புனிதமிகு ரமலான் மாத இரவுகளில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஒளியிலான தொடர் இஸ்லாமிய சொற்பொழிவுகள் துபை, அபுதாபி வாழ் சகோதரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்றாகும். தமிழகத்தில் சென்னை, கோவை, குன்னூர் என பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.
அதேபோன்ற தொடர் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இலங்கையிலும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கை சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் இந்த ரமலானில் அதிரை அறிந்த மவ்லவி முஹமது நாஸர் (இலங்கை) அவர்கள் இங்கிலாந்தில் தொடர் உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்ற செய்திகளுடன் நமதூருக்கு வருவோம்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட, அமல் செய்திட ஆர்வமுள்ளோர் ஏராளமானோர் வாழும் நம் அதிரை நகரிலும் இந்த வருட ரமலானில் 'அதிரைக்கு அதிரையர்களால் நடத்தப்படும்' அதிரை தாருத் தவ்ஹித் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் ரமலான் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் பெண்களுக்கு பிலால் நகர் மர்கஸில் தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும் ஆண்களுக்கு நடுத்தெரு EPMS பள்ளிக்கூட வளாகத்தில் இஷா தொழுகைக்குப்பின் தினமும் சுமார் 1 மணி நேரம் தொடர் சொற்பொழிவுகள் நடத்தப்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அதிரை மற்றும் இலங்கை மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு தொடர் உரையாற்றவுள்ளார்கள் இன்ஷா அல்லாஹ்.
மேற்காணும் இரு நிகழ்ச்சிகளிலும் அதிகமதிகம் சுற்றமும் நட்பும் சூழ கலந்து கொண்டு ஈருலக பயன்பெற அழைக்கின்றோம்.
குறிப்பு: முறையான, விரிவான அறிவிப்பை அதிரை தாருத் தவ்ஹீத் விரைவில் வெளியிடும் இன்ஷா அல்லாஹ்.
ஆண்களுக்கான தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியினை இணையத்தில் நேரலை செய்திட வெளிநாடு வாழ் சகோதரர்கள் சார்பாக அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகத்திடம் இதன் மூலம் கோரிக்கை வைக்கின்றோம்.
அபுதாபியிலிருந்து
அதிரைஅமீன்
No comments:
Post a Comment