உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, March 7, 2013

குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீ்ம்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் -கட்ஜூ

டெல்லி: நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின்போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
 
 
கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதில் அளித்து கட்ஜூ வெளியிட்டுள்ள கடிதத்தில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றின்போது மீடியா நிறுவனங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன், நிதானத்துடன் செயல்பட வேண்டும். யார் மீதும் எந்த துவேஷ உணர்வும் ஏற்படாத வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.
 
யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணை முடியவில்லை. ஆனால் அதற்குள் பல மீடியாக்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வெளியி்ட்டு வருகின்றன. அது தவறானதாகும்.
 
முஸ்லீம்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற ஒரு இமேஜை சிலர் உருவாக்கி வைத்து விட்டனர். இதனால் எந்தத் தாக்குதல் நடந்தாலும் உடனே இஸ்லாமியர்களை சந்தேகப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
 
மேலும் எந்த ஒரு வழக்கிலும் முஸ்லீம் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஜாமீன் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. அவர் அப்பாவியாகவே இருந்தாலும் தன்னை நிரூபிக்க அவர் கடுமையாக போராடும் நிலை ஏற்படுகிறது. இது மிகவும் வருத்ததிற்குரியதாகும். ஒருவரை காரணமே இல்லாமல் சிறையில் நீண்ட காலம் அடைத்து வைக்க யாருக்கும் உரிமை கிடையாது. நமது நாட்டில் தவறான, பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர்.
 
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே டிவி சேனல்கள் ஒரு முஸ்லீம் அமைப்பின் பெயரைச் சொல்லி இதுதான் நடத்தியது என்று செய்தி வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது பொறுப்பற்ற போக்காகும். இப்படிச் செய்வதன் மூலம் எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால் அது முஸ்லீம்களின் செயல்தான் என்று மக்கள் தவறாக கருத ஆரம்பிக்கும் நிலை ஏற்படும். மேலும் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், குண்டு போடுபவர்கள் என்ற தவறான கருத்தும் மக்கள் மனதில் பதிவாகி விடும்.
 
எனவே மீடியாக்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.
 
http://tamil.oneindia.in/news/2013/03/07/india-stop-targeting-muslims-blasts-katj-171096.html

Tuesday, March 5, 2013

ADT நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அய்யூப் ஆற்றிய உரையின் காணொளி

அதிரை பிலால் நகரில் நடைபெற்ற தாருத் தவ்ஹீத் நிகழ்ச்சியில் கோவை அய்யூப் அவர்கள் ஆற்றிய உரை Thanks to: adiraipost

Friday, March 1, 2013

அதிரை பிலால் நகரில் ADT யின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

இன்று [ 15.02.2013 ] மாலை 5.30 மணியளவில் அதிரை பிலால் நகரில் முதன் முதலாக அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பாக மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ADT யின் அங்கமான இஸ்லாமிய பயிற்சி மையம் [ ITC ] அருகே நடைபெற்றது.
 
 
 கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்ட தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர்.
 



 
 
பொதுக்கூட்டத்திற்கு ADT யின் தலைவர் 'தமிழ் அறிஞர்' அதிரை அஹமத் B.A. அவர்கள் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார்

'மறுமைச் சிந்தனை' என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார் மவ்லவி அப்துல் காதிர் மன்பயீ அவர்கள்.

ADT யின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் ADT உருவான வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த JAQHன் மாநில துணைத்தலைவர் சகோ. கோவை அய்யூப் அவர்கள் 'படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்குத் தேவை' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தின் இறுதியில் ADT யின் துணைத்தலைவர் சகோ. B. ஜமாலுத்தீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என வாகன வசதிகளும், தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதிரை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Thanks to: www.theadirainews.blogspot.ae & Brother Shaikana Nijam