அல்லாஹ்வின் பேரருளால், இன்று (01.06.2013 சனிக்கிழமை) மாலை அஸர் முதல் மஃரிப் வரை, குடும்பத்தினருக்கான இஸ்லாமிய தஃவா நிகழ்ச்சி முஸஃபா, அல் ஸஃபீர் சென்டர் பின்புறம் அமைந்துள்ள அல் பர்தான் எக்ஸ்சேஞ்ச் பில்டிங்கில் சிறப்புற நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு 'இறைவனுக்கு உகந்த இஸ்லாமிய குடும்பம்' என்ற பொருளில், குர்ஆனிலிருந்தும், நபிமார்கள் மற்றும் ஸஹாபாக்கள், ஸஹாபிய பெண்மணிகளின் வாழ்விலிருந்தும் சிறந்த உதாரணங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முஸஃபா பகுதியில் குடும்பத்துடன் வசிக்கும் லெப்பைக்குடிக்காடு, இளையான்குடி சகோதரர்கள் உட்பட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர் மேலும் நிகழ்வின் இறுதியில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
லெப்பைக்குடிக்காடு சகோதரர் இஸ்மாயில் அவர்கள் அதிரை மற்றும் மதுக்கூர் சகோதரர்களுடன் இணைந்து சிறப்பான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வழங்கி நிகழ்ச்சியை நடாத்தி தந்தார்கள்.
அபூ அஸ்அத்
No comments:
Post a Comment