உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 28, 2011

செத்த பாம்பிற்கு வெடிகுண்டு விளம்பரம்

அத்வானி என்கிற ஒரு காவி பயங்கரவாதி ஊழலை ஒழிக்கப் போவதாக நாடு முழுவதும் ரத யாத்திரை சென்று காமெடி பண்ணிக் கொண்டு திரிவதை அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் கட்சியினர் ஊழல் செய்து கையும் களவுமாக மாட்டிவரும் வேளையில் அதை கண்டிக்க வக்கில்லாதவர் ஊரை திருத்த கிளம்பியுள்ளார், கிளம்பட்டும்.  கட்சியிலும் மரியாதையில்லை சங் தலைமையும் கைவிட்டு விட்ட நிலையில் வேலையில்லாதருக்கு டைம் பாஸ் ஆக வேண்டாமா?

பொதுவாகவே அத்வானி ரத்த யாத்திரை கிளம்பினால் வழியெங்கும் வன்முறை வெடிக்கும் அப்பாவி முஸ்லீம்களின் உயிர்கள் போகும் ஆனால் இம்முறை இவருடைய ரத்த ஊர்வலத்தை சீண்ட நாதியில்லை, விளம்பரத்திற்கும் வழியில்லை, யாத்திரை திட்டமிட்ட பாதையில் சும்மா போய் கொண்டுள்ளதை கண்டு அவரே வெறுத்து போயுள்ளார்.

அப்படித்தான் நேற்று மதுரைக்கு வந்ததும், இன்று மதுரையிலிருந்து ராஜபாளையம் நெடுஞ்சாலை வழியாக போகயிருந்ததும், அந்த வழியில் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி என்ற இடத்தில் இவரை, இந்த செத்த பாம்பை கொல்ல 8 அடி நீள பைப் வெடிக்குண்டு ஒரு பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்ததாம், பொதுமக்கள் கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவல் சொன்னார்களாம், மீண்டும் தங்கள் குலத்தொழிலை ஆரம்பித்துவிட்ட அயோக்கியர்கள் கோவையுடன் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

பைப் வெடிக்குண்டு உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் சங் பயங்கரவாதி யாரோ தான் வைத்திருக்க வேண்டும் ஏனெனில் அத்வானி கிளம்பியுள்ளது நரமோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கான பலம் காட்டும் யாத்திரை. தமிழகத்தில் நடப்பது நரமோடியின் தோழியின் ஆட்சி என்பதும் சிறு குழந்தையும் அறிந்த ஒன்று. (தோழியின் வெறுப்புக்குள்ளனதால் செலக்டிவ் அம்னீஷியா தொற்றியவர்) அல்லது உப்பு சப்பில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் ஊர்வலத்திற்கு பரபரப்பு விளம்பரம் தேட அத்வானி ஆட்களே குண்டு வைத்திருக்கக்கூடும்.

இந்தியாவில் தற்போது சர்வ மட்டத்திலும் நீக்கமற நிறைந்துள்ள காவி பயங்கரவாதிகளின் கைகளிலே குண்டுகள் புழங்குவதை புலனாய்வு, உளவுத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்த செத்த பாம்பை கொன்று தியாகியாக்குவதற்கு மக்கள் இன்னும் ஏமாளிகள் அல்ல. கல் குவாரிகள் நிறைந்த அந்த பகுதியில் பைப் வெடிக்குண்டு பயன்பாடு சாதாரணமான ஒன்று என புதிய தலைமுறை சேனல் புட்டு வைத்திருப்பதையும் கருத்திற்கொண்டு காவல்துறை தன் கடமையை செய்ய வேண்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அது அத்வானியாக இருந்தாலும் சரியே.

அதிரை அமீன்

No comments:

Post a Comment