நமதூர் CMP லேன் பகுதியில் இயங்கி வரும் ALM பள்ளியுடன் இணைந்த ALMS தொழுகைப்பள்ளி ரமலானுக்குப் பின் ஐவேளை தொழுகைப்பள்ளியாக மாற்றப்பட்டதுடன் அப்பள்ளிக்கென தனி நிர்வாகம் அமைக்கப்பட்டு பொதுமக்களும் சென்று தொழும் வண்ணம் பயன்பாட்டிற்கு வந்ததை அறிவீர்கள்.
தற்போது அப்பள்ளியின் இமாமாக மவ்லவி ஷாபித் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கீழ்க்காணும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகின்றன.
ஞாயிறு முதல் வெள்ளி வரை தினமும் சுபுஹ் தொழுகைக்குப்பின் திருக்குர்அன் விரிவுரை - வழங்குபவர் மவ்லவி ஷாபித் அவர்கள்.
பிரதி சனிக்கிழமை தோறும் சுபுஹ் தொழுகைக்குப்பின் 'அல்லாஹ்வை அறிந்து கொள்வோம்' எனும் சிறப்பு தொடர் நிகழ்ச்சியை வழங்குபவர் மவ்லவி யூசுப் அவர்கள்.
பிரதி வியாழக்கிழமை தோறும் அஸருக்குப் பின் 'பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள்' (பள்ளிக்கூட வளாகத்தில்) நடைபெறும் என ALMS பள்ளிவாசலின் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் உதவி
கமாலுதீன்
No comments:
Post a Comment