அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த கோடைகால பயிற்சி முகாம் இன்று அல்லாஹ்வின் பேரருளால் எழுச்சியுடன் துவங்கியது. மாணவிகளுக்கு ALMS பள்ளிக்கூடத்திலும், மாணவர்களுக்கு பிலால் நகர் தர்பியா மையத்திலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிரையின் தொலைதூர மாணவ, மாணவிகளை அழைத்து வர இன்று 4 வேன்கள் பயன்படுத்தப்பட்டன.
முன்னதாக, பல மாணக்கர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்று காலையிலும் புதிதாக பல மாணவ, மாணவிகள் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் முகாமுக்கு வருகை தந்து தங்களுடைய பெயர்களை பதிந்து கொண்டனர்.
இன்றைய ஆரம்ப வகுப்பாக இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள் என்ற பாடத்தை மாணவர்களுக்கு மவ்லவி. அப்துல் ஹமீது ஷரயி அவர்களும் மாணவிகளுக்கு அல் ரவ்ழா மதரஸா ஆசிரியைகளும் நடத்தினர்.
முதல் நாள் வகுப்பில் 200 மாணவிகளுக்கு மேல் கலந்து கொண்ட நிலையில் மாணவர்களின் வருகை மார்க்கக் கல்வியின்பால் அவர்களுக்கு உள்ள ஆர்வமின்மையை வெளிப்படுத்தியது, இந்நிலை களைய பெற்றோர்களே முன்வர வேண்டும். அதேவேளை மார்க்கக் கல்வியை தேடி மதுக்கூரிலிருந்து தன் மகனை முகாமுக்கு அழைத்து வந்த சகோதரர் பிறருக்கு ஓர் அழகிய முன்மாதிரியாக திகழ்கிறார்.
முகாம் சிறப்புடன் நடைபெற்றிட ADT சகோதரர்கள் தங்களுடைய களப்பங்களிப்பை செய்து வருகின்றனர்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் விரிவான செய்திகளுடன் மீண்டும் உங்களை சந்திக்க காத்திருப்பது
அதிரைஅமீன்
பிலால் நகர் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி மற்றும் லுஹர் தொழுகை நடந்தபோது எடுத்த படம்
No comments:
Post a Comment