உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, October 31, 2011

நரகில் விடுதலை கிடைக்கும் நாள்...‏


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு



இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

Dear Brothers & sisters please take your time to read this mail and  FOLLOW IT IN  YOUR LIFE and forwarding it to all your friends and family insha allah.

Jasakkallah Khairan

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது அவனுடைய மிககப்பெரிய கருணையாகும்.சிறப்புக்குரிய அந்தநாட்களாவன:-

1. ரமளான் மாதம்,
2. ரமளானின் கடைசிப் பத்து நாட்கள்.
3. ரமளானின் லைலத்துல் கத்ரு இரவு.
4. ஜும்ஆவுடைய நாள்.
5. ஜும்ஆவுடைய நாளில் இமாம் மிம்பரில் ஏறியது முதல் இறங்குவதுவரை.
6. ஒவ்வொரு நாளும் பிந்திய இரவு.
7. அந்த வரிசையில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்! இந்நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன! அல்லாஹ் கூறுகிறான்

Friday, October 28, 2011

துபையில் பைக் விபத்து

டீ குடிப்பது போல் சாதாரண நிகழ்வாகிவிட்ட துபை பைக் விபத்துகளை செய்தியாக தர வேண்டுமா? என சிலர் புருவம் சுருக்குவது தெரிகிறது. நாம் ஆடாவிட்டாலும் நம் சதை ஆடத்தானே செய்யும்.

நேற்று (27.10.2011 வியாழன்) பகல் சுமார் 1 மணியளவில் மக்தூம் பிரிட்ஜ் வழியாக பர்துபை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகையில் பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதி அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த ஜாஹிர் ஹூசைன் என்ற சகோதரர் தூக்கி வீசப்பட்டு காயங்களுடன் அல் ராஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தில்லாமல் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

நாம் மற்றவர்கள் மீது மோதினாலும் சரி, மற்றவர்கள் நம் மீது மோதினாலும் சரி இழப்பு நமக்குத் தான் என்ற சொல்லைப் போல, மிதமான வேகத்தில் வந்தவருக்கே இந்த நிலையென்றால் வேகத்தில் பறப்பவர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? 

இன்னும் நமதூர் பட்டதாரி இளைஞர்கள் சிலர் துபைக்கு வந்தும் அலுவலக வேலைக்கு முயலாமல் பைக்கு தான் ஓட்டுவேன் என அடம்பிடிக்கும் போக்கு அவர்களின் தன்னம்பிக்கை இழந்த நிலையா அல்லது நட்பால் நாசமா என பட்டிமன்றம் வைக்கலாம்.

வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் பைக் ஓட்டாதே என சொல்லி அனுப்புவதையும் தங்களின் ஓர் பொறுப்பாக கொள்ள வேண்டும். லெக்சர் அடிக்கும் வாத்தியார்கள் கல்வியுடன் நன்னம்பிக்கையும் சேர்த்து போதித்தல் நலம். நம்ம ஊரு கல்வித்தரம் திருவிழா கூட்டத்தில் தொலைந்து அழும் மாணவர்களையே உருவாக்கியுள்ளது.

விபத்து குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ள கீழ்க்காணும் லிங்கை சுட்டுங்கள்.




விபத்து – உரை. மவ்லவி அமீறுல் அன்சார் (இலங்கை)

செத்த பாம்பிற்கு வெடிகுண்டு விளம்பரம்

அத்வானி என்கிற ஒரு காவி பயங்கரவாதி ஊழலை ஒழிக்கப் போவதாக நாடு முழுவதும் ரத யாத்திரை சென்று காமெடி பண்ணிக் கொண்டு திரிவதை அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் கட்சியினர் ஊழல் செய்து கையும் களவுமாக மாட்டிவரும் வேளையில் அதை கண்டிக்க வக்கில்லாதவர் ஊரை திருத்த கிளம்பியுள்ளார், கிளம்பட்டும்.  கட்சியிலும் மரியாதையில்லை சங் தலைமையும் கைவிட்டு விட்ட நிலையில் வேலையில்லாதருக்கு டைம் பாஸ் ஆக வேண்டாமா?

பொதுவாகவே அத்வானி ரத்த யாத்திரை கிளம்பினால் வழியெங்கும் வன்முறை வெடிக்கும் அப்பாவி முஸ்லீம்களின் உயிர்கள் போகும் ஆனால் இம்முறை இவருடைய ரத்த ஊர்வலத்தை சீண்ட நாதியில்லை, விளம்பரத்திற்கும் வழியில்லை, யாத்திரை திட்டமிட்ட பாதையில் சும்மா போய் கொண்டுள்ளதை கண்டு அவரே வெறுத்து போயுள்ளார்.

அப்படித்தான் நேற்று மதுரைக்கு வந்ததும், இன்று மதுரையிலிருந்து ராஜபாளையம் நெடுஞ்சாலை வழியாக போகயிருந்ததும், அந்த வழியில் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி என்ற இடத்தில் இவரை, இந்த செத்த பாம்பை கொல்ல 8 அடி நீள பைப் வெடிக்குண்டு ஒரு பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்ததாம், பொதுமக்கள் கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவல் சொன்னார்களாம், மீண்டும் தங்கள் குலத்தொழிலை ஆரம்பித்துவிட்ட அயோக்கியர்கள் கோவையுடன் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

பைப் வெடிக்குண்டு உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் சங் பயங்கரவாதி யாரோ தான் வைத்திருக்க வேண்டும் ஏனெனில் அத்வானி கிளம்பியுள்ளது நரமோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கான பலம் காட்டும் யாத்திரை. தமிழகத்தில் நடப்பது நரமோடியின் தோழியின் ஆட்சி என்பதும் சிறு குழந்தையும் அறிந்த ஒன்று. (தோழியின் வெறுப்புக்குள்ளனதால் செலக்டிவ் அம்னீஷியா தொற்றியவர்) அல்லது உப்பு சப்பில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் ஊர்வலத்திற்கு பரபரப்பு விளம்பரம் தேட அத்வானி ஆட்களே குண்டு வைத்திருக்கக்கூடும்.

இந்தியாவில் தற்போது சர்வ மட்டத்திலும் நீக்கமற நிறைந்துள்ள காவி பயங்கரவாதிகளின் கைகளிலே குண்டுகள் புழங்குவதை புலனாய்வு, உளவுத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்த செத்த பாம்பை கொன்று தியாகியாக்குவதற்கு மக்கள் இன்னும் ஏமாளிகள் அல்ல. கல் குவாரிகள் நிறைந்த அந்த பகுதியில் பைப் வெடிக்குண்டு பயன்பாடு சாதாரணமான ஒன்று என புதிய தலைமுறை சேனல் புட்டு வைத்திருப்பதையும் கருத்திற்கொண்டு காவல்துறை தன் கடமையை செய்ய வேண்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அது அத்வானியாக இருந்தாலும் சரியே.

அதிரை அமீன்

Thursday, October 27, 2011

உழ்ஹிய்யா எனும் குர்பானி & ஹஜ் வழிகாட்டி (குறிப்புகள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்குர்ஆனில் பின்வருமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
'எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.
அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, 'என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?' எனக் கேட்டார். அ(தற்க)வர், 'என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷh அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!' என்று கூறினார்.

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்

அதிரையில் நிலவிய உள்ளாட்சித் தேர்தல் சூடு 25.10.2011 பதவியேற்பு வைபவத்தன்று பெய்த மழையுடன் குளிரத் தொடங்கியுள்ளது. பேரூர் தலைவராகவும் வார்டு கவுன்சிலர்களாகவும் பொறுப்பேற்ற அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

அனைத்து சகோதர நல்லுள்ளங்களும் நமதூருக்கு வேண்டிய நலப்பணிகளை மீடியாக்கள் வழியே பட்டியலிட்டுள்ளதை புதிய பொருப்பாளர்களான தாங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் அதில் சகோதரர் ஜமாலுதீன் அவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைமுறையிலுள்ள பல நல்ல பணிகளை குறிப்பிட்டுள்ளார்கள். புதிய பேரூர் நிர்வாகிகளான தாங்கள் அதே போன்ற பணிகளை இன்னும் செம்மையாக செய்திடுவீர்கள் என நம்புகிறோம். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நமதூருக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை பெற்றுத்தர வேண்டும்.

AIM

Wednesday, October 26, 2011

மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்‏

மனவியல்வு சிக்கல் (காம்ப்ளக்ஸ்) இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின், அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான். இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது, ஒரு மனிதனை Superiority complex என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த மனப் பாங்கானது, அறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒரு மனிதனை திருப்பி, அவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்தி, அவனது ஆளுமையில் (Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவர் தன்னுடைய சுய நன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், வேறு யார் அவரின் நலனில் அக்கறை செலுத்துவர் என்ற கேள்வி எழுவது இயற்கையே. மனித மனமானது, இயல்பிலேயே தன்னுடைய சுய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது. ஆனால் சமூகத்தில் முக்கியத்துவம் பெற நினைக்கும் ஒருவர் தன்னோடு சேர்த்து மற்றவர்களையும் பார்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு Superiority complex இருந்தால், அவர் தன்னைச் சுற்றியுள்ள பிற மனிதர்களை சமமாக மதிக்கவில்லை மற்றும் எந்தவித நல்ல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அர்த்தம். இந்தவிதமான மனோநிலை ஒரு தனிமனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்றில்லை, ஒரு சமூகத்திற்கு, ஒரு அரசியல் கட்சிக்கு, ஏன், ஒரு நாட்டிற்கே உரித்தானது. (உம்: வலுவான ஒரு பெரிய நாடு சிறிய நாடுகளை மதிப்பதில்லை மற்றும் அதை சுரண்டுகிறது)

Superiority complex மூலம் ஒரு மனிதனுக்கு ஏற்படும் தீமையை விட, Inferiority complex மூலம் அதிக தீமை விளைகிறது. தாழ்வு மனப்பான்மை உள்ள ஒரு மனிதனால் எதையுமே சாதிக்க முடியாது. ஒரு மனிதன் பெரியவனா? அல்லது சிறியவனா? என்பது, அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை வைத்தே அமைகிறது.

உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தி, உங்களை மற்றவர் ஆதிக்கம் செய்ய நீங்கள் அனுமதித்து விட்டால், மனவியல்பு சிக்கல்களால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட ஒரு எளிய வழி என்னவெனில், இந்த உலகில் கடவுள் அல்லது இயற்கையைவிட உயர்ந்தது எதுவுமில்லை என்ற எண்ணத்திற்கு நீங்கள் வருவதுதான். அப்படி நினைக்கையில், உங்களுக்கு மனஅமைதி உண்டாகிறது. நினைத்ததை செய்யும் துணிவு கிடைக்கிறது. பிற மனிதர்களின் திறமைகளைப் பார்த்து நீங்கள் மிரள மாட்டீர்கள். ஏனெனில், உங்களிடம் இருக்கும் திறமையை நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

மனவியல்பு சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகளை இங்கு அலசுவோம்.....

Monday, October 24, 2011

கிட்னி அறிந்ததும் அறியாததும்.

டாக்டர். சௌந்தரராஜன்
"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துவக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-
யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.
பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?
முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.
அதை எப்படி கண்டுபிடிப்பது..?
வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.
 
அறிகுறிகள் இருக்குமா..?
இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.
எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?
தண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.
தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?
அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
உணவு முறைகள் என்ன?
எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.
எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?
வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..?
அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...?
வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?
முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.
சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.
இல்லாவிட்டால்...
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.
அப்புறம்...
இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.
இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?
இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.
கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?
என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?
முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
 
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?
முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.


Saturday, October 22, 2011

குர்பானியின் சட்டங்கள்


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக - ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளில் எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கி புனிதப் பயணத்தை மேற்கொண்டு ''ஹஜ்'' எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

''மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!''(அல்குர்ஆன் 022:028) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று கால காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.


'என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம்.
நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்."
 (அல்குர்ஆன், 037:100-108)

Friday, October 21, 2011

ஏரிப்புறக்கரை ஊராட்சியில் 2 முஸ்லீம் கவுன்சிலர்கள்

உள்ளாட்சி வரலாற்றில் முதன்முறையாக ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு 2 முஸ்லீம் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றிபெற்ற கவுன்சிலர் பெயர்கள் பச்சை எழுத்தில் (Winners in Green Letters)

வார்டு – 1 : பிலால் நகர் மற்றும் நண்டுவெட்டி வெப்பல் (பிலால் பள்ளிக்குக்கு பின்புறமுள்ள அனைத்து பகுதிகள்)

வேட்பாளர்கள் சின்னம்
1. சம்சுன் பீவி க/பெ. நாகூர் கனி சீப்பு
2. மெகருன்னிஷா க/பெ. சித்தீக் ரஹ்மான் திறவுகோல்
3. ஆயிஷா அம்மாள் க/பெ. கமாலுதீன் கட்டில்
4. ரஹ்மத் நிஷா க/பெ. பஷீர் அஹமது கார்

வார்டு – 2 : பிலால் நகர் (பிலால் பள்ளி முன்புற ஏரியா), எம்.எஸ்.எம்.நகர் மற்றும் நாகம்மாள் கோயில் தெரு 

வேட்பாளர்கள் சின்னம்
1. நூர்ஜஹான் க/பெ. சாகுல் ஹமீது  திறவுகோல் (SDPI) + பிலால் பள்ளி நிர்வாகிகள் ஆதரவு
2. ரஹ்மத் நாச்சியா க/பெ. முஹமது அமீன் கார்
3. விஜயா க/பெ. சுரேஷ் கட்டில்
4. மெல்ட்டா க/பெ. முத்துக்குமார் சீப்பு

அதிமுகவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் தலைவராக (பிலால் பள்ளி நிர்வாகிகள் ஆதரவு) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கத்திரிக்காய் சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளார். (ஊராட்சி பகுதிகளுக்கு கட்சி சின்னம் கிடையாது).

Thursday, October 20, 2011

அதிரை பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட
அஸ்லம் சுமார் 1200 வோட்டு வித்தியாசத்தில் பெற்றார்கள்.



1. மு. அகமது மொய்தீன் - சுயேட்சை - மேசை மின் விசிறி

2. ஷா. அப்துல் அஜீஸ் - அதிமுக - இரட்டை இலை

3. மு. அப்துல் முனாப் - சுயேட்சை - பேரூந்து (பஸ்)

4. தா. அப்துல் ஹலீம் - சுயேட்சை - சட்டை

5. சா.ஹ. அஸ்லம் - திமுக - உதய சூரியன்

6. அ. சேக் தாவூது - கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள்

7. ரெ. தமிழ் செல்வம் - தேமுதிக - முரசு

8. ம.மீ.செ. பஷீர் அகமது - காங்கிரஸ் - கை

9. அ. பாரூக் - சுயேட்சை - கணிப்பொறி

10. மு.நைனா முகமது - சுயேட்சை - பேனா

11. மு.மு. ரஹ்மத்துல்லா - பகுஜன் சமாஜ் - யானை

12. ப. விஜயகுமார் - சுயேட்சை - புத்தகம்
வெற்றிபெற்ற கவுன்சிலர் பெயர்கள் பச்சை எழுத்தில் (Winners in Green Letters)
 • WINNERS :
 • Ward 1 DMK
 • Ward 2 AIADMK
 • Ward 3 AIADMK
 • Ward 4 AIADMK
 • Ward 5 DMK (அன்னப்போஸ்ட்) (DMK ஆதரவு)
 • Ward 6 DMK (அன்னப்போஸ்ட்) (ADMK ஆதரவு)
 •  Ward 7 சுயேட்சை (India Communist ஆதரவு)
 •  Ward 8 சுயேட்சை
 • Ward 9 DMK
 • Ward 10 CONG
 • Ward 11 DMK
 • Ward 12 DMK
 • Ward 13 DMK
 • Ward 14 DMK
 • Ward 15 ADMK
 • Ward 16 சுயேட்சை ( Sangam)
 • Ward 17 சுயேட்சை ( Sangam)
 • Ward 18 சுயேட்சை ( Sangam)
 • Ward 19 சுயேட்சை (Sangam)
 • Ward 20 DMK
 • Ward 21 சுயேட்சை (Sangam)



வார்டு எண் 1

1. ஜ.அப்துல் கலாம் - தேமுதிக - முரசு

2. செ.அப்துல் ரஹ்மான் - சுயேட்சை - தண்ணீர் குழாய்

3. கோ.அய்யப்பன் - அதிமுக - இரட்டை இலை

4. சு.அய்யாவு - திமுக - உதய சூரியன்

5. பா.சந்திரா தேவி - கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள்

6. ப.தண்டபாணி - காங்கிரஸ் - கை

7. சா.ஜாபர் சாதிக் - மமக - வைரம்


வார்டு எண் 2

1. மீ.உதயகுமார் - அதிமுக - இரட்டை இலை

2. இராம.குணசேகரன் - திமுக - உதய சூரியன்

வார்டு எண் 3

1. சு.இன்பநாதன் - திமுக - உதய சூரியன்

2. சா.சண்முக வேல் - சுயேட்சை - தென்னை மரம்

3. த. சந்திர ஜோதி - தேமுதிக - முரசு

4. மு. சாகுல் ஹமீது - மமக - வைரம்

5. க. சிவக்குமார் - அதிமுக - இரட்டை இலை

6. கோ.திலகராஜ கட்டபொம்மன் - காங்கிரஸ் - கை


வார்டு எண் 4

1. மு.செல்வராஜ் - திமுக - உதய சூரியன்

2. அ.பிச்சை - அதிமுக - இரட்டை இலை

3. இ.ராமசாமி - காங்கிரஸ் - கை


வார்டு எண் 5

1. சி.விஜய ரெத்தினம் - அன்னபோஸ்ட்


வார்டு எண் 6

1. ஜெ.பாஞ்சாலன் - அன்னபோஸ்ட்


வார்டு எண் 7

1. நா.காளிதாஸ் - சுயேட்சை - மேற்சட்டை (கோட்டு)

2. ச.பாஜிலா பானு - அதிமுக - இரட்டை இலை


வார்டு எண் 8

1. ஹ.அகமது அன்சாரி - திமுக - உதய சூரியன்

2. அ.சாகுல் ஹமீது - சுயேட்சை - தென்னை மரம்

3. மு.முகமது இக்பால் - சுயேட்சை - அரிக்கேன் விளக்கு

4. மு.ஹாஜா முகைதீன் - சுயேட்சை - அசைந்தாடும் நாற்காலி


வார்டு எண் 9

1. கு.பசுல் கான் - திமுக - உதய சூரியன்

2. நூ.முகமது ராவுத்தர் - அதிமுக - இரட்டை இலை

3. சா.ரஹ்மத் கனி - தேமுதிக - முரசு

4. அ.லெ.மு.ஹசன் - கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள்


வார்டு எண் 10

1. சே.ஆய்ஷா அம்மாள் - மமக  - மேஜை விளக்கு

2. நை.சபுரன் ஜமீலா - காங்கிரஸ் - கை

3. இ.தீனுன்னிசா - திமுக - உதய சூரியன்

4. சே.மதார் பாத்திமா - தேமுதிக - முரசு

5. மு.ரகுமா பானு - மமக - வைரம்

6. ந.ரஹ்மத் நாச்சியார் - அதிமுக - இரட்டை இலை

7. அ.ஜெசிமா பேகம் - சுயேட்சை - தண்ணீர் குழாய்


வார்டு எண் 11

1. அ.உம்மல் மர்ஜான் - திமுக - உதய சூரியன்

2. பீ.தெசிமா - மமக  - தண்ணீர் குழாய்

3. இ.பரிதா - அதிமுக - இரட்டை இலை

4. தே.ரூபிணி - சுயேட்சை - தென்னை மரம்

5. கி.ஜெயக்கொடி - சுயேட்சை - வைரம்


வார்டு எண் 12

1. நூ.மு.செய்யது முகம்மது - திமுக - உதய சூரியன்

2. மு.அ.முகமது ஹனீபா  - வைரம்


வார்டு எண் 13

1. ஹ.அப்துல் காதர் - திமுக - உதய சூரியன்

2. கா.ஷே.முகமது இக்பால் - சுயேட்சை - தென்னை மரம்

3. ஜ.முகமது இலியாஸ் - சுயேட்சை - உலக உருண்டை

4. ஜ.முகமது சம்சுதீன்  - வைரம்


வார்டு எண் 14

1. மு.அகமது சலீம் - சுயேட்சை - உலக உருண்டை

2. அ.ஜ.அப்துல் லத்தீப் - அதிமுக - இரட்டை இலை

3. மு.அ.சேக் அப்துல்லா  - வைரம்

4. நெ.பாத்திமா - தேமுதிக - முரசு

5. மு.முகமது சரிபு - திமுக - உதய சூரியன்


வார்டு எண் 15

1. சா.அஜ்ரன் அலிமா - மமக - வைரம்

2. நெ.நூருல் பரிதா - திமுக - உதய சூரியன்

3. நி.ஜரினா அம்மாள் - காங்கிரஸ் - கை

4. ஷாஜஹான் பீவி - அதிமுக - இரட்டை இலை


வார்டு எண் 16

1. மு.நிலோபர் - சுயேட்சை - தண்ணீர் குழாய்

2. ஹைருன்னிசா - அதிமுக - இரட்டை இலை


வார்டு எண் 17

1. அ.உம்மல் பௌசியா - அதிமுக - இரட்டை இலை

2. மு.ரபீக்கா - சுயேட்சை - தண்ணீர் குழாய்


வார்டு எண் 18

1. நூ.அபுதாஹிர் - சுயேட்சை - அரிக்கேன் விளக்கு

2. மு.மொய்தீன் - திமுக - உதய சூரியன்

3. தூ.ஜெகபர் நாச்சியா - தேமுதிக - முரசு


வார்டு எண் 19

1. கௌஷர் நிஷா - சுயேட்சை - தண்ணீர் குழாய்

2. சௌதா - சுயேட்சை - வைரம்

3. நெ.ஹாஜரா அம்மாள் - திமுக - உதய சூரியன்


வார்டு எண் 20

1. சித்ரா - திமுக - உதய சூரியன்

2. கா.பஞ்சவர்ணம் - தேமுதிக - முரசு

3. சீ.பானுமதி - அதிமுக - இரட்டை இலை

4. சு.ரேணுகா - காங்கிரஸ் - கை


வார்டு எண் 21

1. செ.பைசல் அகமது - தேமுதிக - முரசு

2. செ.முகமது இப்ராஹீம் - சுயேட்சை - வைரம்

3. அ.மு.க.முகமது ஹனீப் - சுயேட்சை - தண்ணீர் குழாய்