உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, October 11, 2011

மருத்துவப் புரட்சி வந்தாச்சு‏ (ஹைபிரிட் சிகிச்சை)

இதயத்தை நிறுத்தாமல்... எலும்பை உடைக்காமல்! வந்தாச்சு ஹைபிரிட் சிகிச்சை
தயத்தில் ஒரே சமயத்தில் இரண்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் ஹைபிரிட் முறையை, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 50 பேருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பார்த்த பின்னரே அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.

இதுகுறித்து, மருத்துவமனையின் இதய அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். 
''இதயஅறுவை சிகிச்சை செய்வது என்றால், மார்பக எலும்பை வெட்டித்தான் செய்யமுடியும். அப்படி உள்ளே சென்றால்தான் இதயத்தின் எல்லா அறைகளையும் நேரடியாகப் பார்த்து அறுவைசிகிச்சை செய்யலாம். ஆனால், அதிக நாட்கள்மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும்.
வயிற்றுப் பகுதியில் அதாவது பித்தப்பை, சிறுநீரகம் அகற்றம் போன்ற எந்தப்பிரச்னை என்றாலும் வயிற்றைக் கிழித்து ஓப்பன் சர்ஜரி தான் செய்துவந்தனர். பிறகு லேப்ராஸ்கோப்பி வந்ததும், சிறுதுளை மட்டுமே போட்டு அகற்றிவிடுகிறார்கள். 99.9 சதவீதம் இதயத்தில் சரிபார்ப்பு மட்டுமே செய்யமுடியும் என்பதால் நிறையத் தையல்கள் போடவேண்டும். தையல் போடப் பயன்படும் இழையின்அளவு, தலைமுடியின் பருமனில் பாதிதான் இருக்கும். மனித உடல் முப்பரிமாணம் ஆகும். அதை இரு பரிமாண ஸ்கோப் (கேமரா) மூலம் படம் எடுத்து, மானிட்டரில் பார்த்து அறுவை சிகிச்சை மற்றும் தையல் போடுவது சிக்கலானது. 

இப்போது விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ஹைடெபனிஷன் கேமரா, மானிட்டர் வந்துவிட்டன. இதனால் தெளிவாகப் படம் எடுக்க முடிவதால், மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் சிறுதுளை மூலம் செய்யும் அளவுக்கு அதிரடி மாற்றங்கள் வந்துவிட்டன. மார்பு எலும்பை வெட்டாமல் 3 முதல் 4செ.மீ. அளவுக்கு மட்டுமே துளையிட்டு, கூடுதலாக 2மி.மீ. அளவுக்கு சிறுதுளைகள் போட்டு அறுவைசிகிச்சை செய்வது சாத்தியமாகிவிட்டது. 2.5மி.மீ. அளவு ரத்தக்குழாயைக்கூடத் திரையில் தேவையான அளவுக்குப் பெரிதாக்கிப் பார்க்கமுடிகிறது. சிறிய அளவு மட்டுமே வெட்டப்படுவதால், வலியும் குறைகிறது. நோயாளிகளும் விரைவில் குணம் அடைகின்றனர். இப்போது இந்த மினிமலி இன்வேஸிவ் தொழில்நுட்பத்துடன், மற்றொரு தொழில்நுட்பத்தையும் சேர்த்து ஹைபிரிட் இதய அறுவைசிகிச்சையை நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
 
இதயத்தில் ஓட்டை இருந்தால், அதை இழுத்துவைத்துத் தைப்பது கிடையாது.உலோகத் தகட்டை வைத்து மூடுவோம். ஓப்பன் சர்ஜரியாக இருந்தால் பிரச்னை இல்லாமல் தகட்டை எளிதில் உள்ளே கொண்டு போய்விடலாம். ஆனால், சிறிய துளைகள் மட்டுமே இடப்படுவதால் உலோகத் தகட்டை கொண்டுபோவதில் சிக்கல் இருந்தது. இப்போது சுருட்டும் தன்மையிலான உலோகத் தகடு வந்துள்ளது. உள்ளே சென்றதும் அது விரிந்து அந்த இடத்தை மூடிக்கொள்ளும். இந்த சிகிச்சையை நாலைந்து வருடங்களாகவே செய்துவருகின்றனர். ஆனால், நோயாளியின் உடல் எடை 15 கிலோவுக்குக் கீழ் இருந்தால், இந்த அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இந்தப்பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் ஹைபிரிட் தொழில் நுட்பம். 

இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி மினிமலி இன்வேஸிவ் முறையுடன், மார்புபகுதியில் சிறிய துளையிட்டு அதன்வழியே ஷேப் மெமரி அலாயை உள்ளே செலுத்தி ஓட்டையை அடைத்துவிடுவோம். இதயம் துடித்துக் கொண்டிருக்கும்போதே, சிறப்பு ஸ்டெப்லைசர் கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த இதய ஓட்டைஅடைக்கும் செயல்பாடு, 20 நிமிடத்தில் முடிந்துவிடும். ரத்த இழப்பு மிகவும் குறைவு. இரண்டே நாட்களில் வீட்டுக்குப் போய்விடலாம். 2.5கிலோ எடை கொண்ட குழந்தைகளுக்குக்கூட அறுவைசிகிச்சை செய்ய முடிகிறது. அந்த அளவுக்கு இதயஅறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதய ஓட்டை அடைப்பு மட்டும் அல்ல, ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் மூலம்பைபாஸ் சர்ஜரி, இதய வால்வு பழுது பார்த்தல் மற்றும் வால்வு மாற்றம், சில பிறவி இதயக் குறைபாடுகளை சரிசெய்தல் போன்ற பல சிக்கல்களைக் களையமுடியும். 

அதற்காக இனி ஓப்பன் சர்ஜரி முறையே தேவை இல்லை என்று நினைக்கவேண்டாம். நோயாளியின் உடல் நிலை, தாங்கும் திறன் போன்றவற்றைப் பொறுத்துத்தான் அவருக்கு என்ன வகையிலான சிகிச்சை செய்யவேண்டும் என்பதை டாக்டர் முடிவுசெய்வார். இப்போதுதான் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் ஓப்பன் சர்ஜரிக்கு பதில் சிறுதுளை அறுவைசிகிச்சை முறையை மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை வரலாம்''என்றார்.
மருத்துவப் புரட்சி வந்தாச்சு என்றுதான் சொல்லவேண்டும்.
-பா.பிரவீன்குமார்
thanks to: adiraijailani

No comments:

Post a Comment