உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, July 25, 2013

அதிரையில் வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய ரமளான் சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்ஹம்துலில்லாஹ் ! அதிரை தாருத் தவ்ஹீத் இப்புனித ரமளான் மாதத்தில் தினசரி காலை 11 மணியிலிருந்து பகல் 12 மணிவரையில் பெண்களுக்கென்று பிலால் நகர் ADT தர்பியா மையத்தில் தனியாக சொற்பொழிவும், இதேபோல் இரவு 10:15 மணி முதல் 11:30 மணி வரை ஆண்களுக்கும் பெண்களும் பொதுமேடை சொற்பொழிவு நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.


மாஷா அல்லாஹ் ! மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்களால் வழங்கப்படும் இந்த தொடர் சொற்பொழிவு நல்லதொரு வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது !

அதிரையில் பெண்களும் ஆண்களும் ஏராளமாக நேரிலும் தங்களது வீடுகளில் இருந்த வண்ணம் ஒலிபெருக்கி வாயிலாகவும் கேட்டு பயன்பெறுகிறார்கள் என்ற தகவல்கள் மகிழ்வை தருகிறது !

வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களுக்கும் இந்த அற்புதமான தொடர் சொற்பொழிவை கேட்க அதிரைநிருபர் வலைத்தளத்தில் தினமும் இரவு தொடர் சொற்பொழிவை நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 75லிருந்து 95 வரை பார்வையாளர்கள் நேரலையாக பார்க்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட காணொளியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் !
மேலும் மீதமிருக்கும் ரமளானுடைய நாட்களிலும், இவ்வாறான பயனுள்ள சொற்பொழிவுகளை கேட்டு நம் வாழ்விலும் அதற்கேற்றார்போல் பக்குவப்படுத்திக் கொண்டு குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கவும் இறுதிவரை நிலைத்திருக்கவும் அல்லாஹ் அருள்புரிவானாக !

Thanks to: அதிரைநிருபர் பதிப்பகம்

Monday, July 22, 2013

‘அர்ரவ்ழா’ பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி


நமதூர் ‘குல்லியத்துர் ரவ்ழத்துல் இஸ்லாமிய்யா லில்பனாத்’ என்னும் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி ‘தாருத் தவ்ஹீத்’ அமைப்பின் கீழ் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.  அண்மையில் அதன் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றதையும் வலைத்தளங்கள் மூலம் தெரிந்திருக்கலாம்.

இக்கல்லூரியில் இன்று பகல் சிறப்பு நிகழ்ச்சியொன்று ‘Ramadhan with Nutrition and Women’s Health’ ( ரமளானில் சத்துணவும் பெண்கள் ஆரோக்கியமும் ) என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதனை முன் நின்று நடத்தியவர், நமதூர் மருமகள் ஆமினா ஹஸ்ஸான் M. Sc. (Nutrition & Dietetics) ஆவார்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்ச்சியின்போது, மாணவிகளின் ஆர்வம் பாராட்டத் தக்க முறையில் இருந்ததை, சொற்பொழிவை நிகழ்த்திய திருமதி ஆமினா வியந்துரைத்தார்.  கல்லூரி ஆசிரியைகளும் ‘மாஷா அல்லாஹ்’ என்று கூறித் தம் மகிழ்வைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி ஒரு முன்னுதாரணம் என்பது குறிப்பிடத் தக்கது.  இதைப் போன்று நமதூரில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் பலர் இருக்கக் கூடும்.  அவர்களையும் இது போன்று, தம் கலைத் துறையை மார்க்க நெறிப்படிப் பயன்படுத்தும் வகையில் தமது பங்களிப்பைச் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.  திறமையும் தகுதியும் பெற்ற பெண்கள் எமது ‘அர்ரவ்ழா’ கல்லூரியில் வந்து, தமக்கும் பிறருக்கும் பயன்படும் விதத்தில் தாம் பெற்ற அறிவைப் பகிர்ந்துகொண்டு பயனளிக்குமாறு இக்கல்லூரி நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

கைவினைப் பொருள்கள் தயாரிப்பது, அறுசுவை உணவு தயாரிப்பது, பொது சுகாதாரம், குடும்பவியல், குழந்தை வளர்ப்பு முதலான துறைகளில் தமது பங்களிப்பைச் செலுத்த முன்வரும் பெண்கள், கல்லூரி நிர்வாகத்தை அல்லது ஆசிரியைகளைத் தொடர்பு கொள்ளலாம்.

தலைவர் : 9894989230

செயலர் : 9043727525

கல்லூரி முதன்மை ஆசிரியை : 8754582966
நிகழ்ச்சி நடத்த வருபவர்கள் தக்க ஆண் / பெண் துணையுடன் வரும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, July 9, 2013

ADT வழங்கும் புனிதமிகு ரமளான் மாதத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
புனிதமிகு ரமளான் மாதத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்10.7.2013 முதல், நாள்தோறும்

பெண்களுக்கு
காலை11 மணி முதல் பகல் 12 மணி வரை
இடம்: இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்

ஆண்களுக்கு
இரவு10 மணி முதல் 11 மணி வரை
இடம்: நடுத்தெரு EPMS பள்ளி வளாகம், அதிராம்பட்டினம்
 
வழங்குபவர்
மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள்
 
இறைமறை, நபிவழிமுறை அடிப்படையில் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றி நடந்திட அனைவரையும் அழைக்கும்
 
அதிரை தாருத் தவ்ஹீத்
28/G Market Street (East) P.O.Box 5 Adirampattinam | +91-4373-240930 |salaam.adt@gmail.com


Saturday, July 6, 2013

20-07-2013 - துபையில் மவ்லவி. முபாரக் மதனி - சொற்பொழிவு

துபை மாநகரில் முதன்முறையாக
 
Dubai International Holy Quran Award நடத்தும் 
 
இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 
 
வழங்குபவர்: மவ்லவி. முபாரக் மதனி அவர்கள் (இலங்கை)

நாள்: 20-07-2013 (சனிக்கிழமை)
 
நேரம்: இரவு 10:30 மணியளவில் (இன்ஷா அல்லாஹ்)

இடம்: ஜம்மியத்துல் இஸ்லாஹ் சென்டர், கிஸஸ் - துபை
 
(Near LULU Hypermarket / Between: Stadium MS & Nahda MS (Green Line)
 
பெண்களுக்கு தனி இட வசதி
 
டெய்ரா, அல்கூஸ், சோனாப்பூர் பகுதிகளிலிருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் விபரங்களுக்கு: 056-7371442 / 056- 7371443
அனைவரும் வருக

 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
அல்மனார் சென்ட்ர் (தமிழ் தஃவா பிரிவு) - துபைஅன்புடன்,
ஆடுதுறை N. ஷாகுல்
துபை
00971 50 8480401

கடவுளுக்கே இந்த கதியா ...

கடவுளுக்கே இந்த கதியா........?அவ்வளவு யாத்ரீகர்களை பத்ரிநாத், கேதார்நாத் 'புனித ஸ்தலங்கள்' ஈர்த்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக வந்து போகும் பக்தர்களுக்கும் அந்த கடவுளர்களால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. அங்கேயே இருப்பவர்கள் மனிதாபிமானத்துடன் வாழவும் அந்தக் கடவுளர்கள் ஒன்றும் செய்யவில்லை. பேரழிவின் விளிம்பில் பயத்திலும், உணவும், தண்ணீரும் இல்லாமல் இருக்க்ம் 'பக்தர்களை' சுரண்டும் கொள்ளைக்கும்பலைத்தான் அந்த 'பகவான்' வளர்த்து விட்டுள்ளார்.

அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). (17:56)


அதுவும் 40 அடி உயர சிவபெருமான் சிலையின் வாயை அடைத்துச் சென்ற வெள்ளப்பிரவாகம் சிவபெருமான் பார்வதியுடன் குடியிருப்பதாகக் கருதப்படும் இமாலயப் பனிமலைகளின் வீழ்ச்சியையும், அசட்டுப் பெருமையுடனும், போலி பெருமை வழியும் பக்தகோடிகளின் மழுங்கிப் போன ஆச்சரிய உணர்வையும் எழுப்புவதற்காக எழுப்பப்பட்ட 40 அடி உயர சிவபெருமான் சிலை மூழ்கியது எந்த சக்தியின் காரியமோ?

புனிதத் தலங்களிலிருந்து கொண்டுவரப்படும் புனித ஜலம் எல்லோர் தலையிலும் தெளிக்கப்படும். இன்று உத்தராகண்டிலிருந்து எந்தப் புனித நீரை எடுத்து வருவர்? சிவபெருமான் தலையில் இருக்கும் கங்கோத்ரியே சிவபெருமானை மூழ்கடிக்கப்பட்ட லீலா வினோதம்தான் என்ன?


மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (22:73)

கடவுளுக்கே இந்த கதியா?மூழ்கிய பிரம்மாண்ட சிவபெருமான் சிலை ஒரு எச்சசொச்சமே, பொருள் எச்சசொச்சமே, கடவுள் என்ற ஸ்பிரிட்டோ அல்லது ஏதோவொன்றின் வடிவம் கிடையாது. கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட மானுட செயல்பாட்டின் வியர்த்தத்தின் குறியீடு! ஒன்றுமேயில்லாமல் போகும் என்பதன் Nothingness- இன் குறி.


(நபியே! அவர்களிடம்;) "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்; "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்"; மேலும், கூறும்; "குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!" (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்; "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" (13:16)


Thanks & Regard

A. Md. Umar Farook
Tuticorin

Wednesday, July 3, 2013

அதிரையில் புனிதமிகு ரமலான் தொடர் சொற்பொழிவு

புனிதமிகு ரமலான் மாத இரவுகளில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஒளியிலான தொடர் இஸ்லாமிய சொற்பொழிவுகள் துபை, அபுதாபி வாழ் சகோதரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்றாகும். தமிழகத்தில் சென்னை, கோவை, குன்னூர் என பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்ற தொடர் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இலங்கையிலும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கை சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் இந்த ரமலானில் அதிரை அறிந்த மவ்லவி முஹமது நாஸர் (இலங்கை) அவர்கள் இங்கிலாந்தில் தொடர் உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்ற செய்திகளுடன் நமதூருக்கு வருவோம்.   

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட, அமல் செய்திட ஆர்வமுள்ளோர் ஏராளமானோர் வாழும் நம் அதிரை நகரிலும் இந்த வருட ரமலானில் 'அதிரைக்கு அதிரையர்களால் நடத்தப்படும்' அதிரை தாருத் தவ்ஹித் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் ரமலான் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் பெண்களுக்கு பிலால் நகர் மர்கஸில் தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும் ஆண்களுக்கு நடுத்தெரு EPMS பள்ளிக்கூட வளாகத்தில் இஷா தொழுகைக்குப்பின் தினமும் சுமார் 1 மணி நேரம் தொடர் சொற்பொழிவுகள் நடத்தப்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அதிரை மற்றும் இலங்கை மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு தொடர் உரையாற்றவுள்ளார்கள் இன்ஷா அல்லாஹ்.  

மேற்காணும் இரு நிகழ்ச்சிகளிலும் அதிகமதிகம் சுற்றமும் நட்பும் சூழ கலந்து கொண்டு ஈருலக பயன்பெற அழைக்கின்றோம்.

குறிப்பு: முறையான, விரிவான அறிவிப்பை அதிரை தாருத் தவ்ஹீத் விரைவில் வெளியிடும் இன்ஷா அல்லாஹ்.  

ஆண்களுக்கான தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியினை இணையத்தில் நேரலை செய்திட வெளிநாடு வாழ் சகோதரர்கள் சார்பாக அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகத்திடம் இதன் மூலம் கோரிக்கை வைக்கின்றோம்.

அபுதாபியிலிருந்து
அதிரைஅமீன்