நமதூர் ‘குல்லியத்துர் ரவ்ழத்துல் இஸ்லாமிய்யா
லில்பனாத்’ என்னும் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி ‘தாருத்
தவ்ஹீத்’ அமைப்பின் கீழ் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அண்மையில் அதன் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றதையும்
வலைத்தளங்கள் மூலம் தெரிந்திருக்கலாம்.
இக்கல்லூரியில் இன்று பகல் சிறப்பு நிகழ்ச்சியொன்று ‘Ramadhan
with Nutrition and Women’s Health’ ( ரமளானில்
சத்துணவும் பெண்கள் ஆரோக்கியமும் ) என்னும் தலைப்பில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இதனை முன் நின்று
நடத்தியவர், நமதூர் மருமகள் ஆமினா ஹஸ்ஸான் M. Sc. (Nutrition
& Dietetics) ஆவார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்ச்சியின்போது, மாணவிகளின் ஆர்வம்
பாராட்டத் தக்க முறையில் இருந்ததை, சொற்பொழிவை நிகழ்த்திய திருமதி ஆமினா
வியந்துரைத்தார். கல்லூரி ஆசிரியைகளும் ‘மாஷா அல்லாஹ்’ என்று கூறித் தம் மகிழ்வைத்
தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி ஒரு முன்னுதாரணம் என்பது குறிப்பிடத் தக்கது. இதைப் போன்று நமதூரில் இளங்கலை மற்றும்
முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் பலர் இருக்கக் கூடும். அவர்களையும் இது போன்று, தம் கலைத் துறையை
மார்க்க நெறிப்படிப் பயன்படுத்தும் வகையில் தமது பங்களிப்பைச் செய்ய முன்வருமாறு
கேட்டுக்கொள்கிறோம். திறமையும் தகுதியும்
பெற்ற பெண்கள் எமது ‘அர்ரவ்ழா’ கல்லூரியில் வந்து, தமக்கும் பிறருக்கும் பயன்படும்
விதத்தில் தாம் பெற்ற அறிவைப் பகிர்ந்துகொண்டு பயனளிக்குமாறு இக்கல்லூரி நிர்வாகம்
அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
கைவினைப் பொருள்கள் தயாரிப்பது, அறுசுவை உணவு தயாரிப்பது, பொது சுகாதாரம்,
குடும்பவியல், குழந்தை வளர்ப்பு முதலான துறைகளில் தமது பங்களிப்பைச் செலுத்த
முன்வரும் பெண்கள், கல்லூரி நிர்வாகத்தை அல்லது ஆசிரியைகளைத் தொடர்பு கொள்ளலாம்.
தலைவர் : 9894989230
செயலர் : 9043727525
கல்லூரி முதன்மை ஆசிரியை : 8754582966
நிகழ்ச்சி நடத்த வருபவர்கள் தக்க ஆண் / பெண்
துணையுடன் வரும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment