உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 28, 2011

துபையில் பைக் விபத்து

டீ குடிப்பது போல் சாதாரண நிகழ்வாகிவிட்ட துபை பைக் விபத்துகளை செய்தியாக தர வேண்டுமா? என சிலர் புருவம் சுருக்குவது தெரிகிறது. நாம் ஆடாவிட்டாலும் நம் சதை ஆடத்தானே செய்யும்.

நேற்று (27.10.2011 வியாழன்) பகல் சுமார் 1 மணியளவில் மக்தூம் பிரிட்ஜ் வழியாக பர்துபை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகையில் பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதி அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த ஜாஹிர் ஹூசைன் என்ற சகோதரர் தூக்கி வீசப்பட்டு காயங்களுடன் அல் ராஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தில்லாமல் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

நாம் மற்றவர்கள் மீது மோதினாலும் சரி, மற்றவர்கள் நம் மீது மோதினாலும் சரி இழப்பு நமக்குத் தான் என்ற சொல்லைப் போல, மிதமான வேகத்தில் வந்தவருக்கே இந்த நிலையென்றால் வேகத்தில் பறப்பவர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? 

இன்னும் நமதூர் பட்டதாரி இளைஞர்கள் சிலர் துபைக்கு வந்தும் அலுவலக வேலைக்கு முயலாமல் பைக்கு தான் ஓட்டுவேன் என அடம்பிடிக்கும் போக்கு அவர்களின் தன்னம்பிக்கை இழந்த நிலையா அல்லது நட்பால் நாசமா என பட்டிமன்றம் வைக்கலாம்.

வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் பைக் ஓட்டாதே என சொல்லி அனுப்புவதையும் தங்களின் ஓர் பொறுப்பாக கொள்ள வேண்டும். லெக்சர் அடிக்கும் வாத்தியார்கள் கல்வியுடன் நன்னம்பிக்கையும் சேர்த்து போதித்தல் நலம். நம்ம ஊரு கல்வித்தரம் திருவிழா கூட்டத்தில் தொலைந்து அழும் மாணவர்களையே உருவாக்கியுள்ளது.

விபத்து குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ள கீழ்க்காணும் லிங்கை சுட்டுங்கள்.
விபத்து – உரை. மவ்லவி அமீறுல் அன்சார் (இலங்கை)

No comments:

Post a Comment