இரண்டாம் நாள் அமர்வில் நடந்ததென்ன?
புகழனைத்தும் கண்ணியமிக்க அல்லாஹ் ஒருவனுக்கே!
அதிரை தாருத் தவ்ஹீதினர் வழமைபோல் தலைப்பிற்கு உட்பட்டு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பொறுமையாக கேள்விகளை எழுப்பிக் கொண்டும், அசட்டுக் கேள்விகளுக்கு தேவையான பதில்களை சொல்லிக் கொண்டமிருந்தனர். ததஜவினர் வழக்கம் போல் 'சூனியம்' செய்யப்பட்டிருந்ததை எண்ணிப்பார்த்தால் அவர்கள் யாரையோ விவாதத்தில் எதிர்பார்த்து அதற்கேற்றவாறு தயாராகி வந்து இடம் தெரியாமல் இறக்கிக் கொண்டிருந்த நிலை, நாங்கள் எதிர்பார்த்து வந்த ஆளை கொண்டு வராதது உங்க தப்பு என்பது போல் இருந்தது, வாழ்க அந்த உடும்புப்பிடி உத்தமர்கள்.
மேலும், இந்த விவாதத்தை இடைநிறுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தை மீறிய பல காரியங்களையும் கட்டவிழ்த்து விடத்துவங்கியுள்ளனர். கோபம் ஏற்படுத்தும் வகையிலான வசைபாடல்கள், நாலாந்தர விமர்சனங்கள், அரங்கிற்கு வெளியே அவர்கள் அமைப்பு சார்ந்த விளம்பரம், அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு மேல் அழைத்து வருதல், பார்வையாளர்கள் யாரும் விவாதத்தை பதிவு செய்யக்கூடாது என்றிருக்க செல்போனில் படம்பிடித்து முகநூலில் பிட்டு படம் பதிதல் என சீப்பை ஒழித்து கல்யாணத்தை நிறுத்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேலி கிண்டல்கள், சகோதரர் அப்துல் ஹமீது மீது 'ஐந்தாம்' தர வார்த்தை பிரயோகங்கள், தலைப்பின் பக்கமே வராமல் நலுவல்கள் என ஜமாய்த்துக் கொண்டுள்ளனர்.
விவாத ஒப்பந்த ஷரத்துக்களை படித்திட இந்த லிங்கை பாருங்கள்
மாலையில் மவ்லவி அர்ஹம் அவர்களும், மவ்லவி அன்சர் தப்லீகி அவர்களின் மாணவர் ஷாபித் ஷரயி அவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு தலைப்பிற்குள் இழுத்து வந்து பதில் சொல்லும் தர்மசங்கட நிலைக்கு அவர்களை ஆளாக்கியவுடன் அவர்கள் 'தேவனே! தேவனே ஏன் என்னை கைவிட்டீர்' என (பிற மதத்தினரின் கதையில் வருவது போல்) யாரையோ உதவிக்கு அழைக்கும் நிலைக்கு ஆளாகி ஏமாந்துள்ளதை அவர்களின் வாதங்கள் படம்பிடித்துக் காட்டியது.
இரண்டு நாட்களாய் 'சூனிய'த்தை கொண்டாடி கொண்டிருந்தவர்களுக்கு அது தொடர்பாக சில பதில்களை சொன்னபோது இப்ப ஏன் சூனியத்திற்கு பதில் சொல்கிறீர்கள் என கேட்டது இன்றைய உச்சக்கட்ட கமெடியாய் அமைந்தது. மேலும் ஒரு துணைக்காக குரங்கு கதை ஒன்றையும் நாள் முழுக்க ஓட்டினர்.
ததஜவினர் எந்த அளவிற்கு ஒரு ஹதீஸ் மறுப்பாளர் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் வழிகெட்டுப் போயுள்ளனர் என்பதை இதுவரை நடந்த வாதப் பிரதிவாதங்கள் உணர்த்தியுள்ளன.
அல்லாஹ் இந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட, கேட்க இருக்கின்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர்வழியை தர வேண்டும் என இறைஞ்சி நிறைவு செய்கின்றோம்.
அல்லாஹூ அக்பர்
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
---------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாம் நாள் அமர்வில் நடந்ததென்ன?
மூன்றாம் நாள் அமர்வில் நடந்ததென்ன?
புகழனைத்தும் கண்ணியமிக்க அல்லாஹ் ஒருவனுக்கே!
இன்று கின்னஸ் சாதனை நிகழ்த்தும் அளவிற்கு ததஜ வசைபாடல் குழுவினர் இன்றும் தங்கள் திருப்பணியை தொடர்ந்தனர் மேலும் கலீல் ரசூல் என்பவர் 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் காலை அமர்வில் இருமுறை உளறியதன் அர்த்தம் கொஞ்ச நேரத்திலேயே தெரிந்து விட்டது, அந்த அளவிற்கு உளவுத்துறை மற்றும் காவல்துறையை கொண்டு இலங்கை மவ்லவிகளை விவாதத்திலிருந்து வெளியேற்றிட தலைகீழ் குட்டிக்கரணம் அடித்துப் பார்த்து ஓய்ந்தனர். (சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அரங்கில் நடந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது)
முட்டு சந்துக்குள் மாட்டிக்கொண்ட நிலையில் உள்ள அவர்கள் பல சமுதாய அமைப்பு சகோதரர்களையும் 'நாய்கள்' என குறிப்பிட்டு தேவையே இல்லாமல் வம்பு சண்டைக்கு இழுத்தனர் அதன் நோக்கம் எப்படியாவது யாரையாவது உசுப்பேற்றிவிட்டு சலசலப்பை உருவாக்கி விவாதத்தை பாதியில் நிறுத்துவதே, அந்த அளவுக்கு பகுத்தறிவு கொள்கை சரக்குடன் விவாதிக்க வந்திருந்தனர். (அவையில் இருந்தும் அமைதிகாத்து, விவாதம் தொடர்ந்து நடந்திட கோபப்படாமல் சூழ்நிலையை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து சக சகோதர அமைப்பினருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக)
மேலும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையில் வருவது போல் இன்றும் சூனியத்துடன் குரங்கு கதையையும் பிடித்துக் கொண்டு நேரத்தை கழித்தனர்.
இதுவரை மவ்லவி அன்சர் தப்லீகி அவர்களின் மாணவர் மவ்லவி ஷாபித் ஷரயி அவர்கள் பீஜே என்பவர் தன் மனோ இச்சையின்படி மொழிபெயர்த்த குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து மார்க்க முரண்களை படித்துக்காட்டி இதுவரை 18 கேள்விகளை எழுப்பியுள்ளார் அதில் ஒன்றுக்கு கூட பதிலில்லை மேலும் இதுவரை ததஜவினர் கொள்கையற்றவர்கள் என இனங்காட்டும் ததஜவின் குர்ஆன் ஹதீஸூக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும் மொத்தம் 86 கேள்விகள் கேட்கப்பட்டும் இதுவரை ஒன்றுக்கும் பதிலில்லை.
ததஜவின் மவ்லவி அப்துந் நாசர் என்பவரும், அப்துல் ரஹீம் என்பவரும் ததஜவின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முற்பட்டபோதெல்லாம் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் கலீல் ரசூல் என்பவரும், செய்யது இபுறாஹிம் என்பவரும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு அவையிலிருந்த இருதரப்பு பார்வையாளர்களும் முகம் சுளிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். (தவறான கட்சியில் இருக்கும் சரியான முகம் (நமது கருத்தல்ல) என வாஜ்பாயை அரசியல் அரங்கில் பேசிக்கொள்வது போல் இருந்தது பீஜேயின் பின்னுள்ள மவ்லவி அப்துந் நாசர் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர்களை பார்க்கும் போது)
மவ்லவி அப்துந் நாசர் அவர்களே உங்களுக்கு அல்லாஹ் குர்ஆனையும் ஹதீஸையும் அதன் மூலமொழியில் படித்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை வல்ல ரஹ்மான் வழங்கியுள்ளான் எனவே, மறுமைக்கு பயந்தவராக இரவல் மூளைக்குள் சிக்கிவிடாமல் உங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அறிவை கொண்டு சிந்தித்து செயல்பட உங்களின் இஸ்லாமிய சொந்தம் என்ற முறையில் அன்புடன் நினைவூட்டுகின்றோம்.
இடையில், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என வசைபாடிய போது அவர்கள் சென்னையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்பதையும் இந்த விவாதம் நடைபெற காரணமான அதிரை ததஜ கிளையினர் ஒட்டுமொத்தமாய் தகுதியற்றுப் போய் வெளியே நிற்பதையும் சுட்டிக்காட்டினார் அர்ஹம் மவ்லவி.
தாருத் தவ்ஹீத் அமைப்பினரை பொருத்தவரை அவர்கள் மீது வலிந்து இறைக்கப்பட்ட சேற்றையும் விதாண்டா வாதங்களையும் கண்டுகொள்ளாமலும் அதேவேளை ததஜவினரால் தொடுக்கப்பட்ட பிற கேள்விகள் அனைத்திற்கும் முறையாகவும் கண்ணியமாகவும் தலைப்புக்கு உட்பட்டு பதில் அளித்தனர், அவர்களுக்கு பொறுமையை வழங்கிய அல்லாஹ்விற்கே ஈடிணையற்ற புகழனைத்தும்.
யா அல்லாஹ், ஹதீஸ்களை மனம்போன போக்கில் மறுக்கும், குர்ஆனுக்கு பகுத்தறிவு விளக்கம் தந்து வழிகெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரின் மீது கொண்டுள்ள அளவுகடந்த நம்பிக்கையினால் நிதானமிழந்து பேசும் இந்த சகோதரர்களுக்கு உண்மையை விளங்கச் செய்வாயாக! இன்னும் இவர்களை போல் வழி தவறிப் போயுள்ள ததஜவின் அனைத்து சகோதரர்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் எனும் தனிமனித கலப்பற்ற தூய மார்க்கத்தை விளங்கி பின்பற்றிட அருள்புரிவாயாக! இன்னும் அவர்கள் வழிதவற காரணமானவரையும் நேர்வழியின்பால் மீட்டுத்தருவாயாக என அனைவரும் ஏகன் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக!
அல்லாஹூ அக்பர்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
Do you have video link
ReplyDeleteplease update video link..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete