உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, July 16, 2015

புதிய இடத்தில் பெருநாள் திடல் தொழுகை - அதிரை ஈத் கமிட்டி அறிவிப்பு


அன்பார்ந்த அதிரைவாழ் முஸ்லீம்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வழமையாக பெருநாள் திடல் தொழுகைகள் மேலத்தெரு சானாவயல் பகுதியில் நடைபெற்று வந்தது இனி இன்ஷா அல்லாஹ் வரும் ஈதுல் ஃபித்ரு முதல் புதிய திடலில் நடைபெறும் என அதிரை ஈத் கமிட்டியினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் வரும் பெருநாள் தினத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கீழத்தெரு பகுதியில், காட்டுப்பள்ளி தர்காவுக்கு இடதுபுறம் அமைந்துள்ள மைதானத்தில் தொழுகை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: 
பெருநாள் தினத்தன்று ஈத் தொழுகை நேரத்தில் மழை பெய்தால் ALM பள்ளிக்கூட வளாகத்தில் தொழுகை நடைபெறும்.

இவண்
ஈத் கமிட்டி - அதிரை

புதர் மண்டியுள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மிகத்துரித வேகத்தில் நடைபெற்று வருவதை காட்டும் படங்கள் கீழே...
தகவல்
அதிரை அமீன்

Wednesday, July 1, 2015

அதிரையில் தொடர் தொந்தரவு தரும் தமிழ்நாடு புடவைகள் சமாத்!!!

பெண்களின் புடவைக்குள் ஒழிந்து கொண்டு போக்கு காட்டுவதில் வல்லவர்களான நவீன முஃதஸ்ஸிலாக்கள் என முஸ்லீம்களாலும், இல்லையில்லை நாங்கள் அதற்கும் மேலே என வஹியை மறுத்து தங்களை தாங்களே காஃபீர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் தனி மனித வழிபாட்டு கும்பல் ஒன்று அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதிரையில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நடைபெற்று வரும் புனிதமிகு ரமலான் மாத மார்க்க விளக்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியினை தடுத்திட உள்ளூர் காவல்துறை, உளவுத்துறை என மாவட்ட தாயி என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் அதிரையை சேர்ந்த ஒருவர் மூலம் புகார் செய்தும் சட்டப்படி ஒன்றும் செய்ய இயலாத காரணத்தால் தங்களின் தலைவன் வழி குலத்தொழிலான,

மஹரமில்லாத பெண்களை ஊருக்கு ஊர் அழைத்துச் சென்று ஆட்டம் பாட்டம் (ஆர்ப்பாட்டம்) காட்டுதல்,

பெண்களை வலிய 'பழக' வைத்து இஸ்லாமிய அழைப்பாளர்களின் மானத்தோடு விளையாடுதல்,

பெண்களை பொய் சாட்சிகளாய் தயார் செய்து உடனிருந்த சகோதரர்களின் மானத்தோடு விளையாடுதல் 

என்ற வரிசையில் இப்போது,

தினமும் பெண்களை ஏவி மேல்மட்ட காவல்துறையிடம் போன் மூலம் புகார் தெரிவித்து மார்க்க விளக்க நிகழ்ச்சிகளை நிறுத்த தொடர் தொந்தரவு தந்து வருகின்றனர் ஆனால் காவல்துறை நேருக்குநேர் பேச அழைக்கும் போது (நேற்று 30.06.2015 மாலை தஞ்சை எஸ்பியின் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு கூட காவல்துறையினர் அழைத்தும் வராமல்) ஒடி ஒழிகின்றனர்.

அதேவேளை உண்மையில் பெண்கள்  தொடர்புடைய பலரை தங்களுடனேயே வைத்துக் கொண்டும் அவ்வப்போது அதிசய பாவமன்னிப்பு வழங்கிக் கொண்டும், 'தனக்கு தானே காஃபிர்' பட்டம் வழங்கிக் கொண்ட, ஸஹீஹான ஹதீஸ்கள் எனும் வஹியை மறுக்கும் ஒரு ஜென்மத்தை பின்பற்றக்கூடிய கும்பல், ஏற்கனவே விவாதத்தில் சூடுபட்டதால் நேரில் அதிரை தாருத் தவ்ஹீதை எதிர்த்து நிற்க தைரியமின்றியும்,
 
இவர்களை பற்றி நன்கு அறிந்த உள்ளூர் காவல்துறையிடம் வேலைக்கு ஆகாது என்பதால் தங்களின் தலைவன் வழி குலத்தொழிலான பெண்களை பயன்படுத்தி புனிதமிகு ரமலான் நிகழ்ச்சிகளுக்கு தடையேற்படுத்த தினமும் காவல்துறையின் உயர்மட்டம் வரை புகார் அளித்து கேவலத்தை விலைக்கு வாங்கி வருகின்றனர்.

வெற்று கோஷம் மட்டுமே போடத்தெரிந்த குஞ்சுகளே! உங்கள் தலைவனிடம், உண்மையான தவ்ஹீத் நெறி தடுக்கத் தடுக்க தான் வளரும் என்ற வரலாற்றை கேட்டு தெரிந்து கொள்.

புனிதமிகு ரமலான் என்பதால் மிகவும் பொறுமையுடன் நடந்து கொள்ளும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் தகுந்த பதிலடியை ரமலானுக்குப் பின் வழங்குகிறார்களோ இல்லையோ நிச்சயம் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட ஒவ்வொரு ஊரிலும் ஒரு 'மாதவன் நாயரை' உருவாக்கி உங்களை கேவலப்படுத்தலாம். 

மார்க்கத்தை அதன் தூய வடிவில் எதையும் மறைக்காமல் மறுக்காமல் எடுத்துச் சொல்ல, இப்புனிதமிகு மாதத்தில் நன்மைகளை கொள்ளையடிக்க உங்களுக்கு துப்பில்லாவிட்டாலும் இறை தண்டனைகளிலிருந்து தப்பிக் கொள்ள சில்லரைத்தனங்களை கைவிட்டு விட்டு புனிதமிகு ரமலானில் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடி மீண்டும் இஸ்லாத்திற்குள் இணைந்து வெற்றியடைய முயற்சியுங்கள். ஏனெனில் மறுமையில் உங்களால் ஆர்ப்பாட்டம் செய்தெல்லாம் தப்ப முடியாது என எச்சரிக்கின்றோம். 

"ஆர்ப்பாட்டம் இங்கேயும் உங்களுக்கு பலனளிக்கவில்லை என்பது வேறு கதை"

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் புனிதமிகு ரமலான் தொடர் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி சூழ்ச்சிகளை தாண்டி சிறப்புடன் நடந்து வருகிறது. ஒருவேளை நிகழ்ச்சி தடைபட்டால் கூட எண்ணத்திறகேற்ற கூலியை வழங்க அல்லாஹ் போதுமானவன்.