உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, May 10, 2014

ADT நடத்திய பயிற்சி முகாமில் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி பாடம் நடத்தினார் ! [ படங்கள் இணைப்பு ]


அதிரையில் ADT நடத்தும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் கடந்த [ 03-05-2014 ] அன்று முதல் மாணவிகளுக்கு ஏஎல் மெட்ரிக் பள்ளியிலும், மாணவர்களுக்கு பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிரை தாருத் தவ்ஹீத்தின் தலைவர் அதிரை அஹ்மது அவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த முகாமில் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலான பல்வேறு தலைப்புகளின் கீழ் மாணவ, மாணவியருக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று காலை ஏஎல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிரை வலைதளங்களில் சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை தொடர்ந்து வழங்கிவரும் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் 'இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் வீர வரலாறு' என்ற தலைப்பில் பாடம் நடத்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட பாடத்தை முகாமில் பங்கேற்ற ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்வாங்கிக்கொண்டனர். இதில் இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்கள் ஆற்றிய தியாகம் குறித்து கூறிய அபூர்வ தகவல்கள் பலவற்றை மாணவ மாணவிகள் கவனமாக குறிப்பும் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக அதிரை தாருத் தவ்ஹீத்தின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் இன்றைய முகாமில் நடைபெற்ற 'இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் வீர வரலாறு' பாடம் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார்.

இதில் மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, சமூக ஆர்வலர் முஹம்மது பாரூக், முகாமின் பொறுப்பாளர்கள் அதிரை அமீன், அப்துல் காதர், அப்துல் ரஹ்மான், அஹமது ஹாஜா, கமாலுதீன் ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.






Thanks to: 
http://theadirainews.blogspot.in/2014/05/adt_10.html


No comments:

Post a Comment