பேரருளாளன் அல்லாஹ்வின் உதவியால் ஆண்டுதோறும் இரு பெருநாட்களின் போதும் ஈத் கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்படும் பெருநாள் தொழுகைகள் தொடர்ந்து அதிரை மக்களின் நல்லாதரவுடன் நடைபெற்று வருவதை அறிவோம்.
வழமைபோல் ஊர் ஜமாஅத்தின் ஹஜ் பிறை குறித்த முடிவுக்கேற்ப இந்த வருடமும் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை ஈத் கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய ஹஜ் பெருநாள் தொழுகையை சகோதரர் ஜமீல் எம். ஸாலிஹ் அவர்கள் நடத்தி வைத்து பெருநாள் குத்பா பேருரையாற்றினார்கள்.
இன்றைய ஈத் குத்பா உரையில் நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் தியாகங்களும் அதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் எடுத்துச் சொல்லப்பட்டது. தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் இறுதிப்பேருரையில் வலியுறுத்திய பிற முஸ்லீம்களின் மானம் பேணல் மற்றும் கனவனுடைய விஷயத்தில் மனைவிமார்களின் பொறுப்புக்களும் எடுத்துச் சொல்லப்பட்டன.
இந்த நபிவழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டதுடன் இறுதியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறியவர்களாக சந்தோஷத்துடன் கலைந்து சென்றனர்.
தகவல்
அஹமது ஹாஜா
அஹமது ஹாஜா
புகைப்படங்கள்
J. ஜமால்
கூடுதல் புகைப்படங்கள்
J. சமீர் அஹமது
No comments:
Post a Comment