உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, December 22, 2011

இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே மனிதப் படைப்பின் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்...
'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை' (அல்குர்ஆன் 51:56)
மனிதப் படைப்பின் நோக்கமே வணக்கம் என்றால் அந்த வணக்கத்தைப்பற்றி நாம் அறிய வேண்டும். இதற்கு பல்வேறு அறிஞர்கள் கூறும் விளக்கம் என்னவெனில் 'இறைக்கட்டளைகள் அனைத்துமே வணக்கம்' என்பதாகும். அதாவது படைத்த இறைவனும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் போதித்துள்ள ஏவல் விலக்கல்களை வாழ்வில் பேணி வாழ்வதே வணக்கம் என்பதாகும்.

இந்த வகையில் அல்லாஹ்வும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் போதித்த இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப் பேணி நடப்பதே சிறந்த வணக்கமாகும். இந்த சிறிய தொகுப்பில் இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் சிலவற்றைக் காண்போம். இவைகளைப் பேணி நடக்கும் ஒரு முஃமின் இன்ஷh அல்லாஹ் மறுமையில் சிறந்த நற்பேறுகளையுடைவராக விளங்கலாம்.

இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்!

 தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாம் கூறுதல்! இது நேசத்தை உண்டாக்கும். வெறுப்பையும், பிரிவையும் அகற்றும்.

 பிறரிடம் முகமலர்ச்சியுடன் புன்முறுவல் பூத்தல்! இது அன்பையும் நேசத்தையும் வளர்க்கும்.

 உண்ண மற்றும் குடிக்க ஆரம்பிக்கும் போது 'பிஸ்மில்லாஹ்' கூறுதல்! இந்த செயல்கள் முடிவுற்ற பிறகு 'அல்ஹம்துலில்லாஹ்' கூறுதல்!!

 வலது கரத்தால் உண்ணுதல் மற்றும் குடித்தல்! இடது கரத்தால் குடிப்பது iஷத்தானின் செயலாகும்.

 தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' கூறுதல்;! அதைக் கேட்டவர் 'யர்ஹமுக்குமுல்லாஹ்' என்று கூறுதல்!!

 தூங்கச் செல்லும் போதும், விழித்தவுடன் சொல்ல வேண்டிய துஆக்களை கூறுதல்!

 நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்தல்!

 ஜானாஸாவை பின்தொடர்ந்து சென்று தொழுகையிலும் அதை அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்ளுதல்!

 பள்ளிவாசலில் நுழையும்போது வலது காலை முன்வைத்தும், வெளியேறும் போது இடது காலை முற்படுத்தியும் செய்து அதற்கான துஆவை ஓதுதல்!

 வீடு மற்றும் பிற இடங்களில் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஸலாம் கூறுதல் மற்றும் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த

வழிமுறைகளைப் பேணி அதற்குரிய துஆக்களை ஓதுதல்!

 பயணத்தின் போது அதற்குரிய ஒழுக்கங்களைப் பேணுதல்!
 பெற்றோருக்கு உபகாரம் செய்து, அவர்களிடம் நல்ல முறையில் நடந்துகொண்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறைப்படி செய்தல்! இது அல்லாஹ்வின் கட்டளை. இதில் கவனக் குறைவாக இருந்து விட்டால் மறுமை நாளில் மிகவும் கைசேதப்பட வேண்டியதிருக்கும்.
 உறவினர், அண்டை வீட்டார், மற்றும் சிறுவர், சிறுமியரிடம்

நல்லமுறையில் நடந்து கொள்ளுதல்!

 குழந்தைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுதல்!
 திருமணமானவர்களுக்கு பரக்கத்திற்காக துஆச் செய்தல்!
 சோதனைக்குள்ளாக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறுதல்!
 ஆடை, காலணிகள் அணியும் போதும் கழற்றும் போதும் இஸ்லாம்

கற்றுத் தந்த முறையில் செய்தல்!

 கொடுக்கல் வாங்கலில் நீதமாக நடந்துக் கொள்ளுதல்!
 சொல்லிலும் செயலிலும் உண்மையைக் கடைபிடித்தல்!
 செய்வதிலும் விடுவதிலும் நம்பிக்கையைக் கடைபிடித்தல்!
 கற்பை பேணி பாதுக்காத்துக் கொள்ளுதல்!
 இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல்!
 வெட்கம், வீரம், தர்மமம், தூய்மை, வாக்கு மாறாமை போன்ற

நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல்!

 தாழ்ந்த குணங்களை விட்டும் தவிர்ந்துக் கொள்ளுதல்!
 தேவையுடையவருக்கு உதவி செய்தல்! அடியான் அவனது சகோதரனுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான்.
 தான் விரும்பியதையே மற்றவர்வர்களுக்கும் விரும்புதல்!
வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
'விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நேர்மையான கூற்றையே கூறுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களுடைய செயல்களை சீர்படுத்துவான். உங்களது குற்றங்களை மன்னிப்பான். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடப்பவர்கள் மகத்தான வெற்றியை அடைந்து விட்டார்கள்' (அல்குர்ஆன்: 33: 70-71)
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே'     (ஸஹீஹ் முஸ்லிம்)

'நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமையை தொடர்ந்து நன்மையைச் செய்து விடு. அது தீமையை அழித்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் பழகு' (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: திர்மிதி)
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! அல்லாஹ் நம் அனைவருக்கும் தாழ்ந்த குணங்களைத் தவிர்ந்தவர்களாக, இஸ்லாம் கூறும் அனைத்து ஒழுக்க மாண்புகளையும் நற்குணங்களையும் பேணியவர்களாக நடந்திட அருள்பாலிப்பானாக!

Thanks to suvanathendral.com

No comments:

Post a Comment