அல்லாஹ்வின் பேரருளால் 12.09.2014 வெள்ளியன்று மஃரிப் தொழுகைக்குப்பின் இஷா வரை வழமைபோல் இந்த வார மார்க்க விளக்க நிகழ்ச்சி முஸஃபாவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சகோதரர் கீழை. ஜமீல் முஹமது அவர்கள் கலந்து கொண்டு 'வாழ்வில் வரும் சோதனைகள்' என்ற கருப்பொருளின் கீழ் சேதுச் சீமையில் நடைமுறையில் உள்ள வார்த்தைகளை கலந்து எளிய தமிழில், சுவையாகவும் உள்ளத்தில் பதியும் வகையிலும் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்தே உவமானங்களை கூறி, தேவையான இடங்களில் குர்ஆன் ஹதீஸிலிருந்து உயரிய மேற்கோள்களை வழங்கி உரையாற்றினார்.
இந்நிகழ்வில், அப்பகுதிவாழ் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றுச் சென்றனர்.
செய்தியும் படமும்
லால்குடி முஸ்தபா
No comments:
Post a Comment