உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, October 31, 2012

சென்னையிலே நீலம்! அதிரையிலே அட(டா)மழை!!

வானிலை மையங்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும் 'நீலம்' புயல் பக்கம் பக்கமாய் வார்த்தைகளில் அடித்துக் கொண்டிருக்க, தமிழகத்தின் ஏனைய பகுதிகளை போல் நம்ம ஊரிலும், வட்டத்திலும், மாவட்டத்திலும் ரெண்டு நாளும் இடைவெளியில்லா ஒரே மழைதாங்க.

மழை எப்ப விடும் என சாமானியன் ஏங்க, நடவுக்கு ஏற்ற மழைன்னு ஒரு விவசாயி புகழ, கதிர் அறுக்கக் காத்திருந்த இன்னொரு விவசாயி அழுகிப் போச்சேன்னு அழ, ஒரு வாரமா தொழிலுக்கு போகலன்னு மீனவன் புழம்ப, அரசாங்கம் தயார் நிலைன்னு பீலா விட, இப்படியான அவரவர் பிஸ்னஸ், லாஸ் மனநிலையில் ஒரு வழியா மகாபலிபுரத்துல இன்று மாலை 'நீலம்' காத்து கரையில கால் வெச்ச நேரம் வானம் ஒரு வழிய ரெண்டு நாள் மழைக்கு தேசிய கீதம் பாடிருச்சிங்க.

தண்ணீரில் தத்தளித்த அதிரை, பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை பேருந்து நிலையங்கள் சாம்பிளுக்கு...Adiraiameen with Ashiq Ahmed

Friday, October 26, 2012

அதிரையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நிறைவேற்றம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளால் வழமைபோல் சானா வயல் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. மழை தூரலின் மிரட்டலையும் மீறி பெருந்திரளாக குழுமிய மக்களிடையே சகோதரர் ஜமீல் எம். ஸாலிஹ் அவர்கள் குத்பா பேருரை நிகழ்த்தினார்கள்.

நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் வழங்கிய கண்ணியங்களை எடுத்துச் சொன்ன சகோதரர் அவர்கள் இவ்வரிய பேற்றை அடைவதற்காக நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் குடும்பம் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார்கள்.

உரையின் முத்திரையாய், நாகரீகத்தின் பெயரால், முன்னேற்றத்தின் பெயரால் ஓர் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நம்முடைய இளைய சமுதாயம் காப்பாற்றப்பட மொபைல், டிவி, லேப்டாப், இன்டெர்நெட் (குறிப்பாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள்) போன்ற நவீன சாதனங்களை நாமும் தியாகம் செய்ய கடமைபட்டுள்ளோம், குறைந்தபட்சம் பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பையும் கட்டுக்கோப்பையும் அதிகப்படுத்தி தங்களின் நேரங்களை தியாகம் செய்திட முன்வர வேண்டுமென சில சமீபகால நாட்டுநடப்புகளை மேற்கோள்காட்டி உரையை நிறைவு செய்தார்கள்.

பெருநாள் குத்பா உரை காணொளி இதோ உங்கள் பார்வைக்கு.களத்திலிருந்து
அதிரைஅமீன்

படங்கள்
ஆசிக் அஹமது

காணொளி
அதிரைநிருபர்


அதிரையில் ஈத் கமிட்டியின்பெருநாள் தொழுகை நேரம்!
அதிரையில் நாளை 27-10-12 ஹஜ் பெருநாளை முன்னிட்டு மேலத்தெரு சானவயலில் ஈத் கமிட்டியின் சார்பாக சரியாக 7:25 மணிக்கு பெருநாள் தொழுகையும் உரையும் நடைபெரும்.
மழையாக இருப்பின், CMP லைனில் உள்ள AL பள்ளியில் ஹஜ் பெருநாள் தொழுகையும் உரையும் நடைப்பெறும். என்று ஈத்கமிட்டி அறிவித்துள்ளது.


ஈத் கமிட்டி

துபாய்- AAMF- இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு– 2012
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் பேரருளால் 26-10-2012அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.காலை 7:10 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 8:10 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.


சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது,மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அதிரைவாசிகள் 350 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது.அல்ஹம்துலில்லாஹ்.


அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.
இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு “AAMF” சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

Wednesday, October 24, 2012

நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் இத்தொழுகைகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் தான் ஆண்களை தொழுகைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் வீட்டு (சமையல்) வேளைகளில் முடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பள்ளியில் தொழுது விட்டு வந்து வீடுகளில் பெண்களுக்கு தொழுகை நடாத்துகிறார்கள். இது பெரும் தவறாகும்.

ஹப்ஸா பின்த் ஸிரீன் (ரலி) கூறியதாவது :
நாங்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜிப் பெருநாளிலும் தொழும் இடத்திற்கு எங்கள் குமரிப் பெண்கள் செல்வதை தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்தப் பெண்மணி அன்னை உம்மு அதிய்யா (ரலி) அறிவித்த ஹதீஸை பின்வருமாறு கூறினார்கள்.

நாங்கள் யுத்தக்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடியவர்களாகவும் நோயாளிகளை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருந்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அல்லாஹ் வின் தூதரே! எங்கள் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமாகுமா? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளுக்கு மேலங்கி இல்லாவிட்டால், அவளது தோழி தனது மேலதிகமான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம் களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும் எனக் கூறினார்கள்.

மேலும் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக தொழும் திடலுக்கு (மைதானத்திற்கு) வீட்டைவிட்டு புறப்படச் செய்யும் படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள் என உம்மு அதிய்யா (ரலி) கூறினார்கள். நூல்: புகாரியில்

பெண்கள் கண்டிப்பாக பெருநாள் தொழுகைக்காக வீட்டைவிட்டு புறப்பட வேண்டும் மாதவிடாய்க்காரியாக இருந்தாலும் கூட கலந்துகொண்டு தொழும் இடத்திலிருந்து விலகியிருந்து அங்கு நடைபெறும் குத்பாவை செவி மடுக்க வேண்டும் என்பது நபி அவர்களின் கட்டளையாக இருக்கும் போது அந்தக் கட்டளையை ஏற்று செயல்பட பெண்கள் முன்வர வேண்டும். பொறுப்பிலுள்ள ஆண்கள் ஏற்பாடுகள் செய்யணே;டும்.

மைதானத்தில் தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யவேண்டும்

சில பகுதிகளில் ஆண்களுக்கு ஒரு நேரத்திலும், பெண்களுக்கு வேறொரு நேரத்திலும் பள்ளிவாசல்களில் இருமுறை தொழுகை, குத்பா நடாத்துகிறார்கள். சில சமயங்களில் வீடுகளில் பெண்களுக்கு மாத்திரம் ஜமாஅத் தொழுகை நடாத்துகிறார்கள். இவை நபிவழிக்கு முரணான செயலாகும். ஊர்மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஒரே ஜமாஅத்தின் கீழ் ஒரே நேரத்தில் ஒரே (திடலில்) மைதானத்தில் தொழக்கூடியதாக ஏற்பாடுகள் செய்வதே நபிவழியாகும்.

”நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) மைதானத்திற்கு (தொழுவதற்கு) செல்பவர்களாக இருந்தார்கள் என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி)
உம்முஅதிய்யா (ரலி) அறிவிக்கும் மேலேயுள்ள ஹதீஸிலும் மைதானத்திற்கு தொழுகைக்காக புறப்பட்டுச் செல்லுமாறுதான் நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. எனவே பெருநாள்
தொழுகைகளை ஏற்பாடு பண்ணக்கூடிய பள்ளி நிர்வாகிகள் அல்லது பேஷ் இமாம்கள் ஊரிலுள்ள மைதானத்தில் ஆண்கள், பெண்களுக்கு ஒரே நேரத்தில் -ஒழுக்கம் பேணி- தொழுகை நடாத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே நபியவர்கள் நடைமுறைபடுத்திக் காட்டிய சுன்னாவாகும். ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனியாக நபியவர்கள் ஜமாஅத் நடாத்தியதில்லை. ஒரே நேரத்தில் தொழுகை நடாத்துவதன் மூலம் அன்றைய நாளின் வேலைகளை செய்து முடிப்பதற்கும் ஏனைய விடயங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். நபியவர்கள் காட்டிய முறை நிச்சயமாக இந்த உம்மத்திற்கு நன்மையாகவே இருக்கும்.

ஊரில் மைதானம் இல்லை அல்லது மழை சூராவளி மற்றும் மைதானத்தில் தொழுவிக்கக்கூடிய சூழல் இல்லை போன்ற காரணங்களுக்காக பள்ளியில் தொழுவிக்கலாம். எந்த தடங்களும் இல்லாமல் பெண்களை தடுத்து நிறுத்துவது சுன்னாவை புறக்கணிக்கும் செயலாகும்.

thanks to islamkalvi.com

AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ் - 2012பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இதன் தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும் அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும் ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு நாடுகளிலுள்ள அதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்தி ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் பெருநாட்களன்று ஒன்றுகூடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ் பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன் சென்ற வருடத்தைப் போன்றே ஈத்கா மைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரை நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமே வெளிநாட்டிலுள்ள அதிரைவாசிகளுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராது கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பை உறுதிசெய்து  ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Mr. Ismail 055-6077680 
கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி மஹல்லா
Mr. Ajmal 050-4963848  
தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு மஹல்லா
Mr. Meera mohindeen 055-2320145  
அல் மதரஸத்துன் நுருல் மஹம்மதியா சங்கம் கீழத்தெரு
Mr. Mohideen 050-5785239  
மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina 050-7397093  
முகைதீன் ஜீம்மா பள்ளி மஹல்லா தரகர் தெரு
Mr. Bashir 050-9228114  
மிஷ்கீன் சாஹிப் பள்ளி மஹல்லா
Mr. Abdul Jabbar 055-8219432  
சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா

அன்புடன்,
அனைத்து மஹல்லாஹ் கூட்டமைப்பு (AAMF)
ஈத்
பெருநாள் சந்திப்பு குழுUAE

Friday, October 19, 2012

மனைவி


 
”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்கவேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2915
 
உண்ணும் போதும், உடுத்தும்போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160
பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2913
 
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56
 
”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல்: புகாரி 5204
ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ”நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162
 
”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082
 
”தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) நூல்: அபூதாவூத் 1442
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200
 
நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481
 
”இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911
 
thanks to readislam.net

Tuesday, October 16, 2012

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.

Wednesday, October 10, 2012

ஷேக். முபாரக் மதனி - பயான் நிகழ்ச்சி - அல்மனார் சென்டர், துபை‏

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
 
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
 
ஷேக். முபாரக் மதனி அவர்களின் அமீரக வருகையை முன்னிட்டு
 
மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி
 
இன்ஷா அல்லாஹ்
 
இடம்: அல்மனார் சென்டர், அல்கோஸ், துபை
 
நாள்: 12-10-2012 வெள்ளி மக்ரிப் தொழுகைக்கு பிறகு
 


அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

--
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931


 

Wednesday, October 3, 2012

இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?

 
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும் உரித்தானது!
 
தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் எதைக் கூறினாலும் அதை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாடும் இயக்கப்பற்றின் காரணமாக, ஏகத்துவத்தைப் போதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சகோதர முஸ்லிம்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருடிருக்கும் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தம்மை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டு தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கின்றோம் என்ற போர்வையில் தமக்குப் பிடிக்காத ஒரு ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் குறிவைத்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடும் இயக்கவெறியை எதிர்கின்ற இயக்க எதிர்ப்பு வெறியை உடையவர்களின் செயல்பாடுகள் மறுபுறம்!
 
யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு என்று சுயநலத்தின் மொத்த உருவாய் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தர்ஹா, சமாதி வழிபாடுகள், தட்டு, தாயத்து என்று இணை வைப்பின் உச்சத்தில் உழன்றுக் கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களிடையே ஏகத்துவம் வீறுகொண்டு எழுவதைப் பொறுக்காத ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்குண்டு, தவ்ஹீதுவாதிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொண்டு தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்குப்பவர்களைப் பார்த்து இவர்கள் ஒன்றுபடவே மாட்டார்களா என்று மனம் வெதும்புபவர்கள் மறுபுறம்,
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் குர்ஆன் ஹதீஸைப் போதிப்பவர்களுக்கிடையில் நடைபெறும் இந்தக் குழுச்சண்டைகளினால் குதூகலமடைந்த குராஃபிகளும், ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களும் வீறுகொண்டெழுந்திருக்கின்றனர்.
எவ்வித இயக்கங்கங்களையும் சாராமல் அல்லாஹ் நமக்கு இட்டபெயராகிய முஸ்லிம்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அழகிய முறையில் அழைப்புப் பணியினைச் செய்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த குழுச்சண்டைகளே என்றால் அது மிகையாகாது! ஷிர்க், பித்அத்திலே உழன்றுக் கொண்டிருப்பவர்களிடையே அதன் தீமைகளை உணர்த்த முற்படும் போது அவர்கள் முன்னிருத்துவதோ நமது குழுச்சண்டைகளைத்தான்!
 
எனதருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
 
தமக்கும் தம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்! அறிவாற்றலில், விவாதத் திறமையில் தம்மை விஞ்சியவர்கள் யாருமில்லை என்று நினைப்பது நம் அகந்தையின் காரணமாக அன்றோ?
‘கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்’ (12:76) என்ற திருவசனத்தை நாம் மறந்துவிட்டோமா? அல்லது
 
‘அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’ (அல்-குர்ஆன் 5:100) என்ற உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும்தானா?
தாம் சார்ந்த இயக்கம் தான் தலைசிறந்தது என்ற நினைப்பும், தம் இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லது தம் இயக்கத்தைச் சாராதவர்கள் எல்லாம் தடம் புரண்டவர்கள் என்ற இறுமாப்பும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள் அல்லவா? இந்த இயக்கங்களைப் பற்றிக்கூட கேள்விப்பட்டிராத கோடானு கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனரே! அவர்களும் தடம்புரண்டவர்கள் தானா? சிந்தியுங்கள் சகோதரர்களே!