உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, June 7, 2013

அதிரையில் வரலாற்றில் பெண்களால் நடத்தப்பட்ட ஸனது (பட்டம்) வழங்கும் விழா

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மேற்பார்பார்வையில் இயங்கி வரும் அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் ஸனது (பட்டம்) வழங்கு விழா நேற்று (07-Jun-2013) மாலை சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் !

நிகழ்வின் ஆரம்பமாக இரண்டாம் ஆண்டு மாணவி மர்யம் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் கிராத்துடன் இனிதே துவங்கியது.

அடுத்ததாக பேராசியை ரியானா அவர்களின் வரவேற்புரையுடன் தொடர்ந்து.

இளையோரின் திறன் காட்டும் நிகழ்ச்சித் தொகுப்புகளும் சிறப்புடன் நடைபெற்றது கலந்து கொண்ட மாணவிகள் மற்றும் அவர்களின் தாய்மார்கள்,சகோதரிகள், உறவினர்கள் அனைவரையும் மகிழ்சியில் ஆழ்த்தியது மற்றுமொரு சிறப்பு !

* ஸூரத்தில் ஃபாத்திஹா - ஃபர்ஷிதா ஃபைஸல் அஹ்மது
* அன்றாட துஆக்கள் - சன்ஃபியா அஹ்மது ஜலீல்
* அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் - மஹ்மூதா முஹம்மது ஹனீஃபா
* நாளும் செய்ய வேண்டிய நல்ல அமல்கள் - முர்ஷிதா ஃபைஸல் அஹ்மது
* அரபு மாதங்களின் பெயர்கள் - ஃபாஹ்மிதா ஜஹபர் ஸாதிக்
* 'பரிசு' எனும் தலைப்பில் கவிதை - வஸீமா ஜாஹிர் ஹுஸைன்
* தவ்ஹீத் எனும் தலைப்பில் உரை - நபீஹா அஹ்மது அனஸ்
* நபிமார்களின் பெயர்கள் - நுஸ்ரத் ராஜா முஹம்மது.

மாணவிகளின் நிகழ்வைத் தொடர்ந்து கல்லூரியின் ஆண்டறிக்கையை பேராசிரியை எஸ்.மும்தாஜ் அவர்கள் வாசித்தார்கள்.

பட்டம் பெறும் மாணவிகளில் ஒருவரான ஏ.மும்தாஜ் அவர்களின் சிற்றுரை "ஆலிமாக்களின் பொறுப்புகள் என்ன" என்ற தலைப்பில் அற்புதமான உரையை நிகழ்த்தினார்கள்.

சிறப்பு விருத்தினராக பங்கெடுத்த பேராசிரியை சயீதா பானு M.A.B.Ed., - தாளாளர் அன்னை கதீஜா அறிவியல் கலை மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டணம். பெண்மக்களிடையே விழிப்புணர்வு பற்றிய சிறப்பான மருத்துவ ஆலோசனைகளுடன், இன்றைய பெண்களுக்குரிய அறிவுரைகளை அழுத்தமாக எடுத்துரைத்தார்கள். குறிப்பாக பட்டம் பெறும் மாணவிகளுக்கும் அவர்களைச் சுற்றியிருக்கும் பெண்களுக்கும் நல்லதொரு முத்தாய்ப்பான உரையாக அது அமைந்தது என்றால் மிகையில்லை - மாஷா அலலஹ் !

நிகழ்வின் நட்சத்திர அறிவுரை என்று சொல்லுமளவுக்கு கல்லூரி முதல்வர் அவர்களின் உரை 'எமது மாணவிகளுக்கு' என்று அருமையான அறிவுரைகளை நபிமார்களின் வரலாற்றிலிருந்து வழங்கினார்கள். மாணவிகளுக்கு மட்டுமல்ல கலந்து கொண்ட அனைவருக்கும் பொருந்தும் விதமாக தவ்ஹீத் பற்றிய அவர்களின் அழுத்தமான உரையாக அமைந்தது.

தொடர்ந்து 2011 - 2012 கல்வியாண்டிற்கான ஸனது (பட்டம்) ஐந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்டது, இதில் அனைவருமே தரத்தில் உயர்ந்த பெண்மக்களாக திகழ்ந்தார்கள்.

பட்டம் பெற்ற மாணவிகள் விபரம்

மும்தாஜ் த/பெ.அப்துல் வஹாப்
நபீலா த/பெ. முஹம்மது தம்பி
சுமையா த/பெ.லியாகத் அலி
சஃப்ரின் த/பெ.அபூபைதா
ஹாஜரா த/பெ.அன்வர்தீன்

2011-12 மற்றும் 2012-13 வருடத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

நிறைவாக பேராசிரியை ரிழ்வானா அவர்களின் நன்றியுறையுடன் கஃப்பாரா ஓதி சிறப்பாக நிறைவுற்றது.

பெண்களால் நடத்தப்பட்ட, பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில் அதிரையின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து கலந்து கொண்ட பெண்கள் மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை அமைதி காத்து சிறப்பித்தார்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

நிகழ்வை சிறப்புடன் மேற்பார்வை செய்த அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகளுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.


அதிரைநிருபர் பதிப்பகம்
 

06.06.2013 துபையில் மதுக்கூர் மர்கஸில் கோவை அய்யூப் உரை

கடந்த ஒரு வார காலமாக அபுதாபியிலும் முஸஃபாவிலும் தினமும் காலையிலும் மாலையிலும் நடைபெற்று வந்த சகோதரர் கோவை S. அய்யூப் அவர்களின் தொடர் தஃவா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதியாக துபை மாநகரில், கோட்டைப்பள்ளி அருகேயுள்ள பஞ்சாப் தர்பார் ரெஸ்ட்டாரெண்ட் 3 வது மாடியில் அமைந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை மர்கஸில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் இறைவனை சந்திக்கும் வேளையில்?! என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய சகோதரர் அய்யூப் அவர்கள், மறுமை நாளில் தீயோர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனைகளையும் நல்லடியார்களுக்கு கிடைக்கக்கூடிய கண்ணியங்களையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பட்டியலிட்டார்கள். 
 


 
தமிழக தவ்ஹீத் எழுச்சியின் ஆரம்ப காலங்களில், அமல்களின் சிறப்பு என்ற புத்தகத்தை விடுத்து குர்ஆன் ஹதீஸ் பக்கம் ஒரு நாளும் வரமாட்டார்கள் என தப்லீக் சகோதரர்களை விமர்சிப்பதுண்டு. அப்படி விமர்சனம் செய்தவர்களே, விமர்சனம் செய்ய பயிற்றுவிக்கப்பட்டவர்களே காலப்போக்கில் ஓர் தனி மனிதனின் லாஜிக் மார்க்கத்தை விட்டு வெளியேற முடியாததோடு அவர் சொல்வது மட்டுமே மார்க்கம் என்றும், பிற தாயிக்கள் கூறும் நல்லதை கேட்காதே, நல்லதை பேசாதே, நல்லதை பார்க்காதே என உல்டா காந்தி குரங்குகளுக்கு ஈடாயினர். 
 
துபை மாநகரை பொறுத்தவரை சமீப ஆண்டுகளில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பேசும் பிற தமிழக தாயிக்களுக்கும் அவர்தம் இஸ்லாமிய கருத்துக்களுக்கும் செவிதாழ்த்தி கேட்கும் போக்கு அபரிமிதமாக அதிகரித்துள்ளது என்பது நேற்றிரவு நடைபெற்ற கோவை அய்யூப் அவர்களின் நிகழ்ச்சியிலும் எதிரொலித்தது. ஆங்காங்கே இருந்தவர்களை எல்லாம் நேற்று ஓரிடத்தில் பார்க்கும் போது எஞ்சியவர்களுக்கும் விரைவில் ஹிதாயத் எனும் நேர்வழி கிடைத்திட எல்லா நல்லுள்ளங்களைப் போலவே எமதுள்ளமும் பிரார்த்தித்தது..

சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் இந்த ஒன் அண்டு ஒன்லி துபை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையை சேர்ந்த சகோதரர்கள் சீறிய முறையில் செய்திருந்தனர், அல்ஹம்துலில்லாஹ். 

அதிரை அமீன்

Thursday, June 6, 2013

05.06.2013 பனியாஸ் சைனா கேம்ப் மற்றும் அபுதாபியில் கோவை அய்யூப் நிகழ்ச்சிகள்

சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் குறுகியகால அமீரக வருகையொட்டி தினந்தோறும் தஃவா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை அறிவீர்கள். அதன் தொடரில் அபுதாபியில் பெண்களுக்காக மட்டும் காலை வேளையில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தர்பியா இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்தது. இன்று சகோதரர் ஜெய்லானி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழமைபோல் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
முஸஃபாவிலிருந்து அல் அய்ன் நகருக்குச் செல்லும் வழியில் டிரக் ரோட்டில் அமைந்துள்ள பனியாஸ் சைனா கேம்ப் பள்ளியில் இஷாவுக்குப்பின் நடைபெற்ற சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவில் நூற்றுக்காணக்கான சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் "மறுமைக்கேற்ற சிறந்த அமல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சகோதரர் நாகூர் அபுதாஹிர் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். 
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் ஒரு இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கின்ற நிலையிலும், இயக்கப் பிரச்சாரங்களோ, துதிபாடல்களோ, வசைமொழிகளோ இன்றி எடுத்துக் கொண்ட தலைப்பினுள் மட்டும் நின்று குர்ஆனையும் ஹதீஸையும்; மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அழகிய அணுகுமுறை அனைத்து தரப்பு நெஞ்சங்களையும் கவர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளார்கள் அனைவரும் தஃவா என்ற ஒத்தக்கருத்தில் நூற்கோர்த்தார்போல் இணங்கி இயங்கியதும், இணைந்து செயலாற்ற தஃவா களம் என்றும் திறந்திருக்கும் வாசலே என சொல்லாமற் சொல்லிற்று.      

அதிரை அமீன் 

Wednesday, June 5, 2013

அதிரையில் ADTயின் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி ஸனது (பட்டம்) வழங்கும் விழா !

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அதிரை தாருத் தவ்ஹீதின் (ADT) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் ஸனது (பட்டம்) வழங்கும் விழா !

வரும் 07-ஜூன்-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஸனது (பட்டம்) வழங்கும் நிகழ்வுகள் நடக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !

இடம் : கல்லூரி வளாகம், கடற்கரைத் தெரு (ரயில்வே ஸ்டேஷன் அருகில்)

தலைமை : பேராசிரியை சயீதா பானு M.A.BEd., - தாளாளர், அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி, அம்மா பட்டணம்.

சிறந்த மாணவியருக்கும், பெற்றோர்கள் சந்திப்பில் தவறாமல் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் பரிசும் வழங்கப்படும்.

அனைருவம் வருக, அறிவமுதம் பெறுக ! என அன்புடன் அழைக்கும்.

அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி
கடற்கரைத் தெரு
அதிராம்பட்டினம்
 

04.06.2013 அபுதாபி சிட்டி மற்றும் முஸஃபா தஃவா எழுச்சிகள்

இஃலாஸூடன் எந்த ஒரு நற்காரியத்தை துவங்கினாலும் எல்லாம் வல்ல அல்லாஹ் அதை வெற்றி பெறச் செய்வான் என்பதற்கான சான்றுகளாக அமைந்தன இன்று (04.06.2013 செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தஃவா நிகழ்ச்சிகள், அல்ஹம்துலில்லாஹ்.

அபுதாபி சிட்டியில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை முற்றிலும் பெண்களுக்காக மட்டும் நடைபெறும் சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் தர்பியா நிகழ்ச்சி இன்றும் தொடர்ந்தது, முதல் நாள் சுமார் 30 பெண்களுடன் தொடங்கிய தர்பியா அல்லாஹ்வுடைய கிருபையால் சுமார் 70 பெண்கள் வரை என அதிகரித்தது. சகோதரி ஆயிஷா அவர்களின் தலைமையிலான பெண்கள் குழுவினருக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. 

மாலையில் மஃரிப் முதல் இஷா வரை, முஸஃபா 10ல் சகோதரர் ஜமால் பிரதர்ஸ் இல்லத்தில் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட ஏகத்துவ பிரச்சார நிகழ்ச்சியில் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு "இஸ்ரா வ மிஹ்ராஜ்" - நடந்தது என்ன? என்ற தலைப்பில் படிப்பினை தரும் ஓர் வரலாற்று ஆய்வுரை நிகழ்த்தினர்.


 
இந்த நிகழ்ச்சியில் தத்தமது குடும்பங்களுடன் பலர் கலந்து கொண்டதும், ஏராளமான புதிய சகோதரர்கள் வருகை தந்ததும் இந்தக் களத்தில் தஃவா நிகழ்வுகளை இன்னும் வீரியத்துடன் போதிய கால இடைவெளியில் நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்து சென்றது என்றால் அது மிகையல்ல. புகழனைத்தும் ரப்பு ஒருவனுக்கே!

அபு அஸ்அத்            

Tuesday, June 4, 2013

03.06.2013 அபுதாபி காலிதியாவில் நடைபெற்ற மார்க்க பயான்

தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றிய மார்க்க பயான் 03.06.2013 திங்கள் அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் இஷா வரை அல் ஒமைர் டிராவல்ஸ் பில்டிங்கில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சகோதரர் அய்யூப் அவர்கள், 'இஸ்லாம் வளர்ந்த விதமும் இன்றைய வளர்ச்சியும்' என்ற தலைப்பில் எளியதொரு ஆய்வுரை நிகழ்த்தினார். நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் மாசற்ற தியாகங்களை நினைவுகூர்ந்த சகோதரர் இஸ்லாத்தின் இன்றைய அசூர வளர்ச்சியையும் நமது கடமைகளையும் எடுத்துரைத்த அதேவேளை சர்வதேச சமூகத்தால் இஸ்லாத்தின் மீது திட்டமிட்டு வீசப்படும் அவதூறுகளையும் அம்பலப்படுத்தினார்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் ஜெய்லானி அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் சகோதரர் சலாவுதீன் அவர்கள் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார். திரளான சகோதரர்கள் பங்குபெற்று பயனடைந்து சென்றனர். 

அபு அஸ்அத் 

Monday, June 3, 2013

02.06.2013ல் அபுதாபி சிட்டி மற்றும் முஸஃபாவில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சிகள்

ஏகனின் அருளாள், 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை அபுதாபி சிட்டி, காலிதியா பகுதியில் முற்றிலும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி 'மார்க்கக் கல்வியின் அவசியம்' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது. 


முதலில் பாடம் பின் படாத்திலிருந்து கேள்வி பதில் என சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் நடத்திய இச்சிறப்பு வகுப்பில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இத்தர்பியாவிற்கான ஏற்பாட்டினை சகோதரி ஆயிஷா அவர்கள் திறம்பட செய்திருந்தார்கள்.


மாலை மஃரிப் முதல் இஷா வரை, முஸஃபா 10ல் அல் ஜஸீரா ஃபார்மஸி பின்புறம் அமைந்துள்ள சகோதரர் புதுக்கோட்டை ஜமால் அவர்கள் இல்லத்தில் குடும்பத்தினருக்கான தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 'மறுமையில் முஹமது நபி (ஸல்) அவர்களின் உம்மத்' என்ற பொருளில் குடும்பத்தினருக்கான தஃவா நடைபெற்றது. இதிலும் திரளான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 'எம்ப்பவர்' ஜமால் பிரதர்ஸ் வெகுசிறப்புடன் செய்திருந்தனர்.

மேற்காணும் இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட, ஏற்பாடு செய்த, மார்க்கத்தை அதன் தூய வடிவில் எத்தி வைத்த, கேட்ட நல்ல விஷயங்களை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்திட நல்லெண்ணம் கொண்டவர்கள் என அனைவருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் இம்மையிலும் மறுமையிலும் அவர்தம் பாவங்களை மன்னித்து சுவர்க்க வாழ்வை பரிசாக வழங்குவானாக!

அபு சுமைய்யா

Saturday, June 1, 2013

முஸஃபாவில் நடைபெற்ற குடும்பத்தினருக்கான தஃவா

அல்லாஹ்வின் பேரருளால், இன்று (01.06.2013 சனிக்கிழமை) மாலை அஸர் முதல் மஃரிப் வரை, குடும்பத்தினருக்கான இஸ்லாமிய தஃவா நிகழ்ச்சி முஸஃபா, அல் ஸஃபீர் சென்டர் பின்புறம் அமைந்துள்ள அல் பர்தான் எக்ஸ்சேஞ்ச் பில்டிங்கில் சிறப்புற நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு 'இறைவனுக்கு உகந்த இஸ்லாமிய குடும்பம்' என்ற பொருளில், குர்ஆனிலிருந்தும், நபிமார்கள் மற்றும் ஸஹாபாக்கள், ஸஹாபிய பெண்மணிகளின் வாழ்விலிருந்தும் சிறந்த உதாரணங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் முஸஃபா பகுதியில் குடும்பத்துடன் வசிக்கும் லெப்பைக்குடிக்காடு, இளையான்குடி சகோதரர்கள் உட்பட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர் மேலும் நிகழ்வின் இறுதியில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

லெப்பைக்குடிக்காடு சகோதரர் இஸ்மாயில் அவர்கள் அதிரை மற்றும் மதுக்கூர் சகோதரர்களுடன் இணைந்து சிறப்பான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வழங்கி நிகழ்ச்சியை நடாத்தி தந்தார்கள்.

அபூ அஸ்அத்

முஸஃபாவில் மீண்டும் துளிர்விட்ட தமிழ் தஃவா

அபுதாபி, முஸஃபா பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் வரை முற்றிலும் தொழிலாளர் முகாம்கள் நிறைந்த ஒரு பகுதியாக திகழ்ந்தது என்பதும் அப்படிப்பட்ட முகாம்களில் தமிழ் தஃவாக்களும் குறையின்றி நடந்து வந்ததும் தொடர்புடையோர் அறிந்ததே. கால ஓட்டத்தில் லேபர் கேம்ப்புகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட, நடைபெற்று வந்த பலமுனை தமிழ் தஃவாவும் சுவடின்றி போயின. இன்றைய முஸஃபா பகுதி புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள், வாகன நெரிசல் என புதிய பரிமாணத்திற்கு மாறி இருந்தாலும் ஓரு சில ஆண்டுகள் முன்பு வரை முஸஃபா எங்கும் கோலோச்சிய தமிழ் தஃவா பணிகள் நடைபெறவில்லையே என்ற ஏக்கம் பலரின் மனதிலும் ஒரு விடைதேடா கேள்வியாக நிலைபெற்றிருந்தது. இந்த ஏக்கத்தை முடிந்தளவு தீர்க்கவும், அபுதாபிக்கு மிகக்குறுகியகால வருகை புரிந்துள்ள ஏகத்துவ அழைப்பாளர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களை பிரயோஜனமான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் நாடியதன் விளைவு, அல்லாஹ்வின் மிகப் பெருங்கிருபையால் சென்ற இரவு 9.30 மணிமுதல் 10.30 மணிவரை (31.05.2013 வெள்ளிக்கிழமை) முஸஃபா 12 - ஷாபியா கலிஃபா பகுதியில் 'மறுமைக்கு ஏற்ற மனிதனின் வாழ்வு' என்ற பொருளில் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் பயனுள்ளதோர் மார்க்க வகுப்பை குர்ஆன், ஹதீஸை ஒளியில் நடத்தினார்கள். முறையான முன்னறிவிப்புகள் ஏதுமின்றி முஸஃபா வாழ் அதிரை சகோதரர்களால் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வேறில் வெந்நீர் விடப்பட்டதாக கருதப்பட்ட அபுதாபி, முஸஃபா தமிழ் தஃவா களம் மீண்டும் துளிர்விட துவங்கியதன் மகிழ்ச்சியை வருகை தந்திருந்த சகோதரர்களின் முகங்களில் காண முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல அல்லாஹ்வே புகழனைத்தின் சொந்தக்காரன். இன்ஷா அல்லாஹ் தமிழ் தஃவா தொய்வின்றி மீண்டும் அபுதாபி, முஸஃபா பகுதியில் தொடர்ந்திட ஏகனை வேண்டுவீராக! 

அபூ அஸ்அத்