உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 3, 2014

துபை புதிய ஜரூனி மஸ்ஜிதில் இன்று (03.10.2014) ஜூம்ஆ துவங்கியது

துபை, தெய்ராவில், தமிழ் பஜார் என்று அழைக்கப்படும் தமிழக முஸ்லீம்கள் அதிகம் வாழும் அயல் நாஸர் பகுதியில் அமைந்துள்ள, நைஃப் போலீஸ் ஸ்டேசன் நேர் எதிரில் அமைந்திருந்த பழைய ஜரூனி பள்ளியை இடித்துவிட்டு புதிய பள்ளியை கட்டும் பணி கடந்த 7,8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பள்ளிவாசல் துபையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜரூனி குடும்பத்தினரின் செலவில் கட்டப்பட்டு அவர்களின் பராமரிப்பில் இருந்து வரும் பள்ளிகளில் ஒன்றாகும்.





உள்ளும் புறமும சுமார் 2000 பேர்வரை தொழக்கூடிய வசதியுள்ள இப்பள்ளியில் பெண்களுக்கென தனி தொழுகை பகுதியும் உள்ளது. இன்று ஜூம்ஆ துவங்குவது குறித்த அறிவிப்புக்கூட A4 சைஸ் பேப்பரில் டைப் அடிக்கப்பட்டு பள்ளியின் சுவற்றில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஒட்டப்பட்டிருந்தது.







4 தினங்களுக்கு முன் திறக்கப்பட்ட இப்பள்ளியில் இன்று முதல் ஜூம்ஆ தொழுகையும் மீண்டும் துவங்கியது. இப்பள்ளி திறக்கப்பட்டபோதும் சரி, இன்று ஜூம்ஆ துவங்கிய போதிலும் சரியே எத்தகைய விழாக்களோ, ஆடம்பரங்களோ, இந்தியாவில் நாம் காண்பது போன்று திறப்பு விழாவை ஒட்டி நடைபெறும் வைபவங்களோ ஏதும் நடைபெறவில்லை மாறாக இமாம் வந்தார் பாங்கை சொன்னார் தொழுகையை நடத்தினார், சென்றார் என்ற அடிப்படையில் மிக எளிமையாக அமைந்திருந்தது.

துபையிலிருந்து
அதிரைஅமீன்

No comments:

Post a Comment