அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
ததஜ வாதக்குழுவினர் மற்றும் அதிரை தாருத் தவ்ஹீத் இடையே முதல் நாள் விவாதம் இரவு சுமார் 9 மணியளவில் நடைபெற்று முடிந்தது. இதுவரை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக முதல் நாள் விவாதம் குறித்து அதிகாரபூர்வ செய்திகள் வெளியிடப்படவில்லை ஆதலால் அதில் கலந்து கொண்டவர்களிடமிருந்து திரட்டிய செய்திகளை சுருக்கமாக தொகுத்து வழங்குகின்றோம்.
ததஜ வாதக்குழுவினர் மற்றும் அதிரை தாருத் தவ்ஹீத் இடையே முதல் நாள் விவாதம் இரவு சுமார் 9 மணியளவில் நடைபெற்று முடிந்தது. இதுவரை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக முதல் நாள் விவாதம் குறித்து அதிகாரபூர்வ செய்திகள் வெளியிடப்படவில்லை ஆதலால் அதில் கலந்து கொண்டவர்களிடமிருந்து திரட்டிய செய்திகளை சுருக்கமாக தொகுத்து வழங்குகின்றோம்.
சத்தியத்தை நிலைநாட்ட வேண்டும் இதன் மூலம் மக்களுக்கு ததஜ குறித்த தெளிவு மக்களுக்கு கிடைக்க வேண்டும், ததஜ எனும் நவீன முஃதஸ்ஸிலாக்களின் (அல்லாஹ்வுடைய வசனங்களையும் தூதருடைய ஹதீஸையும் தன்னுடைய குறுபுத்தியை கொண்டு பகுத்தறிவுக்கு உட்படுத்தி சரியென்றுபட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வது என்ற) வழிகேட்டிலிருந்து இன்னும் அவர்களை தவ்ஹீத்வாதிகளாக நம்பிக் கொண்டிருப்போர் விடுபட இது ஓர் சந்தர்ப்பமாக அமைய வேண்டும் என்ற நினைப்புடனும் அல்லாஹ்வின் உதவியை மட்டும் எதிர்பார்த்தவர்களாகவும் முதன்முதலாக விவாத களத்தில் இறங்கினர் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர். (இன்ஷா அல்லாஹ் இதுவே இறுதியாகவும் இருக்கட்டும்)
இதில் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதித்திட
சகோதரர்கள்; ஜமீல் எம். ஸாலிஹ், நிஜாமுதீன், ஜமாலுதீன், அப்துல் ஹமீது, மவ்லவி அர்ஹம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ததஜ சார்பாக
சகோதரர்கள் கலீல் ரசூல், செய்யது இபுராஹீம், அப்துந் நாசர், அஹ்மது, அன்வர் அலி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய விவாதத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் 'கொள்கையற்றவர்கள் யார்?' என்ற தலைப்பிற்கு உட்பட்டு இதுவரை சுமார் 15 கேள்விகளை எழுப்பியுள்ளனர் ஆனால் இவை எதற்குமே இதுவரை ததஜ பதில் சொல்லவில்லை மேலும் தர்க்கவாதம் பேசிக்கொண்டும் தலைப்பிற்கு சம்பந்தமில்லா 'சூனிய'த்தை கையிலெடுத்துக் கொண்டு அரைத்த மாவையே 4 நாட்களுக்கும் அரைக்கும் திட்டத்துடன் வந்துள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது மேலும் 'மனநோயாளி' போன்ற தரங்கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி எதிர் தரப்பின் கோபத்தை கிளறி விவாதத்தை திசை திருப்பும் வழமையான விளையாட்டையும் செய்து பார்த்து ஏமாந்துள்ளனர்.
இன்றைய முதல் நாளின் இறுதி அமர்வில் மவ்லவி அர்ஹம் அவர்கள் பீஜே மார்க்கத்திற்கு முரணாக, சத்திய சஹாபாக்களுக்கு எதிராக பேசிய வீடியோ கிளிப்புகளை திரையிட்டு மார்க்க அடிப்படையில் விளக்கம் கேட்க, ததஜவினர் விளக்கம் சொல்வதை விட்டு விட்டு அவர் மீது அவதூறுகளையும், 'கூலிக்கு மாரடிக்கிறார்' என்பது போன்ற அநாகரீக வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளனர்.
இன்று முழுவதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் வழியாக 'இனிமேல் அனைத்து முஸ்லீம்களுக்கும் ஸலாம் கூறவும், கடிதங்களிலும் ஸலாத்தினை எழுதவும்' ததஜவினர் ஒப்புக் கொண்டுள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
No comments:
Post a Comment