உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, August 5, 2014

அதிரையில் நடைபெற்ற மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களின் இரு நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஏக இறைவனின் அருளால் இன்று (05.08.2014) அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞரும் உளவியல் மருத்துவருமான S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் கலந்து கொண்டு 'நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்' என்ற தலைப்பின் கீழ் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) உரையாற்றினார்கள்.இன்றைக்கு யூத, நஸரானிக்களின் பிடியில் அறியாமல் சிக்குண்டு, அவர்களின் நடை, உடை , பாவனை மற்றும் அவர்களின் நம்பிக்கையில் நாமும் ஊரித்திளைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் மற்றும் அதன் அடிப்படை காரணிகாய் அமைந்துள்ள பல்துறை சமூக ஊடகங்களின் போக்கையும் பங்களிப்பையும் சுட்டி விவரித்ததார்.


இன்றைய நவீன கால தகவல் பரிமாற்ற சாதனங்களான பேஸ்புக், டிவிட்டர், மொபைல் போன், இன்டெர்நெட், டிவி, பத்திரிக்கை போன்ற விடயங்களில் இன்றைய இளைய சமுதாயம் மூழ்கிப்போய் நேரத்தை தொலைப்பதையும் மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவதையும் சுட்டி விளக்கி இதுபோன்ற சாதனங்களை எவ்வாறு மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்வதற்காக பயன்படுத்த முடியும் என்பதையும், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சரியான வழியில் கண்காணித்து இஸ்லாமிய அடிப்படையில் வளர்ப்பதற்குரிய முறைகளையும் குர்அன் ஹதீஸ் ஒளியில் விளக்கினார்.

இறுதியாக, பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதில் ஒன்று ஜனாஸாவின் சட்டஙகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்வி நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பினர் இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தனர்

ALM பள்ளியில் நடைபெற்ற ஆசிரியைகளுக்கான உளவியல் பயிற்சி

04.08.2014 திங்கள் அன்று மாலை ALM பள்ளியின் ஏற்பாட்டின் கீழ் அங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான உளவியல் ஆலோசணை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞரும் உளவியல் அறிஞருமான S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் கலந்து கொண்டு, மாணவமணிகள் ஆசிரியைகளுக்கிடையேயான உறவு, மாணவமணிகளை அவர்கள் பயிற்றுவிக்கும் போது கைகொள்ள வேண்டிய அணுகுமுறைகள், மாணவமணிகளை தேர்வுக்காக தயார் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என பல்வேறு உளவியல் ஆலோசணைகளை வழங்கினார்.

முகாமின் இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் குறிப்பாக மாற்றுமத ஆசிரியைகள் கூட மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் சந்தேகங்களுக்கு பதில் பெற்றுச் சென்றனர்.

இம்முகாம் சிறப்புடன் நடைபெற அதிரை தாருத் தவ்ஹீத் ஒத்துழைப்புடன் சிறப்பு ஏற்பாடுகளை ALM பள்ளியின் தாளாளர் அப்துல் ரஜாக் அவர்கள் செய்திருந்தார்கள்.

No comments:

Post a Comment