உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 31, 2014

ததஜவின் திருகுதாளம்...

27, 28, 29, 30 அக்டோபர் 2014, தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அதிரையில் நடந்த விவாதத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதம் செய்த மெளலவி அர்ஹம் அவர்களின் பேச்சின் ஒரு சில வினாடிகளை இணையத்தில் பதிவிட்ட ததஜவின் ஆதரவு தளம் "அதிரை தவ்ஹீத்" என்ற முக நூல் இந்த காணொளியை வெளியிடுவார்களா?

திருந்துமா ததஜ ?

கடந்த நான்கு (27,28,29 & 30) நாட்களாக நடந்து முடிந்த விவாதத்தில் ததஜவின் கொள்கைக் குழப்பங்கள், எதிலும் நிலையற்ற தன்மை, சுய முரண்கள், அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கு உளறல்கள், பதில் தெரியாதபோது பெரும்பாலும் நாலாந்தர நடைப் பேச்சுகள் என வெளியாக்கி, தன் நிலையைத் தானே தாழ்த்திக் கொண்டனர் ததஜவினர்.

நான்கு நாள் விவாதத்தின் ஹைலைட் பகுதிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு:

இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ விரைவில் பதிவேற்றப்படும்.அதிரையில் ததஜவுடன் விவாதம் - 4 வது (இறுதி விவாத) நாளில் நடந்தது என்ன?

நேற்றுடன் முடிவடைந்த 4 வது மற்றும் இறுதிநாளின் விவாதமும் வழமைபோல் ஒருதரப்பு விவாதமாகவே அமைந்திருந்தது.

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் வழமைபோல்

1. பீஜே என்பவர் அவருடைய குர்ஆன் தமிழாக்கத்தில் செய்துள்ள திருகுதாளங்கள் குறித்தும்

2. சாஹாபாக்களை சகட்டுமேனிக்கு தரம்தாழ்த்துவது குறித்தும்

3. மார்க்கத்தின் பெயரால் மக்களை வழிகெடுத்துக் கொண்டுள்ளது குறித்தும்

4. ஹதீஸ்களின் பெயரால் விளையாடி வருவது குறித்தும்

5. தூய இஸ்லாத்திற்குள் பகுத்தறிவு வாதம் பேசி வருவது குறித்தும்

6. புஹாரி ஹதீஸ் என்ற பெயரில் கைக்கு வந்த நம்பரை போட்டு பீஜே என்பவர் தானே இட்டுக்கட்டி எழுதியுள்ளது குறித்தும்

(இந்த இட்டுக்கட்டப்பட்ட பொய் ஹதீஸை, ஹதீஸ் கிரந்தத்திலிருந்து எடுத்துக்காட்டினால் 2 கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது)

இன்னும் பல மார்க்க விஷயங்கள் குறித்தும் தெளிவாகவும், முறையாகவும் குர்ஆன் ஹதீஸ் காட்டித்தந்துள்ள நல்லொழுக்கங்களுக்கும், தலைப்பிற்கும் உட்பட்டும் கேள்விகளை எழுப்பியும் தேவையான பதில்களை தந்து கொண்டும் விவாத அவையை நடத்தினர் மாறாக ததஜவினர் தங்களின் குருகுலத்தில் பயிற்றுவிக்கப்பட்டபடி அவன் இவன் வாடா, போடா போன்ற ஏக வசனங்களுடன் நடத்தியதன் விளைவாக ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச நிலைக்கு கொண்டு சென்றது அல்ஹம்துலில்லாஹ் அப்படி எதுவும் நடைபெறாமல் அல்லாஹ் காப்பாற்றினான் மேலும் முழு விவாத நாட்களும் திட்டமிட்டபடி நிறைவுற்றது.

ஒரு சுற்றில் அனுமதிக்கப்பட்ட 12 நிமிடங்களில் பேசப்பட்டதை முழுமையாக வெளியிடாமல் வெறும் 27 செகண்ட் மட்டும் ஃபேஸ்புக்கில் பிட்டு படம் ஒட்டியவர்களுக்கு தைரியமிருந்தால் வீடியோ பதிவை முழுமையாக வெளியிட முடியுமா என அறைகூவல் விட்டு தனதுரையில் தகுந்த பதிலடி கொடுத்தார் அர்ஹம் மவ்லவி.

அல்லாஹ்வை மட்டும் நம்பி அவனது மார்க்கத்திற்காக களம் இறங்குபவர்களுக்கு அறியா புறத்திலிருந்து உதவிகள் வரும் என்பதன் சாட்சிகளாய் அமைந்தனர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் மருத்துவம் பார்ப்பதற்காக வந்த இடத்தில் திடீர் விவாத பேச்சாளராகிப் போன அர்ஹம் மவ்லவியும் விவாத நாள் வரை பரிசீலணைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படாத மவ்லவி ஷாபித் ஷரயி அவர்களும் நூற்றுக்கணக்கான கேள்விகளை தொடுத்து ததஜவினரை பதிலின்றி திக்குமுக்காட செய்தனர்.

இந்த விவாதம் நடைபெற மூல காரணமாயிருந்த அதிரை ததஜ கிளையினரின் இணையதளத்தில் வெளியான செய்திகள் குறித்து ததஜவினர் மூச்சுகூட விடவில்லை மேலும் அதன் காரண கர்த்தாக்களான அதிரை கிளையினர் ஒருவர் கூட இறுதிவரை விவாதிக்க வராததும் மாநில நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டு அசிங்கமாக நடந்து கொண்டதும் அவர்களை இனங்காட்டியது, மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை ததஜ தளத்தில் அதிரை தாருத் தவ்ஹீதிற்கு எதிராக வெளியான அனைத்து செய்திகளுக்கும் தானே பொறுப்பு என எழுதிக் கொடுத்த மாவட்ட தாயி அன்வர் அலி என்பவர் கடைசி வரை ஒரு பார்வை கொக்காகவே இருந்தாரே ஒழிய தான் ஒத்துக்கொண்ட விஷயத்தை பற்றி வாயே திறக்கவில்லை.

அதிரை தாருத் தவ்ஹீதினர் தாங்கள் திரட்டி வைத்திருந்த உள்ளூர் ததஜவினரின் வண்டவாளங்களை அவர்களின் கண்ணியம் கருதி மறைத்தது மிகவும் பாராட்டுக்குரியது மேலும் அவர்கள் சத்திய இஸ்லாத்தின் பக்கம் திரும்ப இச்செயல் ஒரு காரணமாக அமையும் என நம்புகிறோம்.

தாருத் தவ்ஹீத் அமைப்பினர்  தங்களிடம் இன்னும் 10 தினங்களுக்கு மேல் பேசும் அளவிற்கு ஆதாரங்களையும் கேள்விகளையும் வைத்துக் கொண்டுள்ளதால் விவாதத்தை இந்த 4 நாட்களுக்குள் முடிக்க இயலவில்லை மாறாக தப்பித்தோம் பிழைத்தோம் கட்சியினர் மீசையில் மண் ஒட்டவில்லை என 100க்கு மேற்பட்ட கேள்விகள் பதிலின்றி அவர்கள் முன் எஞ்சியுள்ள நிலையில் வீண்சவடால்களுடன் முடிவுரை வழங்கினர்.

சூனியம் சம்பந்தமாக தனித்தலைப்பில் பீஜே என்பவருடன் விவாதித்திட மவ்லவி அர்ஹம் அவர்கள் அறைகூவல் விட்டு விவாத அரங்கை நிறைவு செய்தார்.

தமிழறிந்த உலக முஸ்லீம்கள் அனைவரும் உண்மையை அறிந்து கொள்ளும் வகையில் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் வீடியோ பதிவை விரைவில் வெளியிட வேண்டும்.

நடந்து முடிந்த விவாதம் குறித்து எமது புறப்பார்வை

இந்த விவாதம் குறித்து ததஜ மாநிலத் தலைமை மற்றும் அதிரை ததஜ கிளையினரால் முழுமையாக வெளியுலகிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டது.

உள்ளூர் ஊடகங்களும் இணைய தளங்களும் இது குறித்த செய்திகளை முழுமையாக இருட்டடிப்பு செய்தன மாறாக மார்க்கத்திற்கு முரணான புஹாரி மஜ்லீஸ் போன்ற நவீன பித்அத்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வழங்கின ஆனால் அதே புஹாரி ஹதீஸ் கிரந்தத்தை ஹதீஸ் மறுப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க போராடிய நிகழ்வை பற்றி ஒரு வரிச்செய்தி கூட வரவில்லை.

அதிரையின் இணைய தளங்கள் சில விவாதம் ஏன் தங்கள் மீது திணிக்கப்பட்டது என்பது குறித்தோ அவர்கள் தரப்பு நியாயங்கள் குறித்தோ சம்பந்தப்பட்ட ADT யினரை அணுகி கேட்கவே இல்லை மாறாக சாடி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தனர்.

தாருல் ஹிகம் மனநிலையில் இணையதளம் நடத்தும் அந்த ஒரு சிலரை நினைத்தால் வைக்கோல் போர் கதை தான் நியாபகத்திற்கு வருகிறது.

இந்த விவாதம் புகையுமுன்பே, தமிழகத்தில் நாமறிந்த பல மவ்லவிமார்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது மிகவும் ஆபத்தான குர்ஆன் ஹதீஸ் மறுப்பு திரிப்பு கொள்கையை அடையாளம் காட்டி அவர்களிடம் சிக்கியுள்ள சகோதரர்களை மீட்பது நமது கடமை என நினைவுறுத்தியும் பலனற்று போனது. காரணம் சந்திக்கு குடும்பத்தை இழுத்து நாறடித்து விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம்.

இந்த நிலையில் தான் தங்கள் மீது வலிய திணிக்கப்பட்ட விவாதத்தை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து சந்திக்க தயாராயினர் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர். தாங்கள் மிதிக்கப்போவது மிகவும் நாற்றமெடுத்த மனித கழிவு என்று தெரிந்தும் அதை சுத்தமாக அப்புறப்படுத்திட அடியெடுத்து வைத்த அதிரை தாருத் தவ்ஹீதினருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலிகளை வழங்க வேண்டும்.

முஹ்தஸ்ஸிலா கொள்கைகளை பின்பற்றும் இந்த நவீன தரீக்காவிடமிருந்து நமது சக முஸ்லீம சகோதரர்களை மீட்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையென்பதால் நமக்கு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பிடமிருந்து அதிகாரபூர்வ செய்திகள் கிடைக்காத நிலையிலும் கலந்து கொண்ட சகோதரர்கள் வழியாக செய்திகளை திரட்டி அதன் சாராம்சங்களை மட்டும் சுருக்கமாக வழங்கி வருகிறோம்.

ததஜ தரீக்காவாதிகளின் கையில் மாட்டிய பிணங்களை தவிர சிந்தித்து ததஜவை விட்டு வெளியேறும் அனைத்து சகோதரர்களையும் அன்புடன் வரவேற்க காத்திருக்கின்றோம்.

அதிரை தாருத் தவ்ஹீத் மட்டுமல்ல வேறு எந்த இயக்கத்தினர் இந்த நவீன முஹ்தஸ்ஸிலாக்களின் செயல்பாடுகளுக்கு எதிராக அவர்களை திருத்தும் நோக்கில் செயல்பட்டாலும் தொடர்ந்து இவ்வாறே ஆதாரிப்போம், வரவேற்போம் என மீண்டும் ஆணித்தரமாக எங்கள் பார்வையை நிறைவு செய்கின்றோம்.

இவண்
ஆசிரியர் குழு

Thursday, October 30, 2014

அதிரையில் ததஜவுடன் விவாதம் - 2 மற்றும் 3 ஆம் நாட்களில் நடந்தது என்ன?

இரண்டாம் நாள் அமர்வில் நடந்ததென்ன?

புகழனைத்தும் கண்ணியமிக்க அல்லாஹ் ஒருவனுக்கே!

அதிரை தாருத் தவ்ஹீதினர் வழமைபோல் தலைப்பிற்கு உட்பட்டு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பொறுமையாக கேள்விகளை எழுப்பிக் கொண்டும், அசட்டுக் கேள்விகளுக்கு தேவையான பதில்களை சொல்லிக் கொண்டமிருந்தனர். ததஜவினர் வழக்கம் போல் 'சூனியம்' செய்யப்பட்டிருந்ததை எண்ணிப்பார்த்தால் அவர்கள் யாரையோ விவாதத்தில் எதிர்பார்த்து அதற்கேற்றவாறு தயாராகி வந்து இடம் தெரியாமல் இறக்கிக் கொண்டிருந்த நிலை, நாங்கள் எதிர்பார்த்து வந்த ஆளை கொண்டு வராதது உங்க தப்பு என்பது போல் இருந்தது, வாழ்க அந்த உடும்புப்பிடி உத்தமர்கள்.

மேலும், இந்த விவாதத்தை இடைநிறுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தை மீறிய பல காரியங்களையும் கட்டவிழ்த்து விடத்துவங்கியுள்ளனர். கோபம் ஏற்படுத்தும் வகையிலான வசைபாடல்கள், நாலாந்தர விமர்சனங்கள், அரங்கிற்கு வெளியே அவர்கள் அமைப்பு சார்ந்த விளம்பரம், அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு மேல் அழைத்து வருதல், பார்வையாளர்கள் யாரும் விவாதத்தை பதிவு செய்யக்கூடாது என்றிருக்க செல்போனில் படம்பிடித்து முகநூலில் பிட்டு படம் பதிதல் என சீப்பை ஒழித்து கல்யாணத்தை நிறுத்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேலி கிண்டல்கள், சகோதரர் அப்துல் ஹமீது மீது 'ஐந்தாம்' தர வார்த்தை பிரயோகங்கள், தலைப்பின் பக்கமே வராமல் நலுவல்கள் என ஜமாய்த்துக் கொண்டுள்ளனர்.

விவாத ஒப்பந்த ஷரத்துக்களை படித்திட இந்த லிங்கை பாருங்கள்

மாலையில் மவ்லவி அர்ஹம் அவர்களும், மவ்லவி அன்சர் தப்லீகி அவர்களின் மாணவர் ஷாபித் ஷரயி அவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு தலைப்பிற்குள் இழுத்து வந்து பதில் சொல்லும் தர்மசங்கட நிலைக்கு அவர்களை ஆளாக்கியவுடன் அவர்கள் 'தேவனே! தேவனே ஏன் என்னை கைவிட்டீர்' என (பிற மதத்தினரின் கதையில் வருவது போல்) யாரையோ உதவிக்கு அழைக்கும் நிலைக்கு ஆளாகி ஏமாந்துள்ளதை அவர்களின் வாதங்கள் படம்பிடித்துக் காட்டியது.

இரண்டு நாட்களாய் 'சூனிய'த்தை கொண்டாடி கொண்டிருந்தவர்களுக்கு அது தொடர்பாக சில பதில்களை சொன்னபோது இப்ப ஏன் சூனியத்திற்கு பதில் சொல்கிறீர்கள் என கேட்டது இன்றைய உச்சக்கட்ட கமெடியாய் அமைந்தது. மேலும் ஒரு துணைக்காக குரங்கு கதை ஒன்றையும் நாள் முழுக்க ஓட்டினர்.

ததஜவினர் எந்த அளவிற்கு ஒரு ஹதீஸ் மறுப்பாளர் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் வழிகெட்டுப் போயுள்ளனர் என்பதை இதுவரை நடந்த வாதப் பிரதிவாதங்கள் உணர்த்தியுள்ளன.

அல்லாஹ் இந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட, கேட்க இருக்கின்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர்வழியை தர வேண்டும் என இறைஞ்சி நிறைவு செய்கின்றோம்.

அல்லாஹூ அக்பர்

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
---------------------------------------------------------------------------------------------------------------

மூன்றாம் நாள் அமர்வில் நடந்ததென்ன?

புகழனைத்தும் கண்ணியமிக்க அல்லாஹ் ஒருவனுக்கே!

இன்று கின்னஸ் சாதனை நிகழ்த்தும் அளவிற்கு ததஜ வசைபாடல் குழுவினர் இன்றும் தங்கள் திருப்பணியை தொடர்ந்தனர் மேலும் கலீல் ரசூல் என்பவர் 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் காலை அமர்வில் இருமுறை உளறியதன் அர்த்தம் கொஞ்ச நேரத்திலேயே தெரிந்து விட்டது, அந்த அளவிற்கு உளவுத்துறை மற்றும் காவல்துறையை கொண்டு இலங்கை மவ்லவிகளை விவாதத்திலிருந்து வெளியேற்றிட தலைகீழ் குட்டிக்கரணம் அடித்துப் பார்த்து ஓய்ந்தனர். (சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அரங்கில் நடந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது)

முட்டு சந்துக்குள் மாட்டிக்கொண்ட நிலையில் உள்ள அவர்கள் பல சமுதாய அமைப்பு சகோதரர்களையும் 'நாய்கள்' என குறிப்பிட்டு தேவையே இல்லாமல் வம்பு சண்டைக்கு இழுத்தனர் அதன் நோக்கம் எப்படியாவது யாரையாவது உசுப்பேற்றிவிட்டு சலசலப்பை உருவாக்கி விவாதத்தை பாதியில் நிறுத்துவதே, அந்த அளவுக்கு பகுத்தறிவு கொள்கை சரக்குடன் விவாதிக்க வந்திருந்தனர். (அவையில் இருந்தும் அமைதிகாத்து, விவாதம் தொடர்ந்து நடந்திட கோபப்படாமல் சூழ்நிலையை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து சக சகோதர அமைப்பினருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக)

மேலும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையில் வருவது போல் இன்றும் சூனியத்துடன் குரங்கு கதையையும் பிடித்துக் கொண்டு நேரத்தை கழித்தனர்.

இதுவரை மவ்லவி அன்சர் தப்லீகி அவர்களின் மாணவர் மவ்லவி ஷாபித் ஷரயி அவர்கள் பீஜே என்பவர் தன் மனோ இச்சையின்படி மொழிபெயர்த்த குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து மார்க்க முரண்களை படித்துக்காட்டி இதுவரை 18 கேள்விகளை எழுப்பியுள்ளார் அதில் ஒன்றுக்கு கூட பதிலில்லை மேலும் இதுவரை ததஜவினர் கொள்கையற்றவர்கள் என இனங்காட்டும் ததஜவின் குர்ஆன் ஹதீஸூக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும் மொத்தம் 86 கேள்விகள் கேட்கப்பட்டும் இதுவரை ஒன்றுக்கும் பதிலில்லை.

ததஜவின் மவ்லவி அப்துந் நாசர் என்பவரும், அப்துல் ரஹீம் என்பவரும் ததஜவின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முற்பட்டபோதெல்லாம் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் கலீல் ரசூல் என்பவரும், செய்யது இபுறாஹிம் என்பவரும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு அவையிலிருந்த இருதரப்பு பார்வையாளர்களும் முகம் சுளிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். (தவறான கட்சியில் இருக்கும் சரியான முகம் (நமது கருத்தல்ல) என வாஜ்பாயை அரசியல் அரங்கில் பேசிக்கொள்வது போல் இருந்தது பீஜேயின் பின்னுள்ள மவ்லவி அப்துந் நாசர் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர்களை பார்க்கும் போது)

மவ்லவி அப்துந் நாசர் அவர்களே உங்களுக்கு அல்லாஹ் குர்ஆனையும் ஹதீஸையும் அதன் மூலமொழியில் படித்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை வல்ல ரஹ்மான் வழங்கியுள்ளான் எனவே, மறுமைக்கு பயந்தவராக இரவல் மூளைக்குள் சிக்கிவிடாமல் உங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அறிவை கொண்டு சிந்தித்து செயல்பட உங்களின் இஸ்லாமிய சொந்தம் என்ற முறையில் அன்புடன் நினைவூட்டுகின்றோம்.

இடையில், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என வசைபாடிய போது அவர்கள் சென்னையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்பதையும் இந்த விவாதம் நடைபெற காரணமான அதிரை ததஜ கிளையினர் ஒட்டுமொத்தமாய் தகுதியற்றுப் போய் வெளியே நிற்பதையும் சுட்டிக்காட்டினார் அர்ஹம் மவ்லவி.

தாருத் தவ்ஹீத் அமைப்பினரை பொருத்தவரை அவர்கள் மீது வலிந்து இறைக்கப்பட்ட சேற்றையும் விதாண்டா வாதங்களையும் கண்டுகொள்ளாமலும் அதேவேளை ததஜவினரால் தொடுக்கப்பட்ட பிற கேள்விகள் அனைத்திற்கும் முறையாகவும் கண்ணியமாகவும் தலைப்புக்கு உட்பட்டு பதில் அளித்தனர், அவர்களுக்கு பொறுமையை வழங்கிய அல்லாஹ்விற்கே ஈடிணையற்ற புகழனைத்தும்.

யா அல்லாஹ், ஹதீஸ்களை மனம்போன போக்கில் மறுக்கும், குர்ஆனுக்கு பகுத்தறிவு விளக்கம் தந்து வழிகெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரின் மீது கொண்டுள்ள அளவுகடந்த நம்பிக்கையினால் நிதானமிழந்து பேசும் இந்த சகோதரர்களுக்கு உண்மையை விளங்கச் செய்வாயாக! இன்னும் இவர்களை போல் வழி தவறிப் போயுள்ள ததஜவின் அனைத்து சகோதரர்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் எனும் தனிமனித கலப்பற்ற தூய மார்க்கத்தை விளங்கி பின்பற்றிட அருள்புரிவாயாக! இன்னும் அவர்கள் வழிதவற காரணமானவரையும் நேர்வழியின்பால் மீட்டுத்தருவாயாக என அனைவரும் ஏகன் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக!

அல்லாஹூ அக்பர்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Monday, October 27, 2014

அதிரையில் ததஜவுடன் விவாதம் - முதல் நாள் நடந்தது என்ன?

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

ததஜ வாதக்குழுவினர் மற்றும் அதிரை தாருத் தவ்ஹீத் இடையே முதல் நாள் விவாதம் இரவு சுமார் 9 மணியளவில் நடைபெற்று முடிந்தது. இதுவரை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக முதல் நாள் விவாதம் குறித்து அதிகாரபூர்வ செய்திகள் வெளியிடப்படவில்லை ஆதலால் அதில் கலந்து கொண்டவர்களிடமிருந்து திரட்டிய செய்திகளை சுருக்கமாக தொகுத்து வழங்குகின்றோம்.

சத்தியத்தை நிலைநாட்ட வேண்டும் இதன் மூலம் மக்களுக்கு ததஜ குறித்த தெளிவு மக்களுக்கு கிடைக்க வேண்டும், ததஜ எனும் நவீன முஃதஸ்ஸிலாக்களின் (அல்லாஹ்வுடைய வசனங்களையும் தூதருடைய ஹதீஸையும் தன்னுடைய குறுபுத்தியை கொண்டு பகுத்தறிவுக்கு உட்படுத்தி சரியென்றுபட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வது என்ற) வழிகேட்டிலிருந்து இன்னும் அவர்களை தவ்ஹீத்வாதிகளாக நம்பிக் கொண்டிருப்போர் விடுபட இது ஓர் சந்தர்ப்பமாக அமைய வேண்டும் என்ற நினைப்புடனும் அல்லாஹ்வின் உதவியை மட்டும் எதிர்பார்த்தவர்களாகவும் முதன்முதலாக விவாத களத்தில் இறங்கினர் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர். (இன்ஷா அல்லாஹ் இதுவே இறுதியாகவும் இருக்கட்டும்)

இதில் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதித்திட
சகோதரர்கள்; ஜமீல் எம். ஸாலிஹ், நிஜாமுதீன், ஜமாலுதீன், அப்துல் ஹமீது, மவ்லவி அர்ஹம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ததஜ சார்பாக
சகோதரர்கள் கலீல் ரசூல், செய்யது இபுராஹீம், அப்துந் நாசர், அஹ்மது, அன்வர் அலி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய விவாதத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் 'கொள்கையற்றவர்கள் யார்?' என்ற தலைப்பிற்கு உட்பட்டு இதுவரை சுமார் 15 கேள்விகளை எழுப்பியுள்ளனர் ஆனால் இவை எதற்குமே இதுவரை ததஜ பதில் சொல்லவில்லை மேலும் தர்க்கவாதம் பேசிக்கொண்டும் தலைப்பிற்கு சம்பந்தமில்லா 'சூனிய'த்தை கையிலெடுத்துக் கொண்டு அரைத்த மாவையே 4 நாட்களுக்கும் அரைக்கும் திட்டத்துடன் வந்துள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது மேலும் 'மனநோயாளி' போன்ற தரங்கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி எதிர் தரப்பின் கோபத்தை கிளறி விவாதத்தை திசை திருப்பும் வழமையான விளையாட்டையும் செய்து பார்த்து ஏமாந்துள்ளனர்.

இன்றைய முதல் நாளின் இறுதி அமர்வில் மவ்லவி அர்ஹம் அவர்கள் பீஜே மார்க்கத்திற்கு முரணாக, சத்திய சஹாபாக்களுக்கு எதிராக பேசிய வீடியோ கிளிப்புகளை திரையிட்டு மார்க்க அடிப்படையில் விளக்கம் கேட்க, ததஜவினர் விளக்கம் சொல்வதை விட்டு விட்டு அவர் மீது அவதூறுகளையும், 'கூலிக்கு மாரடிக்கிறார்' என்பது போன்ற அநாகரீக வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளனர்.

இன்று முழுவதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் வழியாக 'இனிமேல் அனைத்து முஸ்லீம்களுக்கும் ஸலாம் கூறவும், கடிதங்களிலும் ஸலாத்தினை எழுதவும்' ததஜவினர் ஒப்புக் கொண்டுள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Sunday, October 26, 2014

நாளை முதல் (27.10.2014) ததஜ வாத குழுவினருடன் விவாதிக்க தாருத் தவ்ஹீத் அல்லாஹ்வின் துணையோடு களமிறங்குகிறது

எங்கும் விவாதம் எதிலும் விவாதம் என விவாத பித்துப்பிடித்து அலையும் பிரபல ஹதீஸ் மறுப்பாளரை தலைவராக கொண்ட கும்பல் தமிழகத்தில் விவரமறிய ஒரு பெரும் விடலை கூட்டத்தையே வழிகெடுத்துக் கொண்டுள்ளதை அறிவீர்கள். 

அதிரையில் தானுண்டு தன் பணிகளுண்டு என குர்ஆன் ஹதீஸ் ஒளியில் கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் மார்க்கப்பணி ஆற்றிவரும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரை அடிக்கடி வம்பிழுப்பதையும் ஒரு துணை தொண்டாக மேற்படியாளர்கள் செய்து வந்தனர் என்பதும் கடந்த ரமலானில் அவர்களின் அவதூறுகளும் அர்ச்சணைகளும் எல்லை மீறி போனதை தடுத்து நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்ட அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் முதன்முதலாக வாத கும்பலுக்கே அறைகூவல் விட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

தொடர்ந்து பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னும் பொந்துக்குள் பதுங்கிக் கொண்டவர்களை அவர்களின் 'தினம் ஒரு பலாய்' புகழ் ஆசாமி மீண்டும் சந்திக்கு இழுத்துவிட்டுச் செல்ல மீண்டும் வசமாக ADT யிடம் சிக்கிக் கொண்டவர்களை ஒரு வழியாக விவாத ஒப்பந்தம் வரை இழுத்து வந்துதுதுதுது...... இதோ நாளை முதல் 4 நாட்களுக்கு (27 முதல் 30 வரை) நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

இந்த விவாதத்தின் மூலம் சத்தியம் வெளிப்பட வேண்டும், இஸ்லாத்திற்குள் இருந்து கொண்டே தொடர்ந்து ஹதீஸ்களை மறுத்துக் கொண்டும், குர்ஆன் வசனங்களை மனம் போன போக்கில் திரித்துக் கொண்டும் திரிபவர்களின் கோர முகங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இன்னும் அவர்களை உண்மையாளர்கள் என இன்னும் நம்பும் பொதுவான அனுதாபிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் தூய வடிவில் இஸ்லாம் போய் சேர்ந்திட எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியவேண்டும்.

பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவிட்டார்கள், முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டு விட்டோம் என ஒவ்வொருமுறையும் ஒப்பாரி வைக்கும் அந்த இத்துப்போன பல்லவியை எழுத முடியாத அளவிற்கு வெட்கப்படும் சூழலை இந்த முறை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பிரார்திக்கின்றோம்.

அரைநாளில் ஊதித்தள்ளி விடுவோம் என இருமாப்பில் அழையும் கும்பலின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் பாக்கியத்தை உள்ளுர் அமைப்பான அதிரை தாருத் தவ்ஹீதிற்கு அல்லாஹ் தந்தருள வேண்டும்.

அதிரை இஸ்லாமிக் மிஷன் வலைத்தளம் ADT உட்பட எந்த இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலும் இல்லாதபோதும் அதிரை தாருத் தவ்ஹீதின் (ADT) செயல்பாடுகளிலும், CMN சலீம், துபை தமிழ் தஃவா கமிட்டி போன்ற பலரின் செயல்பாடுகளில் ஈர்ப்புடையது என்ற அடிப்படையில் இந்த விவாத நிகழ்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வழங்கி அது தொடர்பான பதிவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்த விவாத நிகழ்ச்சி இம்மை மறுமையை நம்பும், அதன்வழி செயல்படும் முஸ்லீம்களுக்கு பயனுள்ள ஒன்றாக அமைய வேண்டும் என இருகரமேந்தி இறைவனை வேண்டுகிறோம்.

இதுவரை இந்த விவாதம் தொடர்பாக நடைபெற்ற கடிதப் போக்குவரத்துக்களை படித்திட இந்த லிங்கிற்குள் வாருங்கள்... தொடர்ந்து...அந்தந்த பதிவுகளில் உள்ளே உள்ள லிங்குகளையும் பார்வையிட்டுச் செல்க....
Friday, October 24, 2014

முஸஃபா வாராந்திர பயான் - தொழுகையினூடாக இஃலாஸ்

முஸஃபாவில் இந்த வாரம் நடைபெற்ற (24.10.2014) நிகழ்ச்சியில் ஏகத்துவ அழைப்பாளர், பொறியாளர் ஜெய்லானி அவர்கள் கலந்து கொண்டு இனி தொடர்ந்து நடத்தப்பெற இருக்கின்ற திருக்குர்ஆன் விளக்க வகுப்புக்களின் அறிமுகவுரையாக 'தொழுகையினூடாக இஃலாஸ்' என்ற கருத்தின் கீழ் விளக்கமளித்தார்கள்.

இன்றைய வகுப்பில், நம்முடைய தொழுகைகள் எவ்வாறு உயிர்ப்புள்ளவையாக அமைய வேண்டும், இறை வசனங்களின் அர்த்தம் தெரிந்து நாம் நம் இறைவனுடன் தொழுகையினூடாக உரையாடுவதால் ஏற்படக்கூடிய இம்மை மறுமை நன்மைகள் எவ்வாறானவை என்பது குறித்தும் விளக்கினார்கள்

வரும் வாரம் முதல் தேவையான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொள்வதற்கு வசதியாக கலந்து கொள்வோர் குறிப்பேடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இறுதியாக, தொழுகையினுடைய வக்த்துகள் முற்பட்டு வருவதை கணக்கில் கொண்டு இனி இஷா தொழுகைக்குப்பின் வாராந்திர மார்க்க விளக்க வகுப்புக்கள் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு கஃபாரா துஆவுடன் கலைந்து சென்றனர்.

லால்குடி முஸ்தபா

Friday, October 17, 2014

துபைக்கு வந்தும் திருந்தாத ஜென்மங்கள்...!

மானத்தை கப்பலேற்றி பறக்கவிட்டான் என பேச்சு வழக்கு உள்ளதை அறிவீர்கள் அதேபோல் இங்கே துபைக்கு விமானமேறி பறந்து வந்த ஜென்மங்கள் சில இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என அவரவர் நாட்டு மானங்களை துபையில் பறக்கவிடும் சில அவலக்காட்சிகள் பாரீர்..

ஒன்று சுயபுத்தி இருக்க வேண்டும் அல்லது சொல்புத்தியாவது இருக்க வேண்டும் இந்த இரண்டுமில்லாமல் துபைக்கு வந்துள்ள மரமண்டைகளுக்கு துபை சட்டங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மில்லியன், பில்லியன் திர்ஹங்கள் என கொட்டி கார் வாங்கியவெரல்லாம் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடைய படைத்தவன் துணையோடு கார் ஒட்டுவதை கண்ணில் பார்த்த பிறகும் இந்த சரக்கு வேனை எலுமிச்சை பழத்தையும் பச்சை மிளகாயையும் நம்பி வண்டி ஒட்டுகிறவரை என்னவென்று சொல்வது? தமிழன் என்று சொல்லத்தான் முடியுமா அல்லது தலைநிமிர்ந்து  நிற்கத்தான் முடியுமா?பான் போட்டு துப்பினால் 1000 திர்ஹம் அபராதம் எனும் கடும் சட்டம் அமலில் உள்ள நிலையிலும் சர்வ சாதாரணமாக தெருவில் அமர்ந்து கொண்டு பான் விற்கும் பெங்காளிகளின் ஒரு கூட்டமே உள்ளது, இங்கே சாம்பிளுக்கு இருவர்.


கடின உழைப்பாளிகள் நிறைந்த பங்களாதேஷிலிருந்து தான் இந்த கருங்காலிகளும் வந்துள்ளார்கள். சீக்கிரம் பணக்காரனாக 3 சீட்டு சூதாட்டம் போன்றதொரு ஒருவகை சூதை விளையாடுகின்றனர். கஸ்டமர்கள் சர்வமத இந்தியா, பாகிஸ்தான், பெங்காளி, ஸ்ரீ லங்கா போன்ற தெற்காசியாவினர் தான்.நேற்றிரவு (17.10.2014) சுமார் 8 மணியளவில் பர்துபை மெட்ரோ ஸ்டேசன் அருகில் செல்லும் போது இந்த கருமத்தை காண முடிந்தது. மம்முட்டி என்ற நடிகனின் படம் நேற்று ரிலீசாம் அதற்காக இந்த ரசிக பேக்குகள் தியேட்டர் முன் பேண்டு வாத்தியங்களுடன் ஆடிய குத்தாட்டத்தை பார்த்து பிற வெளிநாட்டினர் 'பின்னால்' சிரித்துக் கொண்டு போனார்கள். மலையாளிகளின் பெயரை கெடுக்க இப்படியும் பல மடையர்கள் உண்டு என்பதை தெரிந்து கொண்ட நாள் நேற்று.வேதனையுடன்
அதிரைஅமீன்


Sunday, October 12, 2014

பெயர் மாற்றம் மற்றும் புதிய வலைப்பூ குறித்து அறிவிப்பு

அதிரை மண்ணின் சொந்தங்களுக்கு அதிரை இஸ்லாமிக் மிஷன் வலைப்பூவின் சார்பாக இனிய ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இதுவரை www.aimuaeadirai.blogspot.com என்ற பெயரில் செயல்பட்டு வந்த வலைப்பூ ஓர் சிறிய மாற்றத்துடன் இனி www.adiraiaimuae.blogspot.com என்ற பெயரில் தொடர்ந்து செயல்படும் என்பதையும்...


நம் அதிரை மற்றும் அதன் வெளிப்புற சுற்றுச்சூழல், சுத்தம், நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொள்வதற்காக www.adiraipasumai.blogspot.com என்ற பெயரில் புதியதோர் வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களுடைய பதிவுகளையும், கருத்துக்களையும் aimuaeadirai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் அனைவருடைய நல்லாதரவும், பங்களிப்பும் என்றென்றும் தொடர்ந்திட வேண்டும் என அனைத்து அதிரையர்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்
அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை பசுமை வலைப்பூக்களின் ஆசிரியர் குழு

Tuesday, October 7, 2014

நெஞ்சினிலே....இஸ்லாமிய அறிவுப் போட்டிகள்

அல் மகாதிப் நடத்தும் இரண்டாம் ஆண்டு கிராஅத் போட்டிகள் சிறப்புடன் நிறைவடைய அல்லாஹ் அருள் புரிவானாக என்று பிரார்த்தித்து எங்கள் நினைவு மலர்களை உங்கள் முன் சமர்பிக்கின்றோம்.

 Image courtesy: http://www.adiraixpress.in/

அல் மகாதிப்பின் இனிய அறிவிப்பு எங்களை சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இழுத்துச் சென்றது. மேலத்தெருவில் பழைய ஜூம்ஆ பள்ளியை மையமாக கொண்டு 'சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்கள் சங்கம்' என்ற பெயரில் அன்றைய மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து செயல்பட்டோம், இந்த சங்கம் புதுப்பள்ளியை மையமாக கொண்டு இன்றும் இயங்கி வரும் 'ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தினை' முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் எங்கள் சக்திக்குட்பட்டு பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்துள்ளோம். நிற்க!

80களின் மத்தியில் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் பள்ளியில் படித்தபோது, அய்யம்பேட்டையில் ஊர் ஜமாஅத் சார்பாக வருடந்தோறும் நடைபெறும் இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டியில் கலந்து கொண்டு எங்கள் பள்ளியின் சக மாணவர்கள் பரிசுகளை அள்ளி வருவார்கள் அதனால் உந்தப்பட்ட எங்கள் உள்ளங்களும் நம்முடைய அதிரையிலும் இதைப்போன்ற இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டிகளை நடத்த வேண்டும், மாணவர்களின் இஸ்லாமிய அறிவுத்திறன் வளர நம்மால் இயன்றதை செய்வதுடன் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என அவா கொண்டதை 'சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்கள் சங்கம்' வழியாக நிறைவேற்றிக் கொள்ள அல்லாஹ் நாடினான், அல்ஹம்துலில்லாஹ்.

80களின் இறுதியில் என்று நினைக்கின்றேன், மேலத்தெரு ஜூம்ஆ பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள மைதானத்தில் இஸ்லாமிய அறிவுப் போட்டிகள் என்ற தலைப்பின் கீழ் 'பேச்சுப் போட்டி' 'வினாடி வினா' 'கிராஅத் போட்டி' (இக்ராஹ் அல் குர்அன் என்பதே சரியான சொல் என்பதை பின்பு அறிந்து கொண்டோம்) பாங்கு சொல்லும் போட்டி என 4 பிரிவாக, மாணவ மாணவியருக்கு தனித்தனியாகவும் நடத்தினோம்.

முதல் நாள் மேலத்தெரு சங்கத்தில் வைத்து தேர்வு போட்டிகளும் மறுதினம் மக்கள் முன் மேடையில் இறுதிப்போட்டிகள் எனவும் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றவர்கள் இமாம் ஷாபி பள்ளி மாணவ, மாணவிகளே. அவர்களுடன் போட்டியிட்டி காதிர் முகைதீன் பள்ளி மாணவர்களும் பல பரிசுகளை பெற்று நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்தனர். அதிரை அளவில் மட்டுமே நடத்தப்பட்ட இப்போட்டிகளில் தனிப்போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டிகளின் நடுவர் பெருமக்களாக காலம்சென்ற அதிரையின் அறிஞர், கண்ணியத்திற்குரிய அலி ஆலீம் அவர்களும், செய்யதலி ஆலீம் அவர்களும், பேராசிரியர் பரக்கத் அவர்களும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும், காதிர் முகைதீன் பள்ளியின் ஆசிரியப் பெருந்தகைகளான ஹாஜா முகைதீன் சார் அவர்களும், ஷேக் தாவூது சார் அவர்களும், மும்தாஜ் டீச்சரும் நடுவர்களாக சிறப்புடன் செயலாற்றினர்.

சுமார் 500 கேள்விகள் அடங்கிய வினாடி வினா போட்டிக்கான கேள்வி பதில்களை குர்ஆனிலிருந்தும் ஹதீஸிருந்தும் அல்லாஹ்வினுடைய உதவியால் தொகுத்தேன் மேலும் இமாம் ஷாபி பள்ளி உஸ்தாதாக்களும் அவர்களே மனமுவந்து விரும்பி உதவினர். கேள்வி பதில் தொகுப்பை போட்டியாளர்களிடம் வழங்குமுன் கண்ணியத்திற்குரிய அலி ஆலீம் அவர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றுக் கொண்டோம்.

80களின் இறுதியில் நாங்கள் நடத்திய முதலாம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் இருவர் இன்று அதிரை பேரூராட்சி மன்ற கவுன்சிலர்களாக உள்ளனர் அதிலும் ஒருவர் தான் பெற்ற மார்க்கக் கல்வியை இன்று பலரும் பெற்றும் பயனடைய வேண்டும் என்ற நன்னோக்கில் அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் பிலால் நகர் தர்பியா சென்டரில் சம்பளமில்லா ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டுள்ளார், அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக. அதேபோல் தொடர்ந்து பல வருடங்கள் பரிசு  பெற்ற சேக்கனா நிஜாம் அவர்களும் வெற்றிகரமாக ஒரு இணையதளத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் கலந்து கொண்ட, வெற்றிபெற்ற பலரும் பல்வேறு உயர்நிலைகளில் இருப்பீர்கள் என நம்புகிறேன் (அனைவருடைய பெயரையும் ஞாபகத்தில் கொண்டுவர இயலவில்லை என்ற என் குறையை தவிர பிறருடைய பெயரை மறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை).

காலச்சூழலால் பலரும் பல திசைகளுக்கு சென்று விட்டதாலும், அப்போது தொடங்கப்பட்ட, பேராசிரியர் பரக்கத் அவர்களின் தலைமையிலான பைத்துல்மால் அமைப்பு அதிரையில் திருக்குர்ஆன் மாநாடுகளில் இதுபோன்ற போட்டிகளை சுவீகரித்துக் கொண்டு இன்னும் மெருகுடன் தொடர்ந்து நடத்தி வருவதாலும் நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். அது இன்று அல் மகாதிப் போன்றோர்களாலும் முன்னெடுத்து செல்லப்படுவதால் மிக்க அகம் மகிழ்கின்றோம், ஒரு நல்ல காரியத்திற்கு தூண்டுகோளாய் அமைந்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றோம்.

அன்று சில வருடங்கள் நாங்கள் இதுபோன்ற இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டிகளை நடத்திட உறுதுணையாய் இருந்த சக சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர் சங்க நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், நன்கொடைகள் பரிசுகள் என வழங்கியோர்களையும், நடுவர்களாய் பணியாற்றியோரையும், இன்னும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவரையும், பெருமளவில் வருகை தந்து போட்டிகள் நிறைவுறும் வரை பொறுமையுடன் காத்திருந்து நல்லாதரவு அளித்த பொதுமக்களையும், அனைத்திற்கும் மேலாக எல்லாம் வல்ல ரஹ்மானையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து நிறைவு செய்கின்றோம்.

குறிப்பு: 
விழாவை ஆடியோ பதிவாகவோ, புகைப்படமாகவோ சேமிக்கவில்லை மாறாக எங்கள் மனங்களில் பசுமையாக தங்கிவிட்ட நினைவுகள் மட்டுமே உங்களுடன் எழுத்துக்களாய் பகிர்ந்துள்ளோம். கமெண்ட் எழுத நினைத்து நீண்டுவிட்டதால் தனிப்பதிவாகிவிட்டது..

அதிரைஅமீன்
&
S.அப்துல் காதர்

Sunday, October 5, 2014

ஈத் கமிட்டி ஏற்பாட்டில் சானா வயல் திடலில் நடைபெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை (Photos Updated)

பேரருளாளன் அல்லாஹ்வின் உதவியால் ஆண்டுதோறும் இரு பெருநாட்களின் போதும் ஈத் கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்படும் பெருநாள் தொழுகைகள் தொடர்ந்து அதிரை மக்களின் நல்லாதரவுடன் நடைபெற்று வருவதை அறிவோம்.


வழமைபோல் ஊர் ஜமாஅத்தின் ஹஜ் பிறை குறித்த முடிவுக்கேற்ப இந்த வருடமும் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை ஈத் கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய ஹஜ் பெருநாள் தொழுகையை சகோதரர் ஜமீல் எம். ஸாலிஹ் அவர்கள் நடத்தி வைத்து பெருநாள் குத்பா பேருரையாற்றினார்கள்.
இன்றைய ஈத் குத்பா உரையில் நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் தியாகங்களும் அதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் எடுத்துச் சொல்லப்பட்டது. தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் இறுதிப்பேருரையில் வலியுறுத்திய பிற முஸ்லீம்களின் மானம் பேணல் மற்றும் கனவனுடைய விஷயத்தில் மனைவிமார்களின் பொறுப்புக்களும் எடுத்துச் சொல்லப்பட்டன.


 இந்த நபிவழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டதுடன் இறுதியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறியவர்களாக சந்தோஷத்துடன் கலைந்து சென்றனர்.

தகவல்
அஹமது ஹாஜா

புகைப்படங்கள்
J. ஜமால்

கூடுதல் புகைப்படங்கள்
J. சமீர் அஹமது