உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, December 30, 2011

தஞ்சாவூர், நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்களுக்கு "மூடு விழா'

தஞ்சாவூர், நெல்லை கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு அலுவலகங்களுக்கு "மூடு விழா' நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவுகளில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், பாஸ்போர்ட் புதுப்பித்தல், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்குதல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இந்த அலுவலகங்களில் சுமார் 2,000 பேர் வரை இப்பிரிவின் மூலம் சேவைகளை பெற்று வந்தனர்.

இதற்கிடையில் தனியார் நிறுவனங்களின் மூலம் பல்வேறு பகுதிகளில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இதில் மதுரை, நெல்லையில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி, திருச்சி, தஞ்சாவூரில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி, சென்னையில் 3 இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி முதல் இதற்கான அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இந்த தனியார் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவைகளை செய்வதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பாஸ்போர்ட் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்களும் தெரிவிக்கப்பட்டன.

தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்ட பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்கள் "களை" இழந்து காணப்பட்டன. இந்த அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்படாமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.

தனியார் அலுவலகங்களால் கலெக்டர் அலுவலகங்களில் இயங்கி வரும் பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுகளுக்கு "மூடு விழா' நடத்தப்படும் என "தினமலரில்' ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக நெல்லை, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்களுக்கு "மூடு விழா' நடத்தப்பட்டது.

நெல்லை அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் உட்பட எந்தவித விண்ணப்பங்களும் பெறக் கூடாது என பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.தஞ்சாவூரில் வரும் 1ம் தேதி முதல் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஏற்று கொள்ள கூடாது என்றும், வேண்டுமெனில் புதிய பாஸ்போர்ட் பதிவு விபரங்களை மட்டும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு மாவட்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்கள் வரும் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை செயல்பட பார்லிமென்ட் கமிட்டி முடிவு செய்திருந்தது. ஆனால் இதற்கு மாறாக அதிகாரிகள் தற்போதே இந்த அலுவலகங்களுக்கு மூடு விழா நடத்த உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனால் தினமும் இப்பிரிவு அலுவலகங்களுக்கு வரும் நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனினும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோளின்படி பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

மேலும், கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்களின் மூலம் புதிய பாஸ்போர்ட் மற்றும் அனைத்து சேவைகளுக்கும் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் தனியார் நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டால் இக்கட்டணங்கள் அனைத்தும் உயரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு அலுவலகங்களை தொடர்ந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தினமலர் டிசம்பர் 31,2011,03:22 IST

Wednesday, December 28, 2011

நடுநிலை செய்திகள் என்ற பெயரில் இடஒதுக்கீட்டை மறுக்க துடிக்கும் பத்திரிக்கைள்!!!!

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு என்பது சச்சார் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். நீதியரசர் சச்சார் அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள இந்தய முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்து பெரும்பான்மையான மக்கள் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு மற்ற சமுதாயங்களுடன் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒப்பிடும்போது மிகவும் பின் தங்கி இருப்பதை உணர்ந்து முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது அவரது பரிந்துரை. தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் சச்சார் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவதில் தொடர்ந்து மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது. தேர்தல் வரும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் 4.5% இடஒதுக்கீடும் ஒரு மோசடியே என்பதை தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ் இழுத்தடிப்பு வேலையையும் பாஜக கழுத்தறுப்பு வேலையையும் செய்து வருகிறது.

ஊடகங்கள் அரைகுறை ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த இடஒதுக்கீடே தவறு என்ற ரீதியில் பிற சமூக மக்களையும் சிறுபான்மையினருக்கு எதிராக துாண்டிவிடும் வேலையை சிறப்பாக செய்து வருகின்றன. நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளுக்கு பிறகும் அனைத்து வகையிலும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எந்த வகையிலும் முன்னேறிவிடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்தமாக தெளிவாக இருக்கிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் 16% முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இந்த நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர்களின் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக சுதந்திரப்போரட்டாத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலம் பேசுவது கூடாது ஆங்கிலேயர்கள் அணியும் பேண்ட் அணிவது கூடாது என மார்க்க தீர்ப்பு வழங்கின முஸ்லிம்களின் மதராசக்கள். காந்தியடிகள் இந்தியாவின் பிரதமராக முகமது அலி ஜின்னாவை பரிந்துரை செய்யும் அளவிற்குதான் சுதந்திரபோராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது.ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு முதலில் பறிக்கப்பட்டது மத அடிப்படையிலான முஸ்லிம்களின் இடஒதுக்கீடு. 64 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த இடஒதுக்கீடு மீண்டும் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு கிரிமி லேயர் முறையை பயன்படுத்த ஏன் ஊடகங்கள் பரிந்துரை செய்வதில்லை? முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை கணக்கில் கொண்டு இடஒதுக்கீட்டை மறுக்க முயற்சிக்கின்றனர். இந்தியாவில் உள்ள பணக்காரர்களை கணக்கில் எடுத்து அந்த சமுதாயத்தின் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா? தொடர்ந்து அரசியல்கட்சிகளின் துரோகத்தால் முஸ்லிம் சமுதாயம் வஞ்சிக்கப்பட்டுவருகிறது.
Thanks and regards

Ameen
Monday, December 26, 2011

ஓர் நற்செய்தி!! : அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஓர் நற்செய்தி
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

அன்பான சகோதரர்களே,

இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.
இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?
இதனை பற்றி விவரமாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ பார்க்கவும்

Link à ஆளும் சக்தியா? அதிகார சக்தியா?

இதற்காக உருவாக்கப்பட்டது தான்
Al-Idara I.A.S guidance center

அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

இதன் நோக்கம்

நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

ஆலோசனை குழு

இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.
ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

அடிப்படை தகுதிகள்

  • ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்
  • 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்
தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795
ஈமெயில் : admin@makkamasjid.com

Thanks to ameen

Sunday, December 25, 2011

அதிரை கல்விச் சேவையகம் AEM - அறிவிப்பு!

அன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு: 

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.  முதல் மாநாடாக இருந்ததால், அதனைக் குறுகிய வட்டத்திற்குள்தான் சகோதரர்களை ஈடுபடுத்தி, அல்லாஹ் உதவியால், வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.  அல்ஹம்து லில்லாஹ்!

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் புத்தாண்டில் இரண்டாவது மாநாட்டைச் சற்று விரிவாகவும், அதிகமான சகோதரர்களின் பங்களிப்பிலும், பயனுள்ள பல நிகழ்ச்சிகளுடனும் நடத்தத் தீர்மானித்துள்ளோம்.  அது பற்றிய ‘மஷ்வரா’ விரைவில் தொடங்கவுள்ளது.  எனவே, பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ள அதிரையின் அன்புச் சகோதரர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை "ADIRAI EDUCATIONAL MISSION" என்ற மின்னஞ்சல் குழுமத்தில் இணைத்துக்கொண்டு உங்களின் அரிய / உரிய பங்களிப்புகளை வழங்குமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு கூகுள் குழுமம் இதோ : adirai-edu-mission@googlegroups.com

உங்கள் புரிந்துணர்வுக்கும் அன்பாதரவுக்கும் மிக்க நன்றி.  வஸ்ஸலாம்.

அன்புடன்,

அதிரை அஹ்மது
+91 98 94 98 92 30
adiraiahmad@gmail.com

Thursday, December 22, 2011

1 முதல் 6​ம் வகுப்பு வரை ஒரேயொரு பாடப்புத்தகம்: தமிழக அரசு அறிவிப்பு

Students
அடுத்த ஆண்டு முதல் 1 முதல் 6ம் வகுப்பு வரைக்கும் ஒரேயொரு பாடப்புத்தகமும், 7, 8ம் வகுப்புகளுக்கு 2 பாடப்புத்தகங்களும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின் புத்தகசுமை குறையும்.

மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி முழுக்கல்வி ஆண்டிற்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முறையிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை குறைவதுடன், பயம், மன அழுத்தம் போன்றவை குறைகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாடநூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்கு பரிந்துரையை அனுப்பி இருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களை கணக்கிடும் போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கு மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும் ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களையும் உள்ளடக்கி ஒரே பாடப் புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள் மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.

ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இதுநாள் வரை கழுதை பொதிசுமப்பது போல ஏகப்பட்ட புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்து சென்ற மாணவச் செல்வங்கள் அடுத்த ஆண்டு முதல் சிங்கம் போல 'சிங்கிள்' புக்கோடு பள்ளிக்கூடம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
thanks to thatstamil
 

இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே மனிதப் படைப்பின் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்...
'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை' (அல்குர்ஆன் 51:56)
மனிதப் படைப்பின் நோக்கமே வணக்கம் என்றால் அந்த வணக்கத்தைப்பற்றி நாம் அறிய வேண்டும். இதற்கு பல்வேறு அறிஞர்கள் கூறும் விளக்கம் என்னவெனில் 'இறைக்கட்டளைகள் அனைத்துமே வணக்கம்' என்பதாகும். அதாவது படைத்த இறைவனும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் போதித்துள்ள ஏவல் விலக்கல்களை வாழ்வில் பேணி வாழ்வதே வணக்கம் என்பதாகும்.

இந்த வகையில் அல்லாஹ்வும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் போதித்த இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப் பேணி நடப்பதே சிறந்த வணக்கமாகும். இந்த சிறிய தொகுப்பில் இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் சிலவற்றைக் காண்போம். இவைகளைப் பேணி நடக்கும் ஒரு முஃமின் இன்ஷh அல்லாஹ் மறுமையில் சிறந்த நற்பேறுகளையுடைவராக விளங்கலாம்.

இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்!

 தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாம் கூறுதல்! இது நேசத்தை உண்டாக்கும். வெறுப்பையும், பிரிவையும் அகற்றும்.

 பிறரிடம் முகமலர்ச்சியுடன் புன்முறுவல் பூத்தல்! இது அன்பையும் நேசத்தையும் வளர்க்கும்.

 உண்ண மற்றும் குடிக்க ஆரம்பிக்கும் போது 'பிஸ்மில்லாஹ்' கூறுதல்! இந்த செயல்கள் முடிவுற்ற பிறகு 'அல்ஹம்துலில்லாஹ்' கூறுதல்!!

 வலது கரத்தால் உண்ணுதல் மற்றும் குடித்தல்! இடது கரத்தால் குடிப்பது iஷத்தானின் செயலாகும்.

 தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' கூறுதல்;! அதைக் கேட்டவர் 'யர்ஹமுக்குமுல்லாஹ்' என்று கூறுதல்!!

 தூங்கச் செல்லும் போதும், விழித்தவுடன் சொல்ல வேண்டிய துஆக்களை கூறுதல்!

 நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்தல்!

 ஜானாஸாவை பின்தொடர்ந்து சென்று தொழுகையிலும் அதை அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்ளுதல்!

 பள்ளிவாசலில் நுழையும்போது வலது காலை முன்வைத்தும், வெளியேறும் போது இடது காலை முற்படுத்தியும் செய்து அதற்கான துஆவை ஓதுதல்!

 வீடு மற்றும் பிற இடங்களில் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஸலாம் கூறுதல் மற்றும் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த

வழிமுறைகளைப் பேணி அதற்குரிய துஆக்களை ஓதுதல்!

 பயணத்தின் போது அதற்குரிய ஒழுக்கங்களைப் பேணுதல்!
 பெற்றோருக்கு உபகாரம் செய்து, அவர்களிடம் நல்ல முறையில் நடந்துகொண்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறைப்படி செய்தல்! இது அல்லாஹ்வின் கட்டளை. இதில் கவனக் குறைவாக இருந்து விட்டால் மறுமை நாளில் மிகவும் கைசேதப்பட வேண்டியதிருக்கும்.
 உறவினர், அண்டை வீட்டார், மற்றும் சிறுவர், சிறுமியரிடம்

நல்லமுறையில் நடந்து கொள்ளுதல்!

 குழந்தைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுதல்!
 திருமணமானவர்களுக்கு பரக்கத்திற்காக துஆச் செய்தல்!
 சோதனைக்குள்ளாக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறுதல்!
 ஆடை, காலணிகள் அணியும் போதும் கழற்றும் போதும் இஸ்லாம்

கற்றுத் தந்த முறையில் செய்தல்!

 கொடுக்கல் வாங்கலில் நீதமாக நடந்துக் கொள்ளுதல்!
 சொல்லிலும் செயலிலும் உண்மையைக் கடைபிடித்தல்!
 செய்வதிலும் விடுவதிலும் நம்பிக்கையைக் கடைபிடித்தல்!
 கற்பை பேணி பாதுக்காத்துக் கொள்ளுதல்!
 இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல்!
 வெட்கம், வீரம், தர்மமம், தூய்மை, வாக்கு மாறாமை போன்ற

நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல்!

 தாழ்ந்த குணங்களை விட்டும் தவிர்ந்துக் கொள்ளுதல்!
 தேவையுடையவருக்கு உதவி செய்தல்! அடியான் அவனது சகோதரனுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான்.
 தான் விரும்பியதையே மற்றவர்வர்களுக்கும் விரும்புதல்!
வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
'விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நேர்மையான கூற்றையே கூறுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களுடைய செயல்களை சீர்படுத்துவான். உங்களது குற்றங்களை மன்னிப்பான். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடப்பவர்கள் மகத்தான வெற்றியை அடைந்து விட்டார்கள்' (அல்குர்ஆன்: 33: 70-71)
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே'     (ஸஹீஹ் முஸ்லிம்)

'நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமையை தொடர்ந்து நன்மையைச் செய்து விடு. அது தீமையை அழித்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் பழகு' (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: திர்மிதி)
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! அல்லாஹ் நம் அனைவருக்கும் தாழ்ந்த குணங்களைத் தவிர்ந்தவர்களாக, இஸ்லாம் கூறும் அனைத்து ஒழுக்க மாண்புகளையும் நற்குணங்களையும் பேணியவர்களாக நடந்திட அருள்பாலிப்பானாக!

Thanks to suvanathendral.com

Sunday, December 18, 2011

நமது நாட்டிற்கு தேவையான ஒன்று‏

 

ஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாகவும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ``அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி`` என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது.

பண்டைய தமிழக அரசர்கள் பத்துப் பதினைந்து கிராமங்களுக்கு மையமாக ஓர் ஊரைத் தேர்ந்தெடுத்து பெரிய கோயில்களைக் கட்டினார்கள். எங்கெல்லாம் இப்படிப் பெரிய கோயில்களைக் கட்டினார்களோ, அங்கெல்லாம் அருகிலேயே சந்தைகளை அமைத்தார் கள். திருவிழாக்கள், அதையட்டிப் போடப்படும் திருவிழாக் கடைகள்... எல்லாமே சந்தை என்கிற அமைப்பை மக்களின் வாழ்வோடு பிணைக்கும் அம்சங்கள். தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுக்க இந்த மரபு இருக்கிறது. இந்த மரபின் நீட்சியே இன்றைய கோயம்பேடு சந்தை முதல் தெருவோர மளிகைக் கடைகள் வரை.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றால், இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு சில்லறை வர்த்தகம் என்று அழைக்கப்படும் இந்தச் சந்தை முறை. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிகமானோருக்கு - 5 கோடி பேருக்கு-வேலை அளிக்கும் துறை இது. இந்தியாவின் 6.58 லட்சம் கிராமங்களை 47 ஆயிரம் சந்தைகள் இணைக்கின்றன. நம்முடைய தானிய உற்பத்தியில் 35 சதவிகிதம் நேரடியாகவும் 41 சதவிகிதம் மறைமுகமாகவும், இந்தச் சந்தை அமைப்பின் மூலமாகவே விநியோகிக்கப்படுகிறது.

இந்திய விவசாயத் துறைக்கும் இந்திய சில்லறை வர்த்தகத் துறைக்கும் இதுவரை துரும்பைக்கூட கிள்ளிப்போடாத மன்மோகன் சிங் அரசு, கடந்த வாரம் இரு துறைகளையும் மொத்தமாக விலை பேசும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கெனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பல பொருள் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும் ஒரு பொருள் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. சுருக்கமாக, இந்திய வேளாண் துறையையும் சில்லறை வர்த்தகத்தையும் வளைத்துப் போட்டுக்கொள்ள வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மக்களிடம் இருந்து பெரிய எதிர்ப்பு ஏற்படாத நிலையில், எதிர்க் கட்சிகள், மாநில அரசுகளின் எதிர்ப்பு காலப்போக்கில் கடலில் கரைத்த பெருங்காயமாகிவிடும் என்பதால், இந்த அனுமதி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது.

``இந்திய விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற அரசின் இந்த முடிவு வழிவகுக்கும்`` என்று தெரிவித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா.

அமைச்சர் இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவது சந்தையிலும் சாலையிலும் சாக்கு விரித்து தானியங்களை விற்கும் வியாபாரிகளையும் சிறு, குறு மளிகைக் கடைக்காரர்களையும்தான். விவசாயிகளிடத்தில் இருந்து மக்களிடத்தில் பொருட்களைக் கொண்டுசெல்லும் சிறு வியாபாரிகளை இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவது முதலாளித்துவச் சொல்லாடல். அமைச்சர் அதைத்தான் பின்பற்றி இருக்கிறார். சரி, இந்த இடைத்தரகர்கள் இல்லை என்றால், எப்படி விவசாயிகளிடத்தில் இருந்து விளைபொருட்கள் மக்களை வந்தடையும்? அந்தச் `சேவை’க்குத்தான் பன்னாட்டுப் பெருவணிக அங்காடிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது அரசு.

இந்திய அரசு இந்த முடிவை எடுத்த அடுத்த நொடி, இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் `வால்மார்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டோ மேக்மில்லன். `` `வால்மார்ட்’ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்குச் சேவையாற்ற இந்த முடிவு வழிவகுக்கும்`` என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிறுவனங்கள் என்ன `சேவை’ செய்யும்? விவசாயிகளுடன் நேரடி ஒப்பந்தம் இடும். அவர்களுக்கு இடுபொருட்கள் தரும். கடன் அளிக்கும். விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் தங்கள் அங்காடிகளில் விற்கும். இது ஆரம்பம்.

முடிவு எப்படி இருக்கும்? விவசாயிகள் கடன் வாங்குவார்கள். விளைச்சல் பொய்க்கும்போது வாங்கிய கடனுக்கு நிலத்தைப் பெறுநிறுவனங்களிடமே ஒப்படைப்பார்கள். இதற்கிடையில், பெருநிறுவனங்களின் விலையுடன் போட்டியிட முடியாமல் சிறு வியாபாரிகள் தொழிலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஒருகட்டத்தில் பெருநிறுவனங்கள் நிர்ணயிப்பதே விலை என்று ஆகும். விவசாயிகளும் வெளியே விற்க முடியாது. மக்களும் வெளியே வாங்க முடியாது. நல்ல தரமான பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும். இப்போது குப்பை டீ கிடைப்பதுபோல, குப்பை உணவு மட்டுமே நமக்குக் கிடைக்கும். சில்லறை வர்த்தகம் பெருநிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தின் கீழ் வரும். இப்போது பெட்ரோலிய நிறுவனங்களால் பெட்ரோல் விலை தீர்மானிக்கப்படுவதுபோல, இனி எல்லாப் பொருட்களின் விலைகளும் இந்தப் பெருநிறுவனங்களால் தீர்மானிக்கப்படும். இந்தியச் சந்தைகள் மைதானங்களாகும். இந்திய விவசாயிகளும் வியாபாரிகளும் கூலித் தொழிலாளர் வர்க்கமாக மாறிப்போவார்கள்.

`கிழக்கிந்திய கம்பெனி’யின் வரலாறு ஞாபகத்துக்கு வருகிறதா?

'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்' ஓர் அறிமுகம்

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்  கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை எடுத்துரைப்பார்கள்.  தீமையைத்தடுப்பார்கள்.  தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும்  அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவார்கள். இத்தகையவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  (அத்தவ்பா 9:71)

எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே!  இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்தோழர்கள்அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் உண்டாகட்டும்.

கண்ணியத்திற்குரிய அதிரை இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

அதிரையில் 1983 ஆம் ஆண்டு முதல் இன்று தோன்றியுள்ள எத்தனையோ இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, அதாவது 1983-ல் 'தாருத் தவ்ஹீத்' மூலம் நமதூர் மக்களுக்குத்  தூய இஸ்லாமியப்  பிரச்சாரத்தை நோட்டீஸ், பொதுக்கூட்டம்அரங்க நிகழ்ச்சிகள்மாநாடு போன்றவற்றால் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை நமதூர்  கொள்கைச் சகோதரர்கள் செய்து வந்தார்கள்.  காலப்போக்கில் தமிழகத்தில் பல சமுதாய இயக்கங்களின் வருகையால்கொள்கைச் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால்இந்தச் சீர்திருத்தப் பணிகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இன்று நமதூரில் ஊடுருவி இருக்கும் பல சீர்கேடுகளையும் அனாச்சாரங்களையும் களைய வேண்டிய அவசியத்தை உணர்ந்த இயக்கம் சாராத நமதூர் கொள்கைச்  சகோதரர்கள்தாருத் தவ்ஹீதின் சேவை தொடரவேண்டும் என்ற கருத்தில், கடந்த 05.11.2011 சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு தக்வாப்பள்ளியில் கூடி ஆலோசனை செய்தனர்.  இக்கூட்டதின் முடிவில், கடந்த காலங்களில் நமக்குள்  ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்துந டந்தவற்றை அனுபவமாகப் பெற்றுஇன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் நமதூரில் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை செய்யதூய எண்ணத்தில் தொடங்கப்பட்ட தாய்ச் சபையான தாருத் தவ்ஹீதின் பெயரில் அதாவது, 'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட் ' என்று  –  செயல்படுவது என ஏகமனதாகத் தீர்மானமாயிற்று.

அதிரை தாருத் தவ்ஹீதை  அறிமுகம் செய்வதன் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்.  இதில் அதிரை தாருத் தவ்ஹீதின்  நோக்கத்தையும் அதன் பணிகளையும் விவரிப்பதுடன், அதன் இன்றையத் தேவையையும் தங்கள் முன் வைக்கிறோம்.

அல்லாஹ்  கூறுகிறான்:
நன்மையை எடுத்துரைத்து, தீமையைத் தடுத்து, நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.  அவர்களே வெற்றி பெற்றோர்(ஆலு இம்ரான் 3:104)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால்,  அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும்.  முடியாவிட்டால், தனது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்).  அதுவும் முடியாவிட்டால், தனது உள்ளத்தால் (அதைத் தீயதென்று வெரறுத்து ஒதுக்கட்டும்).  இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா( நிலையா)கும்.  அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)நூல்: முஸ்லிம் 78

ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானதுஓர் உடலைப் போன்றதாகும்.  உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால்அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது. அறிவிப்பவர்: நுஉ மான் பின் பஷீர் (ரலி)நூல்: முஸ்லிம் 5044, புகாரி 6011

இன்று நமது சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலோர் சரியான மார்க்க ஞானத்திற்கும் முறையான வழிகாட்டலுக்கும் அதிகம் தேவையுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.  ஆகவே, மேற்கூறப்பட்ட இறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கிணங்க, சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுவது மார்க்கக்  கடமை என்பதை உணர்ந்து, அல்குர்ஆன் மற்றும் நபிவிழியின் அடிப்படையில் அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை திருப்தியை அடைய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் மறு சீரமைப்புடன் செயல்படத் துவங்கியுள்ளதுதான்'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்'.

இனி, நமக்கு முன்னால் உள்ள பணிகளும் சேவைகளும் பற்றிப் பார்ப்போம்:.

அழைப்புப் பணி :
இதுவே இஸ்லாமிய அடிப்படையாகும்.  உலகில் இப்பணி இறைத்தூதர்கள் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டது.  இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களுடைய சமுதாயத்தினர் அனைவரின் மீதும் இப்பணி கடமையாக்கப்பட்டது. மேன்மைமிகு குர்ஆனும்  சிறப்புமிகு நபிவழியும் இதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.  எனவேஇயன்ற அளவு அனைத்து வழிகளிலும் மனித சமுதாயத்திற்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதும் அதன் உயர்வுகளை விளக்கிச் சொல்லி, அதன் பக்கம் அழைப்பதும் அதிரை தாருத் தவ்ஹீதின்  முதல் பணியாகும்.

கற்பித்தல்:
இஸ்லாத்தைப் பற்றி அறிய விரும்பும் சிறுவர்கள், வாலிபர்கள், முதியவர்கள், ஆண்கள்பெண்கள் என அனைவருக்கும் மேன்மைமிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழிகளை அவரவர் தகுதிக்கேற்பக் கற்றுக் கொடுப்பது அதிரை தாருத் தவ்ஹீதின் இரண்டாவது பணியாகும்.

நூல் வெளியிடுதல்:
மேன்மைமிகு குர்ஆன்சிறப்புமிகு நபிமொழி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சமுதாய பேரறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களைச் சலுகை விலையில் மக்களுக்கு வழங்குவது அதிரை தாருத் தவ்ஹீதின்  மூன்றாவது பணியாகும்.

துயர் துடைப்புப் பணிகள்:
அல்லாஹ்வே அனைவரின் தேவைகள்துன்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்பவன்.  மிகப் பெரிய வள்ளலாகிய அல்லாஹ், தன் சார்பாக உலகில் ஏழைஎளியோர்நலிந்தோர் ஆகியோரின் துயர் துடைக்கும் வள்ளல் பெருமக்களுக்கு மாபெரும் வெகுமதிகளை ஈருலகிலும் வழங்குவதாக வாக்களித்துள்ளான்.  பிறர் துன்பங்களில் பங்கெடுப்பதுபிறர் தேவைகளை நிறைவேற்ற இயன்றவரை உதவுவது முஸ்லிம்களுடைய அடிப்படைப் பண்புகளாகும்.

இந்த உன்னதப் பணிக்காக  'அதிரைப் பொருளாதார மேம்பாட்டு நிதியகம்'  என்ற ஒன்றை நிறுவி, இரக்கச் சிந்தையும் மார்க்கப் பற்றும் கொண்ட வள்ளல் பெருமக்களிடமிருந்து கடமையானஉபரியான தர்மங்களைப் பெற்று, அவற்றைத்  தேவையுடையவர்களுக்கு வழங்குதல்  அதிரை தாருத் தவ்ஹீதின் நான்காவது பணியாகும்.

இந்தப் பணிகள் மட்டுமின்றிஇஸ்லாம் முழுமையாக ஒவ்வொருவரின் வாழ்விலும் வரவேண்டும் என்பதற்காகவும்நமதூர் மக்களுக்குள் நல்லுறவும் அன்பும் கருணையும் சமூகப் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இயன்றவரை அல்லாஹ்வுக்காகத் தொண்டாற்ற வேண்டும் என்பதுவும்  'அதிரை தாருத் தவ்ஹீதின் குறிக்கோளாகும்.

இப்பணிகள் அனைத்தும் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறவும்அவற்றை அல்லாஹ் அங்கீகரிக்கவும்தாங்கள் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்வதுடன்,  தங்களால் இயன்றவரை இப்பணிகளில் பங்குபெறுமாறும் அன்புடன் அழைக்கிறோம்.

மேற்கூறப்பட்ட பணிகளை விசாலப்படுத்தவும், மேன்மேலும் அவற்றைச் சிறப்புடன் நிறைவேற்றவும்  'அதிரை தாருத் தவ்ஹீதுக்காகச் சில அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன.

ஒரு மர்கஸ்பாட வகுப்பறைகள்நூலகம்நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் நடத்த வசதிகளுடன் கூடிய வளாகம்மார்க்கக் கல்விகள் முழுநேர வகுப்புகளாக நடத்துவதற்குத் தேவையான கல்வி நிலையம்,  மாணவர்களும் விருந்தாளிகளும் ஊழியர்களும் தங்குவதற்குரிய விடுதிகள்புத்தக விற்பனை நிலையம்மாதாந்திரச்  செலவுகளைப் பூர்த்தி செய்வதற்குரிய வசதிகள் போன்ற தேவைகள் உள்ளன.

நல்லுள்ளம் கொண்ட மேன்மையான அதிரைவாசிகளே! நீங்கள் கொடுக்கும் தர்மங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கு நிச்சயம் பேருதவியாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு பங்குகொண்டு, ஈருலக நற்பேறுகளை அடைந்து கொள்ளுங்கள்!  மார்க்கத்திற்காகக் கொடுக்கப்படும் தர்மங்களுக்குச் சிறப்புகளும் நன்மைகளும் ஏராளம் உள்ளன என்பது உங்களுக்குத் தெரிந்ததே!

.......எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகைiயை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்ததும் மகத்தான கூலியுமாகும்.  அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (அல் முத்தஸ்ஸிர் 73:20)

பேராற்றலுடைய அல்லாஹ் இந்த நல்ல திட்டங்களை நிறைவேற்றித்தரப்  போதுமானவன்!  அவனிடமே உதவி தேடுகிறோம்!  அவனையே முன்னோக்கி நிற்கிறோம்!  வஸ்ஸலாம்.

மிக்க அன்புடன்,
புத்தமைப்புச் செய்யப்பட்ட நிர்வாகக் குழு
'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்'.

நன்மையான காரியங்களில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு:
கண்ணியத்திற்கு சகோதரர்களே இச்செய்தி தங்களுக்கு அனுப்பப்பட்டதில் ஆட்சேபம் தெரிவிப்பவரா நீங்கள். தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். இனி தங்களுக்கு இதுபோன்று செய்திகள் அனுப்ப வேண்டாம் என்றால். எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
மேற்கொண்டு தகவல் அல்லது ஐயத் தெளிவு பெற விழைவோர்,
பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.