மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பிரசித்தி பெற்ற, பிரம்மாண்ட IT & மின் தொடர்பு சாதனங்களின் சில்லறை வர்த்தக பொருட்காட்சியான GITEX SHOPPER இன்று காலை 11 மணியளவில் துபை வேல்டு டிரேட் சென்டரில் துவங்கியது. இந்த பொருட்காட்சி எதிர்வரும் 04.10.2014 (ஹஜ் பெருநாள் தினம்) வரை நடைபெறவுள்ளது.
இந்த பொருட்காட்சியில் அமீரகத்திலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் பிரபலமான பல்வேறு BRANDED வர்த்தக நிறுவனங்கள் தங்களது ஸ்டால்களை அமைத்துள்ளன. இவற்றில் கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், பிரிண்டர்கள், புரோஜக்டர், டேப்லெட்கள், டிவி மற்றும் மார்க்கெட்டுக்கு வந்துள்ள புதிய சாதனங்கள் என அனைத்துவகை எலக்ட்ரானிக் பொருட்களும் கிடைக்கும் அத்துடன் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு பரிசுகளாக தினமும் ஒரு கார், தினமும் 20 கேமராக்கள், 10 பேருக்கு கால்பந்து பார்ப்பதற்கு பார்சிலோனாவுக்கான டிரிப், 8 மாணவர்களுக்கு அமிட்டி யூனிவர்ஸிட்டி தரும் ஸ்காலர்ஷிப் என பல்வேறு பரிசுகள் காத்திருக்கின்றன. இவற்றுடன் ஏகப்பட்ட SURPRISE பரிசுகளுடன் திடீர் விலை குறைப்பு ஆஃபர்களும் அவ்வப்போது விற்பனையாளர்களால் அறிவிக்கப்படும்.
சுமார் 30,000 மேற்பட்ட பல்வேறு விதமான IT & ELECTRONIC பொருட்கள் காட்சிப்படுத்தபட உள்ள இந்த GITEX SHOPPER விழாவில் இந்த வருடம் iPHONE 6 மற்றும் iPHONE 6 PLUS ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
Image Courtesy: Khaleej Times
டிக்கெட்டுகள் அரங்கிலும் EMARAT OUTLETகளில் கிடைக்கும். துபையை சார்ந்த SHARAF DG போன்ற வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளிலும் GITEX SHOPPER சலுகை விலையில் பொருட்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளன.
வருடாவருடம் துபை அரசின் அனுசரணையுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி தினமும் காலை 11 மணியளவில் துவங்கி இரவு 11 மணிவரை நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணம் 30 திர்ஹம். 5 வயது வரை குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 14 வயது வரை குழந்தைகள் பெற்றோர் / காப்பாளர் இன்றி தனியே வர அனுமதியில்லை. இந்நிகழ்ச்சிக்கு மிக எளிதாக வந்து செல்ல DUBAI WORLD TRADE CENTER STATIONக்கு மெட்ரோ சர்வீஸ் உள்ளது.
தொடர்ந்து எதிர்வரும் 12.10.2014 முதல் 16.10.2014 வரை நிறுவனங்கள் மற்றும் வாத்தகர்களுக்கென பிரத்தியோகமாக GITEX TECHNOLOGY WEEK எனும் பொருட்காட்சி நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை உலகின் பெரும் BRANDED நிறுவனங்கள் தங்களின் புதிய IT & ELECTRONIC தயாரிப்புகளை, கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்த பயன்படுத்திக் கொள்வர். இது நிறுவனங்களுக்கான பொருட்காட்சி என்பதால் கலந்து கொள்ள, பார்க்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
அதிரைஅமீன்
No comments:
Post a Comment