென்ட்களையும் ஜட்ஜின் பார்வைக்கு சமர்பித்தார்.

அதை நன்றாக பார்த்து பரிசீலனை செய்தபின் அதை ஆமோதித்து தலை அசைத்து திரு மஜீத் மேமனைப்பார்த்தார்.


இப்பொழுது மஜீத் மேமன் சொன்னது ஒட்டு மொத்த கோர்ட் வளாகத்தையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.


"யு ஆர் ஆனர், இப்படி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த என் கட்சிக்காரர் பலமான கம்பிகளை வளைத்து பல நூறு கிலோ மீட்டர் பறந்து வந்து இந்த வெடிப்பை ஏற்படுத்திவிட்டு மீண்டும் பறந்து சென்று சிறைக்கம்பிகளுக்குள் புகுந்து கொண்டார் என்று என் கட்சிக்காரரை சூப்பர் மேன் அளவுக்கு உயர்த்துவதை என்னால் நம்பமுடியவில்லை" என்று சொன்னதை ஜட்ஜ் உள்வாங்கிக் கொண்டு இலேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டார். அதே நேரம் கண்டக்டர் பம்பாய் போலீஸ் அதிகாரிகளை பார்த்தவிதம் "உங்களை எல்லாம் ............ டா" என்பதுபோல் இருந்தது.

கூடுதல் தகவல்களுக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம்

தவ்ஃபீக்கின் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி:

http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html

Thanks to: adiraixpress.blogspot.com & Brother Jamil M. Salih

Saturday, November 26, 2011

இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் மறுமை நாளில்...‏

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
 
நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)
 
தலைகீழாக நடந்து வருவர்
 
நம்பிக்கை கொள்ளாத மக்கள் எழுப்பப்பட்டதும் கால்களால் நடக்காமல் தலையால் நடந்து வருவார்கள். அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை முன் கூட்டியே இது அறிவிப்புக் கொடுக்கும் வகையில் அமையும்.
 
‘அவர்களைக் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும் முகம் குப்புற (நடப்பவர்களாக) எழுப்புவோம்’. (அல்குர்ஆன் 17:97)
 
‘அல்லாஹ்வின் தூதரே! கியாமத் நாளில் எவ்வாறு முகம் குப்புற எழுப்பப்படுவான்’ என்று ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் அவனை இருகால்களால் நடக்க வைத்தவன் கியாமத் நாளில் அவனை முகம் குப்புற நடக்கச் செய்ய சக்தி உள்ளவன் இல்லையா? என்று கேட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
 
சிலர் நடந்தவர்களாகவும், சிலர் வாகனத்தில் ஏறியவர்களாகவும், சிலர் முகம் குப்புறவும் மறுமை நாளில் மக்கள் எழுப்பப்படுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி)
 
வாகனத்தில் வருவோர் பலவாறாக வருவார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
‘ஒரு ஒட்டகத்தில் இருவர், ஒரு ஒட்டகத்தில் மூவர், ஒரு ஒட்டகத்தில் நால்வர், ஒரு ஒட்டகத்தில் பதின்மர் என்று (பலவாறாக) வருவார்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)
 

Thursday, November 24, 2011

மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இன்ஷா அல்லாஹ்  தவ்ஹீத் இல்லத்தில்
மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

நாள்: 25-11-2011 வெள்ளி இரவு 9:00PM
சகோ. B. ஜமாலுத்தீன் அவர்கள்
'அருள்மறையின் அற்புதங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்கள்.
அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்
,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,

டெய்ரா, துபை

Tel: 00971 4 2981931

 

இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்! முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!
சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்து விட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக் கொள்வார்கள்;. மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றியும், சோம்பேறிகளைப் பற்றியும் இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையின் பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் 'நயவஞ்சகர்கள்' என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.
வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
'நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்;. ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்;. தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள். மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்.) இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை' (அல்குர்ஆன் 4:142)
எனவே, சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும். இந்தச் சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

Tuesday, November 22, 2011

அதிரை சகோதரன் உ.பி.யில் கைது

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அதிரையை சேர்ந்த அப்துல்லா தவ்பீக் என்ற சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக சன் நியூஸ் இன்று பரபரத்துக் கொண்டுள்ளது.

வழமைபோல் லஸ்கர் தீவிரவாதி என பாட்டுப்பாட தவறவில்லை காவித்துறை. உண்மைகள் வெளிச்சத்திற்கு வராமல் போய் விடுமா என்ன? இஷ்ரத் ஜஹான் படுகொலையில் நடந்தது போல்.

Monday, November 21, 2011

போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் இஷ்ரத் ஜஹான்- எஸ்ஐடி அதிரடி அறிக்கை

Ishrat Jahan fake encounter
அகமதாபாத்: அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டனர் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கை பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்துக் கூறிய குஜராத் காவல்துறை, இந்த நால்வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்த படையினர் என்றும் தெரிவித்தது.

ஆனால் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என்றும், இவர்களை போலி என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர் என்றும் கூறி இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர், பிரனீஷின் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையையும் அது நேரடியாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் கொல்லப்பட்டது நிஜமான என்கவுண்டரிலா அல்லது போலியான சம்பவமா என்பது குறித்து தனது இறுதி அறிக்கையை சமர்பபிக்குமாறு எஸ்ஐடிக்கு நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷா குமாரி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்

அதில் இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று மரணமடையவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார். இது என்கவுண்டர் மரணம் அல்ல, மாறாக கொலையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

புது வழக்கு தொடர உத்தரவு

இதையடுத்து என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்பு கொண்ட அத்தனை போலீஸார் மீதும் 302வது செக்ஷன்படி புதிதாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை யார் பதிவு செய்வது, யார் இந்த வழக்கை புலனாய்வு செய்வது என்பது குறித்து உயர்நீதிமன்றம் விவாதித்து முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மத்திய விசாரணை அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்குமாறும் குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு சிபிஐ வசம் செல்லும் என்று தெரிகிறது.

எஸ்ஐடியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விவரங்களை உயர்நீதிமன்றம் வெளியிடவில்லை. அவை வெளியிடப்பட்டால் வழக்கு விசாரணையை அது பாதித்து விடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் அரசு மீது முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கடும் குற்றச்சாட்டு:

இந் நிலையில் முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் கூறுகையில், இஷ்ரத் ஜஹான் என்கவுண்டரில் மரணமடையவில்லை. அவர் முன்பே கொல்லப்பட்டு விட்டார். என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருந்தது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

2002ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது, குஜராத் உளவுப் பிரிவின் தலைவராக இருந்தவர் ஸ்ரீகுமார். பின்னர் அவர் டிஜிபியானார்.

அவர் கூறுகையில், குஜராத் அரசின் போக்கு தற்போது அம்பலமாகியுள்ளது. இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று கொல்லப்படவில்லை என்ற வாதம் உண்மையாகியுள்ளது. 2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.

முன்பு ஒருமுறை அகமதாபாத்தில் ஸ்ரீகுமார் அளித்த பேட்டியின்போது, குஜராத் அரசு என்கவுண்டர் மூலம் கொலைகள் செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தது.

2002ம் ஆண்டு கலவரத்தின்போது நான் அப்போதைய தலைமைச் செயலாளர் சுப்பா ராவிடம் பேசியபோது, என்னிடம் அவர் கூறுகையில், நாம் சிலரையாவது கொலை செய்தால்தான், குஜராத் அரசின்கொள்கை என்ன என்பது அனைவருக்கும் வலிமையாக புரியும் என்றார். அதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன். அப்படிச் செய்தால், அது இந்திய அரசியல் சட்டம், 120 பி பிரிவின்படி அது சதிச் செயல் என்று அவருக்குச் சுட்டிக் காட்டினேன். ஆனால் குஜராத் அரசு என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை கொள்கையாகவை கடைப்பிடித்து வந்தது என்றார் அவர்.
Thanks to: thatstamil

21/11/2011

Ishrat Jahan 'encounter' fake: SIT report

Ahmedabad: The Special Investigation Team (SIT) probing the 2004 Ishrat Jahan encounter case has come to the conclusion that the Ahmedabad girl and three others were killed in a fake encounter.
Ishrat Jahan 'encounter' fake: SIT report
The SIT placed its findings in a report before the Gujarat High Court today.
Following the report, the high court ordered a fresh FIR against the police officers concerned.
The SIT also said the four were killed prior to the date of the encounter on June 15, 2004.
19-year-old Ishrat, Javed Sheikh alias Pranesh Pillai, Amjad Ali Rana and Zeeshan Johar were allegedly killed in a police encounter in Ahmedabad on June 15, 2004. The Gujarat police had claimed that Ishrat was a Lashkar-e-Taiba operative.
The police had justified the encounter by saying the four were on a mission to kill Chief Minister Narendra Modi.
Source: PTI

Saturday, November 19, 2011

புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நிலையான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்களுடன் எவ்விதத்தில் போர் புரிகிறார்களோ, அவ்விதத்தில் நீங்களும் அவர்களுடன் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(9:36)
………….இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே திருப்திப்பட்டேன்………..(5:3)
இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், மற்றும் ரஜப் மாதங்களாகும். அந்நான்கு மாதங்களில் ஒன்றான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்து விட்டோம். ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. எனவே நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாளிலும், பத்தாம் நாளிலும் நோன்பு நோற்க நம்மை வலியுறுத்தினார்கள்.

ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததோடு, அதை வைக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளில் நோன்பு வைப்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

எகிப்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்து நானே மிகப்பெரிய கடவுள் என்று கூறி பல அக்கிரமங்களை புரிந்த ஒரு கொடுங்கோல் அரசனான பிர்அவ்னைக் தண்ணீரில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றிய நாள் தான் ஆஷரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.

பிர்அவ்னின் கொடூர ஆட்சியில் பாதிக்கப்பட்ட நேரத்தில், மூஸா (அலை) என்ற இறைத்தூதரின் தலைமையில், எகிப்தை விட்டு வெளியேறுவதற்காக புறப்பட்டு வந்த இஸ்ரவேல் மக்களை, அல்லாஹ் தன் வல்லமையால் மிக அற்புதமாக தண்ணீரை பிளந்து காப்பாற்றிய ஒரு முக்கியமான சரித்திர நிகழ்வு முஹர்ரம் மாதத்தில் நடந்ததை நாம் யாரும் மறக்க முடியாது.

ஒரு முஸ்லீம் என்றுமே மறக்க கூடாத அந்த அற்புத நிகழ்வை, மறைப்பதற்காக யூதர்களின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டது தான், தற்போது கர்பலாவின் பெயரால் படுகளம் என்ற பெயரில் நடைபெற்றுவரும் படு கேவலமான இந்த முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்
கர்பலா என்ற போரில் நடந்த துயரச்சம்பவங்களை கூறி தற்போது புனிதமான முஹர்ரம் மாதத்தை கேவலப்படுத்தும் விதமாக நமதூர் ஏர்வாடியிலும் ஒவ்வொரு வருட முஹர்ரம் மாதத்திலும் இஸ்லாத்திற்கு கடுகளவும் சம்மந்தமில்லாத ஏராளமான அனாச்சாரங்கள் முஸ்லீம் பெயர் தாங்கிகளால் அரங்கேற்றப்படுகிறது.

சூரியனை மறைக்கும் பூரண கிரகணத்தைப் போல ஆஷுரா தினத்தில் நடைபெற்ற அல்லாஹ்வின் வல்லமை செயலை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷுரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் மூடத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும் இப்போது பார்ப்போம்.

Thursday, November 17, 2011

AIM வலைத்தளத்திலும் தினமும் மார்க்க சொற்பொழிவு - பதிவலை காணொளி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பான வாசக நேசங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரைநிருபர் வலைத்தளம் மற்றும் அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) வலைத்தளத்திலும் தினமும் இந்திய நேரம் இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை மார்க்க சொற்பொழிவு பதிவலை காணொளி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கன்னி முயற்சிதான், இதனை முதல் சோதனை ஓட்டமாக செய்கிறோம். அல்லாஹ் நாடினால் இந்த சிறிய முயற்சி நாளடைவில் வளர்ந்திடவும் அதன் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி செய்திட முயற்சி செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் !.
முதல் முயற்சியாக இன்று (17.11.2011) இந்திய நேரம் இரவு 10:30 – 11:30 வரை, ஐக்கிய அரபு அமீரக நேரம் இரவு 09:00 – 10:00 வரை, சவுதி நேரம் 08:00 – 09:00 வரை நேரலை செய்யப்படும்.
இதில் தமிழகம், இலங்கை மற்றும் உலகில் தமிழ் பேசும் நாடுகளிலிருந்து தலைச்சிறந்த மார்க்க சொற்பொழிவாளர்களின் காணொளிகள் தொடர்ந்து ஒரு மணி நேர பதிவலையாக உங்களின் பார்வைக்கும் செவிக்கும் விருந்தாக்க உள்ளோம்.

பதிவலை காணொளியில் இடம் பெரும் சொற்பொழிவுகள் அனைத்தும்  குர்ஆன், ஹதீஸ் தொடர்பானவைகளாக மட்டுமே இருக்கும். எந்த ஒரு இயக்கத்தையோ அல்லது எந்த ஒரு தனி நபர்களையோ முன்னிருத்தியோ / சார்ந்ததாகவோ / எதிராகவோ இருக்காது என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். நம் சமுதாய மக்களுக்கு மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நன்நோக்கில் கையாளப்படும் இந்த சிறு முயற்சிக்கு அழைப்பு பணியில் அதிகமதிகம் ஈடுபடுத்தி வரும் நம் சகோதரர்கள் சிலர் மார்க்க சொற்பொழிவு குறுந்தகடுகளை  வழங்கிட முன்வந்துள்ளார்கள்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் நுனுக்கங்களை கையாண்டு அதன் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும தங்களை ஈடுபடுத்திக்கொள்ள இருக்கும் இத்தருணத்தில் உங்கள் அனைவரின் மேலான கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து, எங்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி ஒத்துழைப்பையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தினமும் ஒரு மார்க்க சொற்பொழிவு நிகழ்சியினை இலவச வலைக் காட்சியில் பதிவலை காணொளியாக இந்திய நேரம் இரவு 10:30மணி முதல் 11:30மணி வரை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறோம்.
இன்று

இலங்கையச் சேர்ந்த முபாரக் மஸ்வுத் மதனி அவர்கள் " நபிகளாரை அழவைத்த குர்ஆன் வசனங்கள்" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையினை நேரலையாக காணலாம் இன்ஷா அல்லாஹ்..

ஏற்கனவே அறிவித்திருந்தபடி இந்த நேரலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஓர் முன்னோட்டமே இதன் தொடர் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பின்னுட்டங்களாகவும் தனி மின்னஞ்சல் வழியாகவும் கருத்துக்களை வழங்கிய சகோதரர்களின் மேலான கருத்துக்களையும் கவணத்தில் கொண்டு அதற்கான நேரங்கள் வகுக்கப்பட்டு முறையாக மேலும் நல்ல முறையில் செய்திட முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
தொடர்ந்து இணைந்திருங்கள்...
நன்றி
- அதிரைநிருபர் குழு

உழைத்து வாழ்வோம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உலகமாந்தர்களில் உழைக்கும் வர்க்கம் ஒன்றுதான். ஆனால் உழைக்காமல் வாழும் வர்க்கம் பலஉண்டு. அடுத்தவர் உழைக்க அதில் வாழுபவர்கள் ஒரு ரகம். உழைக்க தெம்பிருந்தும் 'வெட்கத்தைவிட்டு' பிச்சை எடுத்து வாழுபவர்கள் ஒரு ரகம். படித்து பதவியில் இருப்பவர்களில் சிலர், லஞ்சம் என்ற பெயரில் கவுரவபிச்சை எடுப்பவர்கள் ஒரு ரகம். உழைக்காமல் 'திருடி' வாழுபவர்கள் ஒரு ரகம். இப்படியான மக்கள் வாழும் நிலையில் இஸ்லாம் உழைப்பிற்கு உன்னதமான இடத்தைதந்து, அடுத்தவர் உழைப்பில் வாழாமல், அடுத்தவரை ஏய்க்காமல் உழைத்து வாழ்ந்தால் அதற்கும் நன்மையுண்டு என்று சொல்லிக்காட்டுகிறது.
உழைப்பின் முக்கியத்துவம்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
'ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்'    நூல்;: புகாரி 1471
பிச்சை எடுப்பதை காட்டிலும் உழைப்பு சிறந்தது

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்... '(கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ, அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்' நூல்;: புகாரி 1427

மேற்கண்ட இரு செய்திகளும் அடுத்தவர் உழைப்பில் வாழநினைப்பவர்களுக்கும், சுயமரியாதையை இழந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்த நினைப்பவர்-களுக்கும் சாட்டையடியாக இருப்பதை காணலாம்.
லஞ்சம் ஒரு வஞ்சகச்செயல்;
லஞ்சம் பற்றி வல்ல அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கையை பாருங்கள்.

Tuesday, November 15, 2011

மனைவியின் மகிமையை அறிந்தால் இம்மையில் சுகம் மறுமையில் சுவனம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن

‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).

திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான். உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .


அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும், சுகத்தையும், துக்கத்தையும், கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.


உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.


உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.


சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.


ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன.


Monday, November 14, 2011

பக்க வாதம்

Stroke - Food Habits and Nutrition Guide in Tamil நமது உடலமைப்பு பல ஆரோக்கியமான விஷயங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. நமது அன்றாட வாழ்க்கையில் வேலைப்பளு அதிகமான காரணத்தினால் நாம், நமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குக்கூட கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலேயே நாம் பல நோய்களுக்கு ஆளாக நேர்கிறது. இவற்றில் பக்கவாதம் என்னும் நோயைப் பற்றிப் பார்ப்போம்.
பக்கவாதம்:

மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு "ஐசெமிக் ஸ்ட்ரோக்" (Ischemic stroke) என்று பெயர்.

மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு "ஹெமராஜிக் ஸ்ட்ரோக்" என்று பெயர்.

Thursday, November 10, 2011

திரு பிச்சை அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!

அதிராம்பட்டினம் பேரூராட்சியின் துணைத் தலைவர் திரு பிச்சை அவர்களுக்கு
ஒரு திறந்த மடல்!

நமதூர் பேரூராட்சியின் உறுப்பினர் மற்றும் தலைவர்கள் தேர்தல்கள் பல இழுபறிகளுக்கும் போட்டிகளுக்கும் இடையில் அண்மையில் நடந்து முடிந்து, மக்களின் தீர்ப்பாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கியுள்ளீர்கள்.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சித் தலைவர் முஸ்லிமாக இருந்தால், துணைத் தலைவர் முஸ்லிமல்லாதவராக இருக்கவேண்டும் என்பது, மத நல்லிணக்கத்தை விரும்பும் பொதுமக்களின் பொதுவான கருத்தாகும்.
நான் பொருளாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டுவரும் சம்சுல் இஸ்லாம் சங்கமும் இதனைத்தான் விரும்புகின்றது என்பதற்கு, எங்களின் பல அமர்வுகளின்போது சங்கத் தலைவரிடமிருந்து பரிந்துரையாக வெளிப்பட்ட கருத்தும் இதுவே.  நாங்கள் இதே கருத்தில் இருப்பதால்தான் உங்களைத் தெரிவு செய்வதில் ஒத்துழைப்பளித்தோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கலாம்.
நமதூரின் வலைத்தளங்களுள் ஒன்றான அதிரை பிபிசி உங்கள் தேர்வைத் தொடர்ந்து இவ்வாறு மகிழ்ச்சியுடன் குரிப்பிட்டிருந்த்தது:  "நம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் மத நல்லிணக்கம் வென்றுவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சங்கத்தை எதிர்த்தவர்கள் தோற்க்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இது சங்கங்களுக்கு கிடைத்த வெற்றி… "
துணைத் தலைவராகிய நீங்கள் தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் ஆளும் கட்சியையும் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.  ஆனால், ஊர் நலம் என்று வரும்போது, இருவரும் இணைந்து செயல்படுவதே அறிவுடைமையாகும்.  அதை விடுத்து, ‘விட்டேனா பார்! எனும் போட்டி மனப்பான்மையைக் கையில் எடுத்துக்கொண்டு அதிரை வலைத்தளங்களுக்குப் பேட்டியளிப்பதும் பேசுவதும் நமதூரின் பாரம்பரியமான ஒற்றுமைக்குக் குந்தகம் விளைப்பதாகும் என்பதை நீங்கள் நான் கூறித் தெரிய வேண்டியதில்லை.
மக்கள் அளித்த தீர்ப்பைத் தாங்க முடியாமல், வெற்றி பெற்றவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு உங்கள் கட்சியில் தஞ்சம் புகுந்துகொண்ட சிலர் உங்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகின்றார்களோ என்ற ஐயமும் எமக்கு ஏற்படுகின்றது.  எது எப்படி இருந்தாலும், நமதூரின் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்தத் திறந்த மடலின் நோக்கம்.
பேரூராட்சித் தலைவர் தமிழகத்தின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால், துணைத்தலைவர் ஆளும் கட்சிக்காரராக இருப்பது, உள்ளூர்த் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அரசின் ஒத்துழைப்பைப் பெற உதவியாக இருக்கும் என்ற நற்சிந்தனையாலும், பொதுநல நோக்காலும்தான் உங்களைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க நடுநிலையாளர்கள் பாடுபட்டனர் என்பதை மறந்துவிடாதீர்கள்!  பேரூராட்சித் தலைவருடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நீங்கள், ‘வைத்தேன், எடுத்தேன்’ என்று பேட்டிகளும் விமரிசனங்களும் கொடுப்பது அறிவுடைமையாகாது.
பொறுப்புகளும் பதவிகளும் வரலாம், போகலாம்.  ஆனால், மனிதம் பேணப்பட வேண்டும்.  மத நல்லிணக்கம் நிலவ வேண்டும்.  அதிராம்பட்டினம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்பதே எமது விருப்பம்.
அதற்கு வல்ல இறைவன் துணை நிர்ப்பானாக!    
By
Adirai Ahmed