உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 31, 2014

அதிரையில் ததஜவுடன் விவாதம் - 4 வது (இறுதி விவாத) நாளில் நடந்தது என்ன?

நேற்றுடன் முடிவடைந்த 4 வது மற்றும் இறுதிநாளின் விவாதமும் வழமைபோல் ஒருதரப்பு விவாதமாகவே அமைந்திருந்தது.

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் வழமைபோல்

1. பீஜே என்பவர் அவருடைய குர்ஆன் தமிழாக்கத்தில் செய்துள்ள திருகுதாளங்கள் குறித்தும்

2. சாஹாபாக்களை சகட்டுமேனிக்கு தரம்தாழ்த்துவது குறித்தும்

3. மார்க்கத்தின் பெயரால் மக்களை வழிகெடுத்துக் கொண்டுள்ளது குறித்தும்

4. ஹதீஸ்களின் பெயரால் விளையாடி வருவது குறித்தும்

5. தூய இஸ்லாத்திற்குள் பகுத்தறிவு வாதம் பேசி வருவது குறித்தும்

6. புஹாரி ஹதீஸ் என்ற பெயரில் கைக்கு வந்த நம்பரை போட்டு பீஜே என்பவர் தானே இட்டுக்கட்டி எழுதியுள்ளது குறித்தும்

(இந்த இட்டுக்கட்டப்பட்ட பொய் ஹதீஸை, ஹதீஸ் கிரந்தத்திலிருந்து எடுத்துக்காட்டினால் 2 கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது)

இன்னும் பல மார்க்க விஷயங்கள் குறித்தும் தெளிவாகவும், முறையாகவும் குர்ஆன் ஹதீஸ் காட்டித்தந்துள்ள நல்லொழுக்கங்களுக்கும், தலைப்பிற்கும் உட்பட்டும் கேள்விகளை எழுப்பியும் தேவையான பதில்களை தந்து கொண்டும் விவாத அவையை நடத்தினர் மாறாக ததஜவினர் தங்களின் குருகுலத்தில் பயிற்றுவிக்கப்பட்டபடி அவன் இவன் வாடா, போடா போன்ற ஏக வசனங்களுடன் நடத்தியதன் விளைவாக ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச நிலைக்கு கொண்டு சென்றது அல்ஹம்துலில்லாஹ் அப்படி எதுவும் நடைபெறாமல் அல்லாஹ் காப்பாற்றினான் மேலும் முழு விவாத நாட்களும் திட்டமிட்டபடி நிறைவுற்றது.

ஒரு சுற்றில் அனுமதிக்கப்பட்ட 12 நிமிடங்களில் பேசப்பட்டதை முழுமையாக வெளியிடாமல் வெறும் 27 செகண்ட் மட்டும் ஃபேஸ்புக்கில் பிட்டு படம் ஒட்டியவர்களுக்கு தைரியமிருந்தால் வீடியோ பதிவை முழுமையாக வெளியிட முடியுமா என அறைகூவல் விட்டு தனதுரையில் தகுந்த பதிலடி கொடுத்தார் அர்ஹம் மவ்லவி.

அல்லாஹ்வை மட்டும் நம்பி அவனது மார்க்கத்திற்காக களம் இறங்குபவர்களுக்கு அறியா புறத்திலிருந்து உதவிகள் வரும் என்பதன் சாட்சிகளாய் அமைந்தனர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் மருத்துவம் பார்ப்பதற்காக வந்த இடத்தில் திடீர் விவாத பேச்சாளராகிப் போன அர்ஹம் மவ்லவியும் விவாத நாள் வரை பரிசீலணைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படாத மவ்லவி ஷாபித் ஷரயி அவர்களும் நூற்றுக்கணக்கான கேள்விகளை தொடுத்து ததஜவினரை பதிலின்றி திக்குமுக்காட செய்தனர்.

இந்த விவாதம் நடைபெற மூல காரணமாயிருந்த அதிரை ததஜ கிளையினரின் இணையதளத்தில் வெளியான செய்திகள் குறித்து ததஜவினர் மூச்சுகூட விடவில்லை மேலும் அதன் காரண கர்த்தாக்களான அதிரை கிளையினர் ஒருவர் கூட இறுதிவரை விவாதிக்க வராததும் மாநில நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டு அசிங்கமாக நடந்து கொண்டதும் அவர்களை இனங்காட்டியது, மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை ததஜ தளத்தில் அதிரை தாருத் தவ்ஹீதிற்கு எதிராக வெளியான அனைத்து செய்திகளுக்கும் தானே பொறுப்பு என எழுதிக் கொடுத்த மாவட்ட தாயி அன்வர் அலி என்பவர் கடைசி வரை ஒரு பார்வை கொக்காகவே இருந்தாரே ஒழிய தான் ஒத்துக்கொண்ட விஷயத்தை பற்றி வாயே திறக்கவில்லை.

அதிரை தாருத் தவ்ஹீதினர் தாங்கள் திரட்டி வைத்திருந்த உள்ளூர் ததஜவினரின் வண்டவாளங்களை அவர்களின் கண்ணியம் கருதி மறைத்தது மிகவும் பாராட்டுக்குரியது மேலும் அவர்கள் சத்திய இஸ்லாத்தின் பக்கம் திரும்ப இச்செயல் ஒரு காரணமாக அமையும் என நம்புகிறோம்.

தாருத் தவ்ஹீத் அமைப்பினர்  தங்களிடம் இன்னும் 10 தினங்களுக்கு மேல் பேசும் அளவிற்கு ஆதாரங்களையும் கேள்விகளையும் வைத்துக் கொண்டுள்ளதால் விவாதத்தை இந்த 4 நாட்களுக்குள் முடிக்க இயலவில்லை மாறாக தப்பித்தோம் பிழைத்தோம் கட்சியினர் மீசையில் மண் ஒட்டவில்லை என 100க்கு மேற்பட்ட கேள்விகள் பதிலின்றி அவர்கள் முன் எஞ்சியுள்ள நிலையில் வீண்சவடால்களுடன் முடிவுரை வழங்கினர்.

சூனியம் சம்பந்தமாக தனித்தலைப்பில் பீஜே என்பவருடன் விவாதித்திட மவ்லவி அர்ஹம் அவர்கள் அறைகூவல் விட்டு விவாத அரங்கை நிறைவு செய்தார்.

தமிழறிந்த உலக முஸ்லீம்கள் அனைவரும் உண்மையை அறிந்து கொள்ளும் வகையில் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் வீடியோ பதிவை விரைவில் வெளியிட வேண்டும்.

நடந்து முடிந்த விவாதம் குறித்து எமது புறப்பார்வை

இந்த விவாதம் குறித்து ததஜ மாநிலத் தலைமை மற்றும் அதிரை ததஜ கிளையினரால் முழுமையாக வெளியுலகிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டது.

உள்ளூர் ஊடகங்களும் இணைய தளங்களும் இது குறித்த செய்திகளை முழுமையாக இருட்டடிப்பு செய்தன மாறாக மார்க்கத்திற்கு முரணான புஹாரி மஜ்லீஸ் போன்ற நவீன பித்அத்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வழங்கின ஆனால் அதே புஹாரி ஹதீஸ் கிரந்தத்தை ஹதீஸ் மறுப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க போராடிய நிகழ்வை பற்றி ஒரு வரிச்செய்தி கூட வரவில்லை.

அதிரையின் இணைய தளங்கள் சில விவாதம் ஏன் தங்கள் மீது திணிக்கப்பட்டது என்பது குறித்தோ அவர்கள் தரப்பு நியாயங்கள் குறித்தோ சம்பந்தப்பட்ட ADT யினரை அணுகி கேட்கவே இல்லை மாறாக சாடி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தனர்.

தாருல் ஹிகம் மனநிலையில் இணையதளம் நடத்தும் அந்த ஒரு சிலரை நினைத்தால் வைக்கோல் போர் கதை தான் நியாபகத்திற்கு வருகிறது.

இந்த விவாதம் புகையுமுன்பே, தமிழகத்தில் நாமறிந்த பல மவ்லவிமார்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது மிகவும் ஆபத்தான குர்ஆன் ஹதீஸ் மறுப்பு திரிப்பு கொள்கையை அடையாளம் காட்டி அவர்களிடம் சிக்கியுள்ள சகோதரர்களை மீட்பது நமது கடமை என நினைவுறுத்தியும் பலனற்று போனது. காரணம் சந்திக்கு குடும்பத்தை இழுத்து நாறடித்து விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம்.

இந்த நிலையில் தான் தங்கள் மீது வலிய திணிக்கப்பட்ட விவாதத்தை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து சந்திக்க தயாராயினர் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர். தாங்கள் மிதிக்கப்போவது மிகவும் நாற்றமெடுத்த மனித கழிவு என்று தெரிந்தும் அதை சுத்தமாக அப்புறப்படுத்திட அடியெடுத்து வைத்த அதிரை தாருத் தவ்ஹீதினருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலிகளை வழங்க வேண்டும்.

முஹ்தஸ்ஸிலா கொள்கைகளை பின்பற்றும் இந்த நவீன தரீக்காவிடமிருந்து நமது சக முஸ்லீம சகோதரர்களை மீட்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையென்பதால் நமக்கு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பிடமிருந்து அதிகாரபூர்வ செய்திகள் கிடைக்காத நிலையிலும் கலந்து கொண்ட சகோதரர்கள் வழியாக செய்திகளை திரட்டி அதன் சாராம்சங்களை மட்டும் சுருக்கமாக வழங்கி வருகிறோம்.

ததஜ தரீக்காவாதிகளின் கையில் மாட்டிய பிணங்களை தவிர சிந்தித்து ததஜவை விட்டு வெளியேறும் அனைத்து சகோதரர்களையும் அன்புடன் வரவேற்க காத்திருக்கின்றோம்.

அதிரை தாருத் தவ்ஹீத் மட்டுமல்ல வேறு எந்த இயக்கத்தினர் இந்த நவீன முஹ்தஸ்ஸிலாக்களின் செயல்பாடுகளுக்கு எதிராக அவர்களை திருத்தும் நோக்கில் செயல்பட்டாலும் தொடர்ந்து இவ்வாறே ஆதாரிப்போம், வரவேற்போம் என மீண்டும் ஆணித்தரமாக எங்கள் பார்வையை நிறைவு செய்கின்றோம்.

இவண்
ஆசிரியர் குழு

No comments:

Post a Comment