உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, October 25, 2016

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!அன்பு நிறைந்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமதூரில், அதிரையின் கல்வித்தந்தை ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்களின் தன்னலமற்ற தியாகத்தால் உருவாகிய கல்வி நிறுவனங்கள் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கண் திறந்துள்ளது இனியும் திறக்கும் இன்ஷா அல்லாஹ். அன்னார் மற்றும் அவருடன் கல்விப்பணியில் இணைந்து பயணித்து மறைந்த அனைத்து ஊழியர்கள், பேராசிரியர்களின் மறுமை சிறக்க இருகரமேந்தி நன்றியுடன் பிரார்த்திக்கின்றோம்.

சில பத்தாண்டுகளுக்கு முன் நமது கல்லூரியை தேடிவந்து பல வெளிநாட்டு மாணவர்கள் (ஆப்பிரிக்கர்கள்) படித்த நினைவுகள் நெஞ்சோடு இன்னும் நிழலாடுகிறது. இத்தனைக்கும் அவர்கள் தங்கிப்படிக்கும் அளவுக்கு நமதூரின் கட்டமைப்பு இருக்கவில்லை, இன்றும் இல்லை.

காடு, செடிகளுக்கு மத்தியில் சாதாரண சிமெண்ட் ஓட்டுக்கட்டிடங்களில் நடந்து வந்த நமது கல்லூரி இன்று பலரின் உழைப்பால் ஒரு வளர்ந்த நகரத்தில் செயல்படும் கல்லூரிக்கு இணையாக பொலிவுற்று விளங்குகின்றது அல்ஹம்துலில்லாஹ், இது புறத்தோற்றம்.

இன்றுள்ள பேராசிரியப் பெருந்தகைகளின் முயற்சியால் மாணவர்களுக்கு வழிகாட்டும் பல்வேறு கருத்தரங்குகள், வேலைவாய்ப்பு முகாம்கள் என நடத்தி அசத்தி வருகின்றீர்கள், இந்த அகத்தோற்ற வளர்ச்சியை சமூக ஊடகங்கள் வழியாக அறிந்து மிக்க பெருமிதம் கொள்கின்றோம். இதையே நடந்து முடிந்தபின் செய்திகளாக தருவதைவிட நடக்குமுன் அறியத்தந்தால் நமது கல்லூரியில் பயிலும் நாங்கள் அறிந்த மாணவர்களையும் ஆர்வமூட்டி கலந்து கொள்ளச் செய்ய இயலும்.

மேலும், இந்தக் கருத்தரங்குகளில் மாணவர்களைவிட மாணவிகளே பெரும்பான்மையாக கலந்து கொள்கின்றனர், அதிலும் நமதூர் மாணவர்கள் மிக மிக அரிதாக கலந்து கொள்கின்றனர். எனவே, மாணவர்களும் அதிகம் பங்குகொள்ள ஆர்வமூட்டுவதுடன் நமதூர் மாணவர்களும் பயன்பெற அவர்களின் பெற்றோருக்கு தெரிவித்தாவது முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.


உங்களிடம் மேலும் சில கனிவான வேண்டுகோள்:

இன்று நமதூரை சேர்ந்த, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் உள்நாட்டிலும் பல சர்வதேச நாடுகளிலும் பொருளீட்டி வருகின்றனர் என்றாலும் வேறு எந்த நாடுகளையும் விட அதிகமானோர் பணியாற்றும் அமீரகத்தில் நமது அதிரையை சேர்ந்த பல மாணவர்கள் படும்பாட்டை உங்களிடம் சுட்ட விரும்புகிறேன்.

பட்டதாரியானால் போதும் என்ற மனநிலையுடன் படித்துவிட்டு அமீரகத்திற்குள் நுழையும் அதிரை மாணவர்கள் இங்கு நேர்முகத்  தேர்வை சந்திப்பதற்கும், ஆங்கிலத்தில் ஓரளவேனும் உரையாடுவதற்கும் மிகுந்த தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் பலர் பட்டதாரியாக இருக்கும் நிலையில் கல்வியறிவு அதிகம் தேவையில்லாத 'பைக் மெஸஞ்சர்' போன்ற ஆபத்தான பணிகளையே தேர்ந்தெடுக்கின்றனர், இந்த நிலைக்கு அவர்களுக்கு முன்வந்து அமீரகத்தில் பணியாற்றும் அவர்களின் நண்பர்களின் தவறான வழிகாட்டலும் இன்னொரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, நமது கல்லூரி மாணவர்கள் ஓரளவு ஆங்கிலத்தில் பதிலளிக்கவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் தினசரி வகுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் மனநல வல்லுனர்களை கொண்டு நம்பிக்கையளிக்கும் ஆலோசணை கருத்தரங்குகளையும் அடிக்கடி நடத்திட வேண்டுகிறோம்.

மிக முக்கியமாக, பேராசிரியப் பெருந்தகைகளே! உங்களுடைய திறமைகளை, அர்ப்பணிப்பு உணர்வுகளை, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் உங்களுடைய நல்லெண்ணத்தை மதிக்கும் அதேவேளையில் உங்களுக்குப் பின்னும் இத்தூய பணிகளை தொடர்ந்து செய்திடும் கல்வி வாரிசுகளை உருவாக்கிவிட்டு செல்வதும் உங்களுடைய கடமை என்பதை உணர்ந்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளை இயன்றளவு இப்பொழுதே செய்யத் துவங்குவீர் எனவும் நம்புகிறோம்.

Wednesday, October 19, 2016

வேடிக்கை மனிதர்களா நாம் ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.

அதேபோல் இன்ஷாஅல்லாஹ் வியாழக்கிழமை 20th Oct' 2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு 08:30 மணிஅளவில் மெளலவி ரியாஸ் இப்னு தஹான் அவர்கள்    

வேடிக்கை மனிதர்களா நாம் ? 

என்ற தலைப்பில்  MTCT மர்க்கஸில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்


For Madukkur Thowheed Charitable Trust


Wednesday, October 12, 2016

துபையில் 14-10-2016 வெள்ளி மாலையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்...
துபை அல்மனார் சென்டரில்
மார்க்க விளக்க நிகழ்ச்சி

சிறப்புரை: மௌலவி. அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள்
(முதல்வர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி-காயல்பட்டிணம்)

14-10-2016 வெள்ளிக்கிழமை
மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணிவரை


அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும்.

அதிராம்பட்டினத்தில் புதிய தொழில் முனைவோருக்கான மாபெரும் பயிற்சி முகாம்: 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்ய அழைப்பு !

அதிராம்பட்டினம், அக்-12
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
பல நூற்றாண்டுகளாக அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை முதலான கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இலங்கை, பர்மா, மலேயா, சிங்கப்பூர், ஹாங்காங், அரபு வளைகுடா நாடுகள் ஆகியவற்றுடன் கடல் வாணிபம் செய்துவந்தார்கள் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.  இந்த வணிக வரலாற்று முன்மாதிரியை நாம் மறந்துவிடக் கூடாது.

மிக அண்மைக் காலமாக, அதாவது 1960 – 1970 களில் அரபு வளைகுடாப் பகுதியில் எண்ணெய் வளம் கொழிக்கத் தொடங்கியபோது நமது இளந்தலைமுறையினர் அந்தப் பகுதிகளுக்குச் சென்று, தொழில் பயிற்சி பெற்றவர்களாகவும் ( Skilled ), அடிமட்டப் பணியாளர்களாகவும் ( Unskilled ) வேலைகள் செய்து, தம் பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டனர்.  இந்தப் போக்கு எவ்வளவு நாளைக்கு?  அரபு நாடுகளின்  எண்ணெய் வளம் குறைந்தால், அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், நாம் என்ன செய்வது?  நம் சந்ததிகளுக்குப் பிழைப்பு வேண்டாமா?  அவர்களின் எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குரியாக்க வேண்டுமா?
இத்தகைய அவல நிலையைப் போக்குவதற்குத்தான், நாங்கள் பல மாதங்களாகச் சிந்தனை வயப்பட்டு, நம் மக்களைத் தொழில் முனைவோராகவும், பெற்ற பணியறிவையும் பட்டறிவையும் முறையாக நமது நாட்டிலேயே பயன்படுத்தி, அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவதற்கான ஒரு பயிற்சிப் பட்டறையை Entrepreneurship Development Program என்ற பெயரில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ்.

நமது நாட்டிலேயே நமக்கென ஒரு தொழில் அமைந்துவிட்டால், அது நமக்குப்பின் வரவிருக்கும் நம்முடைய பல தலைமுறையினருக்குப் பயனளிக்கும் அல்லவா?  டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், BSA Group போன்ற வணிக நிறுவனங்கள் சிறிய அளவில் தோன்றி, இன்று பெரும்பெரும் வணிக ஆளுமைகளாக (Conglamorates) வளர்ந்து, அவர்களின் சந்ததிகளுக்குப் பயன்பட்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது அல்லவா?
இவ்வடிப்படையில்தான், SEAPOL குரூப்  Entrepreneurship Development Program (EDP) என்ற திட்டத்தை உருவாக்கி, சென்னை United Economic Forum, திருச்சி MAM College of Engineering and Technology ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, நம் அதிரை மக்களுக்குப பயிற்சியளிக்கும் அருமையான வாய்ப்பை ஏற்பட்டுத்தித் தர முன்வந்துள்ளது.

ஆர்வமும் தகுதியும் எதிர்பார்ப்பும் உடையவர்களும், வெளிநாடுகளிலிருந்து விடை பெற்றுத் திரும்பி வந்தவர்களும், ஊரிலுள்ள ஆர்வலர்களும் இந்தப் பயிற்சிமுகாமில் கலந்துகொள்ளலாம்.  குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள அனைவரும் கீழ்க்காணும் இணைப்பில் தம் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

பயிற்சி முகாம் நடக்கும் இடம்: 
ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் ( Richway Garden Restaurant ), பட்டுக்கோட்டை ரோடு, அதிராம்பட்டினம்.  
நாள்:  
2016 டிசம்பர் 24 ஆம் தேதி, சனிக்கிழமை 
நேரம்: 
காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.  

மேற்கொண்டு விவரம் வேண்டுவோர், கீழ்க்காணும் இணைய தளங்களுக்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம்:
http://www.unitedeconomicforum.org/    http://www.mamcet.com/

அன்புடன் அழைக்கும்,
M.S TAJUDEEN
Managing Director,
Seaport Logistics Pvt. Ltd.