உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, May 16, 2014

ADT - பரிசளிப்பு நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும் உளவியல் தீர்வும் பொதுக்கூட்டம்!அதிரை தாருத் தவ்ஹீத் வருடந்தோறும் நடத்தி வரும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் இந்த வருடமும் மே 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடை பெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற மாணவ மணிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிசிறப்பிக்கும் நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும் என்ற தலைப்பில் உளவியல் சிறப்புரையும் வரும் 17-மே-2014 சனிக்கிழமை மாலை அஸருக்குப் பிறகு அதிரை தக்வாப் பள்ளி அருகில் நடைபெறவுள்ளது.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அதிரை தாருத் தவ்ஹீத் அழைக்கிறது.


இப்படிக்கு,

அதிரை தாருத் தவ்ஹீத்

THanks to: adirainirubar

Saturday, May 10, 2014

விழிப்புணர்வு ஏற்படுத்திய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

ADTயால் அறிவிக்கப்பட்டபடி வெள்ளிக்கிழமை மாலை (09.05.2014) பிலால் நகர் தர்பியா மையத்திலும் சனிக்கிழமை மாலை (10.05.2014) A L மெட்ரிக் பள்ளியிலும் நடந்த மந்திரமா? தந்திரமா? என்ற நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்பும், இடையிடையேயும், முடிவாகவும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மக்களுக்கு விளக்கங்களை கூறி தெளிவுபடுத்தினார். நிகழ்ச்சி இறுதியிலும் பெண்கள் தாமாக முன்வந்து கேள்வி எழுப்பி தெளிவுபெற்றுச் சென்றது பெண்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்தது.


ஏமாற்றுப்பேர்வழிகளால் மந்திரம் என நம்பவைத்து மோசடி செய்யப்படும் அனைத்தும் தந்திரமே என நேரடி செயல்முறை விளக்கத்துடன் நிறுவி நிகழ்ச்சியை குழந்தைகளின் குதூகலத்துடன் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

ஜின் ஆபரேசன்

முன்னதாக, இன்று காலையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு 'இந்திய சுதந்திரப் போரில் முஸ்லீம்களின் வீர வரலாறு' எனும் தலைப்பின் கீழ் மறைக்கப்பட்ட வரலாற்றையும், வீர் சவர்க்கார் போன்ற தேசத்துரோகிகள் தியாகிகளாக போற்றப்படும் இழிவையும், வாஸ்கோட காமா என்ற வந்தேறி முஸ்லீம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு நடுக்கடலில் நிகழ்த்திய அட்டூழியங்களை பட்டியலிட்டும், வரலாற்று பக்கங்களில் மதச்சாயம் பூசி மறைக்கப்பட்டுள்ள, முஸ்லீம்கள் நம் தேச விடுதலைக்காக செய்த எண்ணிலடங்க தியாகங்களை மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமும் எடுத்துரைத்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை நடைபெறும் உளவியல் வகுப்பில் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் வழங்கப்படக்கூடும்.

களத்திலிருந்து
அதிரைஅமீன்

ADT நடத்திய பயிற்சி முகாமில் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி பாடம் நடத்தினார் ! [ படங்கள் இணைப்பு ]


அதிரையில் ADT நடத்தும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் கடந்த [ 03-05-2014 ] அன்று முதல் மாணவிகளுக்கு ஏஎல் மெட்ரிக் பள்ளியிலும், மாணவர்களுக்கு பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிரை தாருத் தவ்ஹீத்தின் தலைவர் அதிரை அஹ்மது அவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த முகாமில் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலான பல்வேறு தலைப்புகளின் கீழ் மாணவ, மாணவியருக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று காலை ஏஎல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிரை வலைதளங்களில் சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை தொடர்ந்து வழங்கிவரும் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் 'இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் வீர வரலாறு' என்ற தலைப்பில் பாடம் நடத்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட பாடத்தை முகாமில் பங்கேற்ற ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்வாங்கிக்கொண்டனர். இதில் இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்கள் ஆற்றிய தியாகம் குறித்து கூறிய அபூர்வ தகவல்கள் பலவற்றை மாணவ மாணவிகள் கவனமாக குறிப்பும் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக அதிரை தாருத் தவ்ஹீத்தின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் இன்றைய முகாமில் நடைபெற்ற 'இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் வீர வரலாறு' பாடம் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார்.

இதில் மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, சமூக ஆர்வலர் முஹம்மது பாரூக், முகாமின் பொறுப்பாளர்கள் அதிரை அமீன், அப்துல் காதர், அப்துல் ரஹ்மான், அஹமது ஹாஜா, கமாலுதீன் ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.


Thanks to: 
http://theadirainews.blogspot.in/2014/05/adt_10.html


Thursday, May 8, 2014

அதிரையில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள்

தாயத்து, தட்டு, தகடு, பேய், பிசாசு, செய்வினை, அவ்லியா, ஜின் ஆபரேசன் என பல நூதன வகைகளில் ஏமாற்றுவோர்களை அடையாளம் காட்டவும், ஏமாறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மந்திரமா? தந்திரமா? எனும் நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சி அதிரையில் 2 இடங்களில்  நடைபெறவுள்ளது.

முதல் நிகழ்ச்சி (வாராந்திர பெண்கள் பயானுக்கு பதிலாக) 

09.05.2014 வெள்ளிக்கிழமை
மாலை 3.15 மணி முதல் 
இஸ்லாமிய தர்பியா மையம் (ITC)
பிலால் நகர், அதிரை

இரண்டாம் நிகழ்ச்சி (ADT கோடைகால பயிற்சி முகாமின் ஓர் பகுதியாக) 

10.05.2014 சனிக்கிழமை
பிற்பகல் 2.00 மணி முதல்
A L மெட்ரிகுலேசன் பள்ளி
CMP லேன், அதிரை

நிகழ்ச்சியை நேரிடையாக குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடத்துபவர்

உளவியல் அறிஞர் 

மவ்லவி. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்

மடமையை அறிந்து உணர்ந்து மாய்த்திட குடும்பத் தலைவிகள் மற்றும் பெரிய மாணவிகளை அணி திரண்டு வருமாறு அன்போடு அழைப்பது

அதிரை தாருத் தவ்ஹீத்
கடைத்தெரு, அதிரை

Tuesday, May 6, 2014

அதிரை மக்களின் மனங்களை வென்ற ADTயின் கோடைகால பயிற்சி முகாம் (புகைப்படங்கள்)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

வல்ல ரஹ்மானின் கருணையால் ADT நடத்தும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அல்லாஹ்வின் ரஹ்மத்தான விடாது பெய்யும் கோடை மழையிலும் ஆர்வத்துடன் வருகை தரும் மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்களின் ஏகோபித்த வரவேற்போடு நடந்து வருகிறது.


மழை.....


மாணவிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல தலைப்புக்களின் கீழ் அர் ரவ்தா மதரஸா ஆசிரியைகளால் பயிற்றுவிக்கப்படுகின்றனர் மேலும் மாலை வேளைகளில் சிறப்பு உளவியல் வகுப்புக்கள் பெரிய மாணவிகளுக்கும் குடும்பப் பெண்களுக்கும் பவர் பாயிண்ட் திரை வழி குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் (இலங்கை) மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களால் கற்பிக்கப்படுகிறது.

மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களால் நடத்தப்படும் உளவியல் வகுப்புக்கள்


சிறிய மாணவிகள் பயிலும் ஓர் வகுப்பு


தர்மபுரி சாதிக் அவர்களால் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது


இடையிடையே வருகை தரும் தன்னார்வ ஆசிரியர்களாலும் மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்விகள் போதிக்கப்பட்டு வருகின்றன.

அதிரைஅமீன்

அதிரை வாழ் இளைஞர்களுக்கு அவசர வேண்டுகோள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

வானம் பார்த்த பூமியாக இருந்த நமதூரில் கடந்த இரு தினங்களாக அல்லாஹ்வின் ரஹ்மத் மழையாக பொழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்.

தற்போது பாலைவன நிலை மாறி மழை நீர் வழிந்தோடவும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கி நிற்கவும் துவங்கியுள்ளது நிலத்தில் மட்டுமல்ல அனைவரின் மனதிலும் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் இன்னொரு அத்தியாவசிய கடமையும் நம்முன் காத்திருக்கிறது.

அது, வீணாக வழிந்தோடும் மழை நீரையும், தேங்கி நிற்கும் தண்ணீரையும் அருகாமையிலுள்ள குளங்களுக்கு திருப்பி விட வேண்டுகிறோம், உங்களுடைய உயரிய உடல் உழைப்பை வழங்கிட பகுதிக்கு ஓர் மண்வெட்டி போதுமே! உங்கள் பகுதியின் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் வரை தொடர்ந்து உழைத்திடுங்கள்.

உடல் உழைப்பை வழங்க இயலாதோர் களப்பணியாற்றும் இளைஞர்களை ஊக்;கப்படுத்தலாமே மேலும் அவர்களுக்கு நீங்கள் அன்பாக வழங்கும் ஒரு குவளை தேநீர் அவர்களுக்கு மலையை புரட்டும் சக்தியை வழங்கும்.

ஊரின் நன்மையை நாடி தனி நபர்களாக, இயக்கங்களாக சுழழும் இளைஞர்கள் இதிலும் அரசியல் கலந்து விடாமல் ஊர் சேவை செய்திட வாரீர் என அழைக்கிறோம்.

உங்களுடைய அர்ப்பணிப்பு நமதூரின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட, குளங்கள் நிறைந்திட, பசுமை பாதுகாக்கப்பட இதன்வழி உங்கள் அனைவருக்கும் இறையருள் நிறைந்திட எல்லாம் வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகிறோம்.

அதிரைஅமீன்

Saturday, May 3, 2014

எழுச்சியுடன் துவங்கியது ADT நடத்தும் கோடைகால பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த கோடைகால பயிற்சி முகாம் இன்று அல்லாஹ்வின் பேரருளால் எழுச்சியுடன் துவங்கியது. மாணவிகளுக்கு ALMS பள்ளிக்கூடத்திலும், மாணவர்களுக்கு பிலால் நகர் தர்பியா மையத்திலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிரையின் தொலைதூர மாணவ, மாணவிகளை அழைத்து வர இன்று 4 வேன்கள் பயன்படுத்தப்பட்டன.

முன்னதாக, பல மாணக்கர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்று காலையிலும் புதிதாக பல மாணவ, மாணவிகள் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் முகாமுக்கு வருகை தந்து தங்களுடைய பெயர்களை பதிந்து கொண்டனர்.

இன்றைய ஆரம்ப வகுப்பாக இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள் என்ற பாடத்தை மாணவர்களுக்கு மவ்லவி. அப்துல் ஹமீது ஷரயி அவர்களும் மாணவிகளுக்கு அல் ரவ்ழா மதரஸா ஆசிரியைகளும் நடத்தினர். 

முதல் நாள் வகுப்பில் 200 மாணவிகளுக்கு மேல் கலந்து கொண்ட நிலையில் மாணவர்களின் வருகை மார்க்கக் கல்வியின்பால் அவர்களுக்கு உள்ள ஆர்வமின்மையை வெளிப்படுத்தியது, இந்நிலை களைய பெற்றோர்களே முன்வர வேண்டும். அதேவேளை மார்க்கக் கல்வியை தேடி மதுக்கூரிலிருந்து தன் மகனை முகாமுக்கு அழைத்து வந்த சகோதரர் பிறருக்கு ஓர் அழகிய முன்மாதிரியாக திகழ்கிறார்.

முகாம் சிறப்புடன் நடைபெற்றிட ADT சகோதரர்கள் தங்களுடைய களப்பங்களிப்பை செய்து வருகின்றனர். 

இன்ஷா அல்லாஹ் இன்னும் விரிவான செய்திகளுடன் மீண்டும் உங்களை சந்திக்க காத்திருப்பது

அதிரைஅமீன்
பிலால் நகர் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி மற்றும் லுஹர் தொழுகை நடந்தபோது எடுத்த படம்