உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, August 30, 2014

மறுமை விசாரணை - முஸஃபாவில் நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி (ஆடியோ இணைப்புடன்)

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த வாராத்தைப் போலவே இந்த வாரம் 29.08.2014 வெள்ளியன்று மாலை மஃரிப் முதல் இஷா வரை முஸஃபாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது


இந்நிகழ்வில், இலங்கை மவ்லவி முஹமது நாஸர் அவர்கள் கலந்து கொண்டு 'மறுமை விசாரணை' என்ற தலைப்பின் கீழ் மார்க்க விளக்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.ஷாபியா பகுதியிலுள்ள சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

லால்குடி முஸ்தபா

Monday, August 25, 2014

அதிரை பீஜே பிரிவினருக்கு அதிரை தாருத் தவ்ஹீதின் பதில்

முட்டிக்கொண்டு முழிப்பதில் வல்லவர்களான அதிரை பீஜே பிரிவினர் வழமைபோல் ரமலானில் இடந்தெரியாமல் அதிரை தாருத் தவ்ஹீதை சீண்ட, தேன் கூட்டில் கையை வைத்து புறங்கையை நக்க ஆசைப்பட்டு குளவி கூட்டில் கை வைத்த கதையாக வசமாக வலிய வந்து சிக்கிக் திணறிக் கொண்டிருந்த வேளையில், முஸ்லீம்கள் மத்தியில்  நாலாந்தர பேச்சாளராக அறியப்படும் அவர்களில் ஒருவர் பதில் சொல்கிறேன் பேர்வழி என மீண்டும் சொரிந்து விட்டுப்போக, அதிரை பீஜே பிரிவினர் கடமைக்கு அறைகூவலுக்கு சம்பந்தமில்லா பதில் கடிதமொன்றை தந்துள்ளனர்.

இணையத்திற்குள் ஒழிந்து கொண்டு அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்களை இழிவாக விமர்சிக்கும் விதண்டாவாத பேர்வழிகளின் கொள்கை குழப்பங்களை அடையாளம் காட்டாமல் விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ள அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) செயலாளர் சகோதரர் ஜமீல் அவர்கள் நேற்றிரவு அவர்களின் கூடாரத்திற்கே சென்று பதில் கடிதத்தை வழங்கினார்.

சகோதரர் ஜமீல் அவர்கள் முன்பு விடுத்த விவாத கடிதத்தை காண இந்த லிங்கை சொடுக்கவும்.

 

இரு கடிதங்களையும் காண்க!Friday, August 22, 2014

முஸஃபாவில் நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி (இணைப்பு: ஆடியோ லிங்க்)

அல்லாஹ்வின் பேரருளால் முஸஃபா பகுதியில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது, அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும்..

தர்பியா உரையின் ஆடியோ பதிவை கேட்க இந்த லிங்கை சொடுக்கவும்

கடந்த வெள்ளிக்கிழமை (22.08.2014) மஃரிப் தொழுகைக்குப்பின் துவங்கிய வகுப்பில், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி முஹமது நாஸர் அவர்கள் கலந்து கொண்டு 'சிந்திப்போம்! அமல் செய்வோம்' என்ற கருத்தில் இஸ்லாத்தை புரிந்து கொண்டு பின்பற்ற, எத்திவைக்க வேண்டியதன் அவசியங்களை எளிய முறையில் விளக்கி இன்றைய தர்பியா வகுப்பை இஷா வரை நடத்தினார்.

இந்த முதல் நிகழ்ச்சியில் அப்பகுதியிலுள்ள சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ், இனி வாரந்தோறும் தொடர்ந்து பல்வேறு தாயிக்களை கொண்டு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திட முடிவு செய்யப்பட்டது.

உமர் பாருக்

Thursday, August 21, 2014

அதிரை பீஜே அடிமைகளின் மொட்டை கடுதாசிக்கு சகோதரர் நிஜாமின் சூடான பதிலடி! இன்று (21.08.2014) மீண்டும் நேரில் பீஜே மடத்திற்கே சென்று கடிதம் கொடுத்தார்!!

விபரமறிய விடலைகளை வைத்தும், மக்களின் மறதியின் மீதும் நம்பிக்கை வைத்தும், குர்ஆன் ஹதீஸை தூக்கி வீசிவிட்டு தனியொரு மனநோயாளியின் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேடுகெட்ட நவீன முஹ்தஸிலா கும்பல் என்றும், பலவகையான கழிவுகளை சுமந்து கொண்டுள்ள தமிழகத்தின் கூவம் என்றும் அறியப்படுகின்றவர்களின் அதிரை கிளை கூவம் (வாய்க்கால்) அடிக்கடி அதிரை தாருத் தவ்ஹீதை சீண்டிப் பார்ப்பதும் பின்பு வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டு சிறிது காலம் வெளியே தலைகாட்டாமல் ஒழிந்து கொள்வதையும் ஒரு பொழுது போக்காவே கொண்டுள்ளனர் என்பதை அதிரை முஸ்லீம்கள் அறிவர்.

 சகோதரர் நிஜாம் அவர்களால் ரமலானில் கொடுக்கப்பட்ட கடிதத்தை பார்க்க!


கடந்த ரமலானில் தாருத் தவ்ஹீதுடன் விளையாடிப் பார்த்து பின் வந்த பதிலடிகளால் கூனிக்குறுகிப்போய் கிடந்த பீஜே வணங்கிகள் மீண்டும் சவால் என்ற போர்வையில் ஒரு மொட்டை கடுதாசியை மீடியா மேஜிக் நிஜாம் அவர்களுக்கு கெடுவைத்து கொடுத்துள்ளனர். விபரமறிய பாமர பீஜேயானிகள் வேண்டுமானால் இந்த மொட்டை கடுதாசியால் சந்தோஷபடலாமே ஒழிய தேள்கொட்டிய திருடர்களுக்கு மட்டுமே தெரியும் இது வீண்வம்பை விலைக்கு வாங்குகின்ற விஷயமென்று, விவாதம் என ஒன்று உண்மையிலேயே நடக்குமாக இருந்தால் (இன்ஷா அல்லாஹ் நடக்க வேண்டும்) அன்று தெரியும் உச்சி முதல் பாதம் வரை அவனவனின் லட்சணங்கள்! உங்களால் முடிந்தவரை இழுத்தடிக்கும் விளையாட்டை விளையாடுங்கள், உங்களின் யோக்கியதையை கழுவி காயப்போட ஆதாரங்களுடன் காத்திருக்கிறார் சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன்.

 பேருக்கு சிலவரிகளை டைப் அடித்து உருப்படியான விஷயங்கள் ஏதுமின்றி கொடுக்கப்பட்ட மொட்டை கடுதாசி இதுதான்!
முரண்பட்ட மார்க்க விஷயங்கள் பலவற்றை பற்றி விவாதிக்க கடிதம் கொடுத்து விட்டு பல்லாண்டு காலமாக சகோ. நிஜாம் காத்திருக்க, அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்ட பீஜே அடிமைகள் தனிநபர் அர்ச்சனையை மட்டுமே விவாதமாக்கி திசைதிருப்ப துணிந்துள்ள விஷயங்களை தன் பதிலில் அம்பலப்படுத்துதை இனி தொடர்ந்து படியுங்கள்....அல்லாஹ்வின் பெயரால்                                                                                                                    21/08/2014

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் அதிரை கிளை இயக்க வாதிகளான தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு நிஜாமுதீனுடைய அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 2004 ஆண்டு முதல் மார்க்கம் தொடர்பாகப் பல கடிதங்கள் தங்களுக்குக் கொடுத்து இருந்தும் இதுவரை எதற்குமே பதில் பெறாத நான், கடந்த 24/07/2014 ல் தங்களுக்கு கடிதம் அளித்து அதை வலைதளத்திலும் பகிர்ந்தேன். இக்கடிதத்திற்கு மட்டும் தங்களிடமிருந்து பதில் வந்துள்ளது. இதற்காக எனது மிகப்பெரிய பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன் வலைதள சேவைக்கு.

தங்களது கடிதத்தில் முதல் வாக்கியம்தாங்கள் எங்களோடு விவாதம் செய்ய தயார் என்று கூறி ஒரு கடிதத்தை எங்களது அதிரை கிளையில் வழங்கியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். இதன் மூலம் உங்களுடன் விவாதிக்க நான் தயார், என நான் பதிந்ததிலிருந்தே விவாத அழைப்பு வந்தது தங்களிடம் இருந்துதான் என்பதும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதால்தான் விவாதம் செய்ய நான் தயார் என பதிந்தேன் என்பதும் நிருபனமாகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

அது என்ன விவாதம் ? அதை உங்கள் கடிதத்தில் மறைத்து சூனியமாக வைத்துள்ளீர்கள். அதைக் குறிப்பிட்டு இருக்கவேண்டும். நான் தங்களுக்கு அளித்த கடித்தத்தின் நோக்கமே, உங்களது வலைதளத்தில் http://www.adiraitntj.com/2014/08/blog-post_48.html என்ற பதிவில் வந்த தகவலுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டா? ஆம், எனில் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு  வலைதளத்தில் வந்த ஆக்கத்தைத் தங்களது லட்டர்பேடில் கேட்டு இருந்தேன். எனது கடித்ததின் நோக்கம் இது மட்டும்தான். இதைப் பற்றிய எந்த தகவலையும் நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. அதில் வரும் தனி நபர் சாடல் எல்லாம் என்னிடம் வைத்த விமர்சனத்திற்கான பதில்; எனது ஒப்புதல்; தனி நபர் சாடல்தான் வேண்டும் என நீங்கள் விரும்பியதால், சரி வருகிறேன் என்பதற்கான அங்கீகாரம்.

அப்போதும் கூட இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக எனது முந்தைய கடிதங்களிலிருந்து ஒரு சிலதை எடுத்து விவாதிப்போம் என்று எனது ஆசையையும் தெரிவித்து இருந்தேன். தனி நபர் சாடல் என்பது எனது நோக்கம் அல்ல நீங்கள் கேட்ட கேள்விக்கான எதிர்வினைதான். நோக்கம் திசை திருப்பப்படும் என்பதால் உங்களது லட்டர்பேடில் கேட்டேன். எனவே  வலைதளத்தில் நீங்கள் கேட்ட கேள்வியை உங்களது லட்டர்பேடில் உங்களது அங்கீகாரத்தோடு எனக்கு தரும்படி மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கடிதத்தின் இரண்டாவது வாக்கியம்உங்களுடன் விவாதிக்க நாங்கள் தயார்
உங்களது முதல் வாக்கியத்தை மறுக்கும் இரண்டாவது வாக்கியம். "ததஜ ஆகிய நாங்கள் உங்களை விவாதத்திற்கு அழைத்தோம். ஒப்புக்கொண்டீர்கள். வரவேற்கிறோம்" என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் உங்களுடன் விவாதிக்க நாங்கள் தயார்என்று எனது வசனத்தை நீங்கள் சொல்கிறீர்கள். அதாவது விவாதத்திற்கு நான் அழைத்தது போன்றும் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டது போன்றும் திசை திருப்புகிறீர்கள். எனக்கு மீண்டும் சந்தேகம் வருகிறது உங்களது வலைதளத்தில் வந்த ஆக்கத்திற்கு நீங்கள் பொறுப்பு ஏற்கிறீர்களா இல்லையா?

ஒருவேளை "வலைதளத்தில் வருவதற்கு முன்பே 2004 லிருந்து நீதானேப்பா கடிதம் எழுதினாய் அதை பற்றி நீதானே பேசினாய், எனவே அந்தக்  கடிதத்தை நாங்கள் விவாதக் கடிதமாக ஏற்றுக்கொண்டோம்" என சொல்வீர்களானால் அதை குறிப்பிடுங்கள். அதன் பிறகு வலைதளத்தில் வந்த தகவலை குறிப்பிடுங்கள். என்னிடம் ஒப்புதல் கடிதம் பெற்று விவாதம் செய்வோம். திசை திருப்ப வேண்டாம். நழுவ வேண்டாம்.

உங்கள் கடிதத்தின் மூன்றாவது வாக்கியம், “ அந்த விவாதத்திற்கு முன்பு நீங்கள் எங்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் தனிப்பட்ட நபர்களது பெயர்களை சுட்டிக்காட்டி அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கத் தயார் என்று கூறியுள்ளீர்கள்என குறிப்பிட்டு உள்ளீர்கள்.

இதுபோன்று நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன் என குறிப்பிடுகிறீர்களா? அல்லது நீங்கள் என்னிடம் கோரிக்கை வைக்கிறீர்களா?

நான் உங்களிடம் கோரிக்கை வைத்தேன் என நீங்கள் சொன்னால்,
விவாதத்திற்கு முன்பே தனிநபர் குற்றச்சாட்டு பற்றி தனியாக விவாதிப்போம் என்று நான் அந்த கடிதத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. விவாதமே தனிநபர் விமர்சனம் தான். தனிநபர் விமர்சனம் பற்றி தனியாக விவாதத்திற்கு முன்பு பேசிக்கொள்வோம்  என்று எந்த கோரிக்கையயும் நான் வைக்கவில்லை. பொய் சொல்ல வேண்டாம்.

ஒருவேளை நீங்கள் என்னிடம்,  விவாதத்திற்கு முன்பு தனி நபர் மீதான குற்றச்சாட்டுப் பற்றி பேசலாம் என்ற ஒரு கோரிக்கையை வைக்கிறீர்கள் என்றால் ; தனி நபர் விமர்சனம்தான் விவாதம் என்ற இடத்திற்கு அழைத்து சென்றதே நீங்கள்தானே! நான் இதற்கு முன் கொடுத்த அனைத்து கடிதமும் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தப்பட்டது மற்றும் பிஜேயின் குர்ஆன் மொழியாக்கம் பற்றியது. அதிலும்கூட தனிநபர் விமர்சனம் இருக்காது சில முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி இருந்தேன். அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, "சினிமா பார்ப்பது மற்றும் வரதட்சனை திருமனங்களில் கலந்து கொண்டு விருந்து உன்பது பற்றி விவாதிப்போம்" என்று தனி நபர் விமர்சனமாக திசை மாற்றியது யார்? நீங்கள்தானே!. தற்போது விவாதத்திற்கு முன்பு தனிநபர் குற்றச்சாட்டு பற்றி விவாதிப்போம் என கோரிக்கை வைப்பது அழகல்லவே.

இரண்டாவது பாராவில்
நீங்கள் அளித்த கடிதத்தில் யார் யார் குறித்தெல்லாம் நீங்கள் விவாதிக்க நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களோ அவர்கள் அத்தனை பேர் மீதான உங்களது குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பதை வரக்கூடிய 22-08-14 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்குள் எழுத்துபூர்வமாக எங்களுக்கு நீங்கள் எழுதித் தர வேண்டும். அப்போதுதான் அதுகுறித்த பதிலை விவாதத்தின் போது பெற்றுத் தர முடியும் என எழுதி இருக்கிறீர்கள், வேடிக்கையாக உள்ளது.

2004 ல் இருந்து பல கடிதங்கள் நேரடியாக உங்களுக்குக் கொடுத்துள்ளேன். எனக்கு நானே post செய்து கொள்ளவில்லை. அவை அனைத்தும் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தப்பட்டது. அவற்றுள் ஒரு கடிதத்துக்குக்கூட உங்களிடமிருந்து இதுவரை பதில் இல்லை. "திராணி உள்ளவர்கள் பதில் கொடுக்கட்டும் என்று முர்ஷித் அப்பாஸி" பகிரங்கமாக கூறினார். எங்கோ ஒரு மூலையில் யாரென்றே தெரியாமல் ஒளிந்துகொண்டு ஒரு  அதுசவால் விடுகிறது "நிஜாமின் இருட்டறை சவாலை ஏற்கிறோம்" என்று ( யாரென்றே தெரியாமல் ஒளிந்து கொண்டு கூவும் இது, உங்களிடத்தில் நேரடியாகக் கடிதம் கொடுத்த என்னை "இருட்டறை சவால்" என்று சொல்கிறது ).

சரி பராவாயில்லை விவாதம் புரிவோம் என ஆர்வமாய் இறங்கினால் தனி நபர் சாடலை அது முன் வைக்கிறது.

சரி பராவாயில்லை அதையும் பேசுவோம். இவை அனைத்திற்கும் பொறுப்பேற்றுக்கொண்டு ததஜ வின் முத்திரைதாளில் எழுதிதாருங்கள் என கேட்டால்அதையும் செய்யாமல் தனி நபர் விமர்சனம் பற்றி மட்டும் தகவல்களை முன்கூட்டியே தாருங்கள்(அதிலும் பின் வாங்கல் )  என்ற ஒற்றை நிபந்தனையோடு கடிதம் வருகிறது. இதில் எனது பழைய கடிதங்கள் பற்றியும் தகவல் இல்லை. வலைதளத்தில் வந்த தகவலுக்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறீர்களா? ஆம் எனில் அதை உங்களது லட்டர்பேடில் தாருங்கள் என்றதற்கும் பதில் இல்லை. முழுசாக முழுங்கியாச்சு. இப்போது முன்னிலைப்படுத்துவது தனிநபர் விமர்சனம் மட்டும். அதையும் நான் முன் கூட்டியே கொடுக்கவேண்டும். அழுகுனி ஆட்டம். எனது கடிதத்தின் நிபந்தனையே உங்களது வலைதளத்தில் வந்த தகவலை உங்களது லட்டர்பேடில் வேண்டும் என்பதுதான். நீங்கள் தகுதியுடையவர்களாக இருந்தால் எனது முந்தைய கடிதங்கள் பற்றியும் பேசவேண்டும் என்றேன்.   இதை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். இல்லையேல் உங்களுக்கும் வலைதளத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் எனது முந்தைய கடிதத்தில் குறிப்பிடப்பட்டபடி "இஸ்லாமிய மார்க்கம் பற்றி பேச ததஜ ஆகிய எங்களுக்குத் தகுதி இல்லை" என்றாவது சொல்லவேண்டும். இதுதான் எனது 24/07/2014 ல் தந்த கடிதம் மற்றும் இந்த கடிதத்தின் நிபந்தனை. தனி நபர் விமர்சனம் எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம் ( நீங்கள் தொடங்கிவிட்டதால் அதையும் விடுவதாக இல்லை ). ஆனால் நீங்கள் அனைத்தையும் வசதியாக மறைத்துவிட்டு தனிநபர் விமர்சனத்தை மட்டும் ஃபோகஸ் செய்கிறீர்கள். முதலில் எனது நிபந்தனையை முடித்துவிட்டு இரண்டாவதாக உங்களது கோரிக்கையை வைக்கலாம். பலவீனர்களுக்கு சலுகை காட்டுவது நன்மையான காரியம்தான். அதற்காக தொடர்ந்து நீங்கள் சலுகையை மட்டும் எதிர்பார்ப்பது முகம் சுளிக்க வைக்கிறது.
Ø  2004லிருந்து நான் அனுப்பிய மார்க்கம் சம்பந்தபட்ட எந்த கடிதத்திற்கும் பதில் தராமல் இருந்தீர்கள். 2008க்கு பிறகு உங்களைக் கண்டுகொள்வதே இல்லை. மார்க்க முரண்பாடுகளுக்கும் நாங்கள் தனியாக விளக்கம் கொடுத்தோம் உங்களை மதிப்பது இல்லை.
Ø  இந்த நோன்பில் நீங்களாக வலிய வந்து, "ADT கொள்கை அற்றவர்கள்" என சீண்டி பார்த்தீர்கள்.எங்கள் செயலாளர் பகிரங்கமாக விவாத அழைப்பும் கடிதமும் கொடுத்தார்.
Ø  அதை கண்டுகொள்ளாமல் 'நிஜாமின் இருட்டறை சவால்' என அடுத்த கிளைக்கு மாறினீர்கள்.
Ø  சரி அதிலாவது உருப்படியான தகவல் இருக்கும் எனப் பார்த்தால், தனி நபர் சாடல் என track மாற்றினீர்கள்.
Ø  சரி அதுவும் ஓகே அதை உங்களது லட்டர்பேடில் தாருங்கள் என்றால் அதையும் இதுவரை தரவில்லை.
Ø  ததஜ சகோதரர்கள் மூலமாக என்னிடமும் எனது நண்பரிடத்திலும் "இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்" என்ற வேண்டுதல். அதை நான் கண்டுகொள்ளவில்லை.
Ø  மாவட்ட தாஈயை வைத்து முகநூலில் black mail. என்னைப்பற்றி தனி நபர் சாடல். 'ஆஹா நம்மைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்கள், நாம் வாயை மூடிக்கொள்வோம்' என நான் அமைதி காத்துவிடுவேனாம். நல்ல கிரிமினல் புத்தி. இவர் எவ்வளவு நன்மை எனக்கு செய்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியாது. அல்லாஹ் யாரைக் கொண்டும் உதவி செய்வான் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். அதை பிறகு விளக்குகிறேன். இவரையும் நான் அலட்சியம் செய்து உங்களிடமிருந்து உருப்படியான கடிதம் வரும் என்று அதிலேயே கண்ணாக இருந்தேன். அழுகுணி கடிதம்தான் வந்துள்ளது.
Ø  அதிலும் "நீங்கள் உங்கள் வலைதளத்தில் எழுதியதை பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்" என்ற நிபந்தனையைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் திசை திருப்பி தனிநபர் குற்றங்களை முன்கூட்டியே தந்துவிடுங்கள் என கெஞ்சுகிறீர்கள். உங்களைப் பார்த்து பரிதாபப் படுவதா? அல்லது சிரிப்பதா?

முதலில் நாம் எடுத்துக்கொண்டுள்ள விவாதக் கருவை கவனியுங்கள், அவை இரண்டு வகை.
1. மார்க்கம் சம்பந்தப்பட்டது
2. தனிநபர் சாடல் பற்றியது.

முதல் வகை கருத்து சம்பந்தப்பட்டது. (உதாரணமாக) மனிதன் படைக்கப்பட்டது சுவர்க்கத்திலா அல்லது பூமியிலா? என்ற ஓர் சர்ச்சை வந்தால் இருவேறு கருத்துக்கள் வரும். இருவரும் தத்தமது நிலைபாட்டை சரிகாண ஆதாரம் திரட்டுவார்கள் அதற்காகக் கால அவகாசமும் கொடுக்கவேண்டும். இந்தக் கேள்வியையும் முன்கூட்டியே தெரியப்படுத்தலாம். சில அதிமேதாவி அண்ணன்கள் இரண்டையும் நம்பலாம் நமக்கு என்ன பிரச்சனை என சொல்லும் அது தனி வகை.

இரண்டாவது வகை தனி நபர் செய்த குற்றம். (உதாரணமாக ) ஜெய்னுதீன் என்பவர் விபச்சாரம் செய்தார் என குற்றம் சுமத்தும்போது, ஜெய்னுதீன் என்பவர் ஆம் என ஒப்புக்கொள்ளவேண்டும் அல்லது இல்லை என மறுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, "முன்கூட்டியே தகவல் தெரிந்தால் விபச்சாரம் செய்தது சரி என நிருபிக்க ஆதாரம் திரட்ட வாய்ப்பு இருக்கும்" என வாதிடக்கூடாது. ஆம் அல்லது இல்லை இது மட்டுமே பதில். இது இரண்டாவது வகை. நீங்கள் தற்போது கேட்பது இரண்டாம் வகை.

உங்களுக்கு வேண்டுமானால் ஒரு ஆலோசனை தருகிறேன்.
எனது மற்றும் உங்களது வலைதளத்தில் தனிநபர் விமர்சங்களாக குறிப்பிடப்பட்ட குற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
1. சினிமா இஸ்லாத்தின் எத்தனையாவது கடமை? (நிஜாம் அவர்களுக்கு இது இரண்டாம் கடமை என்று கேள்விப்பட்டுள்ளோம்).
2. வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது கடமையா? விரும்பத்தக்கதா?
3. வரதட்சணை ததஜவுக்கு எப்போதிலிருந்து ஹலால் ஆனது என்பதும்
4. சினிமா ததஜ நிர்வாகிகளுக்கு மட்டும் எப்போதிலிருந்து ஹலால் ஆனது என்பது பற்றியும்
5.மது ததஜவுக்கு எப்போதிலிருந்து அனுமதிக்கப்பட்டது என்பது பற்றியும்
6.விபச்சாரம் மற்றும் வேலி தாண்டுதல் ( இதில் ஏகப்பட்ட நபர்கள் போட்டி வேறு )
7. வட்டி
8.பண மோசடி,  கட்ட பஞ்சாயத்து
9. வரதட்சணை திருமணத்தில் கலந்து கொண்டு சாப்பிடும் உணவுதான் கூடாது. வீட்டிற்கு உணவு வந்துவிட்டால் சாப்படலாம் என்ற ஃபத்வா சம்பந்தமாகவும்
10. வரதட்சணை மற்றும் அல்லிகுத்து பைனகுமா மூலம் நடைபெறும் திருமணத்திற்கு பதிவு புத்தகம் தூக்கும் ஜமாத்தில் ததஜ நிர்வாகிகள் மட்டும் நிர்வாகிகளாக இருக்கலாம் என்ற விதி எப்போதிலிருந்து?
11. டூர் சென்ற இடத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்து தண்டனை பெறலாம் என்ற விதி எப்பொதிலிருந்து? இவற்றுடன்
12. கள்ள காதல் மற்றும் பிற மதத்தவரை  காதலித்து திருமணம் செய்யாமல் ஒதுக்குவது.
13. ஹோமோ செக்ஸ் என்று அழைக்கப்படும் பொடியன் கேஸ்
14. கொலை, கொள்ளை, தற்கொலை
15. மாற்றுமத சடங்குகள், போன்றவற்றையும் சேர்த்துகொள்ளவும்.

இவை அனைத்தும் குற்றங்கள். இவற்றை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்தமாட்டீர்கள் என நம்புகிறேன். ஆம் என சொல்லவேண்டும் அல்லது இல்லை என சொல்ல வேண்டும். எனவே இந்த 15 பாயிண்டையும் பிரிண்ட் செய்து நான் குறிப்பிட்டுள்ள அனைத்து நபர்களுக்கும் அனுப்பி வையுங்கள் சைடில் (ஆம்/இல்லை) என்ற optionனுடன். அவரவர் அவர் சார்ந்த விஷயங்களில் ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ டிக் செய்து பதில் தரட்டும் பெற்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நபர்களில் யாரேனும் ஒரே ஒரு உத்தமராவது, "இதில் குறிப்பிடுள்ள குற்றங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்று சொன்னால் அனைத்திலும் அவர் 'இல்லை'யை டிக் செய்யட்டும், விவாதத்தின்போது நான் நிரூபிக்கிறேன் இவர்களின் வண்டவாளங்களை. அதிகபட்சமாக இவ்வாறுதான் உதவலாம். ஒரு நபர் மீது ஒரு குற்றமும் உள்ளது 8 குற்றங்களும் உள்ளன. இதை நான் வகைபடுத்த மாட்டேன். உத்தமர்களிடம் இந்த 15 பாயிண்டையும் அனுப்பி அனைத்திலும் இல்லை என்று பதில் பெற்று வைத்து கொள்ளுங்கள் மற்றவை விவாதத்தில்.
புரிந்துகொள்ள

Ø  வரதட்சனையாகப் பெற்ற வீட்டில் குடி உள்ளனர் என்றும்
Ø  வரதட்சனை திருமனம் என தெரிந்தே உணவு உண்டனர்

 என இரு குற்றச்சாட்டு சொல்லுகிறேன்  

பீர் முகமதோ அல்லது ஜப்பாரோ பக்கீர் முகைதீனோ அல்லது சிக்கந்தரோ ஆம் என சொல்லலாம் அல்லது இல்லை என சொல்லலாம். பதில் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். குற்றம் சுமத்திய நான் இதில் பீர் முகம்மது மற்றும் ஜப்பார் மனைவி வீட்டில்தான் வாழ்கின்றனர் என்பதையும் பக்கீர் முகைதீன் மற்றும் சிக்கந்தர் வரதட்சனை உணவை எடுத்துக்கொண்டனர் என்பதை ஆதாரத்துடன் விவாதத்தின்போது நிரூபிக்காமல் ஓயமாட்டேன். இதே போன்றே அனைத்து குற்றச்சாட்டுகளும்.


22-08-14க்குள் நான் பதில் தர வேண்டும் என்று நிபந்தனை. ஏன் அந்த நிபந்தனை? இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? அதை காரணம் சொல்லி விவாத ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவீர்களோ? - ஆம் ஒருவேளை அவ்வாறு ரத்து செய்துவிடுவீர்களோ என்று சந்தேகித்துத்தான் நீங்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் பதில் தருகிறேன். நீங்கள் உங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு குறைந்தது ஒரு ஒருமாதத்திற்குள் ஏதாவது ஒருநாளில் பதில் தாருங்கள். பழையபடி வருட கணக்கில் இழுத்துவிட வேண்டாம்.

இரண்டாவது பாராவில் இரண்டாவது வாக்கியம்அதுபோல் உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் நீங்கள் செய்த பித்தலாட்டங்கள் திருகுதாலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் எழுத்துபூர்வமாக நீங்கள் கொடுத்த பிறகு நாங்கள் உங்களுக்கு அளிப்போம். ”

இதற்காகதான் நான் காத்துகொண்டு இருக்கிறேன் அதன் பிறகுதான் விவாதத்திற்கு என்னால் வரமுடியும் என்று நான் சொல்லுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். நீங்கள் எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் சபையிலேயே வைக்கலாம். உங்கள் பார்வையின் அளவுகோலின்படி படம் பார்ப்பது வரதட்சனை உணவை உண்பது க்ளீன் சேவ் செய்வது போன்ற எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் சரி. அல்லது வட்டி, விபச்சாரம் போன்ற சிறிய குற்றங்களாக இருந்தாலும் சரி நேரடியாக சபையிலேயே வைக்கலாம்.முன் கூட்டியே தரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

கடைசி வாக்கியம்அதன் பிறகு நாம் விவாத ஒப்பந்தம் செய்து விவாதம் நடத்திக்கொள்ளலாம் என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்

அதன் பிறகு அல்ல இதற்கு முன்பு நான் கேட்டிருந்தபடி
உங்களது வலைதளத்தில் http://www.adiraitntj.com/2014/08/blog-post_48.html என்ற பதிவில் வந்த தகவலுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டா? ஆம், எனில் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு  வலைதளத்தில் வந்த ஆக்கத்தைத் தங்களது லட்டர்பேடில் உங்கள் கடிதத்தைத் தாருங்கள்.

வலைதளத்திலும் முகநூலிலும் ஏகப்பட்ட விமர்சனக்கள் எங்களைப் பற்றி வந்துள்ளது. அதற்கு பதில் அளிப்பது எங்களது உரிமையாக இருந்தாலும், உங்களுக்குக் கடிதம் கொடுத்து இருப்பதால் தார்மீக பொறுப்பு ஏற்று ஒரு பண்பாட்டிற்காக பதில்கொடுக்காமல் காத்து இருந்தேன். பதில் கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். எனவே, தாமதம் செய்யாதீர்கள்.

இப்படிக்கு

ஷா. நிஜாமுதீன்