உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, January 27, 2016

துபையில் - உன் எதிரியை அறிந்து கொள்! இன்ஷா அல்லாஹ் 29.01.2016 வெள்ளியன்று!


குடும்பத்தோடு பங்கு கொண்டு இஸ்லாமிய கல்வியை பெற்று செல்ல அழைக்கின்றோம்
அமீரக வரலாற்றில் முதல் முறையாக துபாய் இஸ்லாமிய அமைச்சகம் நடத்தும் ஜைத் பின் முஹம்மது குடும்ப ஒன்றிணைவு நிகழ்வில் தமிழ் இஸ்லாமிய உரைக்கான ஓர் வாய்ப்பு அல்ஹம்துலில்லாஹ்,

தலைப்பு : 
உன் எதிரியை அறிந்து கொள் !
உரையாற்றுபவர் : 
மௌலவி அப்துல் பாஸித் புஹாரி
நிகழ்ச்சி நாள் : 
29/01/2016 வரும் வெள்ளிக்கிழமை
நேரம் : 
சரியாக இரவு 8.00 மணிக்கு
இடம் : 

ஜைத் பின் முஹம்மது குடும்ப ஒன்றிணைவு இடம் ,அல் கவானிஜ் , துபாய்.


வசதிகள் :-

*அனைத்து இடங்களில் இருந்தும் வாகன வசதி (FREE TRANSPORTATION)

வாகன வசதிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 0567371449, 0567371442

*Rashidiya Metro Station அருகில் இங்கிருந்து Bus வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 6.00 மணி முதல் 8.00 மணி வரை,

* ஆண் பெண்களுக்கு தனித்தனி இட வசதி, 

*குழந்தைகளுக்கு விளையாடுமிடம் (CHILDRENS PLAY AREA),

*இஸ்லாமிய கடை வீதிகள் (SOUQ),

*விலங்கினங்கள் உள்ளடங்கிய பூங்கா(ANIMAL PARK),

* அருங்காட்சியகம் (Museum)

Tuesday, January 5, 2016

அதிரையில் இன்று (06.01.2016 – புதன்) மார்க்க விளக்கப் பயிலரங்கம்இன்ஷா அல்லாஹ் இன்று  (06.01.2016 – புதன்) மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து, அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட வளாகத்தின் உள்ளே, மாணவ மணிகளுக்கும், இளைய சமுதாயத்திற்கும், தாவா களத்தில் உள்ளவர்களுக்கும் என ஓட்டுமொத்த சமுதாயத்திற்கும் பயனுள்ளதோர் மார்க்க விளக்க பயிலரங்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விளக்கவுரை:
மவ்லவி. அர்ஹம் இஹ்ஸானி

தலைப்பு:
இஸ்லாம் உணர்த்தும் வாலிப வாழ்க்கை

குறிப்பு
1. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

2. நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகை முடிந்தவுடன் தாமதமின்றி ஆரம்பமாகும் என்பதால் அனைவரும் மஃரிப் தொழுகைக்கு ALM பள்ளிக்கூட மஸ்ஜிதிற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT

மேலும் விபரங்களுக்கு: 
நிஜாம் 9597841980 
கமால் 9543577794

அதிரையில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பிளக்ஸ் போர்டுகள்


அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக மக்கள் அதிகம் நடமாடும் அதிரையின் முக்கிய வீதிகளில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் முகமாக ஃபிளக்ஸ் போர்டு பிரச்சாரம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

காலத்திற்கேற்ற குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழிகளை கொண்டு மக்களுக்கு நன்மை ஏவியும், தீமை குறித்து எச்சரித்தும் பிளக்ஸ் போர்டுகள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றும் வகையில் காலேஜ் முன்புறம், பழைய போஸ்ட் ஆபிஸ் முக்கம் மற்றும் தக்வா பள்ளி அருகிலும் ஆரம்பமாக வைக்கப்பட உள்ளன.

இந்த நன்மையான காரியத்தில் பங்கு கொள்ள விரும்பும் தனி நபர்களும், ஸ்பான்ஷர் செய்ய விரும்பும் வர்த்தக பிரமுகர்களும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

ஒரு ஃபிளக்ஸ் 400 ரூபாய் வீதம் 3 ஃபிளக்ஸ்களுக்கு 1200 ரூபாய் மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க: கமாலுதீன் 0091 9543577794

Monday, January 4, 2016

ஷிர்க்கை ஒழிக்கப் போகும் லட்சணமும் பேருராட்சி மன்ற தலைவர் வீட்டு கல்யாணமும்

கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம் என தமிழ் சகோதரர்கள் கூறுவர் அதுபோல கூட இருப்பவர்களை திருத்த முடியாதவர்கள் ஊரை கூட்டி 'ஷிர்க்'கை ஒழிக்கப் போகிறார்களாம்.

பீஜேயானிகள் என்று மக்களால் அழைக்கப்படும் அதிரை முஃதஸ்ஸிலா குழுவினருக்கும் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் உள்ள ஊரறிந்த உறவை தெரியாதவர்களுக்கு மட்டும் ஒருசில விஷயங்களை ஞாபகமூட்டுகிறோம்.

பீஜேயானிகளுக்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் கடந்த வருடம் நடந்த விவாதத்தின் போது, முஃதஸ்ஸிலாக்களுக்கு ஆதரவாக மேடையேறியவர் நம்முடைய அதிரை பேரூராட்சி மன்ற தலைவர்.

அதுபோல் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலருக்கும் நடந்த பிரச்சனையின் போது பேரூராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள் அதிரை முஃதஸ்ஸிலாக்கள்.

மேலும் பேரூராட்சி மன்ற தலைவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியான 'ஆயிஷா மகளிர் அரங்கம்;' என்ற இடத்தையே பீஜேயானிகளுக்கு பிரச்சார மேடையாக ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

இதுபோல் முஃதஸ்ஸிலாக்களின் 'சர்ச்சைக்குரிய மதபோதகர்' அஷ்ரப்தீன் என்பவர் பேரூராட்சி தலைவருக்கு தவ்ஹீதை எடுத்து சொல்கிறோம், விரைவில் தவ்ஹீது கொள்கையை எற்று பின்பற்றுவார் என்கிற ரீதியில் ஒரு வருடத்திற்கு முன்பே நற்சான்று வழங்கினார்.

இப்படியாக பேரூராட்சி தலைவரும் ததஜ முஃதஸ்ஸிலாக்களும் நகமும் சதையுமாக பின்னிப் பிணைந்திருந்த நிலையில், கடந்த வாரம் பேரூராட்சி மன்ற தலைவருடைய குடும்ப திருமணங்கள், குறிப்பாக அவருடைய மகனுக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்தத் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஊரல்ல, உலகே அறியும் வண்ணம் ஆடம்பரம் ஒரு பக்கம் என்றால் ஒரு அரசியல் கட்சியின் மாநாடோ என வியக்கும் வண்ணமும் கல்யாணத்திற்கு கட்சி சாயம் பூசப்பட்டது. இது யாருடைய வழிமுறை என தெரியவில்லை!

இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வழிகாட்டி சென்றுள்ளார்கள் என்பதை முஸ்லீம்கள் அறிவர் அதை பீஜேயானிகளிடம் சொன்னால் இது ஹதீஸே இல்லை என மறுத்துவிடலாம். அதனால் மக்களே நீங்களே கேளுங்கள், உங்கள் ததஜ பிரிவு சொல்லும் 'நபிவழி' திருமணம் இப்படித்தான் செய்ய வேண்டும் என ஒரு 'கொளுகை' வைத்திருப்பீர்கள் அல்லவா. அதிலிருந்து சுமார் 10 சதமாவது இந்த திருமணத்தில் இருந்திருக்குமா? 

தங்கள் கூடவே கூடிக்குழாவும் பேரூராட்சி மன்ற தலைவருக்கே உங்களால் மார்க்கத்தை சொல்ல முடியவில்லை என்றால் மஹரமில்லாத பெண்களை அழைத்துச் சென்று 'ஷிர்க்'கை ஒழிக்கும் லட்சணம் எப்படி இருக்கும் என மக்களே கேளுங்கள்.