உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, January 4, 2016

ஷிர்க்கை ஒழிக்கப் போகும் லட்சணமும் பேருராட்சி மன்ற தலைவர் வீட்டு கல்யாணமும்

கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம் என தமிழ் சகோதரர்கள் கூறுவர் அதுபோல கூட இருப்பவர்களை திருத்த முடியாதவர்கள் ஊரை கூட்டி 'ஷிர்க்'கை ஒழிக்கப் போகிறார்களாம்.

பீஜேயானிகள் என்று மக்களால் அழைக்கப்படும் அதிரை முஃதஸ்ஸிலா குழுவினருக்கும் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் உள்ள ஊரறிந்த உறவை தெரியாதவர்களுக்கு மட்டும் ஒருசில விஷயங்களை ஞாபகமூட்டுகிறோம்.

பீஜேயானிகளுக்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் கடந்த வருடம் நடந்த விவாதத்தின் போது, முஃதஸ்ஸிலாக்களுக்கு ஆதரவாக மேடையேறியவர் நம்முடைய அதிரை பேரூராட்சி மன்ற தலைவர்.

அதுபோல் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலருக்கும் நடந்த பிரச்சனையின் போது பேரூராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள் அதிரை முஃதஸ்ஸிலாக்கள்.

மேலும் பேரூராட்சி மன்ற தலைவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியான 'ஆயிஷா மகளிர் அரங்கம்;' என்ற இடத்தையே பீஜேயானிகளுக்கு பிரச்சார மேடையாக ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

இதுபோல் முஃதஸ்ஸிலாக்களின் 'சர்ச்சைக்குரிய மதபோதகர்' அஷ்ரப்தீன் என்பவர் பேரூராட்சி தலைவருக்கு தவ்ஹீதை எடுத்து சொல்கிறோம், விரைவில் தவ்ஹீது கொள்கையை எற்று பின்பற்றுவார் என்கிற ரீதியில் ஒரு வருடத்திற்கு முன்பே நற்சான்று வழங்கினார்.

இப்படியாக பேரூராட்சி தலைவரும் ததஜ முஃதஸ்ஸிலாக்களும் நகமும் சதையுமாக பின்னிப் பிணைந்திருந்த நிலையில், கடந்த வாரம் பேரூராட்சி மன்ற தலைவருடைய குடும்ப திருமணங்கள், குறிப்பாக அவருடைய மகனுக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்தத் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஊரல்ல, உலகே அறியும் வண்ணம் ஆடம்பரம் ஒரு பக்கம் என்றால் ஒரு அரசியல் கட்சியின் மாநாடோ என வியக்கும் வண்ணமும் கல்யாணத்திற்கு கட்சி சாயம் பூசப்பட்டது. இது யாருடைய வழிமுறை என தெரியவில்லை!

இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வழிகாட்டி சென்றுள்ளார்கள் என்பதை முஸ்லீம்கள் அறிவர் அதை பீஜேயானிகளிடம் சொன்னால் இது ஹதீஸே இல்லை என மறுத்துவிடலாம். அதனால் மக்களே நீங்களே கேளுங்கள், உங்கள் ததஜ பிரிவு சொல்லும் 'நபிவழி' திருமணம் இப்படித்தான் செய்ய வேண்டும் என ஒரு 'கொளுகை' வைத்திருப்பீர்கள் அல்லவா. அதிலிருந்து சுமார் 10 சதமாவது இந்த திருமணத்தில் இருந்திருக்குமா? 

தங்கள் கூடவே கூடிக்குழாவும் பேரூராட்சி மன்ற தலைவருக்கே உங்களால் மார்க்கத்தை சொல்ல முடியவில்லை என்றால் மஹரமில்லாத பெண்களை அழைத்துச் சென்று 'ஷிர்க்'கை ஒழிக்கும் லட்சணம் எப்படி இருக்கும் என மக்களே கேளுங்கள்.

1 comment:

  1. இவர்கள மார்க்கம் என்ற பெயரில் செய்யும் அடாவடி தனம் பாவம் இயலாதவர்கள் வீட்டில் தான் (அதுவும் ஐனாசா)வை வைத்து தான் நடத்த முடியும் ஆனால் தன்னை ஒரு தவ்கித் வாதிபோல் அன்னன் குஞ்சுகளுடன் குலாவிகொன்டும் இப்பொலுது நான்தான் அதிகாரி என்று ஊர் ஊராக சுற்றி திரியும் மன நோயாளியோடு தலையில் துணியை போர்த்தி கை குலுக்கும் சந்தர்ப்பவாத சுயநல அரசியல்வியாதி இவருக்கு மார்க்கம் சொல்ல உங்களுக்கு தைரியம் இலையே எது தடுத்த்து உங்களை....?

    ReplyDelete