உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, June 7, 2013

அதிரையில் வரலாற்றில் பெண்களால் நடத்தப்பட்ட ஸனது (பட்டம்) வழங்கும் விழா

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மேற்பார்பார்வையில் இயங்கி வரும் அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் ஸனது (பட்டம்) வழங்கு விழா நேற்று (07-Jun-2013) மாலை சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் !

நிகழ்வின் ஆரம்பமாக இரண்டாம் ஆண்டு மாணவி மர்யம் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் கிராத்துடன் இனிதே துவங்கியது.

அடுத்ததாக பேராசியை ரியானா அவர்களின் வரவேற்புரையுடன் தொடர்ந்து.

இளையோரின் திறன் காட்டும் நிகழ்ச்சித் தொகுப்புகளும் சிறப்புடன் நடைபெற்றது கலந்து கொண்ட மாணவிகள் மற்றும் அவர்களின் தாய்மார்கள்,சகோதரிகள், உறவினர்கள் அனைவரையும் மகிழ்சியில் ஆழ்த்தியது மற்றுமொரு சிறப்பு !

* ஸூரத்தில் ஃபாத்திஹா - ஃபர்ஷிதா ஃபைஸல் அஹ்மது
* அன்றாட துஆக்கள் - சன்ஃபியா அஹ்மது ஜலீல்
* அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் - மஹ்மூதா முஹம்மது ஹனீஃபா
* நாளும் செய்ய வேண்டிய நல்ல அமல்கள் - முர்ஷிதா ஃபைஸல் அஹ்மது
* அரபு மாதங்களின் பெயர்கள் - ஃபாஹ்மிதா ஜஹபர் ஸாதிக்
* 'பரிசு' எனும் தலைப்பில் கவிதை - வஸீமா ஜாஹிர் ஹுஸைன்
* தவ்ஹீத் எனும் தலைப்பில் உரை - நபீஹா அஹ்மது அனஸ்
* நபிமார்களின் பெயர்கள் - நுஸ்ரத் ராஜா முஹம்மது.

மாணவிகளின் நிகழ்வைத் தொடர்ந்து கல்லூரியின் ஆண்டறிக்கையை பேராசிரியை எஸ்.மும்தாஜ் அவர்கள் வாசித்தார்கள்.

பட்டம் பெறும் மாணவிகளில் ஒருவரான ஏ.மும்தாஜ் அவர்களின் சிற்றுரை "ஆலிமாக்களின் பொறுப்புகள் என்ன" என்ற தலைப்பில் அற்புதமான உரையை நிகழ்த்தினார்கள்.

சிறப்பு விருத்தினராக பங்கெடுத்த பேராசிரியை சயீதா பானு M.A.B.Ed., - தாளாளர் அன்னை கதீஜா அறிவியல் கலை மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டணம். பெண்மக்களிடையே விழிப்புணர்வு பற்றிய சிறப்பான மருத்துவ ஆலோசனைகளுடன், இன்றைய பெண்களுக்குரிய அறிவுரைகளை அழுத்தமாக எடுத்துரைத்தார்கள். குறிப்பாக பட்டம் பெறும் மாணவிகளுக்கும் அவர்களைச் சுற்றியிருக்கும் பெண்களுக்கும் நல்லதொரு முத்தாய்ப்பான உரையாக அது அமைந்தது என்றால் மிகையில்லை - மாஷா அலலஹ் !

நிகழ்வின் நட்சத்திர அறிவுரை என்று சொல்லுமளவுக்கு கல்லூரி முதல்வர் அவர்களின் உரை 'எமது மாணவிகளுக்கு' என்று அருமையான அறிவுரைகளை நபிமார்களின் வரலாற்றிலிருந்து வழங்கினார்கள். மாணவிகளுக்கு மட்டுமல்ல கலந்து கொண்ட அனைவருக்கும் பொருந்தும் விதமாக தவ்ஹீத் பற்றிய அவர்களின் அழுத்தமான உரையாக அமைந்தது.

தொடர்ந்து 2011 - 2012 கல்வியாண்டிற்கான ஸனது (பட்டம்) ஐந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்டது, இதில் அனைவருமே தரத்தில் உயர்ந்த பெண்மக்களாக திகழ்ந்தார்கள்.

பட்டம் பெற்ற மாணவிகள் விபரம்

மும்தாஜ் த/பெ.அப்துல் வஹாப்
நபீலா த/பெ. முஹம்மது தம்பி
சுமையா த/பெ.லியாகத் அலி
சஃப்ரின் த/பெ.அபூபைதா
ஹாஜரா த/பெ.அன்வர்தீன்

2011-12 மற்றும் 2012-13 வருடத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

நிறைவாக பேராசிரியை ரிழ்வானா அவர்களின் நன்றியுறையுடன் கஃப்பாரா ஓதி சிறப்பாக நிறைவுற்றது.

பெண்களால் நடத்தப்பட்ட, பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில் அதிரையின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து கலந்து கொண்ட பெண்கள் மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை அமைதி காத்து சிறப்பித்தார்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

நிகழ்வை சிறப்புடன் மேற்பார்வை செய்த அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகளுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.














அதிரைநிருபர் பதிப்பகம்
 

No comments:

Post a Comment