உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 30, 2014

இலங்கையில் 11.10.2014 அன்று “தோழியர்” நூல் அறிமுக விழா

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு அக்குறனை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழகச் சகோதரர் நூருத்தீன் அவர்கள் எழுதிய “தோழியர்” நூல் அறிமுகவிழா இடம்பெறவுள்ளது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். 

 
விழாத் தலைமை: 
பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், மெய்யியல்/உளவியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். 
  • பிரதம அதிதி உரை: அஷ்ஷெய்க் உஸ்தாத் மன்சூர் நளீமி

  • சிறப்புரை: எழுத்தாளர்/ஊடகவியலாளர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்

  • ஏற்புரை: சத்தியமார்க்கம்.காம் நிர்வாகி சகோதரர் அதிரை ஜமீல்

Thanks to News Source:  http://puttalamonline.com/2014-09-09/puttalam-puttalam-news/66612/

Sunday, September 28, 2014

அதிரை ததஜ கிளையை பரிதவிக்கவிட்ட தலைமை ததஜ, ததஜ பாஷையிலேயே இன்னொரு கடிதம் கொடுக்கப்பட்டது

சில நாட்களுக்கு முன் அதிரையில் ததஜ கிளையினர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, அதிரை ததஜ கிளையினரின் சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்ட 'அதிசய விவாத ஒப்பந்தம்' நடைபெற்றதை அறிவீர்கள்.

இந்த ஒப்பந்த நிகழ்வில், 2 வழக்குகளை சந்தித்த, ஒரு பெண்ணால் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்ற, ததஜ தலைமையின் ஒழுங்கு நடவடிக்கையால் 3 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டு 'செல்வ சீமான்' 'அள்ள அள்ள வற்றாத ஜீவநதி' என்கிற உயர்தர கொள்கைகளுக்காக ஒழுங்கு நடவடிக்கை காலம் முடியுமுன்பே மீண்டும் ஞானஸ்னானம் செய்யப்பட்டவரும்,

ரியாத்தில் வைத்து கட்டம்கட்டி நீக்கப்பட்டு வழமைபோல் ஒழுங்கு நடவடிக்கை காலம் முடியுமுன்பே பாவமன்னிப்பு வழங்கப்பட்டு மாவட்ட தாயி அந்தஸ்துடன் தற்போது வலம் வருபவரும்,

ஒரு அழகிய பெயரை கேட்டாலே முகம் சுளிக்கும் நிலைக்கு 'அந்த பெயரை' ஆளாக்கியவரும்,

எதிர்காலத்தில் அவர்களால் கழுவிக்குடிக்கப்படவுள்ள மாவட்ட நிர்வாகியும் கலந்து கொண்டனர் ஆனால் ஒப்பந்தத்தில் பேசப்பட்ட விஷயங்களை கூட ததஜ கிளைக்கு தெரிவிக்கவில்லையாமே என்ற சந்தேகத்தை முன்பே எழுப்பி இருந்தோம் என்பதை உண்மை தான் என நிரூபித்துள்ளனர் அதிரை ததஜ கிளையினர்.

சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களுக்கும் அதிரை ததஜ கிளையினருக்கும் அவர்களுக்கிடையே விவாதம் குறித்து கடிதப் போக்குவரத்து நடைபெற்று வருவதையும், இருதரப்பு கடிதங்களையுமே பொதுமக்களின் புரிந்துணர்வுக்காக நாம் வெளியிட்டு வருவதையும் அறிவீர்கள்.

அடுத்தவர்களின் கோமணத்தை அவிழ்த்து பார்த்து ஆண்மையை சோதிக்க விரும்பும் அதிரை ததஜ கிளையினர் அவர்களின் சொல்லில் உண்மையாளார்களாக இருந்தால் அவர்கள் அடிக்கடி குறிப்பிடும் ஆண்மையை தங்களின் தலைமையிடத்தில் காட்டி அதிரையில் நடைபெற்ற விவாத ஒப்பந்த சீடியை கேட்டு வாங்கி பார்த்து விட்டு 'குற்றச்சாட்டுகள் குறித்த தலைமையின் கொள்கையை' தெரிந்து கொண்டு விட்டு 26.09.2014 தேதியிட்ட கடிதம் போன்று எழுத முன்வர வேண்டும். (முழு சீடியை வெளியிட்டால் ததஜ கிளைகள் அனைத்திற்கும் பிரயோஜனமாக இருக்கும் ஆனால் சிந்திக்கவே சுதந்திரமில்லாத நீங்களா தலைமையிடத்தில் பேசப்போகிறீர்கள்?)

நீட்டிய தாள்களிலெல்லாம் என்னவென்றே தெரியாமல் கையெழுத்து போடும் அதிரை ததஜ கிளை தலைவர் சகோதரர் பீர் முகமது போன்ற அப்பாவிகள் விழித்துக் கொள்ளும் வரை தான் அதிரை ததஜ கிளையை வைத்து 'வயிறு வளர்ப்பவர்கள்' நீடிக்க முடியும்.

ததஜ தலைமையின் விவாத கொள்கையை (மார்க்கமே பகுத்தறிவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட பிறகு கொள்கையாவது புடலங்காயாவது) அறிந்து கொள்ளுமுன்பே சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் தான் என்ன குற்றம் சுமத்தப்போகிறேன், யார் யார் மீதெல்லாம் குற்றம் சுமத்தப்போகிறேன் என எழுதித்தந்த பிறகும் கூட 'இன்னொரு க்ளு' கொடுங்க என கேட்பது, மரித்தவர்கள் யா அல்லாஹ்! எனக்கு இன்னொரு வாய்ப்பு தா, போயிட்டு நல்லவனாக திரும்புகிறேன் என படைத்தவனிடம் கதறுவதை போல் இந்த ததஜ கிளையினர் படைப்பினத்திடமும் கெஞ்சி பார்க்கின்றனர்.

அதிரை ததஜ மற்றும் மீடியா மேஜிக் நிஜாமுதீன் இடையே நடைபெற்று வரும் விவாதம் தொடர்பான விபரங்களையும் இருதரப்பு கடிதங்களையும் வாசிக்க இந்த லிங்கை சொடுக்கவும்.நேற்றிரவு மீண்டும் அதிரை ததஜ மடத்திற்கு சென்று சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களுக்கு புரியும் பாஷையிலேயே வழங்கிய பதில் 


அதிரை ததஜ சார்பில் எழுதப்பட்டு சகோதரன் பீர் முகமது பலிகடா ஆக்கப்பட்டுள்ள மஞ்சள் கடிதம்

Saturday, September 27, 2014

துபையில் துவங்கியது GITEX SHOPPER எனும் மின் தொடர்பு சாதன சில்லறை வர்த்தக பொருட்காட்சி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பிரசித்தி பெற்ற, பிரம்மாண்ட IT & மின் தொடர்பு சாதனங்களின் சில்லறை வர்த்தக பொருட்காட்சியான GITEX SHOPPER இன்று காலை 11 மணியளவில் துபை வேல்டு டிரேட் சென்டரில் துவங்கியது. இந்த பொருட்காட்சி எதிர்வரும் 04.10.2014 (ஹஜ் பெருநாள் தினம்) வரை நடைபெறவுள்ளது.


இந்த பொருட்காட்சியில் அமீரகத்திலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் பிரபலமான பல்வேறு BRANDED வர்த்தக நிறுவனங்கள் தங்களது ஸ்டால்களை அமைத்துள்ளன. இவற்றில் கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், பிரிண்டர்கள், புரோஜக்டர், டேப்லெட்கள், டிவி மற்றும் மார்க்கெட்டுக்கு வந்துள்ள புதிய சாதனங்கள் என அனைத்துவகை எலக்ட்ரானிக் பொருட்களும் கிடைக்கும் அத்துடன் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு பரிசுகளாக தினமும் ஒரு கார், தினமும் 20 கேமராக்கள், 10 பேருக்கு கால்பந்து பார்ப்பதற்கு பார்சிலோனாவுக்கான டிரிப், 8 மாணவர்களுக்கு அமிட்டி யூனிவர்ஸிட்டி தரும் ஸ்காலர்ஷிப் என பல்வேறு பரிசுகள் காத்திருக்கின்றன. இவற்றுடன் ஏகப்பட்ட SURPRISE பரிசுகளுடன் திடீர் விலை குறைப்பு ஆஃபர்களும் அவ்வப்போது விற்பனையாளர்களால் அறிவிக்கப்படும்.

சுமார் 30,000 மேற்பட்ட பல்வேறு விதமான IT & ELECTRONIC பொருட்கள் காட்சிப்படுத்தபட உள்ள இந்த GITEX SHOPPER விழாவில் இந்த வருடம் iPHONE 6 மற்றும் iPHONE 6 PLUS ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Image Courtesy: Khaleej Times

டிக்கெட்டுகள் அரங்கிலும் EMARAT OUTLETகளில் கிடைக்கும். துபையை சார்ந்த SHARAF DG போன்ற வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளிலும் GITEX SHOPPER சலுகை விலையில் பொருட்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளன.

வருடாவருடம் துபை அரசின் அனுசரணையுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி தினமும் காலை 11 மணியளவில் துவங்கி இரவு 11 மணிவரை நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணம் 30 திர்ஹம். 5 வயது வரை குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 14 வயது வரை குழந்தைகள் பெற்றோர் / காப்பாளர் இன்றி தனியே வர அனுமதியில்லை. இந்நிகழ்ச்சிக்கு மிக எளிதாக வந்து செல்ல DUBAI WORLD TRADE CENTER STATIONக்கு மெட்ரோ சர்வீஸ் உள்ளது.

தொடர்ந்து எதிர்வரும் 12.10.2014 முதல்  16.10.2014 வரை நிறுவனங்கள் மற்றும் வாத்தகர்களுக்கென பிரத்தியோகமாக GITEX TECHNOLOGY WEEK எனும் பொருட்காட்சி நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை உலகின் பெரும் BRANDED நிறுவனங்கள் தங்களின் புதிய IT & ELECTRONIC தயாரிப்புகளை, கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்த பயன்படுத்திக் கொள்வர். இது நிறுவனங்களுக்கான பொருட்காட்சி என்பதால் கலந்து கொள்ள, பார்க்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

அதிரைஅமீன்

அலைபேசி அருமைகளும், அவலங்களும்

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது. 1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா .டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.
 
அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது. மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12 ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 
பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மொபைல் போனும் ஒன்று என்றே சொல்லலாம். இருப்பினும் இவ்வருட் கொடையைப் பயன்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் அது மிகப்பெரும் ஆபத்தாக மாறிவருகிறது. இஸ்லாத்தை தமது வாழ்க்கை திட்டமாக ஏற்று அதனடிப்படையில் வாழ விரும்பும் மக்களுக்கு மொபைல் போன் உபயோகத்தை எவ்வாறு இஸ்லாமிய முறையில் அமைத்துக் கொள்வது என்பதைத் தெளிவு படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
கீழே குறிப்பிடப்படுபவை மொபைல் போனைப் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
 
1. தொடர்பு கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்ளல்
 
பொதுவாக இஸ்லாம் பிறருக்கு தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இந்த வகையில் மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக்கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக்கூடிய நேரங்கள், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது மார்க்கம் அனுமதிக்காத விஷயமாகும்.
 
2. தொடர்பு கொள்பவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது.

தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று அவர்களை அழைத்த போது, யார்? என்று நபியவர்கள் வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் நான்என்று பதில் சொன்னார்கள். அப்போது வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள் அவர் (பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தாமல்) நான்என்று கூறியதை கண்டித்தார்கள். (புகாரீ, முஸ்லிம்)
 
எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் நீங்கள் யார்?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப்படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் ஆகும். மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!
 
3. கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அதிகமாக மொபைலை பயன்படுத்துவது.

கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்துபவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள் இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
4. பள்ளிவாசலினுள் நுழையும் போது மொபைல் போனை ஆஃப் செய்தல்

தொழுகையில் இறையச்சத்துடனும் உயிரோட்டத்துடனும் ஈடுவது மார்க்கம் வலியுறுத்தியுள்ள விஷயமாகும். எனவே இவ்வாறு பயபக்தியுடன் தொழுது கொண்டிருப்போரையும், அதை வைத்திருப்பவரையும் திசை திருப்பும் அம்சமாக மொபைல் மாறிவிடாமல் இருப்பதற்காக பள்ளிவாசலினுள் நுழையும் போதே அதை ஆஃப் செய்துவிட வேண்டும்.
 
5. ரிங் டோனாக இசைகளையும், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்களையும் பயன்படுத்துவது

எனது உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுபானம் மற்றும் இசைக்கருவிகளை ஹலாலாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) இசையும் இசைக்கருவிகளும் தடை செய்யப்பட்டவை என்பதில் நான்கு மத்ஹபுடைய இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலும் ஸவூதி அரேபியாவின் ஆய்வுக்குழுவும் இசை ஹராம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே நமது தேவைகளை பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல்களில் இவ்வாறான இசைகளை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.
 
ஒருவர் பயன்படுத்தும் ரிங்டோனை வைத்தே அவரது ஆளுமையை புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெரியவர்களும் சில வேளைகளில் மார்க்க ஈடுபாடு கொண்டோரும் இவ்வாறான இசைகளுக்கு அடிமைப்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

அவ்வாறே சிலர் அல்குர்ஆன் வசனங்கள், துஆக்கள் மற்றும் அதான் எனும் பாங்கு போன்றவற்றை ரிங் டோனாகப் பயன்படுத்துகின்றனர். இது பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களிடம் வினவப்பட்ட போது, இவற்றை ரிங்டோனாகப் பயன்படுத்துவது அவற்றை இழிவுபடுத்துவதாகவே அமையும் என்று பதிலளித்தார். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
 
6. வாகனத்தை ஓட்டும் போது மொபைலை உபயோகிப்பது.

வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக தி வாஷிங்டன் போஸ்ட்இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும், தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் இஸ்லாம் தடைசெய்திருக்கும் பாவங்களாகும். எனவே வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மார்க்க ரீதியில் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
7. எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) அனுப்பும் போது பேண வேண்டியவை

மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில் மார்க்கமும் ஒழுக்கமும் பேணப்படாமல் பயன்படுத்துவோர் நடந்து கொள்வது வேதனை தரும் அம்சமாகும். ஆபாசமான, விரசமான செய்திகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடிய செய்திகளை பரப்புவதும் இஸ்லாம் தடைசெய்துள்ள பாவங்களாகும்.

தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
 
ஈமான் கொண்டவர்கள் மத்தியில் ஆபாசம் பரவ வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு’ (24:19) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
 
எனவே எஸ்எம்எஸ் அனுப்பும் போது அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும். மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மறுமையில் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
 
8.மொபைல் போன்கள் மூலமாக முஸ்லிம்களின் குறைகளைத் தேடுவதும் பரப்புவதும் கூடாது

பொதுவாக மனிதர்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மானம் புனிதமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிமின் குறைகளைத் தேடுவதும் அவனை மானபங்கப்படுத்துவதும் மார்க்கத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

நாவினால் ஈமான் கொண்டு உள்ளத்தில் ஈமான் நுழையாமல் இருக்கும் மக்களே! முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள்! அவர்களை மானபங்கப்படுத்தாதீர்கள்! மேலும் அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள்! யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளைத் தேடுகிறாரோ அவரது குறைகளை அல்லாஹ் தேடுவான். மேலும் அவர்களின் உள் வீட்டில் வைத்தேனும் அவர்களை இழிவுபடுத்திவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது, அபூதாவூத், திர்மிதீ)
 
மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது. மேற்கூறப்பட்ட ஹதீஸில் வந்துள்ள வழிகாட்டல்கள் அனைத்தையும் மறந்து சிலர் செயல்படுவது வேதனை அளிக்கக் கூடியதாகும்.

மொபைல் போன்களில் உள்ள வீடியோ, போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும் இஸ்லாம் தடைசெய்துள்ள மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரி செய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.
 
9. பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு

பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை மார்க்கப்பற்றுடனும் ஒழுக்கத்துடனும் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால் அவர்கள் மறுமையில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள், உங்கள் பராமரிப்புப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஓர் ஆண் தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவன். அதுபற்றி அவன் விசாரிக்கப்படுவான்..என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)

மொபைல் போன் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.
 
10. மொபைல் போனால் வீண் விரயங்கள் தவிர்க்கப் படல் வேண்டும்.

உண்ணுங்கள் பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்என்றும் வீண் விரயம் செய்யாதீர் நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் தோழர்கள் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது. மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம், நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது, எனவே, வீண் விரயம் செய்வது மொபைல் விஷயத்திலும் ஹராம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆக, அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை இஸ்லாமிய வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.
- அஷ்ஷேக். முபாரக் மதனி
(நன்றி: சமுதாய ஒற்றுமை மாதஇதழ்)

-
உதவி செய்வது அனைத்தும் தர்மமாகும்.
__._,_.___

Posted by: Esa Mohiadeen (thro email)

Friday, September 26, 2014

அதிரை ததஜவினருக்கு இறுதி கெடு விதித்து மீண்டும் கடிதம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை ததஜவுக்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கும் இடையில் சமீபத்தில் விவாத ஒப்பந்தம் ஏற்பட்டதை அனைவரும் அறிவீர்கள் அதன் கதை தனி.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர்களின் தலைமையிடமும் அவரை பின்பற்றுவோரிடமும் ஏற்பட்ட பல்வேறு கொள்கை குழப்பங்கள் குறித்து கலந்துரையாடியோ அல்லது அவர்கள் விவாதத்தை திணித்தால் விவாதம் செய்தோ தெளிவு பெற்றிட வேண்டி பல்வேறு காலகட்டங்களில் சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களால் தனிப்பட்ட முறையில் விளக்கம் கோரும் கடிதங்கள் கொடுக்கப்பட்டும் அவை அனைத்தும் கற்பத்தில் மரித்த பிள்ளைகள் போல் அசைவற்று அவர்களின் வயிற்றிலேயே தங்கிவிட்டது.

இறுதியாக கடந்த ரமலானில் அவர்களின் வெப்சைட்டில் தேவையில்லாமல் தனிநபர் விமர்சனத்தில் இறங்கியவர்களுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து தங்கள் வயிற்றோடு தங்கிவிட்ட ஆபத்தை ஒரு பெரும் மறதிக்கு பின் உணர்ந்தவர்கள் சகோதரர் நிஜாம் அவர்கள் எழுப்பிய மார்க்க விஷயங்களை விட்டு விட்டு தனிநபர் ஒழுக்கங்கள் பற்றி விவாதத்திட கடிதம் தந்தனர், அந்த கடிதத்திற்கும் சகோதரர் நிஜாம் அவர்கள் பதிலை அவர்கள் விதித்த கெடுக்கு முன்பாக வழங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அதிர்ச்சியில் செலக்டிவ் அம்னீஷியா என்ற நோயால் தாக்கப்பட்டு சகோதரர் நிஜாம் வாரி வழங்கிய 30 நாட்களும் முடிந்து கூடுதலாக 4 நாட்களும் கழிந்த பிறகும் அசைவற்று இருந்ததால் நேற்றிரவு அவர்களின் மடத்திற்கே சென்று வரும் 05.10.2014க்குள் பதில் தர வேண்டும் என இறுதி கெடு வழங்கி ரமலானுக்கு பிந்தைய தனது மூன்றாவது கடிதத்தை கொடுத்தார்.

சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்கள் கடந்த ரமலானுக்கு பின் வழங்கிய கடிதங்களை வாசிக்க இந்த லிங்கிற்குள் சென்று பார்க்கவும்.
05.10.2014க்குள் பதில் தர கேட்டு இறுதி கெடு விதிக்கப்பட்டு நேற்றிரவு அவர்கள் பாணியிலேயே வழங்கப்பட்ட கடிதத்தை கீழே காணலாம்.
Thursday, September 25, 2014

பாலைவனச் சோலை 'அல் அய்ன்' சுற்றுலா - படங்களுடன் ஓர் பார்வை

சென்ற முறை கொர்பக்கான் வட்டார சுற்றுலா குறித்து ஓரளவு அறிந்து கொண்டோம் அதுபோல் இம்முறை பாலைவனச் சோலை என அழைக்கப்படும் 'அல் அய்ன்' நகரின் சுற்றுலா முக்கியத்துவமுள்ள பகுதிகளை பார்வையிடுவோம் வாருங்கள்...

ஓமன் நாட்டின் புரைமி நகரத்தை எல்லையாக கொண்டுள்ள அபுதாபி எமிரேட்டுக்கு உட்பட்ட அல் அய்ன் நகரத்தை பொறுமையாக சுற்றிப்பார்க்க குறைந்தது 2 நாட்களின் மாலை நேரங்கள் தேவைப்படும் ஏனெனில் இங்குள்ள பல சுற்றுலா தலங்கள் மாலை வேளைகளில் மட்டுமே சுற்றிப் பார்ப்பதற்கு எற்ற தன்மைகளில் அமைந்துள்ளதே அதன் காரணம். 'அல் அய்ன்' நகரமும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சுற்றுலா வர மிக ஏற்ற நகரமே.

மலேஷியாவில் (மலாய் மொழியில்) ஒரு சொல்வழக்கு உள்ளது சம்பாரிக்க சிங்கப்பூர் போகனும், செலவழிக்க கோலாலம்பூர் போகனும் கடைசியில் மவுத்தாக மலாக்கா போகனும் (மத்தி மலாக்கா - மரணிக்க மலாக்கா) என்பதாக சிலாகித்து சொல்வார்கள். (எனக்கு சொல்வழக்கு மறந்துபோய் விட்டது ஞாபகத்தில் இருந்ததை வைத்து ஒப்பேற்றியுள்ளேன், சொல்வழக்கை சரியாக தெரிந்தவர்கள் பகிர்ந்தால் அனைவரும் ரசிக்க முடியும்) மலாக்காவிற்கு அமைதியில் இணையான  நகரம் அல் அய்ன்.

துபையிலிருந்து பசுமை எழில் கொஞ்சும் அல் அய்ன் நகருக்குள் நுழைந்தவுடன் இந்த கோட்டை வடிவ அருட்காட்சியகம் நம்மை வரவேற்கும் - காலை 9 மணிமுதல் 5 மணிக்குள் செல்ல வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே கதவு திறந்திருக்கும் என்பதை கவனத்தில் கொள்க.


அல் அய்ன் (யுஏஇ) - புரைமி (ஓமன்) எல்லையில் அமைந்துள்ள அமீரக குடிநுழைவு அலுவலகம் (HILI BORDER UAE IMMIGRATION OFFICE)அமீரகத்தையும் ஓமனையும் பிரிக்கும் நீண்ட... வேலி. அந்த அழகிய தெரு விளக்கு கம்பங்கள் உள்ள பகுதி தான் புரைமி நகர்.


இதுவே இந்திய, பாகிஸ்தான் எல்லையாக இருந்தால் இரு நாட்டு எல்லைவாழ் மக்கள் படும் துயர 'இரு நாட்டு ஆட்சித் தலைமைகளின் அரசியலை' நினைக்கவே பயமாக இருக்கிறது.


சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை ஓமனின் புரைமி நகருக்குள் மட்டும் விசா, சோதனைகள் போன்ற எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி அனைவரும் எளிதாக போய்வர முடிந்தது. 


அல் அய்னின் ஹீலி பிரதேசத்தில், ஓமன் எல்லையிலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ளது 'HILI FUN CITY' எனும் Amusement Park. இங்கே அனைவரும் வயது வித்தியாசமின்றி விளையாட பல்வேறு நவீன சாதனங்கள் உள்ளன. என்ன எதிலும் ஏறி விளையாட பணம் தான் வேணும் ஒரு சின்ன மூட்டையில் கட்டிக் கொண்டு உள்ளே போங்க. பணமில்லாதவர்கள் நிறைந்த மனம் உள்ளவர்களாக பிறர் விளையாடுவதை ரசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளே போங்க. மாலை சுமார் 5 மணிக்கு பிறகு செல்வதே ஏற்ற நேரம்.


நேரமின்மையால் (ஜெபல் ஹபீத் செல்ல திட்டமிட்டிருந்ததால்) இந்தமுறை HILI FUN CITY உள்ளே போகவில்லை


அடுத்து அல் அய்ன் மிருகக்காட்சி சாலையை பற்றி தெரிந்து கொள்வோம். மிக அழகாக பராமரிக்கப்படும் பரந்து விரிந்த மிருகக்காட்சி சாலைகளில் இதுவும் ஒன்று. அஸர் தொழுகைக்குப் பின் செல்வதே மிக ஏற்றது மேலும் விஷேச காலங்களில் இரவிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். தயவுசெய்து கோடைகாலத்தில் நுழைவு டிக்கெட் சும்மா கிடைத்தாலும் செல்ல வேண்டாம் ஏனெனில் உங்கள் உடல் சோர்வடைந்துவிடும், உங்கள் உடலின் நீர்ச்சத்து அனைத்தும் அந்த வெக்கையில் (Humidity) வெளியேறிவிடும் என்பதை சொல் பேச்சு கேட்பவர்கள் கவனத்தில் கொள்க!இதெல்லாம் வெளியே உள்ளவை, கடந்த ரமலான் விடுமுறையில் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு டிக்கெட் கவுண்டர் முன் கூட்டமிருந்ததால் முந்தைய அனுபவம் பேசுகிறதுபுரதான நீர்த்தேக்கம் (ANCIENT DAM) - ஜெபல் ஹபீத் (JEBEL HAFEET) மலையடிவாரத்தில் GREEN MUBAZZARAH PARK அருகே உள்ளது. பழைய நீர்த்தேக்கம் என்றவுடன் யாரும் கரிகாலனின் கல்லணையை கற்பனை செய்து கொண்டு செல்ல வேண்டாம் ஏனென்றால் பல்வேறு புதிய அரிதார பூச்சுக்களாலும், நீர்த்தேக்கத்தின் நடுவே பீச்சிடியக்கும் செயற்கை நீறுற்று அமைக்கப்பட்டுள்ளதாலும் இப்போது பார்க்க பழமையான நீர்த்தேக்கமாக இது தெரியவே தெரியாது. 

இந்த நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள சிறிய பூங்கா குடும்பத்தினர் இளைப்பாரவும், குழந்தைகள் ஒடியாடி வியையாடவும் ஏற்ற பகுதி மேலும் மாலை 5.30க்கு மேல் சென்றால் அழகான சிவந்த சூரியன் மறையும் காட்சியை காணலாம்.அடுத்து நாம் காணவிருப்பது தான் அல் அய்ன் நகரின் முக்கிய டூரிஸ்ட் அட்ராக்;ஷனாக திகழும் ஜெபல் ஹபீத் மலையும் (JEBEL HAFEET) அதன் மலைப்பாதையும்.

அல் அய்னின் ஸனயிய்யா பிரதேசத்தில் சிமெண்ட் பேக்டரி சாலையில் சென்றால் ஜெபல் ஹபீத் மலை தென்படும். இந்த மலைச்சாலை உலகின் மிக அழகிய மலைச்சாலைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொறுங்கள் ஊட்டி, கொடைக்கானல் ரேஞ்சுக்கு சிறகடிக்க வேண்டாம். பசுமை என்ன விலை என கேட்கும் ஒரு வறட்சியான மலை தான் ஜெபல் ஹபீத். அப்புறம் எதுக்குத்தான் அங்கே போகனும்? நல்ல கேள்வி ஆனால் இதை நீங்கள் அனுபவித்தாலே தவிர எழுத்தால், சொல்லால் உணர முடியாது.

சூரியன் மறையும் அஸ்த்தமன நேரத்தில் உங்கள் வாகனத்தில் மலையேற ஆரம்பியுங்கள். அந்த DAY EFFECTல் மேலே செல்லும் நீங்கள் NIGHT EFFECTல் மலையிலிருந்து இறங்கும் வகையில் உங்கள் பயணத்திட்டம் அமையட்டும் உச்சிக்கு சென்றால் ஒரு காஃபிடேரியாவுடன் பரந்த திடல் மட்டுமே உண்டு ஆனால் அல் அய்ன் நகரை மலை உச்சியிலிருந்து இரவின் ஒளியில் பார்ப்பதே அலாதியானது மேலும் வரும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அடிக்கும் குளிர் கால காற்றை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர். கட்டாயம் குளிர்காலத்தில் மஃப்ளர், சுவெட்டர் போன்றவற்றை அணிந்து செல்வதே பாதுகாப்பு.

பெருநாள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் வாகன நெரிசலை சந்திக்க வேண்டி வரும் மேலும் நாம் மலையேறிய பின் உச்சிக்கு செல்ல சுமார் 3 கிலோமீட்டருக்கு முன்பாக, மெர்குரி ஹோட்டல் அருகிலுள்ள 'U' TURN அருகிலிருந்து போக்குவரத்து போலீஸார் உங்களை திருப்பி விட்டுவிடுவார்கள் எனவே மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் தெரிந்தாலே மேலே போகாமல் திரும்பி விடுதல் நலம். மலையேறும் போதும் இறங்கும் போதும் சாலை ஓரங்களில் பல பார்க்கிங் பகுதிகள் வரும் தேவையான இடங்களில் இறங்கி, இளைப்பாரி, சுற்றுப்புறத்தை ரசித்து செல்லுங்கள்.
மெர்குரி ஹோட்டல் முன்புறமுள்ள பாறையில் மனித வளத்தால் உருவாக்கப்பட்ட சிறிய பூங்காஇறுதியாக நாம் பார்க்க உள்ளது ஜெபல் ஹபீத் மலையடிவாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'GREEN MUBAZZARAH' எனும் செயற்கை புல்வெளி பூங்கா. இந்த பூங்கா இரவில் ரசிப்பதற்கேற்ற வகையில், பரந்த வெளியிலும் பாறைகள் மேலும் புற்களை நட்டு வளர்த்துள்ளனர்.

 GREEN MUBAZARAH பூங்கா நுழைவு வாயில்
 மின்னொளியில் புல்வெளி
 பூங்காவிலிருந்து ஜெபல் ஹபீத் மலைப்பாதையின் எழில்மிகு தோற்றம் வென்னீர்

அமீரக மக்கள் ஈக்களாய் மொய்க்கும் இடங்களில் இதுவும் ஒன்று, மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கு கட்டண விளையாட்டு சாதனங்களும், ஓட்டகம், குதிரை, கோவேறு கழுதை, ஜட்கா வண்டி போன்றவையும் உள்ளன. மேலும் ஆங்காங்கே செயற்கை வென்னீர் சுனைகளில் கொட்டும் வென்னீர் ஒரு வாய்க்கால் வடிவில் பூங்காவை சுற்றி ஓடுகிறது. குளிர் காலத்தில் வெறும் காலுடன் இந்த வென்னீர் வாய்க்காலில் நிற்பது பாதத்திற்கு மட்டுமல்ல இதயத்திற்கும் இதம் (மனமகிழ்வு) தரும். நீங்கள் விரும்பினால் முழு இரவையும் சந்தோஷமாக அங்கு செலவிடலாம்.நம் உள்ளங்கள் எத்தனை மகிழ்ந்தாலும் இவை அனைத்தையும் அனுபவிக்க நமக்கு வாய்ப்பையும் வாழ்வையும் ஆரோக்கியத்தையும் வழங்கிய ஏகன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வசதியாக ஓர் இறையில்லமும் இருக்கிறது.

பூங்காவிலுள்ள மஸ்ஜிதின் உட்புறத் தோற்றம்


ஜெபல் ஹபீத், GREEN MUBAZZARAH பூங்கா மற்றும் புரதான நீர்த்தேக்க பகுதிகளில் கார் பார்க்கிங் உட்பட அனுமதி இலவசமே. எதிர்வரும் சனிக்கிழமையும் (04.10.2014) ஞாயிற்றுகிழமையும் (05.10.2014) தனியார் நிறுவனங்களுக்கான ஹஜ்ஜூப் பெருநாள் பொது விடுமுறை தினங்களாக உள்ளது,  என்ன அல் அய்னுக்கு போய் வர பிளான் போட்டாச்சா?

அதிரை அமீன்