சில நாட்களுக்கு முன் அதிரையில் ததஜ கிளையினர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, அதிரை ததஜ கிளையினரின் சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்ட 'அதிசய விவாத ஒப்பந்தம்' நடைபெற்றதை அறிவீர்கள்.
இந்த ஒப்பந்த நிகழ்வில், 2 வழக்குகளை சந்தித்த, ஒரு பெண்ணால் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்ற, ததஜ தலைமையின் ஒழுங்கு நடவடிக்கையால் 3 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டு 'செல்வ சீமான்' 'அள்ள அள்ள வற்றாத ஜீவநதி' என்கிற உயர்தர கொள்கைகளுக்காக ஒழுங்கு நடவடிக்கை காலம் முடியுமுன்பே மீண்டும் ஞானஸ்னானம் செய்யப்பட்டவரும்,
ரியாத்தில் வைத்து கட்டம்கட்டி நீக்கப்பட்டு வழமைபோல் ஒழுங்கு நடவடிக்கை காலம் முடியுமுன்பே பாவமன்னிப்பு வழங்கப்பட்டு மாவட்ட தாயி அந்தஸ்துடன் தற்போது வலம் வருபவரும்,
ஒரு அழகிய பெயரை கேட்டாலே முகம் சுளிக்கும் நிலைக்கு 'அந்த பெயரை' ஆளாக்கியவரும்,
எதிர்காலத்தில் அவர்களால் கழுவிக்குடிக்கப்படவுள்ள மாவட்ட நிர்வாகியும் கலந்து கொண்டனர் ஆனால் ஒப்பந்தத்தில் பேசப்பட்ட விஷயங்களை கூட ததஜ கிளைக்கு தெரிவிக்கவில்லையாமே என்ற சந்தேகத்தை முன்பே எழுப்பி இருந்தோம் என்பதை உண்மை தான் என நிரூபித்துள்ளனர் அதிரை ததஜ கிளையினர்.
சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களுக்கும் அதிரை ததஜ கிளையினருக்கும் அவர்களுக்கிடையே விவாதம் குறித்து கடிதப் போக்குவரத்து நடைபெற்று வருவதையும், இருதரப்பு கடிதங்களையுமே பொதுமக்களின் புரிந்துணர்வுக்காக நாம் வெளியிட்டு வருவதையும் அறிவீர்கள்.
அடுத்தவர்களின் கோமணத்தை அவிழ்த்து பார்த்து ஆண்மையை சோதிக்க விரும்பும் அதிரை ததஜ கிளையினர் அவர்களின் சொல்லில் உண்மையாளார்களாக இருந்தால் அவர்கள் அடிக்கடி குறிப்பிடும் ஆண்மையை தங்களின் தலைமையிடத்தில் காட்டி அதிரையில் நடைபெற்ற விவாத ஒப்பந்த சீடியை கேட்டு வாங்கி பார்த்து விட்டு 'குற்றச்சாட்டுகள் குறித்த தலைமையின் கொள்கையை' தெரிந்து கொண்டு விட்டு 26.09.2014 தேதியிட்ட கடிதம் போன்று எழுத முன்வர வேண்டும். (முழு சீடியை வெளியிட்டால் ததஜ கிளைகள் அனைத்திற்கும் பிரயோஜனமாக இருக்கும் ஆனால் சிந்திக்கவே சுதந்திரமில்லாத நீங்களா தலைமையிடத்தில் பேசப்போகிறீர்கள்?)
நீட்டிய தாள்களிலெல்லாம் என்னவென்றே தெரியாமல் கையெழுத்து போடும் அதிரை ததஜ கிளை தலைவர் சகோதரர் பீர் முகமது போன்ற அப்பாவிகள் விழித்துக் கொள்ளும் வரை தான் அதிரை ததஜ கிளையை வைத்து 'வயிறு வளர்ப்பவர்கள்' நீடிக்க முடியும்.
ததஜ தலைமையின் விவாத கொள்கையை (மார்க்கமே பகுத்தறிவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட பிறகு கொள்கையாவது புடலங்காயாவது) அறிந்து கொள்ளுமுன்பே சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் தான் என்ன குற்றம் சுமத்தப்போகிறேன், யார் யார் மீதெல்லாம் குற்றம் சுமத்தப்போகிறேன் என எழுதித்தந்த பிறகும் கூட 'இன்னொரு க்ளு' கொடுங்க என கேட்பது, மரித்தவர்கள் யா அல்லாஹ்! எனக்கு இன்னொரு வாய்ப்பு தா, போயிட்டு நல்லவனாக திரும்புகிறேன் என படைத்தவனிடம் கதறுவதை போல் இந்த ததஜ கிளையினர் படைப்பினத்திடமும் கெஞ்சி பார்க்கின்றனர்.
அதிரை ததஜ மற்றும் மீடியா மேஜிக் நிஜாமுதீன் இடையே நடைபெற்று வரும் விவாதம் தொடர்பான விபரங்களையும் இருதரப்பு கடிதங்களையும் வாசிக்க இந்த லிங்கை சொடுக்கவும்.
நேற்றிரவு மீண்டும் அதிரை ததஜ மடத்திற்கு சென்று சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களுக்கு புரியும் பாஷையிலேயே வழங்கிய பதில்
அதிரை ததஜ சார்பில் எழுதப்பட்டு சகோதரன் பீர் முகமது பலிகடா ஆக்கப்பட்டுள்ள மஞ்சள் கடிதம்
No comments:
Post a Comment